Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Sunday, March 22, 2026

மீண்டும் மஞ்சுமல் பாய்ஸ் வேண்டாம்

 


மலையாளத் திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். கேரளாவிலிருந்து கொடைக்கானல் உல்லாசப் பயணம் வந்து "குணா" குகையில் விழுந்து உயிர் தப்பிய இளைஞனின், அவனை மீட்ட நண்பர்களின் கதை.

கேரள் வாலிபர்களை குடிகாரர்கள், இத்யாதி, இத்யாதி என ஜெயமோகன் திட்டி அதனால் பாட்டு வாங்கியதும் "கண்மணி அன்போடு" பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு போட்டதும் கிளைக் கதைகள்.







மேலே உள்ள அழகிய படங்கள் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஊசிமலையின் அற்புதக் காட்சிகள்.


நேற்று முன் தினம் அங்கே ஒரு வாலிபன் செல்ஃபி எடுக்கும்  மோகத்தில் வேகத்தில் கால் தவறி விழ நூறு அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டான்.

ராணுவத்தினர் வந்து சிரமப்பட்டு காப்பாற்றியுள்ளனர்.


இன்று செல்பி மோகம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

புகைப்படங்கள் எடுங்கள். 

ஆனால் உயிரைப்பற்றியும் கவலைப்படுங்கள்.

உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு அந்த புகைப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது.

இன்னும் ஒரு மஞ்சுமல் பாய்ஸ் அனுபவம் வேண்டாமே 


Wednesday, February 18, 2026

அழிவை அழைக்கும் அழகிய நிக்கோபார் தீவுகள்


 












மேலே உள்ள அழகான படங்களை நன்றாக இன்னொரு முறை கூட பார்த்துக் கொள்ளுங்கள்.

அழகு சொட்டும் இந்த இடங்கள் இனி இதே போல இருக்குமா என்பது ஐயே.

பத்து லட்சம் மரங்களை வெட்டி, 130 ஏக்கர் காட்டை காலி செய்து 166 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு துறைமுகம், ஒரு விமான நிலையம், ஒரு மின் உற்பத்தி நிலையம், ஒரு பிரம்மாண்ட மால் உள்ளிட்ட நகரியம் கொண்ட 82,000 கோடி மதிப்பிலான மெகா திட்டத்தில் தாங்கள் தலையிட எந்த அவசியமும் இல்லை என்று தேசிய பசுமை தீர்ப்பாணையம் திட்டவட்டமாக கூறி விட்டது.

அதன் பொருள் என்ன?

நிக்கோபார் தீவுகளை உங்கள் இஷ்டத்திற்கு எப்படி வேண்டுமானால் அழித்துக் கொள்ளுங்கள் என்று பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்.

விமான நிலையம், துறைமுகம், மின் உற்பத்தி நிலையம் ஆகிய மூன்றுமே அதானி நடத்தும் முக்கியத் தொழில்கள் என்பதை நினைவில் கொள்க.

சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்களின் ஆட்சேபத்திற்கு அரசு என்ன விளக்கம் கொடுத்தது என்பதைக் கூட சொல்ல அவசியமில்லை என்று தேசிய பசுமை ஆணையம் சொல்லி விட்டது.

கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல இயற்கையை அழித்து விட்டு சுற்றுலாவை மேம்படுத்தப் போகிறார்களாம்! என்ன கேலிக்கூத்து இது!

புவி வெப்பமயமாதல் காரணமாக அந்தமான்-நிக்கோபார் தீவுகள், மாலத்தீவுகள்  ஆகியவை கடலில் முழுகிப் போகும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் விற்பன்னர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். 

பத்து லட்சம் மரங்களை வெட்டி அந்த அழிவை முன் கூட்டியே வரவேற்கிறது மோடி அரசு.

பிகு: ஒரு புறத்தில் பத்து லட்சம் மரங்களை வெட்டும் மத்திய அரசு இன்னொரு புறம் அழிவதற்காகவே பிறந்தது என்று மோடியால் சொல்லப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ ஆகியவற்றை "மரங்களை நடுங்கள்"  என்று அழுத்தம் கொடுப்பார்கள். அரசின் அரசியல் புரியாத இந்நிறுவனங்களும் தங்களது முன்னுரிமைப் பணிகளை கோட்டை விட்டு விட்டு "கிடப்பது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மனையில் வை" என்பது போல எம் கடன் மரம் நடுவதே என்று அலைந்து கொண்டிருக்கின்றன. 

Wednesday, April 2, 2025

ஆபரேஷன் பிரம்மா- ரேட் சொல்லிட்டீங்களா மோடி?

 


நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மருக்கு நிவாரணப்பணி செய்ய இந்திய ராணுவம் சென்றுள்ளது. அதற்கு "ஆபரேஷன் பிரம்மா" என்று பெயர் சூட்டியுள்ளார் மோடி.

மோடியிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று உண்டு,

நிவாரணப்பணிக்கு எவ்வளவு கட்டணம் பேசியுள்ளீர்கள் என்று மியன்மர் அரசிடம் சொல்லி விட்டீர்களா? பிறகு பில் அனுப்பினால் பிரச்சினையாகி அசிங்கமாகி விடும்.

நிவாரணப்பணிக்கு கட்டணமா?

கேரளா பெரு வெள்ளத்தின் போதும் வயநாடு நிலச்சரிவின் போதும் கேரளாவில் ராணுவமும் விமானப் படையும் செய்த பணிக்கு கட்டணம் நிர்ணயித்து கந்து வட்டிக்காரனை விட மோசமாக வசூல் செய்ததுதானே மோடி அரசு!

ரோஹிங்க்யா முஸ்லீம்களை மியன்மரிலிருந்து துரத்தியதை பாராட்டி ஒரு வேளை கட்டணமில்லாமல் சேவை செய்தாலும் ஆச்சர்யமில்லை.

Saturday, October 8, 2022

சிங்காரப்பேட்டை TO செங்கம்

 சிங்காரப் பேட்டையிலிருந்து செங்கம் செல்லும் வழியில் ஒரு மலை அடிவாரத்தில் உள்ள ஏரியின் அழகிய தோற்றம் புகைப்படங்கள் வாயிலாக உங்கள் பார்வைக்கு 







Friday, June 3, 2022

மழை வருவது மயிலுக்கு தெரியும். மயில் வருவது . . .

 


கொடைக்கானலில் நாங்கள் தங்கியிருந்த இடத்தில்  மயில்கள் அகவும் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் கண்ணில் எப்போதாவதுதான் தென்படும்.

அப்படி தென்பட்டு தோகை விரித்தாடிய தருணத்தை அலைபேசியில் கைப்பற்றி வலைப்பக்கத்தில் விடுவிக்கிறேன்.







மயிலைப் பார்த்த போது  "மழை வருவது மயிலுக்குத் தெரியும்" என்ற ரிஷிமூலம் படப்பாட்டு மனதுக்குள் ஒலித்தது.

அப்பாடல் காட்சியை முகப்புப் படமாக வைக்க யூட்யூபரை நாடினேன். 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி, கிழக்கே போகும் ரயிலில் ராதிகா ஆகியோர் ஓடி, ஆடி, குதித்தது போல இப்பாடலில் கே.ஆர்.விஜயாவை ஓடி, ஆடி, குதித்து நடனமாடவைத்து  அவரை டார்ச்சர் செய்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

பிகு: கிட்டத்தட்ட மூன்று வாரமாக ட்ராப்டிலிருந்த பதிவுக்கு இன்று விடுதலை. 

Friday, May 13, 2022

ஏரிக்கரை குளிர்க்காற்றே!

 


கொடைக்கானல் ஏரியில் காலைப் பொழுதில்  ஏரியின் அழகை கரையிலிருந்து குளிர்க்காற்றை அனுபவித்தபடி எடுத்த படங்கள் இங்கே.











பிகு: பதிவுக்கு தலைப்பு கொடுத்த "ஏரிக்கரை பூங்காற்றே" பாடல் காட்சி.



Thursday, May 12, 2022

கோடைக்கானல், குறிஞ்சி மலரின் . . .

 


கடந்த வாரம் மூன்று நாட்கள் கொடைக்கானலில் ஒரு பயிலரங்கம். ஓய்வுக்காக அளிக்கப்பட்ட நேரத்தில் வேகம் வேகமாக சென்று கொடைக்கானலின் இயற்கை அழகை கண்களால் பருகியது மட்டுமல்ல, அதனை உங்களுக்கும் தவணை முறையில்  பரிமாறுகிறேன். இப்பதிவு முதல் தவணை
















பிகு: முகப்பில் எதற்கு அந்த படம்?

வாகனத்தில் செல்கையில் இரண்டு தோழர்கள் "அன்புக்கு நான் அடிமை" படத்தில் வரும் "காத்தோடு பூவா ராசா" பாடலின் வரும் "கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி" என்ற வரிகளை இரு வேறு சந்தர்ப்பங்களில் பாட, அது மனதில் ஒட்டிக் கொண்டது. அதனால்தான் அது இங்கே


Saturday, March 12, 2022

இயற்கை அளித்த எழில் ஓவியங்கள்

 பயணங்கள் பல சந்தர்ப்பங்களில் இயற்கை எனும் அற்புதக் கலைஞன்  வரையும் ஓவியங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பைத் தரும்.

 போன வாரம் சென்னையிலிருந்து வேலூர் திரும்பும் வழியில் பார்த்த இயற்கை வரைந்த ஓவியங்களை நீங்களும் ரசிக்க வேண்டுமென்பதற்காக அலைபேசியில் கைது செய்து வைத்தேன்.

 அவை இங்கே . . .