Thursday, April 23, 2020

அதை ஜெமோ எழுதலையாம். அப்புறம்




ஜெமோவுக்கு எந்த ஒரு படைப்பிலும் கருத்தோ, நியாயமோ, தர்க்கமோ, பிரச்சினையோ, அரசியலோ இருக்கக் கூடாது. அழகியல் இருந்தால் போதும். அந்த அளவிற்கு அவர் அழகை, அழகியலை ஆராதிக்கிறவர்.

அப்படிப்பட்டதொரு ஆராதனையை படியுங்கள்.

அவள் உள்ளே நுழைந்தபோது நான் மூச்சை இழுத்துவிட்டேன். என் பார்வையை அலைமோதாமல் வைத்துக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டேன். அவளை பேரழகி என்று எப்படிச் சொல்கிறேன்? இதோபார், இந்த மேற்குக் கடற்கரை என்பது இனக்கலவையின் சோதனைச்சாலை. உலகமெங்கும் வெவ்வேறு இனங்கள் கலந்த இடங்களில்தான் பேரழகிகள் உருவாகியிருக்கிறார்கள். உதாரணமாக இத்தாலி. அது ஆசிய ஐரோப்பிய இனங்களின் கலவை நிகழ்ந்த நிலம். லத்தீன் அமெரிக்கா இன்னொரு உதாரணம். அரேபியா அதற்கும் முன்பே வெள்ளை ஆரிய இனமும் காப்டிக் கறுப்பினமும் கலந்து உருவானது. காக்டெயிலே இனியது என்று பிரெஞ்சுக்காரன் சும்மாவா சொல்கிறான். அவன்கள் ரசிகன்கள்!

மேற்குக் கடற்கரையில் அரேபியர், போர்ச்சுக்கீசியர் வந்திருக்கிறார்கள். ஆகவே அற்புதமான கலவைகள் இங்கே நிகழ்ந்துள்ளன. இங்குள்ள எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் இனக்கலவை அடையாளங்கள் உண்டு. நீலக்கண்கள் சாதாரணம். கொங்கணி பிராமணர்கள், மாத்வ பிராமணர்கள், இஸ்லாமியர்கள், நாயர்கள், நம்பியார்கள் எல்லாருமே கலவைக்குருதி கொண்டவர்கள்தான்.

என்றெல்லாம் எழுதி விட்டு கடைசியில் அந்த பத்தியை இவ்வாறு முடிக்கிறார்.

உண்மையில் சாதிப்படிநிலை கீழே செல்லச்செல்ல கலவை குறைந்து அழகும் குறையும்.

இவர் என்ன சொல்ல வருகிறார்?

இவருடைய கூற்றை இரண்டாக பார்க்க முடியும்.

இவரது கண்ணோட்டத்தின் படியே சாதிப்படி நிலையில் கீழே உள்ள பெண்கள் அழகற்றவர்கள்.

அதே போல பேரழகாக இருப்பவர்கள் எல்லாருக்கும் அந்த அழகு இனக் கலவையால், குருதிக் கலவையால்தான் வருகிறது.

இரண்டு பார்வையுமே மோசமானது. பெண்களை வெறும் காட்சிப் பொருளாக, போகப் பொருளாக மட்டுமே பார்க்கிற ஆணாதிக்க புத்தியின் வெளிப்பாடு. தேஜஸ்வி சூர்யாவின் ட்வீட்டிற்கும் ஜெயமோகனின் பத்திக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

இது ஒன்றும் புதிதல்ல. பத்மினியைப் பற்றி நாராசமாக எழுதியுள்ளார். அருந்ததி ராய், கமலா தாஸ் ஆகியோரின் உருவ அமைப்பைப் பற்றி நக்கலடித்துள்ளார். பக்கவாதம் வந்தும் பணி செய்யும் தீவிரம் கொண்ட வங்கி ஊழியரைகீரை ஆயக்கூட லாயக்கில்லாத அந்த கிழவியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும் என்று எழுதியவர் இவர்.

அழகிற்கு இவர் கொடுக்கும் விளக்கத்திற்கும் அதற்கு சாதியை இணைத்ததற்கும் கடுமையான எதிர்வினைகள் வந்து கொண்டிருக்கிறது.

ஆனாலும் அவரது அணுக்கத் தொண்டர்கள் தங்கள் ஆசானை நியாயப்படுத்த  இன்னும் முன்வரவில்லை.

அப்படி அவர்களால் என்ன சொல்லி ஜெமோவை காப்பாற்ற முடியும்?

"அது ஜெமோவின் கருத்து கிடையாதுங்க. அந்த கதையில் வரும் ஔசேபச்சன் சொன்னது. கதாபாத்திரம் சொல்வதற்கெல்லாம் படைப்பாளி பொறுப்பாக்க முடியாது. அவரை மாதிரி உங்களால் நுணுக்கமாக அழகியலோடு எழுத முடியாது என்ற பொறாமையில் எழுதறீங்க. அவரை மாதிரி ஒரு படைப்பை எழுத முடியுமா உங்களால, பொறாமை"

என்று சொன்னால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

ஆமாம். ஜெமோ ரசிகர்களே, இந்த ஒரு சிறுகதையை படிச்சு முடிக்கறதுக்குள்ள தூக்கம் தூக்கமா வந்தது. இந்த வெண்முரசு எல்லாம் நீங்க எப்படி படிக்கிறீங்க. இதில ஒரு எட்டு பேர் கண்டிப்பா படிப்போம்னு சத்தியம் வேற செஞ்சு கொடுத்திருக்கீங்க. பாவங்க நீங்க.

3 comments:

  1. Jemo, Thejasvi both orae kuttai. Everyone of them are same in this point. Because their Ideology itself is so. There are a lot of good books to read in this book day. Just ignore them as they are not even to eligible for blogging.

    ReplyDelete
    Replies
    1. அவராகவே வாய்ப்பு கொடுக்கும் போது அடிச்சு துவைச்சிடனும்

      Delete
  2. லுசுப்பய அழகை பார்த்ததே இல்லை போல

    ReplyDelete