Showing posts with label உளவாளி. Show all posts
Showing posts with label உளவாளி. Show all posts

Friday, October 25, 2024

கொலை- சங்கிகளின் ஒப்புதல் வாக்குமூலம்

 


கனடாவில் நிகழ்த்திய கொலை போல அமெரிக்காவிலும் ஒரு காலிஸ்தான் ஆதரவாளரை கொலை நடத்த அமித்ஷாவின் தலைமையிலான உளவுத்துறை RAW) திட்டம் தீட்ட, அது தோல்வியில் முடிந்துள்ளது. அந்த கொலைக்கான  ஏற்பாடுகள் செய்ய அனுப்பப்பட்ட உளவாளி விகாஷ் யாதவ். கொலை முயற்சிக்கு அவன் ஏற்பாடு செய்த வாடகைக் கொலைகாரனே ஒரு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி. அதனால் அந்த கொலையும்  நடக்கவில்லை. இந்திய சதியும் அம்பலமாகி விட்டது. இப்போது அமெரிக்கா விகாஷ் யாதவை தங்களிடம் ஒப்படைக்குமாறு நிர்ப்பந்தம் அளிக்கிறது.

 அதற்கு ஒரு சங்கி போட்ட பதிவை பாருங்கள்.

 


“ஏ அமெரிக்காவே, நீ மட்டும் பாகிஸ்தானுக்கு ரகசியமாக சென்று உன்னுடைய எதிரி ஒசாமா பின் லேடனை கொலை செய்யலாம். நாங்கள் மட்டும் எங்கள் எதிரியை உன் நாட்டில் கொல்லக் கூடாதா? உனக்கொரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? ஒசாமா பின் லேடனை கொன்றவர்கள் எல்லாம் நாயகர்களாக கொண்டாடீனீர்களே! விகாஷ் யாதவ் மட்டும் குற்றவாளியா”

 என்று போகிறது அந்த பதிவு.

 இந்தியா செய்திருப்பது ஒரு சர்வதேசக் குற்றம். இதற்கு வெட்கப்பட வேண்டும். மாறாக ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தது போன்ற பதிவெல்லாம் எழுதுவது ஒன்றைத்தான் சொல்கிறது.

 சங்கிகள் அடி முட்டாள்கள்.

 பிகு: இந்த பிரச்சினையில் விவாதிக்க வேண்டிய இன்னொரு செய்தியும் உள்ளது. அதுதான் அடுத்த பதிவு

 கைவிடப்படும் உளவாளிகளின் கதறல்

Thursday, October 24, 2024

கைவிடப்பட்ட உளவாளியின் கதறல்

 


விகாஷ் யாதவ் குறித்த முந்தைய பதிவின் தொடர்ச்சி இது. RAW அதிகாரியான விகாஷ் யாதவ், நிகில் குப்தா என்ற அமெரிக்கவாழ் இந்தியர் மூலம் குர்பந்வத்சிங் பண்ணும் என்ற காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல ஏற்பாடு செய்கிறார். வாடகைக் கொலைகாரனாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆள் அமெரிக்க உளவுத்துறை ஆள் என்பதால் திட்டம் அம்பலமானது. 

விகாஷ் யாதவை பாதுகாக்க இந்திய அரசு என்ன செய்கிறது.

கை விட்டு விட்டது.

விகாஷ் யாதவ் RAW விலிருந்து எப்போதோ ராஜினாமா செய்து விட்டார். அதனால் அவரது நடவடிக்கைக்கும் மத்தியரசுக்கும் சம்பந்தம் கிடையாது என்று அமித்ஷாவின் உள்துறை கைவிரித்து விட்டது. இனி இந்த பிரச்சினையிலிருந்து தப்பிப்பது விகாஷ் யாதவின் சாமர்த்தியம். அது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை.

விகாஷ் யாதவ் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வல்ல.

குல்பூஷன் ஜாதவ் என்ற கப்பற்படை அதிகாரி பல வருடங்கள் பாகிஸ்தானில் உளவு பார்த்து சில நாச வேலைகளும் செய்து மாட்டிக் கொண்டு மரண தண்டனை பெற்றார். அவர் உயிர் இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அவர் எப்போதோ கப்பற்படையிலிருந்து ஒய்வு வாங்கிக் கொண்டு விட்டார். அவரது நடவடிக்கைகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கை விரித்து விட்டது.

ஆஸ்திரேலியாவில் உளவாளி வேலை பார்த்த நால்வரை அந்த நாட்டு அரசாங்கம் துரத்தி விட்டதால் அவர்கள் உயிர் பிழைத்தனர்.

கத்தார் நாட்டு நீதிமன்றம் அந்நாட்டில் உளவு பார்த்த எட்டு இந்திய கப்பற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது. அவர்கள் மோடியின் முதலாளிகளான இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாலோ என்னவோ கத்தார் அரசின் கையில் காலில் விழுந்து அவர்களை விடுதலை செய்ய வைத்து விட்டது.

வரலாற்றில் ஆராய்ந்தால் எக்கச்சக்கமான சிக்கிக் கொண்ட  உளவாளிகளின் துயர ஓலத்தை கேட்க முடியும். 

இந்தியா என்றில்லை, எல்லா நாடுகளுமே உளவாளிகளை பயன்படுத்துகின்றன. உளவாளிகளின் பணி என்றைக்கும் நேர்மையானதல்ல. அழிவு வேலைகள் செய்வதோ அல்லது அழிவு வேலைகளுக்கான ஆயத்தங்களை செய்வதோதான். அதனால்தான் உளவாளிகள் சிக்கிக் கொள்ளும் போது அவர்களை ஏவி விட்டவர்கள், தங்களுக்கும் உளவாளிக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொள்கின்றார்கள். 

பணத்திற்காக, பதவிக்காக, சில அற்ப சந்தோஷங்களுக்காக, தேச பக்தி என்று உசுப்பேற்றுவதால் ஏற்படும் போலிப் பெருமிதத்திற்காக உளவாளி வேலை பார்க்கும் எவரும் நிம்மதியாக இருந்த முடியாது. மாட்டிக் கொள்ளும் வரை மிதப்பில் இருக்கலாம். மாட்டிக் கொண்டால் எதிர்காலம் நிர்மூலம்.

உளவாளிகள் எனும் அம்புகள் துயரத்தில் கதறும் அதே நேரத்தில் எய்தவர்கள் அடுத்த இளிச்சவாய் அம்புகளை தயாரித்துக் கொண்டிருப்பார்கள் என்பதுதான் சோகமான உண்மை. 


Wednesday, October 27, 2021

உளவாளி அரசு ஒழியட்டும்

 


 உச்ச நீதிமன்றம் இன்றைக்கு அளித்துள்ள ஒரு தீர்ப்பு மிக முக்கியமானது. பெகாஸஸ் மென்பொருள் மூலம் உளவு பார்த்த பிரச்சினையில் உண்மைகளை கண்டறிய உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் செயல்படக் கூடிய விதத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

 மோடி அரசின் தலையில் ஓங்கி  வைத்துள்ள அழுத்தமான குட்டு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

 பெகாஸஸ் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றம் முடங்கினால் கூட கவலையில்லை, ஆனால் அது பற்றி விவாதிக்க முடியாது என்று முரட்டுத்தனமாக முடிவெடுத்தது.

 அதே முரட்டுத்தனத்தைத்தான் உச்ச நீதிமன்றத்திலும் வெளிப் படுத்தியது. அதுதான் உச்ச நீதிமன்றத்திற்க்லு அரசின் மீது சந்தேகத்தை எழுப்பி விட்டது.

 நாங்கள் உளவு பார்க்கவில்லை என்று குற்றச்சாட்டை அரசு மறுக்கவில்லை. ஆகவே விசாரணைக்குழு அமைக்கிறோம் என்று கூறியுள்ளது நீதிமன்றம்.

 ஒவ்வொரு மனிதரின் அந்தரங்க உரிமை என்பது முக்கியமானது. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அதனை கேள்விக்குறியாக்கக் கூடாது. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அரசு தன் தவறுகளை மூடி மறைக்கவோ, தப்பிக்கவோ கூடாது என்றும் சொல்லியுள்ளது.

 மக்கள் வறுமையில் வாடும் சூழலில், வேலையின்மை பெருகி வரும் வேளையில் கோடிக்கணக்கில் செலவு செய்து சொந்த மக்களையே உளவு பார்க்கும் ஒரு அரசு அவசியமா?

 வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எல்லாம் இருந்தால் இந்த அரசு பதவி விலக வேண்டும். குறைந்த பட்சம் பில்லாவின் கூட்டாளி ரங்காவாவது ராஜினாமா செய்ய வேண்டும்.

 ஆனால் இந்த உளவாளிகள் மானங்கெட்டவர்கள். அதனால் ஒட்டிக் கொண்டுதான் இருப்பார்கள்.

 

பிகு:  ஊடகக்காரர்களை, எதிர்க்கட்சித் தலைவர்களை, செயற்பாட்டாளர்களை எல்லாம் உளவு பார்க்கிற இந்த ஆட்சியாளர்கள் ஏன் தீவிரவாத சக்திகளின் ஊடுறுவலை மட்டும் கோட்டை விட்டு இந்திய வீரர்களை பலி கொடுக்கிறார்கள்?

Thursday, January 25, 2018

எல்லைக்கப்பால் இந்திய உளவாளி, அப்பாவிகள் அறிவீர் . . .



உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் உளவுப்படை உண்டு. அண்டை நாடுகள் மட்டுமல்லாது மற்ற நாடுகளுக்கும் உளவாளிகளை அனுப்பும். தங்களுக்கு வேண்டிய தகவல்களை அவர்கள் மூலமாக ரகசியமாக சேகரிக்கும்.  அமெரிக்காவிற்கு சி.ஐ.ஏ, ரஷ்யாவிற்கு கே.ஜி.பி, இஸ்ரேலுக்கு மொஸாத், இங்கிலாந்திற்கு எம் 16, பாகிஸ்தானிற்கு ஐ.எஸ்.ஐ.  என்று பல அமைப்புக்கள் உண்டு. இதைத்தவிர ராணுவம், கடற்படை,  விமானப்படை ஆகியவையெல்லாம் வேறு தனியாக உளவாளிகளை வைத்திருப்பார்கள்.

ரா (Research and Analysis Wing) என்ற அமைப்பு இந்தியாவுடையது என்றாலும் இந்தியா அப்படிப்பட்ட நாடெல்லாம் கிடையாது. பாகிஸ்தான்தான் இந்தியாவிற்கு உளவாளிகளை அனுப்புமே தவிர இந்தியா பாகிஸ்தானுக்குள் உளவாளிகளையெல்லாம் அனுப்பவே அனுப்பாது என்று மிகவும் அப்பாவித்தனமாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கிற மக்கள் இங்கே உள்ளனர். அவர்களுக்காகவே இப்பதிவு.

கடந்த ஞாயிறு அன்று ஹிந்து நாளிதழில் வந்த கட்டுரையின் சுருக்கமே இது.

புகைப்படத்தில் இருக்கிற இந்த முதியவரின் பெயர் காஷ்மீரிசிங். இந்திய ராணுவத்தில் 1968 ல் சேர்ந்துள்ளார். பாகிஸ்தானுக்கு சென்று உளவு பார்த்து வர விருப்பமா என்று கேட்கப்பட்டு இவரும் விருப்பம் தெரிவிக்க பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிபடுகிற வரை சுமார் ஐம்பது முறை எல்லை கடந்து பாகிஸ்தான் ராணுவ நிலைகள் குறித்த விபரங்களை, புகைப்படங்களோடு சேகரித்து வந்துள்ளார். பாகிஸ்தானின் கவச வாகனங்களை புகைப்படம் எடுத்து வந்ததை அவர் முக்கியமான சாதனையாகச் சொல்கிறார்.

1972 ல் கைது செய்யப்படுகிற அவர் கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து ஆண்டுகள் பாகிஸ்தான் சிறைகளில் பல சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளார். ஆனால் இந்திய ராணுவமோ காஷ்மீரிசிங் என்ற உளவாளி யாருமே கிடையாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டது. ஜலந்தர் ரெஜிமெண்டில் இருந்து அவருக்கு மாதம் 380 ரூபாய் ஊதியம் அனுப்பப்பட்டுள்ளது. உளவு பார்க்க பாகிஸ்தானுக்கு செல்கையில் ஒரு நாளைக்கான படி ரூபாய் 150. இருந்தும்  கைவிரித்து விட்டது ராணுவம். அவரை பாகிஸ்தான் சிறையிலிருந்து மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இறுதியாக பாகிஸ்தான் அமைச்சர் அன்சார் பர்னி என்பவரது  முயற்சியால் அவர் 2008  ம் வருடம் விடுதலை பெற்று இந்தியா வருகிறது. ஆம், நான் இந்திய ராணுவத்திற்காக உளவு பார்த்தேன் என்பதை வெளிப்படையாக அறிவித்து அதிர்வலைகளை உருவாக்கினார். தன்னைப் போல முப்பத்தி ஐந்திலிருந்து நாற்பது பேர் வரை இன்னும் பாகிஸ்தான் சிறையில் இருப்பதாகச் சொல்லியுள்ளார்.

இப்போது 75 வயதில் கூட நாட்டிற்காக உளவு பார்க்க பாகிஸ்தான்  செல்லத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

அவருக்கு ஒரே ஒரு அறிவுரை சொல்ல வேண்டும்.


வயதான காலத்தில்  எந்த சாகசமும் அவசியமில்லை. இந்த முறை மாட்டிக் கொண்டாலும் இந்திய அரசு உங்களை கைவிட்டுவிடும்.  

"எல்லையிலே ராணுவ வீரர்கள்" என்று வசனம் பேசினாலும் அவர்களுக்கு ஒழுங்காக சாப்பாடு கூட அளிக்காதவர்கள் இவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் வீரரே!