Showing posts with label ப.சிதம்பரம். Show all posts
Showing posts with label ப.சிதம்பரம். Show all posts

Saturday, August 2, 2014

காங்கிரஸ் கட்சியின் அழிவு தேவதை ப.சிதம்பரம்

காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் பலத்த தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணகர்த்தாக்கள் மன்மோகன், ப.சி, மாண்டெக்சிங் அலுவாலியா ஆகிய மூவர் கூட்டணி. இந்திய மக்களின் நலனைக் காட்டிலும் அமெரிக்க நலனே முக்கியம் என்று செயலபட்ட இந்த தேசத் துரோகிகளால்தான் அக்கட்சி வீழ்ச்சி அடைந்தது.

இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்த மோடி அரசு முடிவெடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியத்ன் மூலம் தனது அமெரிக்க விசுவாசத்தை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியிருக்கிறார் அந்த இந்தியத் துரோகி.

இந்த மசோதா குறித்து இன்னும் விரிவாக ஆய்வு செய்ய செல்க்ட் கமிட்டி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது ஒரு நல்ல விஷயம். திங்கட்கிழமை மசோதா ராஜ்யசபாவிற்கு வருவதற்கு முன்பாக இந்த மனிதன் நடுவில் புகுந்து குட்டையை குழப்பி விடக் கூடாது. 

ஒரு வேளை இந்த அமெரிக்க எடுபிடியின் வார்த்தையைக் கேட்டு இனியும் காங்கிரஸ் கட்சி செயல்படுமானால் அக்கட்சியை அழிக்க வேறு யாரும் அவசியமே இல்லை. 

ஆட்சியில் இருந்த போது இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்த அந்த அதிமேதாவி ஆட்சியில் இல்லாத போது கட்சியை சீரழிக்கிறார். காங்கிரஸ் கட்சி ஆட்களே உஷார். வேறு பிழைப்பில்லையென்றால் அந்த மனிதன் மீண்டும் கறுப்புக் கோட்டை மாட்டிக் கொண்டு எந்த முதலாளிக்காவது சேவகம் செய்ய  புறப்பட்டு விடுவார். 

நீங்கள்தான் நடுத்தெருவில் நிற்பீர்கள்.

Sunday, July 7, 2013

இதை அவர்களிடம் ப.சிதம்பரத்தால் ஏன் சொல்ல முடியாது?





இது எல்.ஐ.சி நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம். ஜெ வை மிஞ்சி ப.சி போய்க்கொண்டிருக்கிறார் என்பது இதைப் பார்த்தாலே தெரியும். ஒரே நாளில் முன்னூறு அலுவலகங்களை அண்ணன் ப.சி திறந்து வைத்துள்ளார். உத்தர்காண்ட் வெள்ளத்தில் சிக்கிய பதினைந்தாயிரம் பேரை ராம்போ நரேந்திர மோடி காப்பாற்றியது போல இவர் சூப்பர் ராம்போவாக ஒரே நாளில் முன்னூறு அலுவலகங்களை திறந்து வைத்துள்ளார்.

பிரச்சினை எப்படி இத்தனை அலுவலகங்களை திறக்க முடிந்தது என்பதல்ல. எல்.ஐ.சி நிறுவனம் ஒரே நாளில் முன்னூறு மினி அலுவலகங்களை திறந்தது என்பது வாஸ்தவம். ப.சி திறந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஏன் இந்த மினி அலுவலகங்கள்?

இந்த ஆண்டு பட்ஜெட் உரையில் ப.சி பேசும்போது பத்தாயிரம் பேர் மக்கட்தொகை உள்ள ஊர்களில் எல்.ஐ.சி அலுவலகம் திறக்கப்படும் என்று அறிவித்தார். இன்சூரன்ஸ் சேவையை விரிவுபடுத்துவதற்காக இந்த ஏற்பாடு என்றும் அறிவித்தார். அதே போல் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் அலுவலகங்களும் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அறிவிப்போடு நிற்காமல் ப.சி எல்.ஐ.சி மத்திய அலுவலகத்திற்கும் திக்விஜயம் செய்து தனது அறிவிப்பை உடனடியாக அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தி விட்டுச் சென்றார். அதன் பின்பு நிதியமைச்சக அதிகாரிகளும் வற்புறுத்த எல்.ஐ.சி நிர்வாகம் இப்போது ஒரு ஊழியர் அல்லது அதிகாரி மட்டும் பணியாற்றக் கூடிய மினி அலுவலகங்களை திறந்து கொண்டிருக்கிறது. இது வரை 414 மினி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரம் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளது. ஊழியர் பற்றாக்குறை உள்ள நேரத்தில் எல்.ஐ.சி மீது அரசு சுமர்த்தியுள்ள சுமை இது.

ப.சிதம்பரத்தின் சொந்த ஊர் கண்டனூரில் முதல் மினி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் வசதியை விரிவாக்க, கிராமப்புற மக்களுக்கும் எடுத்துச்செல்ல இது போன்ற மினி அலுவலகங்கள் அவசியம் என்றும் அவர் பேசியுள்ளார்.

ப.சிதம்பரத்தை நாங்கள் சில கேள்விகள் கேட்டாக வேண்டும்.

இன்சூரன்ஸ் சேவையை விரிவுபடுத்த அவசியம் என்று சொல்லித்தானே இன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதித்தீர்கள், அந்த தனியார் கம்பெனிகளை ஏன் மினி அலுவலகம் துவக்கச் சொல்லி நிர்ப்பந்தம் அளிக்கவில்லை.

இன்சூரன்ஸ் சேவையை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்த அன்னிய நேரடி மூலதன வரம்பை உயர்த்த வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். அந்த அன்னியக் கம்பெனிகளை நீங்கள் மினி அலுவலகம் தொடங்கச் சொல்லிக் கேட்கவில்லை.

உங்கள் சொந்த கிராமத்தில் ஒரு அலுவலகத்தை உருவாக்க நீங்கள் பொதுத்துறை எல்.ஐ.சி யைத்தான் நாடியுள்ளீர்கள், எந்த ஒரு தனியார் கம்பெனியும் உங்கள் சொந்த ஊரில் கூட அலுவலகம் துயக்க தயாராக இல்லாதபோது அவர்கள் எங்கே கிராமங்களுக்குச் சென்று இன்சூரன்ஸை பரவலாக்கப் போகிறார்கள்?

ப.சிதம்பரத்திற்கு கை கொடுப்பது பொதுத்துறை நிறுவனங்கள். கை கொடுத்த எல்.ஐசி யின் காலை வாருவது காங்கிரஸ் கலாச்சாரம், ப.சிதம்பர பண்பாடு.

எல்.ஐ.சி யிடம் சொன்னது போல தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் ப.சிதம்பரம் சொல்லியிருந்தால் இந்நேரம் அவர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டிருப்பார்  என்பதுதான் யதார்த்தம்.

இன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிதியமைச்சரான போது “ இவர் நமக்கு அனுசரணையாக இருப்பாரா, அமெரிக்க கம்பெனிகளுக்கு ஆதரவாக இருப்பாரா என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன், இந்தியாவிற்கான அமெரிக்க தூதரை கேட்டதை விக்கி லீக்ஸ் அம்பலப் படுத்தியதை யாரும் மறந்திருக்க்க மாட்டீர்கள் என நம்புகிறேன்

Friday, October 12, 2012

ஜெயந்தி நடராஜன் இப்போது சிதம்பரம் கோஷ்டியில் இல்லையா ? என்ன தகராறு?




நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைக் கண்டித்து மத்திய அமைச்சர் ஜெய்ந்தி நடராஜன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  நிதியமைச்சகம் பெரியண்ணன் மனப்பான்மையோடு அவர்கள் அனுமதிக்கும் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்பது போல் நடந்து கொள்கிறார்கள். இது தவறு, தலையிட வேண்டும் என்று பிரதமரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கும் அனுமதிகள் எல்லாம் சரியாக ஆய்வு செய்யப்பட்டு அளிக்கப்படுகின்றதா என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் நிதியமைச்சகத்தின் சிறப்புத்திட்டம் என்றால்  அது சுற்றுச்சூழல் அனுமதிக்கு அப்பாற்பட்டதில்லை என்ற ஜெயந்தி நடராஜனின் வாதம் சரிதான்.

சரி, ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜ் எல்லோரும் ஒரு காலத்திலே மூப்பனார் கோஷ்டியிலே இருந்தார்களே ? இப்போது ஜெயந்தி நடராஜன் வேறு கோஷ்டி மாறி விட்டாரா இல்லை அவரே புதிய கோஷ்டியின் தலைவராகி விட்டாரா?

காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி அரசியல் வரலாறு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்...