Showing posts with label தங்கம். Show all posts
Showing posts with label தங்கம். Show all posts

Friday, October 27, 2017

அன்று வெள்ளி. . .இன்று தங்கம் . . .

சில மாதங்களுக்கு முன்பு

 பார்க்கத்தான் ... சாப்பிட அல்ல . . .   

என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்த பதிவில் இருந்த படங்கள் எல்லாம்   வெள்ளியில் செய்யப்பட்ட தின்பண்டங்கள்.

இப்போது வாட்ஸப்பில் ஒரு படம் வந்தது. கீழே கொடுத்துள்ளேன். 

இவையும் தின்பண்டங்கள்தான். ஆனால் தங்கத்தில் செய்யப்பட்டவை.



நுணுக்கமாக இவற்றை தயாரித்த அந்த கலைஞனை பாராட்டுகிறேன்.

Saturday, April 1, 2017

இந்த நகையையெல்லாம் யாரால் ????????????










இது வாட்ஸப் உபயம். துபாயில் ஒரு நகைக்கடை என்று சொல்லியிருந்தார்கள்.

இதிலே கடைசியாக இருக்கிறதே, அந்த நகையை யாரால் அணிந்து கொள்ள முடியும்? அணிந்து கொண்டால் உடல் வெந்து போகாதோ/

ஒரு வேளை உள்ளுக்குள்ளே ஒரு ஏ.சி பொறுத்தினால் அணிந்து கொள்ள முடியுமோ? இவ்வளவு பெரிய நகையை வாங்கக் கூடிய சக்தி படைத்தவர்களுக்கு ஏ.சி வாங்குவது ஒன்றும் சுமையாக இருக்காது. ஆனால் ஏ.சி யின் சுமையையும் சேர்த்து சுமக்கும் தெம்பு வேண்டும்.

சரி, இதைப்பற்றி நமக்கென்ன கவலை?

யார் வாங்குகிறார்களோ அவர்கள் படட்டும் அந்த கவலையை.

Saturday, April 11, 2015

கோயில் தங்கத்தை மோடி கைப்பற்றலாமா?

 
http://www.thebuzzfactoree.com//content/uploads/2014/01/442965594_f1ba641913.jpg 

 http://assets.vice.com/content-images/contentimage/no-slug/e3275661a0bf5a848d62c16a14605b89.jpg

மத்தியரசு தனது பற்றாக்குறையை சரி செய்ய இந்தியக் கோயில்களில் அதிலும் குறிப்பாக மும்பை சித்தி வினாயகர் கோயிலில் உள்ள தங்கத்தை கைப்பற்றி அரசின் வசம் கொண்டு வரலாம் என மோடி திட்டமிடுவதாக இன்றைய ஹிந்து நாளிதழில் வந்துள்ளதை இங்கே படியுங்கள்

இந்துக் கோயில்கள் மீது அரசு கட்டுப்பாடு இருக்கக் கூடாது. ஹிந்து அறநிலையத் துறையை கலைத்து விட வேண்டும் என்று ஓயாமல் கூப்பாடு போடும் ராம கோபாலன் உள்ளிட்ட காவிக்கூட்டம் மோடியின் முடிவை ஆதரிப்பார்களா? எதிர்ப்பார்களா?

திருவனந்தபுரம் கோயிலில் கோடிக்கணக்கான ரூபாய் பொக்கிஷம் கண்டறியப்பட்ட போது அந்த செல்வத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம் என்ற கருத்து வந்த போது காவிக்கூட்டம் குய்யோ முய்யோ என்று ஓலமிட்டு அது கடவுளின் சொத்து என்று கதறியது நினைவிற்கு வருகிறது.

அதே நீதி இப்போது மோடிக்கும் பொருந்துமா என்று பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 

Wednesday, October 16, 2013

ராஜாவின் ஆவி - சாமியார் கனவு - ஆயிரம் டன் தங்கம்




உத்திர பிரதேச மாநிலம் டௌண்டியா கேரட் என்ற கிராமத்தில்
160 ஆண்டுகளுக்கு அந்த பகுதியை ஆண்ட குறுநில மன்னன்
ராம் ராவ் பக் ஷ்  சிங்  தனது அரண்மனையில் ஆயிரம் டன்
தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாகவும் அதை நாட்டின் 
வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு  அந்த ராஜா தனது
கனவில் தோன்றி சொன்னார் என்று சுபோஷன் சர்கார் என்ற
சாமியார் சொல்லியுள்ளார்.

இப்போது அந்த சாமியார் சொன்னது உண்மையா என்று பார்க்க
தொல்லியல் துறை வரும் 18 ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி
செய்யப்போகிறது.

மதுரை ஆதீனத்தின் கனவில் சிவ பெருமான் தோன்றி அதன்
பின் நடந்த களேபரங்கள் போல இல்லாமல் தங்கம் கிடைத்தால்
சரி. 

சரி இந்த தங்கம் கிடைத்தால் இந்திய அரசின் பல பிரச்சினைகள்
தீருமல்லவா? ரூபாயின் மதிப்பு உயருமல்லவா?

எங்கோ ஒரு கோயிலின் இருட்டறையில் என்ன மதிப்பு என்றே
தெரியாமல் பாசி படிந்து கிடப்பதை விட அரசு கஜானாவிற்கு
வருவது நல்லது. 



Friday, April 19, 2013

தங்க்ம் விலை குறையுது, தவிக்க வைக்குது, தலை சுற்றுது





தங்கம் விலை குறைவதால் மக்களெல்லாம் நகைக்கடை வாசலில்
நிற்கிறார்கள்,  நகை வாங்கித் தர வேண்டும் என கணவனை மனைவி
மிரட்டுவது,ரேஷன் கடையை விட நகைக்கடை கியூ பெரிதாக இருப்பது,
இப்படி பல நகைச்சுவைத் துணுக்குகள், கார்ட்டூன்கள்  வந்து கொண்டே
இருக்கிறது. நான் அதைப்பற்றி எழுதப்போவதில்லை.

தங்கம் விலை குறைவதால் இன்று விழி பிதுங்கி வங்கியிலிருந்து
வந்துள்ள கடிதங்களை கையில் வைத்து தவித்துக் கொண்டிருப்பவர்கள்
பற்றிதான்.

வங்கிகளில் நகைக் கடன் பெற்றுள்ளவர்களுக்கு வங்கிகள் கடிதம்
அனுப்பிக் கொண்டிருக்கின்றன. கடன் அளவை விட தங்கத்தின் 
மதிப்பு குறைந்து விட்டதால் அதை ஈடு செய்யும் அளவிற்கு பணம்
செலுத்த வேண்டும் என்பது கடிதத்தின் சாராம்சம்.

முகநூலில் ஒரு நண்பர் இது போன்ற கடிதம் தனக்கு வந்துள்ளதாக
ஸ்டேட்டஸ்  போட்டவுடன் நானும் அலுவலகத்தில் சில ஊழியர்களை
விசாரித்தேன். தங்களுக்கும் அது போல கடிதம் வந்துள்ளதாக
மெல்லிய குரலில் சொன்னார்கள்.

ஸ்டேட் வங்கி  சேர்மன் பத்திரிக்கைகளில் சொன்னதற்கு மாறாக
வங்கிகளின் நடவடிக்கை உள்ளது. நகையின் மதிப்பில் 70 % மட்டுமே
கடனாக அளிப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை
என்றும் பெரும்பாலான நகைக்கடன்கள்  திருப்பி செலுத்தப் படுவதே
இந்தியாவின் மரபாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 
வாடிக்கையாளர்களை இப்போது தொந்தரவு செய்ய வேண்டிய
தேவை ஏற்படாது என்றும் அவர் சொல்லியிருந்தார்.

ஆனால் அதற்கு மாறாகத்தான் வங்கிகள் நடந்து கொண்டுள்ளது.

Panic Buying  என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு.
ஒரு பொருள் விலையேறுமோ அல்லது கிடைக்காமல்
போகுமோ என்று அச்சப்பட்டு மக்கள்  முண்டியடித்துக் கொண்டு
வாங்குவதை இவ்வாறு சொல்வார்கள். பெரும்பாலும் இது
உளவியல் அச்சம்தான்.

இப்போது வங்கிகளுக்கு அந்த உளவியல் அச்சம் வந்து
விட்டது. கடந்த் ஒரு வார விலை குறைப்பை பார்க்கும் போது
தங்கம் ஒரு கிராமின் விலை ரூபாய் 2500 க்கு குறையவில்லை.
வங்கிகள் அதிக பட்சம் கடன் கொடுத்தது கிராமிற்கு 
ரூபாய் 2100 அல்லது ரூபாய் 2200 தான். ஆகவே இது வரை
கடன் மதிப்பை விட தங்கத்தின் விலை குறையவில்லை.

ஆகவே இது அவசியமற்ற  நடவடிக்கை.

இன்னொன்று நகைக்கடன் வாங்குபவர்கள் பெரும்பாலும்
நடுத்தர, ஏழை மக்கள்தான். வங்கிகளில் வராக் கடனாக
ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் குவித்து வைத்துள்ள
விஜய் மல்லய்யா போன்ற பெரும் செல்வந்தர்களை விட
இவர்கள் நாணயமானவர்கள், நேர்மையானவர்கள். 

பெரும் பணக்காரர்கள் அடகு வைத்த நிலத்தின் மதிப்போ,
பங்குப் பத்திரங்களின் மதிப்போ குறையும் போது இது
போன்ற கடிதங்களை வங்கிகள் என்றாவது அனுப்பியது
உண்டா?  அடமானம் வைத்துள்ள தங்கம் அவர்கள் கைவசம்
உள்ள போதே இந்த நடவடிக்கை!

ஏழை, நடுத்தர மக்களை எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம்
என்ற எண்ணம் கொண்ட அரசு ஆட்சி செய்யும் போது அதன்
கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் மட்டும் வேறு எப்படி
செயல்படும்?

இப்போது மீண்டும் தங்கத்தின் விலை உயரத் தொடங்கி
விட்டது.

இப்போது கூடுதல் கடன் கொடுப்பார்களா?