Showing posts with label சோவியத் யூனியன். Show all posts
Showing posts with label சோவியத் யூனியன். Show all posts

Monday, August 25, 2025

நல்ல வேளை யூரி காகரின் இறந்து விட்டார்!

 


மோடியின் முட்டாள் மந்திரிகளில் ஒருவரான டெல்லி கலவர புகழ் அனுராக் தாகூர் உதிர்த்த முத்து ஒன்று கீழே  உள்ளது.


புராணக்கதைகளுக்கும் அறிவியல் உண்மைகளுக்கும் வித்தியாசம் தெரியாத மோடி போன்ற பெரும் மூடரின் அமைச்சர் மட்டும் அறிவியல் பார்வையுடனா இருப்பார்! காக்கா பிரியாணி தின்பவர்களுக்கு உண்ணிகிருஷ்ணன் குரலா வரும்!!.

அப்படிப்பட்ட மூடனுக்கு நிலவுக்கு முதலில் சென்றவருக்கும் விண்வெளிக்கு முதலில் சென்றவருக்குமான வித்தியாசம்  எப்படி தெரியும்!!!!

நல்ல வேளை விண்வெளிக்கு முதலில் சென்ற சோவியத் வீரர் யூரி காகரின் இந்த கொடுமையை எல்லாம் கேட்காமல் முன்பே இறந்து விட்டார். 

Friday, April 22, 2022

புரட்சித் தலைவரோடு

 


உலகின் முதல் புரட்சித் தலைவர் லெனினின் பிறந்த நாள் இன்று. புரட்சித் தலைவர்/தலைவி என்ற அடைமொழிக்கு பொருத்தமில்லாமல் பலர் அப்படி ஒரு பட்டத்தை சுமந்து திரிந்தனர் என்பது வேறு விஷயம்.

இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை என்ற அடிப்படை விஷயங்கள் மட்டுமல்ல, தொழில் துறை, விண்வெளி ஆய்வு என பல முன்னேற்றங்களை சோசலிச சமுதாய அமைப்பில் சாதிக்க முடியும் என்பதற்கான அடித்தளம் அமைத்த சாதனை மனிதன்.

உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் ஆட்சியை உருவாக்கி முன்னுதாரணம் படைத்த லெனின் புகழ் என்றென்றும் வாழியவே.

 


அற்ப புத்தி கொண்டவர்களால் திரிபுராவில் தோழர் லெனினின் சிலை சிதைக்கப்பட்ட போது அவரது சிலை நெல்லையில் கம்பீரமாய் எழுந்தது.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) யின் நெல்லை மாவட்டக்குழு அரும்பாடு பட்டு அமைத்த லெனின் சிலையோடு இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் கீழே உள்ளது.