இன்று காலை செய்தித்தாள் வர கால தாமதமானதால் பழைய இதழ்களை புரட்டிக் கொண்டிருந்தேன். அப்போது கண்ணில் பட்ட செய்தி கீழே உள்ளது.
மிசோரமைச் சேர்ந்த 26 பேர், அதிலே 11 பேர் குழந்தைகள், மியன்மரில் உள்ள தங்கள் உறவினர்களைப் பார்க்க அனுமதி பெற்று சென்றுள்ளனர். ஊரடங்கு பற்றிய அறிவிப்பு வந்ததும் வீடு திரும்பியுள்ளனர். மியன்மர் எல்லையில் இருந்த தொங்கும் பாலத்திற்குள் அவர்கள் நுழைந்ததும் மியன்மர் எல்லைக்காவல் படை தங்கள் எல்லைப் பக்கத்தில் இருந்த கதவுகளை பூட்டி விட்டது.
பாலத்தின் இன்னொரு புறத்தில் இருந்த இந்தியாவின் துணைக்காவல் படையான அஸ்ஸாம் ரைபிள்ஸ் அவர்கள் இந்தியாவிற்குள் நுழைய முடியாதபடி பாலத்தின் இந்தியப்பக்கத்தை மூடி விட்டது.
இரண்டு இரவுகளுக்கு மேலாக அவர்கள் இந்தியாவிற்குள்ளும் வர முடியாமல் மியன்மருக்கும் திரும்ப முடியாமல் உணவு, தண்ணீர் இல்லாமல் குளிரில் நடுங்கி மிகப் பெரிய இன்னலை சந்தித்துள்ளனர்.
மிசோரம் முதல்வரின் தலையீட்டுக்குப் பிறகே பாலத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மோடியின் அவசர கதியிலான அறிவிப்பால் இது போல எத்தனை பேர் எத்தனை விதமான துன்பங்களை அனுபவிக்கின்றனறோ?
No comments:
Post a Comment