Showing posts with label ஆட்டுத்தாடி. Show all posts
Showing posts with label ஆட்டுத்தாடி. Show all posts

Saturday, August 23, 2025

அரசியல் காரணமெனில் ஆளுனருக்கு அருகதையில்லை

 


நேற்று காலை ஆங்கில இந்துவில் வெளியான செய்திதான் மேலே உள்ளது. 

ஜனாதிபதி, ஆளுனர்கள் மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் நிர்ணயம் செய்வதற்கு எதிராக ஜனாதிபதி கருத்து கேட்பது என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒரு வாதம் வைக்கிறார்.

"அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஜனநாயகக் காரணங்களுக்காகவோ ஒரு ஆளுனர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்யலாம்."  என்று அவர் ஆளுனர்களை நியாயப் படுத்துகின்றார்.

ஆளுனர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர், அரசியல் சாசனத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டியவர். அரசியல் காரணத்திற்காக அவர் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதிக்கிறார் என்றால் அவர் அந்த பதவிக்கு அருகதையே இல்லாதவர்.

அப்படிப்பார்த்தால் எதிர்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுனர்கள் அனைவரும் அந்த பதவிக்கு அருகதையற்ற பொறுப்பற்றவர்கள்.

அப்படிப்பட்ட ஆட்களை துரத்தி விடவும் உச்ச நீதிமன்றம் ஏதாவது வழி செய்தால் நல்லது. . . .



Saturday, August 16, 2025

ராஜ்பவனை இழுத்து மூடி ரெவியை . . .

 


சென்னை ராஜ்பவன் மக்கள் விரோதியின், மனித குல விரோதியின் வசிப்பிடமாகி விட்டது. ஆளுனர் பதவியில் அமர்ந்துள்ள ரெவி எனும் நச்சுப்பாம்பு தொடர்ந்து விஷத்தை கக்கிக் கொண்டிருக்கிறது. 

சுதந்திர தினத்திற்கு முன்பாக ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளது. அதை இங்கே பகிர்ந்து கொள்ள எனக்கு மிகவும் கூச்சமாக இருக்கிறது.

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைத் தூண்டும் விஷ(ம)ப் பிரச்சாரம் அது. பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு இன்று ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என்று செய்துள்ள சிறு மதி கொண்டவனின் சில்லறைச் செயல்.

ராஜ்பவனை இழுத்து மூடி ரெவியை பீகாருக்கு துரத்தாவிட்டால் ரெவியின் எண்ணம் பலித்து தமிழ்நாடு கலவரக்காடாகும்.

தூய்மைப் பணியாளர்களை ஒடுக்குவதிலும் அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதிலும் காண்பித்த வீரத்தில் நூறில் ஒரு பங்கையாவது திமுக உடன் பிறப்புக்கள் ரெவி மீது காண்பிக்கட்டும். ஒரு மாணவியின் வீரம் மற்றவர்களுக்கு எப்போது வரும்?


Tuesday, July 22, 2025

நீ எப்போ ரெவி?

 


நீ எப்படி தமிழ்நாட்டின் அவமானமோ அது போல மேற்கு வங்கத்தில் ரௌடி கவர்னராக செயல்பட்டு அதனால் துணை ஜனாதிபதியாக பதவி உயர்வு பெற்ற ஜகதீப் தாங்கர் நேற்று ராஜினாமா செய்து விட்டார்.

நேற்று காலை முழுதும் ராஜ்யசபாவில் பங்கேற்று விட்டு மாலை கொடுத்த ராஜினாமா கடிதத்திற்கு உடல் நிலையை காரணம் சொல்வதெல்லாம் உடான்ஸ்,

மோடியா?

மோகன் பகவந்தா?

ராஜினாமா செய்ய உத்தரவிட்டவர் யாரோ?

மதவெறி நீதிபதி, ஊழல் நீதிபதி ஆகியோர் மீதான பதவி பறிப்பு நடவடிக்கையை தள்ளிப் போடவா?

75 வயதாகப் போகும் மோடிக்கு ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கவா?

எது எப்படியோ தாங்கர் சசெல்வது மகிழ்ச்சியாக உள்ளது. நீ சென்றால் இன்னும் சந்தோஷமாக் இருக்கும்.

பதவியில் இருந்து எந்த நன்மையும் செய்யாத நீ, பதவி வில்குவதுதான் நன்மையாக இருக்கும். 

Friday, April 25, 2025

துயர வேளையில் ஆட்டுத்தாடியால் சின்ன ஆறுதல்

 


பஹல்காம் தாக்குதல் தந்த பெருந்துயரம், சங்கிகள் நடத்தும் மத வெறிப் பிரச்சாரம் அளிக்கும் பெரும் எரிச்சல்,  இவற்றுக்கிடையே ஒரு சின்ன ஆறுதல் தமிழ்நாட்டின் துணை வேந்தர்கள் மூலம் கிடைத்துள்ளது.

உதகையில் மாநில அரசின் செலவில் ஆட்டுத்தாடி ஏற்பாடு செய்த பல்கலைக் கழக  துணை வேந்தர்கள் கூட்டத்தில் அழைக்கப்பட்ட  41 துணை வேந்தர்களில் 32 பேர் ஆட்டுத்தாடியின் அழைப்பை புறக்கணித்துள்ளனர். தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களைத் தவிர பல தனியார் பல்கலைக் கழக துணை வேந்தர்களும் புறக்கணித்துள்ளனர்.



 ஆணவம் தலைக்கேறி அலைந்து கொண்டிருந்த ஆட்டுத்தாடிக்கும் துணைக்கும்  இன்று கிடைத்திருக்கிற சிறப்பான விருந்து உண்மையிலேயே மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

 வேந்தராக இருந்தாலும் நீ வேண்டாத நபர்தான்.

 இன்னும் எத்தனை நாளைக்கு வெட்கம் கெட்ட பிழைப்பை தமிழ்நாட்டில் நடத்தப் போகிறாய் ஆரெஸெஸ் ரெவி?

 ஆட்டுத்தாடியை மொட்டை அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதையில் உட்கார வைத்து ஊர்வலம் நடத்தினாலும் நாற்காலியை விட மறுக்கிற கேவலமான பிறவியாக இருந்தால் என்ன செய்ய முடியும்?

 

Tuesday, April 22, 2025

ஆட்டுத்தாடி - துட்டு தராதீங்க முதல்வரே

 


உச்ச நீதிமன்றம் தலையில் குட்டிய பின்பும் தன் கொழுப்பின் வெளிப்பாடாக ஆட்டுத்தாடி துணை வேந்தர்கள் கூட்டத்தை ஊட்டியில் நடத்துது. அதற்கு துணை வேறு வருது.

தமிழ்நாட்டு முதல்வர் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் சில உள்ளது.

அக்கூட்டத்திற்கு செல்லக் கூடாது என்று துணை வேந்தர்களுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

அந்த கூட்ட செலவினம் என்று ஆட்டுத்தாடி பில் அனுப்பினால் அதனை ஏற்கக் கூடாது. முடிந்தால் மோடியிடம் வாங்கிக் கொள்ளட்டும். இல்லை என்றால் இது நாள் வரை வாங்கிய தண்டச் சம்பளத்திலிருந்து செலவழிக்கட்டும்.

அக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் துணை வேந்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக முக்கியமாக பயணப்படி, இத்யாதி எல்லாம் கொடுக்கக்கூடாது. அவர்களை பணி நீக்கம் செய்வதற்கான முதல் நடவைக்கையாக இது இருக்கட்டும்.

அப்படியெல்லாம் செய்தால் ஆட்டுத்தாடியின் ஆணவம் அடங்கும் . . .

மாற்றுத் திறனாளிகள் மீது காண்பித்த வீரத்தை (மாலையில் அது பற்றி எழுதுவேன்) ஆட்டுத்தாடி மீது காண்பியுங்கள். . .

Monday, April 21, 2025

களவாணிகள் சந்திப்பு யார் குடி கெடுக்க?

 


தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி, மேற்கு வங்க முன்னாள் ஆட்டுத்தாடியான இந்நாள் துணையை சந்தித்துள்ளது.


ஆட்டுத்தாடியின் வேலையை ஒழுங்காக செய்யாததால் உச்ச நீதிமன்றத்திடம் குட்டு பட்டது தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி. அதற்காக உச்ச நீதிமன்றத்தின் மீது அபத்தமாக பொங்கிக் கொண்டிருப்பது மேற்கு வங்க முன்னாள் ஆட்டுத்தாடி.

இந்த இரு களவாணிகளின் சந்திப்பு இந்திய ஜனநாயகத்தை, மாநிலங்களின் உரிமையை குழி தோண்டி புதைப்பதற்கான சதியாலோசனைக் கூட்டமன்றி வேறில்லை.

களவாணிகள் மக்கள் நலன் குறித்தா கவலைப்படுவார்கள்! அதிலும் இவர்கள் சங்கிக் களவாணிகள் . . .


Thursday, April 17, 2025

கூமுட்டையெல்லாம் ஆட்டுத்தாடியானால் ????

 


தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி அநியாயமாக நிறுத்தி வைத்திருந்த மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்தமைக்கு கேரளாவின் புதிய ஆட்டுத்தாடி பொங்கியுள்ளது.

 


நீதிமன்றம் முடிவெடுத்தால் சட்டமன்றம் எதற்கு, நாடாளுமன்றம் எதற்கு என்று அறிவிலித்தனமாக கேள்வி எழுப்பியுள்ளது.

 சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆட்டுத்தாடிகள் அயோக்கியத்தனமாக, அராஜகமாக இழுத்தடிப்பதற்கு முற்றுப் புள்ளி வைப்பதாகத்தான் தீர்ப்பு அமைந்துள்ளது.

 ஆக உச்ச நீதிமன்றம் சட்டமன்றத்தின் மாண்பைத்தான் காப்பாற்றி உள்ளதே தவிர சட்ட மன்றத்தின் பணியையோ, அதிகாரத்தையோ எடுத்துக் கொள்ளவில்லை.

 இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நீதிமன்றம் செய்தது ஆட்டுத்தாடிகளின் வேலையைத்தான். அதை சொல்ல இந்த ஆட்டுத்தாடிக்கு தெரியவில்லை.

கூமுட்டைகளையெல்லாம் ஆட்டுத்தாடியாக்கினால் அவை இப்படித்தான் அபத்தமாக உளறும்.

 

Sunday, April 13, 2025

அடிச்சு துரத்தலைன்னா ஆட்டுத்தாடி???

 


உனக்கொன்றும் வானளாவிய அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதி மன்றம் சவுக்கடி தீர்ப்பு கொடுத்து விட்டது.

வெட்கம், மான,. ரோஷம், சூடு, சொரணை உள்ள ஆளாக இருந்திருந்தால் ஆரெஸெஸ்.ரெவி எனும் அந்த அற்ப ஜந்து, இந்நேரம் ராஜ் பவனை காலி செய்து விட்டு பீகாருக்கு ஓடி, பால்ய விவாகம் செய்த மனைவியோடு குடித்தனம் செய்து கொண்டிருக்கும்.

ஆனால் இதுதான் அப்படிப்பட்ட விழுமியங்கள் எதுவும் இல்லாத ஜந்து அல்லவா!

அதனால்தான் நரபலி கேட்கும் காபாலிகர்களின் புதிய முழக்கமான "ஜெய்ஸ்ரீராம்" முழக்கத்தை கல்லூரி விழாவில் எழுப்பியுள்ளது. இன்னும் சில நச்சுக்கருத்துக்களை வேறு கக்கியுள்ளது.

அடித்து துரத்தும் நிலைக்கு அது தள்ளிக் கொண்டிருக்கிறது. அது வரை இன்னும் அதிகமான விஷத்தனங்களைக் கூட செய்யும்.

அதற்காக நாம் பொறுமை இழக்கக் கூடாது. 

ஆட்டுக்காரன் இல்லாத குறையை ஆட்டுத்தாடி ரெவியால் மட்டும்தான் போக்க முடியும். அது கக்கும் விஷமெல்லாம் விழிப்புணர்வை தூண்டும் அமிர்தம்.

பிகு" கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு நாவலில் நரபலி கொடுக்கும் காபாலிகர்கள் "ஓம் காளி, ஜெய் காளி" என்றுதான் முழக்கமிடுவதாக எழுதியிருப்பார்கள். சில ஆண்டுகள் வரை நவீன காபாலிகர்களான சங்கிகளும் "ஓம் காளி, ஜெய் காளி" என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் "ஜெய்ஸ்ரீராம்" என்று மாற்றியுள்ளார்கள். 

Tuesday, April 8, 2025

ஓடிப் போவியா ஆரெஸெஸ் ஆட்டுத்தாடி ரெவி?

 


தமிழக சட்டமன்றம் இரண்டாவது முறையாக நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய பத்து மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்து விட்டது.

இத்தீர்ப்பின் மூலம் அசிங்கப்பட்ட முதல் ஆள் ஆட்டுத்தாடி ஆரெஸெஸ் ரெவி, அதற்கடுத்தது தவறாக வழிகாட்டி உசுப்பேற்றிய ஒன்றிய அரசு, மூன்றாவதாக ரெவி அனுப்பிய மசோதாக்களை திருப்பி அனுப்பாமலும் முடிவெடுக்காமலும் வைத்திருந்த ஜனாதிபதி.

இன்றைய தீர்ப்பின் மூலம் ரெவியின் ஆணவத்திற்கு, திமிருக்கு, மத வெறிக்கு, கொழுப்பிற்கு, முரட்டுத்தனத்திற்கு, மூடத்தனத்திற்கு சவுக்கடி கிடைத்துள்ளது.

என்ன செய்யப் போகிறாய் ரெவி?

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ள ஆளாக இருந்திருந்தால் ரெவி இத்தனை நேரம் தூக்கில் தொங்கி இருக்க வேண்டும்.

அதெல்லாம் அந்த ஜந்துவிற்கு எதுவும் கிடையாது.

இவ்வளவு அசிங்கப்பட்டதற்கு பிறகு ரெவி குறைந்த பட்சம் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டாவது ஓட வேண்டும்.

ஆட்டுத்தாடி பதவியின் சொகுசை விட முடியவில்லை என்றால் மோடியிடம் கெஞ்சிக் கேட்டு வேறு மாநிலத்திற்காவது ஓட வேண்டும்.

இல்லையென்றால் அன்றாடம் சவுக்கடிதான் கிடைக்கும் . . .

Monday, March 3, 2025

டவுட்டா இருக்கே ஆரெஸெஸ்.ரெவி

 


காதலன் வில்லன் காகர்லா சத்யநாராயணா, தன்னால் கொல்லப்பட்டவர்களுக்கு காசியில்  தர்ப்பணம் கொடுக்கும் காட்சியை வைத்து மோடியும் இது போல யாருக்கு தர்ப்பணம் கொடுத்திருப்பார் என்று சில நாட்கள் முன்பு கேட்டிருந்தேன்.

யாருக்கு தர்ப்பணம் செய்தீர் மோடி ? என்ற பதிவின் இணைப்பு இது . . . 

 இப்போது ஆரெஸெஸ் ரெவியே காசியில் குளிக்கும் காட்சியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பார்த்தேன்.

 காகர்லா சத்யநாராயணாவுக்கு கொஞ்சமும் சளைக்காத கிரிமினல் ஆரேஸெஸ்.ரெவி. இப்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை சீர்குலைக்கும் வகையில் பல கொலை, பாலியல் கொடுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  356 பிரிவை பயன்படுத்தி தமிழ்நாட்டு அரசை கலைக்க வேண்டும் என்று வேறு சங்கிகள் பேசத் தொடங்கி விட்டனர்.

 அதனால் அதற்கு உதவ ரெவியே பல கிரிமினல் செயல்களை தூண்டி விட்டு அதற்கான பிராயசித்தமாக காசியில் தர்ப்பணம் செய்தாரோ என்று டவுட் வருகிறது. கொன்றால் பாவம், தின்றால் போச்சு என்று ஒரு சொலவடை இருப்பது நமக்கு தெரியும். கிரிமினல் வேலைகளை செய்து விட்டு தர்ப்பணம் செய்தால் அந்த பாவம் போய் விடும் என்று சனாதன தர்மத்தில் சொல்லியிருக்கிறதோ என்னவோ!

 பிகு: ஒரு வாரம் முன்னாடி எழுதின பதிவு.

 

Friday, February 14, 2025

ஆரெஸெஸ்.ரெவியை மணிப்பூருக்கு அனுப்புங்கய்யா

 


கலவரத்தை தூண்டி விட்டு அதை அடக்க துப்பில்லாத பிரேன்சிங் மணிப்பூர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாததால் சட்டப்பேரவையை முடக்கி விட்டு அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் ஆட்சி என்பது யதார்த்தத்தில் ஆட்டுத்தாடியின் ஆட்சிதான்.

தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி ரெவி நாகாலாந்து கவர்னராக இருந்தபோது நாகாலாந்தில் அதை கிழித்தார், இதை கிழித்தார் என்று சங்கிகள் பீற்றிக் கொள்கிறார்கள். 

ரெவி அவ்ளோ பெரிய அப்பாடக்கர் என்றால் கலவரபூமியான மணிப்பூருக்கு மாறுதலில் அனுப்புங்கள் 56 இஞ்ச் மோடி. அந்தாள் மணிப்பூரில் என்ன கிழிக்கிறார் என்று பார்ப்போம். 

அப்படி ஒரு நிலை வந்தால் ரெவியின் மனநிலை எப்படி இருக்கும்?

நகர்ம்=மறுபக்கம் வடிவேலு போல மோடி காலில் விழுந்து கதறுவார்.

ஆமாம்.

மோடி போல ரெவியும் ஒரு வெத்து வேட்டு டுபாக்கூர்தான் . . .

Sunday, February 2, 2025

உங்காளுங்களே சொல்றாங்க ஆட்டுத்தாடி ரெவி

 போன வாரம் காட்பாடி ரயில் நிலையத்தில் எடுத்த புகைப்படம் கீழே உள்ளது.

 


மகாத்மா காந்தியால் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று உளறிய ஆட்டுத்தாடி அறிவு கெட்ட ஆரெஸெஸ் ரெவிக்கு இரண்டாவது வரி சமர்ப்பணம்.

 

உங்க மோடி தலைமையிலான ரயில்வே அமைச்சகத்தின் சார்பிலேயே காந்திதான் அன்னை இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார் என்று சொல்லியிருக்காங்க.

 

நீ இப்போ என்ன செய்வே? அஸ்வின் வைஷ்ணவை மாத்த சொல்லுவியா? இல்லை நாக்கை பிடுங்கிக்கிட்டு செத்துடுவியா?

Thursday, January 30, 2025

உமக்கு அருகதை கிடையாது ஆரெஸெஸ்.ரெவி

 


சில நாட்கள் முன்பாக காந்தி தேசத்தந்தை கிடையாது என்றும் அவரால் ஒன்றும் சுதந்திரம் வரவில்லை என்றும் உளறிய ஆட்டுத்தாடி ரெவி இன்று என்ன செய்துள்ளது என்று பாருங்கள்.


மகாத்மா காந்தியை கொலை செய்த கூட்டத்தை போற்றிக் கொண்டு அதன் கேவலக் கொள்கைகளை பரப்பிக் கொண்டு மகாத்மாவின் அனைத்து லட்சியங்களுக்கும் எதிராக செயல்பட்டு, மத வெறியை பரப்பிக் கொண்டிருக்கிற காவிக்கயவன் ஆரெஸெஸ்.ரெவியே, உனக்கு மகாத்மா காந்தியைப் பற்றிப் பேசவோ, அவர் படத்திற்கு மாலை போடவோ கொஞ்சம் கூட அருகதை கிடையாது.

போ, போய் கோட்சே படத்துக்கும் கோழை சாவர்க்கர் படத்துக்கும் பூஜை செய் . . .

Tuesday, January 28, 2025

காவிக்கண்ணாடி அணிந்தால் இப்படித்தான் . ..

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு தீவிர சங்கி போட்டுள்ள பதிவு கீழே . .


அமைச்சர் துரைமுருகன் பின்பக்கம் கையை கட்டிக் கொண்டதை கவனித்து நக்கலடிக்கத் தெரிந்தவருக்கு அவங்காளு ஆரெஸெஸ் ரெவியின் பால்ய விவாகம் செய்து கொண்ட மனைவி முன்பக்கம் கையைக் கட்டிக் கொண்டு நிற்பது மட்டும் தெரியவில்லை, பாவம்.

காவிக்கண்ணாடி அணிந்துள்ளதன் விளைவு இது. அதனால் நான் காவிக் கலரில் சுழித்து வைத்துள்ளேன். 

Sunday, January 26, 2025

ஆடு நனையுதென்று ஆட்டுத்தாடியே வருந்தாதே

 


ஆட்டுத்தாடி ஆரெஸெஸ் ரெவி வழக்கம் போல தமிழ்நாட்டின் மீது வன்மம் கக்கியுள்ளது. 


இந்த ஜந்து சொல்வதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பதையெல்லாம்  ஆய்வு செய்ய வேண்டும் என்பது ஒரு புறமிருக்க இதன் அக்கறையெல்லாம் போலித்தனமானது. பாஜக செய்ய வேண்டிய தேர்தல் பிரச்சாரத்தை இந்த ஜந்து செய்கிறது. 

ஆகவே ஆட்டுத்தாடி ரெவியிடம் சொல்ல வேண்டியது ஒன்றுதான்.

ஆடு நனைகிறது என்று ஓநாய் நீ முதலைக்கண்ணீர் வடிக்காதே! இவ்வளவு மோசமான மாநிலத்துக்கு வெட்டிச்சுமையாய் இருக்காமல் உடனே வெளியேறு.

Friday, January 24, 2025

கவரத்தை தூண்டும் ஆரெஸெஸ் ரெவி

 


ஆளுனர் வேலையைத்தவிர வேறு எல்லா எழவையும் செய்து கொண்டிருக்கிற ஆட்டுத்தாடி ஆரென் ரெவி இப்போது மகாத்மா காந்தியை சிறுமைப்படுத்த மட்டுமே நேதாஜியை உயர்த்திப் பிடித்துள்ளது.


இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, பகத்சிங் போன்ற அனைத்து ஆளுமைகளும் முக்கிய பாத்திரம் வகித்துள்ளார்கள்.

காங்கிரஸ் கட்சியினர், கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் லீக் கட்சியினர் போன்ற அரசியல் கட்சிகள் அனைவரும் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

கோழை செல்பி சாவர்க்கர், வாஜ்பாய் போன்ற காட்டிக் கொடுத்த கருங்காலிகளைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபா போன்ற துரோகிகளைத் தவிர அனைவரும் சுதந்திரம் பெற காரணம்தான்.

இதிலே ஒருவரை உயர்த்தி இன்னொருவரை சிறுமைப்படுத்துவது அற்பத்தனம், நேதாஜி மற்றும் காந்தி ஆதரவாளர்களிடையே சண்டை மூட்டும் சில்லறைத்தனம்.

மகாத்மா காந்தி கொலைகாரனை துதிக்கும் ஆரென்.ரெவி தன்னை யாராவது அடித்து அதன் மூலம் கலவரத்தை தூண்ட முடியுமா என்று முய்ற்சிப்பது போல தெரிகிறது.

அது நடக்காது.

அடிக்குமள்வுக்கு ரெவி வொர்த்தில்லை. 

Monday, January 13, 2025

ஆணவம் உமக்குத்தான் ஆட்டுத்தாடி . . .

 


ஆளுனர் உரைக்கு பின்பு இசைக்கப்பட வேண்டிய தேசிய கீதத்தை முன்பே இசைக்க வேண்டும் என்று அடம் பிடித்து அஸெம்பிளியில் இருந்து ஓடிப் போய் அவதூறு பரப்பும் ஆட்டுத்தாடி ரெவியின் நடவடிக்கையை சிறுபிள்ளைத்தனம் என்று ஸ்டாலின் விமர்சித்தது ரெவிக்கு கோபம் வந்து விட்டது.

அவரை விமர்சித்ததை முதல்வரின் ஆணவம் என்று சொல்லியுள்ளது ரெவி.

ரெவிக்கு ஒன்று சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான ஆணவம் கொண்டவன் என்பது ரெவிதான். மரபுகளை மாற்ற வேண்டும் என்று அடம் பிடிப்பதும் அது நடக்காவிட்டால் அவதூறு பரப்புவதும்தான் உன் வேலையாக இருக்கிறது.

அதனால் நீ தான் உன் ஆணவப் போக்கை மாற்றிக் கொண்டும்.












Monday, January 6, 2025

அவ்வையும் கண்ணதாசனும் சொன்னதை கேள் ரெவி

 


ஸ்டேட்டை விட்டே போயிடு ரெவி

 நீ தமிழ்நாட்டை மதிக்க மாட்டே. தமிழ்நாடு சட்டப்பேரவையோட மரபை மதிக்க மாட்டே, அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்துக்கு பதிலா மனுதர்மத்தை அரசியல் சாசனத்தை மாத்தனும்னு சொல்ற உன் நாக்பூர் எஜமான் மாதிரி தமிழ்நாடு சட்டப்பேரவை மரபையும் மாத்தனும்னு சொல்வே!

 நீ எப்படி தமிழ்நாட்டை மதிக்கலையோ, அது போல தமிழ்நாட்டு மக்களும் முட்டாள் சங்கிகளைத் தவிர வேறு யாரும் உன்னை மதிக்கறதில்லை. ஒவ்வொரு வருஷமும் நீ அசெம்ப்ளிக்கு போறதும் உடனே வெளியில ஓடி வரதும் பொழப்பா போயிடுச்சு. உன் இஷ்டத்துக்கு எல்லாம் மரபை மாத்த முடியாதுன்னு உன்னை அடிக்காத  குறையா சொல்லிட்டாங்க.

 “மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது, அது அர்த்தமுள்ளது”  என்று அந்த காலத்துல கண்ணதாசன் சூர்யகாந்தி படத்துல ஒரு பாட்டு பாடினார்.

 நீ  மானமுள்ள மனிதன் என்றால் உன்னை ……… அளவு கூட மதிக்காத தமிழ்நாட்டை விட்டே ஓடிப் போயிடனும். இனிமே இங்கே தலை வச்சே படுக்கக்கூடாது. பெட்டி சட்டியை கட்டிக்கிட்டு  பீகார் போயிடனும்.

 அவ்வை சொன்னது மானமுள்ள மனிதனுக்குத்தானே, நாங்க சங்கிகள் யாருமே மனுசங்களே கிடையாதே!  எங்களுக்கு வெ.மா.ரோ.சூ.சொ என எதுவுமே கிடையாதேன்னு சொல்லிட்டு துப்பினா துடைத்துக் கொள்ளும் ஆள்தானே நீ!


Monday, October 21, 2024

தமிழ்த்தாய் வாழ்த்து – பயந்து போன ஆட்டுத்தாடி.

 


“திராவிட நல் திருநாடும்” என்ற வாசகம் ஆர்.எஸ்.எஸ்.ரெவியின் கட்டளைப் படிதான் தூர்தர்ஷன் விழாவில்  பாடப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. கவனச்சிதறல் என்றெல்லாம் தூர்தர்ஷன் சொன்னது வெறும் கதை. முதலமைச்சர் சொன்னது போல அது திராவிட ஒவ்வாமைதான். “தமிழர் நல் திரு நாடும்” என்ற டூல்கிட் படி சங்கிகள் போட்ட பதிவுகள் அந்த ஒவ்வாமையை நிரூபித்தது.

ஆனாலும் தமிழ்நாடு முழுக்க எழுந்த கண்டனங்கள் உண்மையிலேயே ரெவிக்கு கிலி கொடுத்து விட்டது.


 

அதனுடைய விளைவுதான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து வெட்டாமல் பாடப்பட்டதும், ரெவி அதற்கு வாயசைத்ததும்.

 இனியாவது ஆட்டுத்தாடி ஒழுங்காக இருக்க வேண்டும்.

Saturday, October 19, 2024

ஆட்டுத்தாடி அடி வாங்காமல் போகாதோ?

 


நேற்றைக்கு ஆட்டுத்தாடி நடந்து கொண்டது எல்லாம் அசிங்கத்தின் உச்சகட்டம். 

தமிழ்த்தாய் வாழ்த்தின் வாசகங்களை வெட்டியது என்பது தமிழ்நாட்டிற்கு செய்த அவமானம். அதற்கு ரெவிதான் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் தூர்தர்ஷன் ஆட்டுத்தாடியிடம் மன்னிப்பு கேட்டது கொடுமை.


அங்கே செத்த மொழி சமஸ்கிருதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டை இழிவு படுத்தியது இன்னொரு கொடுமை.


முதல்வரின் எதிர்வினை மிகவும் சரியானது.

இப்படியே போனால் தமிழ்நாட்டு மக்கள் ஆட்டுத்தாடியை அடித்துத்தான் துரத்துவார்கள். அதற்கு முன்பாக மோடியே ரெவியை திரும்பப் பெற வேண்டும்.