Showing posts with label எரிச்சல். Show all posts
Showing posts with label எரிச்சல். Show all posts

Wednesday, March 25, 2026

கடுப்பிலிருந்து விடுபட விவால்டி அற்புதம்

 


மாறுதலாக ஒரு இசைப் பதிவு.

முகநூலில் பார்த்த ஒரு அருமையான காணொளியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.




வளர்ந்த வயலின் கலைஞர்களுக்கு நிகராக அந்த சிறுவன் பியானோ வாசிப்பது அற்புதமாக உள்ளது.

அவர்கள் வாசிக்கும் இசைக் கோர்வை, பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலியில் வாழ்ந்த அண்டோனியா விவால்டி எனும் இசைக் கலைஞர் அமைத்த "விவால்டி" என்பதாகும். 

எரிச்சலான ஒரு தருணத்தில் ( பத்து கொடுத்த கடுப்புதான்) மனதை மாற்ற இந்த காணொளி  உதவிகரமாக இருந்தது.

பிகு: மேலே எதற்கு ஒரு சட்டையின் புகைப்படம்? 

விவால்டி என்றதும் அந்த காலத்தில் பாம்பே டையிங் கம்பெனி வெளியிட்ட பிராண்டட் ஷர்ட்டுகள்தான் நினைவுக்கு வந்தது. இன்னமும் அது இருக்கிறது என்பதும் இப்போது தெரிந்தது. 

விவால்டி என்றொரு ப்ரௌசர் இருப்பதும் இப்போதுதான் தெரிந்தது.

Tuesday, August 2, 2022

கடுப்பேற்றும் அம்மையாரின் காமெடி


 பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் உருவாகும் கடுப்பை விட அவற்றையெல்லாம் ஏதோ மிகப் பெரிய சாதனையாக பீற்றிக் கொள்வது இன்னும் அதிக கடுப்பைத் தரும். 

அப்படி இன்று காலையிலேயே கடுப்பைத் தந்த காமெடி ஜி.எஸ்.டி வரி உயர்வு ஏழைகளை பாதிக்காது என்று நிர்மலா அம்மையார் சொன்னதுதான். 

அப்புறம் ஜி.எஸ்.டி என்ன அம்பானி, அதானியையா பாதிக்கப் போகுது?

மனசாட்சி இல்லாத ஜென்மங்கள்!