Showing posts with label ஆபாசம். Show all posts
Showing posts with label ஆபாசம். Show all posts

Tuesday, February 17, 2026

மோடியின் ஆளும் மோடி மாதிரிதானே பேசுவான்!

 


பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் விஜய்யை மட்டம் தட்டுவதாக நினைத்து த்ரிஷாவை இழிவு படுத்தி பேசினார்.

அந்த சர்ச்சை அடங்கும் முன்பே பாஜகவின் கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், ஒரு பொதுக்கூட்டத்திலேயே கரூர் காங்கிரஸ் எம்.பி செல்வி ஜோதிமணியை ஆபாசமாக பேசுகிறார்.

இவர்கள் இப்படி பேசியது எனக்கு ஆச்சர்யமாகவோ அல்லது அதிர்ச்சியாகவோ இல்லை. 

சில காலம் முன்பாக பத்திரிக்கையாளர்களை மிக மிக கேவலமான, ஆபாசமான வார்த்தையில் ஆட்டுக்காரன் பேசியது உங்களுக்கு நினைவுக்கு வரலாம்.

இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து தைரியம் வருகிறது?

கண்டிப்பாக மோடியிடமிருந்துதான்.

பாஜக கொலைகாரர்களால் துரத்தப்பட்டு வேறு வழியின்றி இஸ்லாமியர்கள் தங்கியிருந்த அகதிகள் முகாமை "குழந்தைகள் உற்பத்தி தொழிற்சாலை" என்று நக்கல் செய்ததையும் சோனியா காந்தியை கொச்சையான வார்த்தை கொடுத்து விவரித்ததையும் மறந்து விட முடியாது.

மோடியை அப்படி பேச வைப்பது எது?

அவர்களின் டி.என்.ஏ வில் ஊறியுள்ள ஆணாதிக்க சிந்தனை. அதை அவர்களுக்கு ஊட்டி வளர்ப்பது 

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

அதுதான் 

சனாதனம் . . .

Tuesday, July 2, 2024

மோடியின் (ஆபாச ) ஆட்டம் இனிதான் . . .

 


நேற்று மக்களவை களை கட்டியது. ராகுல் காந்தி தொடங்கி தோழர் சு.வெ, ஆ.ராசா, மொஹுவா மொய்த்ரா என அனைவரும் அபூர்வப் பிறவியை பின்னி எடுத்து விட்டார்கள்.

இந்தியாவிலேயே மோடிக்கு பிடிக்கவே பிடிக்காத இடம், வாரத்துக்கு இரண்டு நாட்கள் அதுவும் பத்து நிமிடங்கள் மட்டுமே இருக்கிற இடம், அங்கே கிட்டத்தட்ட ஒரு நாள் முழுதும் உட்கார வைத்து விட்டார்கள்.

சிவந்த மண் படத்தில் "பட்டத்து ராணி' பாடலின் போது தன்னை கொலை செய்யத்தான் நிகழ்ச்சியே நடக்கிறது என்று தெரிந்து கொண்ட  திவான் நம்பியாரின் முகம் எப்படி இறுக்கமாக இருந்ததோ அது போலத்தான் ராகுல் பேசும் போது மோடியின் முகம் இருந்தது.


இதற்கெல்லாம் மோடியின் எதிர்வினை எப்படி இருக்கும்?

நாகரீகமாக பதில் அளிக்க அவர் என்ன நேருவா இல்லை சீத்தாராம் யெச்சூரியா?

கேடு கெட்ட, கேவலமான அரசியல்வாதிதானே!

ஏற்கனவே இந்துக்களை அவமதித்து விட்டார் என்று திசை திருப்ப முயற்சி செய்தார். இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையை தூண்டுகிறார்கள் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாகத்தான் சில்லறை சங்கிகளின் பதிவுகள் அமைந்துள்ளது.

மோடியின் பதில் எப்படி இருக்கும்?

கீழேயுள்ள படம் நினைவில் உள்ளதா?



 மக்களவையில் மோடி வெளிப்படுத்திய ஆபாச உடல் மொழியின் ஒரு பகுதி.

இப்போது இன்னும் அசிங்கமாக, கேவலமாக, தரக்குறைவாக, ஆபாசமாக, பொய் மூட்டைகளோடு விஷத்தைக் கக்குவார்.

ஆமாம்!

பரமாத்மா எதுக்கு இந்த மாதிரி பாவாத்மாக்களை படைச்சு அனுப்பி இந்தியாவை சீரழிக்குது?

Thursday, November 23, 2023

இன்னும் ஆபாசம் குஷ்பு

 


சேரி மொழி என்பதற்கு குஷ்பு அம்மையார் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். சேரி என்றால் அன்பு என்று ஃபிரஞ்சு மொழியில் அர்த்தமாம். அந்த அர்த்தத்தில்தான் அவர் அந்த வார்த்தையை தன்னுடைய நேசத்தை வெளிப்படுத்த பயன்படுத்தினாராம்.


அது அன்பைக் குறிக்கிறது என்றால் "உன்னுடைய சேரி மொழியில் என்னால் பேச முடியாது" என்று ஏன் சொல்ல வேண்டும்,



செய்த தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்பதற்குப் பதில் சம்பந்தமே இல்லாமல் ஃபிரெஞ்ச் மொழியை எல்லாம் இழுத்து கொடுத்திருக்கிற விளக்கம், அவரது முந்தைய ட்வீட்டை விட இன்னும் ஆபாசமாக இருக்கிறது. 

பாஜக கட்சியில் உள்ளவர்கள் யார் நேர்மையாக இருப்பார்கள். செய்த அசிங்கத்தை மறைக்க அடுத்த அசிங்கம், அதற்கடுத்த அசிங்கம் என்று போய்க் கொண்டே இருப்பதுதானே அந்த கட்சியின் கேவலமான பாரம்பரியம். . . .

பிகு 1 : இதே குஷ்பு அம்மையார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சீண்டி வாங்கிக் கட்டிக் கொண்டதை இந்த இணைப்பின் மூலம் பாருங்கள். அந்த இணைப்பின் இறுதியில் அப்போது குஷ்பு அம்மையார் போட்ட ஒரு ட்வீட் இருக்கும். "அடி செருப்பாலே"  என்ற வார்த்தையை அப்போது பயன்படுத்தியிருப்பார். "அடி செருப்பாலே" என்பதுதான் குஷ்புவின் கண்ணியமான, நாகரீக மொழி போலும். 

பிகு : ஆமாம். அந்த டிக்சனரியை புரட்டி உங்களுக்கு சொன்ன அந்த அதிமேதாவி யாருங்க மேடம்? அவனுக்கும் உங்களுக்கு கட்டின மாதிரியே ஒரு கோயில் கட்டனும் !

Friday, November 25, 2022

பாஜகவில இதெல்லாம் ஒரு ஜாலிப்பா!

 



திமுகவிற்கு பெரிய அடி கொடுத்து விட்டோம் என்று சங்கிகள் பீற்றிக் கொண்ட திருச்சி சூர்யா, பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் 
டெய்சி சரனோடு பேசிய ஆடியோவை நானும் கேட்டேன். அசிங்கம், ஆபாசம், வன்முறை, மிரட்டல் இதுதான்,

இப்போது அவர்கள் இருவரும் சமரசமாகி விட்டதாக செய்தி வந்துள்ளது. 


இந்த பிரச்சினையை தீர்க்க ஆட்டுக்காரன் எடுத்த பெரும் முயற்சி வெற்றி பெற்று விட்டது போல . . .

தன்னை ஆபாசமாக பேசியவனை அந்த பெண்மணி செருப்பாலோ, துடைப்பத்தாலோ அடித்திருக்க வேண்டும். ஆனால் தம்பி என்கிறார்.

"அவன் குடும்பத்தை நான் கேவலமா பேசுவேன். என் குடும்பத்தை அவன் படு கேவலமா பேசுவான், நாங்க இதை ஒரு ஜாலியாதான் எடுத்துக்குவோம்" என்ற வடிவேலுவின் டெலக்ஸ் பாண்டியன் வசனம்தான் நினைவுக்கு வந்தது. அது போல இதெல்லாம் அவங்களுக்கு ஜாலி போல . . .

மொத்தத்தில் பாஜக ஒரு மானங்கெட்டவர்களின் கூடாரம். 

Sunday, February 13, 2022

இவனெல்லாம் முதல் மந்திரி!


 அஸ்ஸாம் முதல் மந்திரியை பதவி நீக்க வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சர் கூறியதாக படித்தேன்.

தெலுங்கானாவுக்கும் அஸ்ஸாமுக்கும் சம்பந்தமே இல்லையே என்ற சிந்தனையில் தேடினால் விஷ(ய)ம் தெரிந்தது.

"பாலக்கோடு துல்லிய தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீ ராஜீவ் காந்தியின் மகன் தானா என்பதற்கு எப்போதாவது நாங்கள் ஆதாரம் கேட்டுள்ளோமா?"

என்று அந்த முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா  பேசியுள்ளான்.

" குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைதான் குஜராத் அகதிகள் முகாம்' என்று ஆபாசமாக பேசிய கேடு கெட்ட மனிதனை பிரதமராகக் கொண்ட கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் மட்டும் எப்படி யோக்கியமாக இருப்பான்!!!

Wednesday, August 25, 2021

சங்கிகள் சைலன்ஸ் – அந்த பயம் பிடிச்சிருக்கு


 


கேடி.ராகவன் ஆபாசக் காணொளி சங்கிகளுக்கு நடுக்கம் கொடுத்துள்ளது. எந்த ஒரு சர்ச்சையென்றாலும் கொந்தளிக்கும் பல மத்யமர் சங்கிகள் நேற்று விடுப்பில் போய் விட்டார்கள். மத்யமர் குழு அட்மினோ கேடி ராகவன் பற்றிய பதிவுகளுக்கு அனுமதி கிடையாது என்று வேறு வேறு வார்த்தைகளில் மறுத்து விட்டார்.

 





சங்கிகளின் முக்கியமான பொய்ப் பரப்பாளர் ஸ்டான்லி ராஜன் பதிவு மேல் பதிவு எழுதி மதன் ரவிச்சந்திரனையும் வெண்பா கீதாயனையும் நொடிக்கு நொடிக்கு திட்டிக் கொண்டே இருக்கிறார். மீதமுள்ள பதினான்கு பேரில் இந்த பேனா பொய்யரும் உள்ளாரோ?

 மாற்று மதத்தவர்களையும் திமுகவையும் திட்டும் பதிவுகளை பகிர்ந்து கொள்வதையே பிழைப்பாகக் கொண்டுள்ளவர்களும் காணவில்லை. எங்கே பதுங்கிக் கொண்டுள்ளனரோ?

 இறுதியாக  மதன் டைரிஸ் யூட்யூப் பக்கமே முடக்கப்பட்டு விட்டது. மதனையும் கட்சியை விட்டு தூக்கி விட்டார்கள் என்றொரு செய்தி பார்த்தேன்.  தவறிழைத்த கேடி.ராகவனை எதுவும் செய்யாமல் அதை வெளியே சொன்ன மதனை நீக்கியதன் மூலம் பாஜகவிற்குள் நடைபெறும் ஆரிய-திராவிடப் போரில் எப்போதும் போல ஆரிய வகையறாக்களே வென்று விட்டதாகவும் ஒரு பதிவை படித்தேன். ஆமாம், ஜெயமோகனின் குண்டர் படை மகளிர் அணி தலைவி வெண்பா, பாஜக உறுப்பினரே கிடையாதாமே! அதிமுகவில் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தின் கோஷ்டியைச் சேர்ந்தவரை பாஜக எப்படி ஐயா நீக்கும்?

 ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், திபெத், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகளையெல்லாம் வென்றெடுத்து அகண்ட பாரதம் அமைக்கும் அளவிற்கு கெத்தானவர்களாக பீற்றிக் கொள்ளும் பாஜக கட்சி, ஒரு காணொளிக்கு இப்படி அரண்டு போய் விட்டதே!

 

சங்கிகளின் இந்த பயம் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு . . . .

 

பிகு:  அகண்ட பாரதமெனும் சங்கிக் காமெடி - நாளை

 


Tuesday, August 24, 2021

கேடி ராகவன் வீடியோ – பாஜக பாரம்பரியம்

  


பாஜகவின் முக்கியமான தலைவரான கேடி ராகவனின் காணொளி காட்சி இன்று பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பாஜக தலைவர்கள் காணொளி  வலைகளில் சிக்கிக் கொள்வது ஒன்றும் புதிதல்ல.

லஞ்சப்பணத்தை டாலர்களில் கேட்டார் பாஜக அகில இந்திய தலைவராக இருந்த பங்காரு லட்சுமண். “பணம்தான் கடவுள்” என்று கையில் மதுக் கோப்பையோடு கம்பீரமாக சொன்னார் இன்னொரு மந்திரி, பி.சி.கந்தூரி அவர் பெயர் என்று நினைவு. ஆபாசப்படங்களை சட்டப்பேரவையில் பார்த்து முன்பு எம்.எல்.ஏ பதவி இழந்தவர்கள் இப்போது கர்னாடக மாநிலத்தில் அமைச்சர்கள். ஆகவே பாஜகவிற்கு இதெல்லாம் புதிதல்ல. அசிங்கமாக மாட்டிக் கொள்ள அவர்களால் மட்டுமே முடியும்.

 இங்கே கேடி ராகவனை சிக்க வைத்ததும் இன்றைய தேதியில் பாஜக உறுப்பினராக இருக்கிற மதன் ரவிச்சந்திரன் என்பதாலும் வீடியோக்கள் வெளியிடப்படும் என்பது ஆட்டுக்கார அண்ணாமலைக்கு தெரியும் என்பதாலும் சங்கிகள் அடக்கி வாசிக்கிறார்கள். அண்ணாமலை, குஷ்பு ஆகியோரோடு அதே நாளில் பாஜகவில் இணைந்தவர் மதன் ரவிச்சந்திரன் என்பதும் முக்கியம்.

 அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகரானால் கோயில்களின் புனிதம் கெட்டு விடும், கடவுள் கோபித்துக் கொள்வார் என்று பேசிய கட்சியின் முக்கியத் தலைவர் கடவுளை மதிக்கவில்லை அல்லது நம்பவில்லை என்பதே கேடி.ராகவன் வீடியோ உணர்த்துகிற உண்மை. கேடி ராகவனுக்கு காஞ்சிபுரம் தேவநாதனே குருநாதன். பாஜக கட்சியின் கலாச்சாரக் காவலர்கள் நாடகத்தை இனியாவது அப்பாவி மக்கள் நம்பாமல் இருக்க வேண்டும்.

 இந்த கே.டி.ராகவன் வீடியோ நமது கவனத்தை அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பி விடக் கூடாது.

 கொரோனா மூன்றாம் அலை,

பெட்ரோல் விலை உயர்வு,

விவசாயிகள் போராட்டம்,

பொதுத்துறை விற்பனை,

 ஆகியவற்றிலிருந்து  மக்கள் கவனம் மாறி விட்டது என்று அற்ப சந்தோஷம் சங்கிகள் அடையக் கூடாது.

 ஆட்டுக்கார அண்ணாமலை நியாயஸ்தன் என்று பலர் பேசினார்கள். ஆனால் எனக்கு கர்னாடகா முகம் இருக்கிறது என்று மிரட்டிய அண்ணாமலையின் அந்த முகத்தை தன் அறிக்கையில் மதன் ரவிச்சந்திரனுக்கு விடுத்த மறைமுக மிரட்டலில் பார்க்க முடிந்தது.

பிகு : ஏன் இந்த முகப்புப் படம் என்று யோசிப்பவர்களுக்காக . . .

சில வருடங்களுக்கு முன்பாக சபல புத்தி கொண்ட சில அரசியல் தலைவர்கள் பற்றி ஒரு தொடரே வந்தது என்பதை மட்டும் நினைவு படுத்துகிறேன். 

Sunday, April 25, 2021

லாக் டவுன் மாலன் ஸ்பெஷல்

 


லாக் டவுனை முன்னிட்டு வீட்டு புத்தக அலமாரியில் படித்த புத்தகங்களை அடுக்கி வைக்கும் முன்பு புரட்டியதில் கண்ணில் இரண்டு விஷயங்கள் பட்டது.

அதில் ஒன்று மாலன் ஸ்பெஷல்.

அண்ணன் குமுதத்தில் எழுதியதைப் படியுங்கள்.



மிஸ்டர் மாலன், மோடியே ஒரு தரங்கெட்ட, ஆபாசப் பேச்சாளர்தானய்யா! இதில அவருக்கு அறச்சீற்றம் வந்ததுன்னு எரிச்சல் வர மாதிரி காமெடி செய்யறீங்களே!

வாங்கின துட்டுக்கு விசுவாசமா எழுதறீர்யா!

பிகு : லாக்டவுன் ஸ்பெஷல் அடுத்தது யாருக்கு என்று நான் தனியாக சொல்ல வேண்டுமா என்ன?

யெஸ்

நாரோயில் ஆஜான் தான்


Thursday, February 11, 2021

ஆபாச கல்யாணுக்கு குண்டர் சட்டம்

 


ஆபாச சங்கி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது என்பது இன்று கிடைத்த மிக நல்ல செய்தி.




மனிதப் பிறவி என்றே சொல்ல முடியாத கேவலமான பேர்வழி இவன். இப்போதாவது இவன் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. கோவை மாவட்ட ஆட்சியரின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.

இவனுக்காக பாஜக பேர்வழிகள் யாரும் சிபாரிசுக்கு வர மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ஏனென்றால்


எட்டு மாதத்திற்கு முன்பே அவனுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை கொடுத்து விட்டார்கள்.

இருந்தும் யாராவது கல்யாணராமனுக்காக குரல் கொடுத்தால் அவர்களும் கல்யாணராமன் மாதிரி ஆபாசப் பேர்வழியே 


Sunday, August 23, 2020

திமுக, அதிமுக ஏன் மௌனமாக உள்ளனர்?

 


ஆபாச சங்கி துவக்கத்தில் கம்யூனிஸ்டுகளை திட்டிக் கொண்டிருந்தான். இப்போது அவன் திமுக வினரையும் அதிமுகவினரையும் அசிங்கமாக திட்டிக் கொண்டிருக்கிறான். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரையும் கேவலமாக பேசுகிறான். 

ஆனால் உடன் பிறப்புக்களும் ரத்தத்தின் ரத்தங்களும் இவனுக்கு ஏன் எதிர்வினையாற்றுவதில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இவனை தொடர்ந்து பேச விட்டால் இன்னும் அசிங்கமாக போய் விடுவான்.  ரொம்பவும் மோசமாகப் போய் மகாராஷ்டிராவில் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிற அவனை தேடிப் பிடித்து அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் போல . . .

அப்படிப்பட்ட நிலைமைக்கு செல்லும் முன் திமுக, அதிமுகவினர் செயல்படுவது நல்லது.





Monday, March 11, 2019

மோடி மாயை - பெண்களுக்கோர் ஆலோசனை


மோடியை யாராவது விமர்சித்தால் அவர்களுக்கு தேச விரோதி என்று முத்திரை குத்துவது சங்கிகளின் பண்பு.

அப்படி விமர்சிப்பவர்கள் பெண்களாக இருந்து விட்டால் போதும், அவர்களை ஆபாச வார்த்தைகளில் அர்ச்சனை செய்து வாய் திறக்க முடியாமல் செய்வது சங்கிகளின் வாடிக்கை.

அப்படிப்பட்ட ஆபாச தாக்குதலுக்கு சமீபத்தில் உள்ளானவர் திரைக்கலைஞர் ரோகிணி. 

"திரைப்படத்தில் நடிக்கிற நீயெல்லாம் எதற்கு அரசியல் பேசுகிறாய்?"  என்பது அவருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை. 

திரைத்துறையைத் தாண்டி சமூக அக்கறையோடு செயல்படும் அவருக்கே இந்த நிந்தனை.

பெண்களை இழிவாக கருதுவதுதான் காவிகளின் தத்துவம். அதை தங்கள் பேச்சிலும் செயலிலும் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

இப்படிப்பட்ட ஆபாசப் பேர்வழிகளின் ஆட்சி இனியும் தொடரத்தான் வேண்டுமா?

தமிழக மக்களே சிந்தியுங்கள் . . .

மோடி நல்லவர், வல்லவர் என்று பல பெண்கள் கூட இன்னும் ஒரு மாயையில் மூழ்கியுள்ளார்கள். 

அவர்களுக்கு ஒரு சின்ன ஆலோசனை.

மோடியை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் ஒரு சின்ன கருத்தை வெளியிடுங்கள்.

அதன் பின்பு மோடி ஆதரவாளர்களே உங்கள் மாயையை போக்கி விடுவார்கள். 








திரைக் கலைஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவருமான ரோஹிணி, தனது கலைப் பணியில் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டே சமூகப் பிரச்னைகள் மீது கூரிய விமர்சனங்களை முன்வைப்பதுடன் களப் போராட்டங்களிலும் பங்கெடுத்து வருபவர். 


மலையாள தொலைக்காட்சி ஒன்றின் சமீபத்திய நேர்காணலில் அவரிடம், பிரதமர் ‘மோடியிடமும் ராகுல் காந்தியிடமும் நீங்கள் கேட்பதற்கு ஏதுமுள்ளதா எனக் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, "மோடியிடம் கேட்பதற்கு எனக்கு ஏதுமில்லை, ஆனால் சொல்வதற்கு இருக்கிறது. மோடி அவர்களே தயவு செய்து தேர்தலில் போட்டியிடாதீர்கள், இப்படியான பாசிச ஆட்சி இனி ஒருபோதும் தேவையில்லை. கடந்த ஐந்தாண்டுகளாக இந்துத்வாவை அதிக அளவில் கண்டுவிட்டோம். இந்துத்துவாவுக்கு எதிரானவர்களை, விமர்சித்துப் பேசுகிறவர்களைக் கொலை செய்வோருக்கு ஆதரவளித்து ஊக்குவிக்கும் ஒருவர் நாட்டின் தலைவராக மீண்டும் வருவதை நாங்கள் விரும்பவில்லை" என்று பதிலளித்திருந்தார். விரிவான இந்த நேர்காணலில் இந்த ஒரு பகுதியை மட்டும் தமிழ் இதழ் ஒன்றும் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியது. 

ஆட்சியாளர்களின் கடுமையான கண்காணிப்புக்கும் கருத்தியல் ஒடுக்குமுறைக்கும் ஆளாகியுள்ள இந்த நாடு அமைதி, நல்லிணக்கம், கண்ணியமான வாழ்வு ஆகியவற்றுக்கு திரும்பவேண்டும் என விரும்பும் கோடானுகோடி மக்களின் உள்ளக்கிடக்கையையே ரோஹிணி வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவரை ஒரு கும்பல் அலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வழியே மிரட்டி அவதூறு செய்துவருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் அஞ்சியோ பணிந்தோ தன் கருத்துரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்று ரோஹிணி தெரிவித்திருப்பதை தமுஎகச பாராட்டுகிறது. 

திறக்கப்படாத ரயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டிருந்ததாக சொல்லிக் கொள்ளும் மோடி அந்த வேலையை விட்டுவிட்டு ஏன் பிரதமரானார் என்று கேட்காதவர்கள், அவரது ஆட்சியை விமர்சிக்கிற ரோஹிணியை மட்டும் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஏன் அரசியல் பேசுகிறாய் என்று கேட்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது. அரசின் நடவடிக்கைகள் உள்ளிட்ட எதன் மீதும் சுதந்திரமாக கருத்து சொல்வதற்கான அரசியல் சாசன உரிமையை அச்சுறுத்தல் மற்றும் அவதூறுகளால் ரோஹிணிக்கு மறுப்பதற்கான சட்டவிரோத முயற்சிகளை தமுஎகச கண்டிக்கிறது. ஜனநாயகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திலும் நம்பிக்கையுள்ள யாவரும் இவ்விசயத்தில் தமது கண்டனத்தை தெரிவிக்குமாறு தமுஎகச கேட்டுக்கொள்கிறது. 
*
இப்படிக்கு...
சு.வெங்கடேசன், மாநிலத்தலைவர்.
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்
கலைஞர்கள் சங்கம்.
9-3-2019


தமுஎகச அறிக்கை மற்றும் படங்கள் ஆகியவை
தோழர் வெண்புறா சரவணன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து நன்றியுடன் எடுத்தது 

Monday, April 16, 2018

என்.டி.திவாரி, சண்முகநாதன், பன்வாரிலால் . . .



அருப்புக்கோட்டை பேராசிரியையின் ஆடியோ உரையாடலை கேட்டுத் தொலைக்க வேண்டியிருந்தது.

மாணவிகளை வலை வீசுவதில் அவரிடம் ஒரு தொழில்முறை அணுகுமுறை (Professional Approach) தெரிகிறது. மாணவிகள் எங்களுக்கு விருப்பமில்லை, இனி இது தொடர்பாக பேச வேண்டாம் என்று சொன்னாலும் அவர் விடுவதாக இல்லை.

அந்த உரையாடலைக் கேட்ட எவருக்கும் தெளிவாகத் தெரிகிற ஒரு விஷயம் என்னவென்றால் 

இவர் வெறும் கீழ்நிலையில் உள்ளவர்தான். தொடர்ச்சியாக இதையே முக்கியமான பணியாக கொண்டவர் என்பதும் தெரிகிறது.

அவர் சார்ந்த கல்லூரி தாண்டி இந்த ஆபாச வளையாத்தில் யாரெல்லாம் உள்ளார்களோ, அவர்கள் அனைவரும் யார் என்பது அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

பேராசிரியை தவிர இதிலே முக்கியமானவராக நாம் அறிவது தமிழகத்தின் ஆட்டுத்தாடி பன்வாரிலால் புரோஹித்.

அந்த மனிதன் ஒரு மோசமான குணாம்சம் கொண்டவன் என்பது கடலூரில் குளியறையில் எட்டிப்பார்த்த போதே தெரிந்ததுதான். இந்த பிரச்சினையில் தொடர்புள்ள திமிலங்கள் யார் என்பது தெரிய வேண்டுமென்றால் எடுக்கப்பட வேண்டிய முதல் நடவடிக்கை ஆளுனரை பதவி நீக்கம் செய்வதுதான்.

ஆளுனர் மாளிகைகளை கேளிக்கை விடுதிகளாக்கிய பெருமை என்.டி.திவாரிக்கும் சண்முகநாதனுக்கும் உண்டு. அந்த ஞான மரபு முடிந்து போகாமல் தமிழக கவர்னர் தாத்தா பார்த்துக் கொள்கிறார் போல . . . 




Friday, November 10, 2017

அங்கே கலவிதான் கல்வியா?




காவிகளை அம்பலப்படுத்தி ஏதாவது பதிவு எழுதினால் ஒரு காவி உடனடியாக அனாமதேயமாக  ஆபாசப் பின்னூட்டங்களை எழுதி விட்டுப் போகும். குறைந்தபட்சம் ஐந்தாறு பின்னூட்டங்களில் வக்கிரத்தை தெளித்தால்தான் அதற்கு திருப்தியாகும், அவை அத்தனையும் நீக்கப்படும் என்று தெரிந்தாலும் கூட.

அப்படி நேற்றைய பதிவிற்கு போடப்பட்ட பின்னூட்டங்களை நீக்கி நான் அளித்த பதிலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 மார்க்சிஸ்ட் கட்சியில் எங்களுக்கு அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை இவை  பற்றியெல்லாம் கற்றுத் தரப் படுகிறது. ஆகவே அவை பற்றியெல்லாம் நாங்கள்  சிந்திக்கிறோம், பேசுகிறோம். எழுதுகிறோம்.

ஆனால் பாஜக கட்சியில் கலவிதான் கல்வி போல.
அதிலும் பெண்களின் உடலுறுப்புக்களும் தகாத உறவுகள்தான் மெயின் சப்ஜெக்ட்கள் என்று நினைக்கிறேன்.

அதனால்தான் ஒரு காவி அனாமதேயத்தின் பின்னூட்டங்கள் எல்லாம்
ஆபாசமாகவே அமைந்திருக்கிறது.

பண மதிப்பிழப்பினால் விபச்சாரம் குறைந்து விட்டது என்று அமைச்சர்
ஒருவர் சொல்வதிலிருந்தே பாஜக வின் தரம் தெரிகிறது அல்லவா?

பாவம் அந்த அனாமதேயம்!

அவர் குடும்பத்தில் அவர் கட்சித்தலைவர்கள் யாரோ குழப்பத்தை உருவாக்கி  விட்டார்கள் போல.

அந்த பாதிப்பு வேறு அவருக்கு இருக்கிறது!!!

Thursday, October 12, 2017

ஆனாலும் அந்த ஏழு மொழி அனானியை பாராட்டுகிறேன் . . .





அமித் ஷா குறித்த முந்தைய பதிவிற்கு ஒரு காவி அனாமதேயம் பதினைந்து பின்னூட்டங்கள் போட்டுள்ளார்.

ரமணா பாணியில் சொல்ல வேண்டுமென்றால்

தமிழில் எழுதிய பின்னூட்டங்கள்    6
ஹிந்தியில் எழுதியவை  2
உருதில் எழுதியவை 2
தெலுங்கில் எழுதியவை  1
சீன மொழியில் எழுதியவை  2
(ஒரு வேளை அது ஜப்பானிய மொழியாகக் கூட இருக்கலாம்)
பிரெஞ்சு மொழியில்  ஒன்று  1
தங்கிலிஷில் எழுதியவை 1

தமிழில் எழுதியது ஆபாசத்தின் உச்சகட்டமாக இருக்கிற போது மற்ற மொழிகளில் மட்டும் அந்த அனானி என்ன நாகரீகமாகவா எழுதியிருக்கப் போகிறார்?

அந்த அனானி, எப்போதுமே பெண்களின் உறுப்புக்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் காம வெறி பிடித்த மிருகம் என்று நினைக்கிறேன். இப்படி இருப்பதால்தான்  பாலியல் வன் கொடுமைக் குற்றங்களில் அதிகம் சிக்குவது பாஜக ஆட்களாக இருக்கிறார்கள். பாஜக ஆட்கள் கொல்லப்படுவதற்கு முறையற்ற உறவுகள் காரணமாக இருக்கிறது.

மிஸ்டர் அனானி, உங்களுடைய தாயுடைய, மனைவியுடைய, சகோதரிகள், மகள் இருந்தால் மகள்,  ஆகியோரின் மின்னஞ்சல் முகவரியை கொஞ்சம் அனுப்பி வையுங்களேன். நீங்கள் போட்ட பின்னூட்டங்களை அவர்களுக்கு கொஞ்சம் அனுப்பி வைக்கிறேன். எப்பேற்பட்ட உயர்ந்த மனிதனோடு வாழ்கிறோம்  என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா? உங்களுக்கு உறவினராக இருப்பது அவர்கள் வாழ்வின் பெருந்துயரம். உங்கள் மகள் கூட உங்களை விட்டு விலகி  நிற்க வேண்டும். அவ்வளவு கீழ்த்தரமான மனிதர் நீங்கள்.

பாஜகவின் மாநிலத்தலைவர் தமிழிசைக்கும் அனுப்பலாமா என்று யோசிக்கிறேன். பாஜக ஆட்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பது அவருக்கும் தெரியும் என்றாலும் கூட.

ஆனாலும் அந்த அனானியைப் பாராட்டுகிறேன். தன்னுடைய எந்த ஒரு பின்னூட்டமும் பிரசுரிக்கப்படாது என்று தெரிந்தும் ஏழு மொழிகளில் பின்னூட்டம் எழுத அவர் மேற்கொண்ட முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பாஜகவில் யார் இருக்க முடியும் என்று பல முறை நான் சொன்னதை அந்த அனாமதேயம் நிரூபித்துள்ளார். அதற்காகவும் அவருக்கு நன்றி.

அமித் ஷா பற்றித்தான் எனது அடுத்த பதிவு.  ஏற்கனவே எழுதியதுதான். அதை வெளியிடுவதற்கு முன்பாக இந்த பதிவை அந்த அனானி எழுத வைத்து விட்டார். அந்த பதிவைப் படித்த பின்பு எத்தனை மொழிகளில் எவ்வளவு பின்னூட்டம் எழுதப் போகிறாரோ என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Friday, July 28, 2017

நித்தியை விட கேவலமாய் அவரின் . . . .



அசிங்கம் பிடித்த ஆபாசப் போலிச்சாமியார் நித்தியானாந்தா.  அந்த மனிதனின் சமீபத்திய சித்து விளையாட்டு திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்றை ஆக்கிரமித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது பற்றியும் சில எலும்புத்துண்டு பிராணிகள் சுவரொட்டி அடித்து ஒட்டியது பற்றியும் முன்பே எழுதியுள்ளேன்.

தந்தை பெரியாரை இழிவுபடுத்தி நித்தி பேசியதைக் கண்டித்து தமுஎகச வின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருப்பு கருணா முகநூலில் பதிவிட்டதை தொடர்ந்து நித்தியின் சீடர்கள் என்ற பெயரில் பலர் அங்கே ஆபாச வாந்தி எடுத்து வந்தனர். தமுஎகச வின் இன்னொரு முக்கியமான பொறுப்பாளரான தோழர் வெண்புறா சரவணன் நித்தி அடியாட்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார்கள்.

இன்று நித்தி வளர்த்தெடுத்துள்ள பொறுக்கிகள் தோழர் கருணா மற்றும் தோழர் வெண்புறா பற்றி ஒரு ஆபாச வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். பெண்களை எவ்வளவு கேவலமாக அந்த கூட்டம் பார்க்கிறது என்பதற்கு அந்த வீடியோ ஒரு உதாரணம்.

எலும்புத்துண்டிற்காக அலைகிற இதர பிராணிகள் போல மார்க்சிஸ்டுகள் அவர்களின் பேரங்களுக்கு அடிபணியாமல் இந்த கூட்டத்திற்கு எதிராக உறுதியாக இருக்கிறார்கள் என்ற ஆத்திரத்தை ஆபாசமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

நித்தி எனும் போலிச்சாமியாரைப் போலத்தானே அவரது சிஷ்யகேடிகளும் கேவலமாக இருப்பார்கள்.

இதற்கெல்லாம் கலங்காமல் அவர்களின் பணி தொடரும். அவர்களோடு நாங்கள் எல்லாம் உறுதியாக நிற்போம்.

தமுஎகச வெளியிட்ட கண்டன அறிக்கை கீழே

 
கருப்பு கருணா குடும்பத்தை
இழிவுபடுத்தும் வீடியோ பதிவு
===========================
தமுஎகச கண்டனம் - நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
----------------------------------------------------------------------------------
திருவண்ணாமலையில் நித்தியானந்தா சீடர்களின் மலை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைளை மக்கள் ஆதரவோடு தடுத்த போராட்டத்திலும், முற்போக்குக் கருத்துகளைப பரப்புரை செய்வதிலும் முன்னணியில் நிற்பவரான கருப்பு கருணா, அவரது குடும்பத்தினர், தோழர்களை இழிவுபடுத்தித் தயாரிக்கப்பட்ட காணொளிக் காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தமிழக அரசும் காவல்துiயும் உடனடியாகத் தலையிட்டு இந்தக் கோழைத்தனமான இழிசெயலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளருமான கருணா போன்ற ஒப்பனையோடு உள்ள ஒருவரிடம் இன்னொருவர் பேட்டி காண்பது போன்ற அந்தக் காணொளிப் பதிவு கருணாவின் பெயரையும், குடும்பத்தினரையும, அவருக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஓவியர் வெண்புறா சரவணனையும் நேரடியாகக் குறிப்பிட்டு, பாலியல் வக்கிரத்தோடும் அவமதிக்கிறது.

இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன் இருவரும் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “சட்டவிரோத ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுகிறவர்களின் இப்படிப்பட்ட செயல்கள் அவர்கள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்தவர்கள் என்பதைத்hன் எடுத்துக்காட்டுகின்றன. தங்கள் பக்கம் நியாயம் இருந்தால் அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு மாறாக, இத்தகைய அற்பத்தனமான முயற்சிகளில் இறங்குகிறார்கள் என்றால், போராட்டம் நியாயமானது என்பதும் தெளிவாகிறது. இத்தகைய தாக்குதல்களால் முற்போக்கு இயக்கத்தினர் ஒருபோதும் அஞ்சிப் பின்வாங்கிவிட மாட்டார்கள்,” என்று கூறியுள்ளனர்.

“அதேவேளையில் இது ஒரு கோழைத்தனமான செயல் மட்டுமல்ல, அநீதிகளை அம்பலப்படுத்தி மக்களுக்காகப் போராட்டக் களம் காண்கிற மற்றவர்களையும் அச்சுறுத்தி ஒதுங்க வைக்க முயல்கிற சூழ்ச்சியுமாகும். அந்தக் காணொளிக் காட்சியைத் தயாரித்தவர்கள், ஆதரிப்பவர்கள் யார் யார் என அதற்கான இணைப்புகளிலேயே இருக்கிறது. ஆகவே, அடித்தட்டு மக்களுக்கான கலைஞருமான கருணாவை இவ்வாறு சிறுமைப்படுத்த முயன்றவர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்,” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, January 7, 2017

தொடரும் காவிகளின் கயமைத்தனம்



காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி மீது அநாகரீகத்தாக்குதல் நடத்தி அசிங்கப்பட்ட காவிகள் இன்னும் ஒரு கயமைத்தனத்தை செய்துள்ளனர்.

அவர்கள் நடத்திய அந்த ஆபாசத்தாக்குதலை மூடி மறைக்க ஏதோ ஜோதிமணியே தன் மீது தாக்குதல் நடத்துமாறு கேட்டுக் கொண்டதாக ஒரு போட்டோஷாப் ஒன்றை பரவ விட்டுள்ளார்கள். இது குறித்த அவரது பதிவு கீழே உள்ளது.

காவிகள் அயோக்கியர்கள் மட்டுமல்ல மூடர்கள் என்பதையும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை தன் கட்சியினரின் ஆபாச நடவடிக்கைகளை ஆதரிக்கிறாரா என்று தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

 இப்படியொரு பதிவு முகநூலில் உலவுவதாகவும்,நண்பர்களுக்கு மட்டும் இதை நான் ரகசியமாக பகிர்ந்துள்ளதாக சொல்லப்படுவதாகவும் தம்பி சந்துரு எனது கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

பிஜேபியின் தொழில்நுட்ப பிரிவு தான் என்மீதான ஆபாசபாலியல் வன்முறை தாக்குதலை க
ட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்பதற்கு இன்னொரு ஆதாரம் இது.

எவ்வளவு திறமையான போட்டோஷாப் இது ! உண்மையிலேயே வியக்கிறேன்.

ஆனால் பாருங்கள் ஜனவரி 4ஆம் தேதி காலை 8.07மணிக்கு இந்தப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இதே தேதி, இதே நேரத்திற்கு எனது உண்மையான பதிவு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பணமதிப்பு நீக்கத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான போஸ்டரை வெளியிட்டு எழுதியிருந்ததாகும்.

ஆபாசமும்,பொய்களும் ,மலிவான விளம்பரங்களும் பிஜேபியின் ஆயுதங்கள். அது என்போன்ற கடும் உழைப்பும்,கொள்கைப்பிடிப்பும், நேர்மையும்,நெஞ்சில் துணிவும் உள்ள அரசியல்வாதிக்குத் தேவையில்லை.

ஆஸ்திரேலியாவின் பளபளப்பான சாலைகளை குஜராத்தில் இருப்பதாக ஃபோட்டோஷாப் செய்வதும், மோடியை விமர்சிக்கும் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிடுவதும் பிஜேபிக்கு கைவந்த கலை.

பிஜேபி இங்கு வளர்வதை நான் உண்மையிலேயா விரும்பவில்லை. இதை பகிரங்கமாகவே சொல்வதில் எனக்கு எவ்வித தயக்கமும் இல்லை.

ஒன்றுமறியாத அப்பாவி இளைஞர்களுக்கு மதவெறியூட்டி, அவர்களை பாலியல் வக்கிரம் மிகுந்த மனநோயாளிகளாக மாற்றி, அதையே தங்களை விமர்சிக்கும் பெண்களுக்கு(ஆண்களுக்கும் கூட) எதிரான ஆபாச பாலியல் ஆயுதமாக மாற்றி உருக்குலைக்கிற சித்தாந்தம்,அரசியல் கட்சி தமிழகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே ஆபத்தானது. இதை மக்களும் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்துவருகின்றனர்.

இளம்பெண்களுக்கும்,இளைஞர்களுக்கும் இந்த கட்சி எவ்வளவு ஆபத்தானது என்பதை நான் வெளிப்படுத்தியபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து பல பெண்களும்,குடும்பமும் வெளியிலேயே வரமுடியாமல் இருக்கிறார்கள் என்பதை எனக்கு வரும் அலைபேசி அழைப்புகளும் ,வாட்ஸ் அப்,முகநூல் செய்திகளும் சொல்கின்றன.

இந்த ஆபத்திலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றவும், பெண்களின் கண்ணியத்தையும்,இளைஞர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றவே இந்த போராட்டத்தை பொதுவெளியில் முன்னெடுத்துள்ளேன்.

இம்மாதிரியான சமூகத்திற்கு ,தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் கொடூரமான வக்கிரங்களை,வழிமுறைகளை,
வன்முறைகளை,வெறுப்பை பிஜேபி கைவிட்டு நாகரிகமான ,மக்கள் நல அரசியலை முன்னெடுக்கும் வரை பிஜேபிக்கு எதிரான இந்த யுத்தத்தை மக்கள் துணையோடு தொடர்ந்து நடத்துவேன் என்று உறுதியோடு சொல்கிறேன்.

"நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெதிகளும் கொண்ட "பாரதியின் பெண்களை இப்படி ஆபாச பாலியல் அச்சுறுத்தல்களால் ,போட்டோஷாப்களால் எதிர்கொள்ள நினைக்கும் உங்கள் அறியாமையை நினைத்து வருந்துகிறேன். இனிமேலாவது திருந்தி நல்வழியில் நடங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்கள் இதைப் பகிரவும். இவர்கள் போடோஷாப்,ஆபாச முகமூடியை கிழித்தெறிவோம்.நன்றி

 

Saturday, October 17, 2015

நீயெல்லாம் ஒரு முதல்வர்! தூ...



மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியானா மாநில முதல்வர் மனோகர் கட்டாரை இப்படி ஒருமையில் அழைப்பது நாகரீகமில்லை என்று என் மனசாட்சி என்னை கண்டிக்கிறது.

ஆனாலும் என் செய்வேன்?

"முஸ்லீம்கள் இந்தியாவில் வசிக்க வேண்டுமென்றால் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்" என்று  அராஜகமாக நிபந்தனை விதிக்கிற போது என் கண்ணிலே தெரிவது ஒரு மதவெறியனே தவிர முதலமைச்சர் இல்லையே!

"சுதந்திரத்தை விரும்பும் பெண்கள் நிர்வாணமாக வருவதில்லையே" என்று வாயில் ஜொல்லு ஒழுக கேட்கிற போது வக்கிர புத்தி கொண்ட, ஆபாசக்குப்பை மனதில் நிரம்பியுள்ள ஆணாதிக்கவாதி தெரிகிறானே தவிர அங்கே முதலமைச்சர் காணவில்லை.

இவ்வளவு கேவலமான சிந்தனையை மனதில் வைத்துக் கொண்டு அதை பேசியும் திரிகிற ஒரு ஜந்துவை என்ன செய்தால் தகும்?

இது அவர் சொந்தக் கருத்து என்று சொல்லி அவர் சார்ந்த கட்சி பிரச்சினையை கடந்து போய் விடும். தமிழிசை, வானதி போன்ற பிரச்சார பீரங்கிகள், அவர் சொன்னதில் என்ன தவறு என்று ஏதாவது தொலைக்காட்சியில் நம் செவியடைக்க பேசினாலும் வியப்படைய ஒன்றுமில்லை.

தனக்கு திருமணமான தகவலையும் மனைவியையும் சேர்த்தே மறைத்து வைத்திருந்த ஒரு மனிதனை பிரதமராக்கிய வித்தியாசமான கட்சி அல்லவா அது!

 

Wednesday, September 23, 2015

அறிவுரை அல்ல, ஆபாசம் மட்டுமே




குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டைப்படக் கட்டுரை கடுமையான கண்டனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.

பெண்கள் மீதான அக்கறையோடு எழுதப் பட்டுள்ளதான தோற்றத்தை தர முயற்சித்தாலும் அக்கட்டுரையின் நோக்கம் அதுவல்ல என்பதை கட்டுரையைப் படிக்கும்போதே உணர்ந்து கொள்ள முடிகிறது. 

லெக்கின்ஸ் உடை  அணிந்த பெண்கள் பற்றிய வர்ணனையே ஆபாசமாகத்தான் இருக்கிறது.  உண்மையிலேயே பெண்களின் உடல் நலன் குறித்த அக்கறை என்றால் மருத்துவரின் பேட்டியோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே.

பாலியல் கொடுமைகளுக்கு பெண்களின் ஆடைகள்தான் காரணம் என்று அவர்கள் மீதே பழிபோடும் உளுத்துப் போன வாதத்தை மீண்டும் நிறுவுவதற்கான முயற்சிதான் இது.  அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு வாரமும் இவர்கள் வெளியிடுகிற கவர்ச்சிப் படங்கள் என்ன ஆண்களை திருத்தி நல்வழிப் படுத்துவதற்கா?

பெண்களை ரகசியமாக ஒளிந்திருந்து எடுத்த படங்களைத்தான் இவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இதுவே தண்டனைக்குரிய கிரிமினல் குற்றம். அப்படிப்பட்ட படங்களை வெளியிட்டு விற்பனையைப் பெருக்குகிற கீழ்த்தரமான விளம்பர உத்தியைத் தவிர வேறெதுவும் இல்லை.

எத்தனையோ புலனாய்வு பத்திரிக்கைகள் ஊழல் விவகாரங்களை ரகசியமாக படம் எடுத்து வெளியிடுகின்றன. இவர்களின் தரம் இவ்வளவுதான். 

வெட்கம் கெட்ட செயல்.