Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Sunday, April 27, 2025

பட்டியல் போடலாமா இளைய (சங்கி)ராஜா?

 




இசையைத் தாண்டி வேறெதற்காவது இளையராஜா வாய் திறந்தால் அது அபஸ்வரமாகவே இருக்கிறது. 

மோடியைப் போல இந்தியாவுக்காக பாடுபட்ட பிரதமர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பட்டியல் போடலாமா என்று கேட்கிறார்.

மோடியைப் போல இந்தியாவை சீரழித்த பிரதமர்கள் யாரும் கிடையாது என்ற உண்மையை கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சங்கியாக மாறியிருக்கிறார்.

விரிவாக ஒரு பட்டியல் நாளை நான் போடுகிறேன்.  அதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு மனம் இருக்குமா தெரியவில்லை.

அவருடைய வீழ்ச்சி மனதிற்கு வருத்தமாக இருக்கிறது.  இனி அவரால் மீள முடியுமா என்பது சந்தேகமே. . .


Wednesday, March 19, 2025

இளையராஜா-மோடி-மு.க.ஸ்டாலின்

 


நேற்று இளையராஜா, மோடியை சந்தித்துள்ளார். அதனை தமிழ்நாடு பாஜகவும் மற்ற சங்கிகளும் எப்படி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்கள் என்று பாருங்கள். . .


மோடியே இளையராஜாவை அழைத்து பாராட்டினார் என்று சொல்கிறார்கள். 

இந்த சந்திப்பு குறித்து மோடியும் ட்விட்டரில் பதிவு போடுகிறார்.


தான் அழைத்து இளையராஜா வந்ததாக மோடி எங்கேயும் சொல்லவில்லை. 

இளையராஜாவும் ஒரு பதிவு போட்டுள்ளார்.


மோடி அழைத்துச் சென்றதாக அவரும் சொல்லவில்லை.

இதில் என்ன டெக்னிகாலிட்டி இருக்கிறது என்று தோன்றலாம்.

சிம்பனிக்கு முன்பாக முதல்வர் இளையராஜாவை சந்தித்தது தொடர்பாக அவர் ஒரு பதிவு போட்டுள்ளார்.


முதல்வர் "நேரில் வந்து" வாழ்த்தினார் என்பதை அதில் அவர் பதிவு செய்துள்ளார். தொல்.திருமா, செல்வப்பெருந்தகை, ஜி.கே.வாசன், ஆட்டுக்காரன் ஆகியோர் அவரை வந்து சந்தித்தார்கள் என்பதையும் அவர் பதிவு செய்திருந்தார்.

சிம்பனிக்கு பிறகு மோடியை சந்தித்ததை பதிவு செய்த இளையராஜா, சிம்பனி முடிந்து சென்னை வந்த பின்பு அவர் சென்று முதல்வரை பார்த்ததை மட்டும் பதிவு செய்யவில்லை. ஆனால் முதல்வர் முன்பும் பதிவு செய்திருந்தார். இப்போதும் பதிவு செய்துள்ளார்.


இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்ற முக்கிய செய்தியை இளையராஜா பதிவு செய்யாதது ஏனோ?

முதல்வரை நேரில் சென்று சந்தித்தது தெரிந்தால் மோடி கோபப்படுவார் என்ற அச்சமோ!

இளையராஜாவின் இசை இணையற்றதுதான். ஆனால் அவர் அரசியல்?

இதற்கிடையில் மோடி அழைத்து பாராட்டினார் என்று சங்கிகள் ஏன் வெட்டி விளம்பரம் செய்கிறார்கள்! மானங்கெட்டவர்கள்!

Monday, December 16, 2024

ஞானியாயினும் ராஜாவாயினும் !

 


ஸ்ரீவில்லிப்பூத்தூர் கோயிலில் இளையராஜாவுக்கு அவமதிப்பு நடந்துள்ளது.

இளையராஜா இசை ஞானியாக இருக்கலாம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரப்பந்தத்திற்கு இசை வடிவம் கொடுத்திருக்கலாம். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் எழுதிய திருப்பாவையின் முதல் பாடலுக்கு உள்ளத்தை உருக்கும்படி மெட்டமைத்திருக்கலாம். ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தின் ஒரு நிலையை கட்ட பணம் வசூலித்துக் கொடுத்திருக்கலாம். இன்னும் சில தினங்களில் முதல் ஆசியராக தன் சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றலாம். மோடியை அண்ணல் அம்பேத்கரோடு ஒப்பிட்டிருக்கலாம். அதனால் மாநிலங்களவை நியமன உறுப்பினராகவும் இருக்கலாம்.

எதுவாக இருப்பினும் கருவறை கூட அல்ல, அதற்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்திற்குள்ளே கூட  நுழைய அவர் அனுமதிக்கப்படவில்லை.

தனக்கு நிகழ்ந்ததை அவமதிப்பு என்று கருதாமல் அர்த்த மண்டபத்திற்கு வெளியே அளிக்கப்பட்ட மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். நடந்தது பற்றிய செய்தி வதந்தி என்றும் தன் சுய மரியாதை பாதிக்கப்படவில்லை என்றும் அவரை சொல்ல வைத்துள்ளது.

அப்படி அவரது மனதை ட்யூன் செய்து வைத்துள்ளதுதான் சனாதனத்தின் வெ(ற்)றி.

அதனால்தான் அதனை எதிர்க்க வேண்டும்.                                                                                                

 

Sunday, May 12, 2024

அனிருத் முதல் மெல்லிசை மன்னர்கள் வரை -100வது காணொளி

 


தனக்குப் பிடித்த பாடல்களை வயலினில் வாசித்து யூட்யூபில் பதிவு செய்வது எனது மகனின் ஆர்வம் நிறைந்த பொழுது போக்கு.

இன்று நான் பகிரவுள்ளது அவனது நூறாவது காணொளி.

பதிமூன்று இசையமைப்பாளர்களின் பாடல்களின் தொகுப்பே இந்த முயற்சி.

அம்மா, அம்மா - வி.ஐ.பி - அனிருத்

சண்டைக்காரா - இறுதிச்சுற்று - சந்தோஷ் நாராயண்

தெய்வத்திருமகள் தீம் இசை -ஜி.வி.பிரகாஷ்

அழகாய் பூக்குதே - நினைத்தாலே இனிக்கும் (புது) - விஜய் ஆண்டனி

ஐய்யயோ ஆனந்தமே -  கும்கி-  டி.இமான்

கனா காணும் காலங்கள் - 7ஜி ரெயின்போ காலனி - யுவன் சங்கர் ராஜா

தேரடி வீதியில் - ரன் - வித்யாசாகர்

காடு திறந்தே - வசூல்ராஜா, எம்.பி,பி.எஸ் - பரத்வாஜ்

மனம் விரும்புதே - நேருக்கு நேர் - தேவா

முதற்கனவே - மஜ்னு - ஹாரிஸ் ஜெயராஜ்

சிக்குபுக்கு ரயிலே - இடையிசை - ஜெண்டில்மேன் - ஏ.ஆர்.ரஹ்மான்

இளைய நிலா பொழிகிறது - பயணங்கள் முடிவதில்லை - இளையராஜா

செந்தமிழ் தேன்மொழியாள் - மாலையிட்ட மங்கை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி

யூட்யூப்  இணைப்பு இங்கே . . .

Saturday, April 27, 2024

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் . . .

 

மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்தில் இளையராஜாவின் இசையில் கண்ணதாசனின் வரிகளில் உருவான "செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது வீசுதம்மா" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் . . .

யூட்யூப் இணைப்பு இங்கே . . .

Monday, April 22, 2024

இளையராஜா - நீனா சிமோன் ஒப்பீடு நியாயமில்லை

 


பெல்ஜியம் வாழ் தோழர் இ.பா.சிந்தன்  அவர்களின் முக்கியமான பதிவை அவருக்கு அனுதாபம் தெரிவித்து பகிர்ந்து கொள்கிறேன். இளையராஜாவின் கடினச்சாவு விசிறிகளை மட்டுமல்லாமல் பா.ரஞ்சித் ரசிகர்களையும் சீண்டி விட்டார். என்ன ஆகப் போகிறாரோ?

எழுதவேண்டிய அவசியம் இருப்பதால், கொஞ்சம் சர்ச்சையான பதிவு என்று தெரிந்தேதான் எழுதுகிறேன்.

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் துவக்கத்தில் ஒரு உரையாடல் காட்சி வரும்.

அதில் இளையராஜாவை இனியன் (காளிதாஸ்) போன்றவர்கள் கொண்டாடுவதில்லை என்று ரெனே (துசாரா விஜயன்) சொல்வதாக விவாதம் நடக்கும். ஒரு கட்டத்தில் அந்த உரையாடலில், "எங்கயோ இருக்குற நீனா சிமோனைக் கொண்டாடுவ. ஆனா இளையாராஜாவக் கொண்டாட மாட்டியா?" என்று ரெனே சொல்வதாக ஒரு வசனம் வரும். அந்த வசனம் எனக்கு ஒரு திணிப்பாகத்தான் தெரிந்தது. படம் வந்தபோதே இதுகுறித்து எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படம் குறித்து வேறொரு திசையில் விவாதம் நடந்துகொண்டிருந்தபடியால் இதுகுறித்து நான் பேசுவது சரியாக இருக்காது என்று விட்டுவிட்டேன்.

அந்த வசனம் குறித்து இரண்டு கருத்துகளை சொல்ல நினைக்கிறேன்.

ஒன்று, இளையராஜா இங்கே கொண்டாடப்படவில்லை என்று சொல்வது இளையராஜாவின் ஒருசில அதிதீவிர ரசிகர்களைத் தவிர வேறு யாருமில்லை. சுமார் 30 ஆண்டுகளாக தமிழ்த்திரையுலகை தன்னந்தனியாக ஆண்டுகொண்டிருந்தவர் இளையராஜா. அவருடைய பெயருக்காகவும் இசைக்காகவும் இங்கே ஓடிய படங்கள் நூற்றுக்கணக்கில் உண்டு. எல்லா இசைக் கருவிகளுக்கும் நேரடியாக இசைக் குறிப்பெழுதி பாடலை உருவாக்கிய கடைசி இசையமைப்பாளர் என்று தைரியமாக அவரைக் குறிப்பிடலாம். இன்றைக்கு மட்டுமல்லாமல் காலத்திற்கும் ராஜாவின் இசை நிலைத்து நிற்கத்தான் போகிறது. அவரது பெயரும் புகழும் என்றென்றைக்கும் அழியாதவை. அவர் கொண்டாடப் பட்டிருக்காவிட்டால், அவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகளோ இவ்வளவு பெரிய பெயரோ கிடைத்திருக்குமா? அதனால் ராஜா கொண்டாடப்படவில்லை என்று சொல்லி, போகிற வருகிறவர்களை எல்லாம் கடித்துவைப்பதால் ராஜாவுக்குத்தான் இந்த சிலர் இழுக்கு ஏற்படுத்துகிறார்கள்.

இரண்டாவது, நீனா சிமோனைக் கொண்டாடுவதற்கு பதிலாக ராஜாவை மட்டும் கொண்டாட வேண்டும் என்று சொல்வது என்ன வகையில் சரியென்று தெரியவில்லை. அப்படிச் சொல்பவர்களுக்கு நீனா சிமோன் யாரென்று தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

இசை மன்னராக ராஜாவை முழுமையாக ஏற்கிறேன். உலக இசை வரலாற்றில் ராஜாவுக்கு எப்போதும் ஒரு இடமுண்டு. ஆனால் அதற்காக நீனா சிமோனுடன் எல்லாம் ஒப்பிடுவது எவ்வகையிலும் சரியான ஒப்பீடல்ல. அமெரிக்காவில் நம்பர் ஒன் இசையைக் கொடுத்து, மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் நிலையில் இருந்த நீனா சிமோன், தான் வாழ்ந்த காலத்தில் கருப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்க வெள்ளையின ஆதிக்கம் நிகழ்த்திவந்த கொடூரங்களை எவ்விதத் தயக்கமும் இன்றி எதிர்க்க முன்வந்தார். 1960 களில் அவருடைய பாடல் இடம்பெறாத கருப்பின மக்கள் போராட்டமே இல்லை எனலாம். "மிசிசிப்பி காட் டேம்" என்று அவர் எழுதி இசையமைத்துப் பாடிய பாடல், சுற்றிவளைத்தெல்லாம் இல்லாமல் நேரடியாகவே வெள்ளையின ஆதிக்கத்தை ஓங்கியடித்தது. அவரது "Ain't got no, I got life" பாடல் ஒரு கருப்பினப் பெண்ணின் வாழ்க்கையைப் பேசும் பாடலாக பாடப்பட்டது. இன்றுமே கூட இவ்விரு பாடல்களும் அமெரிக்க கருப்பின மக்களின் வாழ்க்கை நிலைக்கு அப்படியே பொருந்திப் போவதாக இருக்கிறது.

"என்னுடைய வரிப்பணத்தில் வியட்னாமில் போர் நடத்தி அப்பாவி மக்களைக் கொல்வதா? அதற்கு அனுமதிக்கமாட்டேன்" என்று சொல்லி வரிகட்ட மறுத்தார் நீனா சிமோன்.

"மிசிசிப்பி காட் டேம்" என்கிற ஒரு பாடலுக்காகவே அமெரிக்க வெள்ளையின ஆதிக்க இசைத்துறை, நீனா சிமோனைப் பழிவாங்கியது. அவருடைய அடுத்தடுத்த பாடல்களை வெளியிட மறுத்தது. அவரை அமெரிக்க இசை வரலாற்றிலிருந்தே விரட்டியடித்தது. ஆனால், அதற்காகவெல்லாம் ஆளும் வர்க்கத்திடம் நீனா சிமோன் ஒருபோதும் அடிபணியவே இல்லை. அதன்பிறகு அவருடைய இசைப் பாடல்களை பெரியளவிற்கு விற்க எவரும் முன்வரவில்லை என்ற போது கவலையேபடாமல், கருப்பின மக்களின் உரிமைக்காக இறுதிவரை போராடியவர் நீனா சிமோன்.

ஆனால், ராஜாவோ, இன்றைய கொடும் பாசிச காலத்தில், வெறிபிடித்தாடும் சங்கியத்தை எதிர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அதனோடு கூட்டுசேராமலாவது இருக்கலாம்தானே.

"தான் வாழும் காலத்தின் அரசியலைக் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் கலைஞர்களே இல்லை" என்றார் நீனா சிமோன். ஆனால், ராஜாவோ ரங்கராஜ் பாண்டேவோடுதான் எப்போது மேடையேறுகிறார். அம்பேத்கரும் மோடியும் ஒன்று என்கிறார். அவர்கள் கொடுத்த எம்பி பதவியை ஏற்றுக்கொள்கிறார்.

ராஜா என்றென்றைக்கும் மக்கள் மனங்களில் இசையரசர்தான். ஆனால், அதற்காகவெல்லாம் ஒட்டுமொத்த சமத்துவத்திற்காக எல்லா இழப்புகளையும் சந்திக்க நேரிட்டும் உறுதியாக இறுதிவரைப் போராடி மறைந்த நீனா சிமோனையெல்லாம் தாழ்த்திப் பேசாதீர்கள்.

இன்று நீனா சிமோனின் நினைவு நாள்.

Saturday, April 20, 2024

இளையராஜா வழக்கு - நீதிபதிகள் தப்பினார்கள்

 




நேற்றோ, நேற்று முன் தினமோ நாளிதழில் படித்த செய்தி . . .

சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இளையராஜா துவக்க காலத்தில் இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை அத்திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு அளித்து விட்டதால் ஸ்பாடிஃபை ஆப் மூலம் கிடைக்கும் ராயல்டி தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று எக்கோ ரெகார்டிங் கம்பெனி வழக்கு தொடுத்துள்ளது.

இந்த பதிவு ராயல்டி பிரச்சினை பற்றியல்ல, அதை நீதிமன்றம் சொல்லட்டும்.

வழக்கு விசாரணையின் போது நடைபெற்ற விவாதத்தில் சொல்லப்பட்ட ஒரு கருத்து பற்றி...

இளையராஜா தன்னை அனைவருக்கும் மேலானவர் என்று நினைத்துக் கொள்கிறாரா? என்று எக்கோ வழக்கறிஞர் கேட்க

இளையராஜாவின் வழக்கறிஞர் கொதித்துப் போய்

"ஆமாம், இந்த உலகில் மேலானவர் இளையராஜாதான். அனைவருமே அவருக்கு கீழானவர்கள்" 

என்று முதலில் சத்தமிட்டு சொல்ல,
ஒரு நொடி தாமதித்து

"கடவுள் மட்டுமே இளையராஜாவுக்கு மேலானவர். மற்ற அனைவரும் அவருக்கு கீழானவர்கள்தான்"

என்று நிறைவு செய்திருக்கிறார்.

வழக்கு மீண்டும் நீதிமன்றம் வந்த போது

"இளையராஜா அப்படி என்ன அவரை அனைவருக்கும் மேலானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற சங்கீத மும்மூர்த்திகளை விட அவர் மேலானவர் என்று சொல்கிறீர்களா"

என்ற கேள்வியை நீதிபதிகள் கேட்க

இளையராஜாவின் சார்பில் வாதாட வந்தவரோ

"அன்றைக்கு என் சீனியர் உணர்ச்சிவசப்பட்டு கூறிவிட்டார். அதை அப்படி பொருள் கொள்ளக்கூடாது, என் சீனியர் விளக்கம் கொடுப்பார்" 

என்று வாய்தா வாங்க வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது.

தேர்தல் காலம் என்பதால் நீதிபதிகள் சொன்னது பெரிய அளவில் கவனம் பெறவில்லை. அதனால் நீதிபதிகள் தப்பித்தார்கள். இல்லையென்றால் ராஜாவின் கடினச்சாவு விசிறிகள் (DIE HARD FANS) அவர்களை என்னவெல்லாம் படுத்தியெடுத்திருப்பார்கள் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை அவர் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர் . . .

Saturday, March 23, 2024

ஸ்ரீரங்க, ரங்கநாதனின் . . .

 


கமலஹாசன் நடித்து இளையராஜாவின் இசையில் சந்தானபாரதி இயக்கத்தில் வெளியான "மகாநதி" படத்தில் வரும் "ஸ்ரீரங்க, ரங்கநாதனின்" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ண்த்தில்  . . . 

யூட்யூப் இணைப்பு இங்கே . . .

Tuesday, September 12, 2023

ரஹ்மான் - லாபம், சொதப்பல், வன்மம்

 


சென்னையில் ஞாயிறு அன்று நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் "மறக்குமா நெஞ்சம்?" என்ற நேரடி இசை நிகழ்ச்சி டிக்கெட் வாங்கிய யாராலும் மறக்க முடியாத அளவிற்கு சொதப்பலோடும் பார்வையாளர்களுக்கு அவஸ்தையோடும் முடிந்துள்ளது.

இதற்கு யார் பொறுப்பு?

நிச்சயமாக ஏ.ஆர்.ரஹ்மான் தான்,

பார்வையாளர்களுக்கு எப்படிப்பட்ட இசை அனுபவத்தை அளிப்பது என்ற சிந்தனையில் இருந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டை அதற்கான நிறுவனத்திடம் விட்டு விட்டேன் என்று சொல்லியுள்ளார்.

அப்படி அவர் கை கழுவி விட முடியாது.

நிகழ்ச்சி அமைப்பு, கட்டமைப்பு வசதிகள் பற்றியெல்லாம் அவர் விவாதித்து பலவீனங்கள் இருந்தால் போக்கியிருக்க வேண்டும். டிக்கெட் வாங்கியது ரஹ்மானுக்காகத்தானே தவிர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்காக அல்ல. 

அந்த நிறுவனம், லாபம், அதிக லாபம், மேலும் லாபம் என்று செயல்பட்ட காரணத்தால்தான் இந்த சொதப்பல். லாபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் பங்கு உண்டு என்பதால் அவர் இக்குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது. ரசிகர்களுக்கு ஆச்சர்யமூட்டுவேன் என்று சொன்னதை ரஹ்மான் செய்து காண்பிக்கட்டும். இந்த பாடத்திலிருந்து அவர் இனி கவனமாக இருப்பார் என்று நம்புவோம்.

நல்ல ஒரு CONTENT  கிடைத்தது என்று ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் மோசமாக தாக்கப்படுகிறார்.

இரண்டு பிரிவினரால் அவர் தாக்கப்படுகின்றனர்.

ஒரு பிரிவு சங்கிகள். ரஹ்மானின் மதத்தை வைத்து அவரை தாக்குவதற்கு உதாரணம் மேலேயே உள்ளது.

இன்னொரு பிரிவு  இளையராஜாவின் DIE HARD விசிறிகள். அவரின் அரசியலை விமர்சித்தாலே கோபம் கொண்டு எழுகிற  இடதுசாரிகள் என்று நினைத்துக் கொள்பவர்கள். 

இவற்றையெல்லாம் பார்க்கையில் லாப வெறிக்கு பலியான ரஹ்மானிடம் கோபத்தைத் தாண்டியும்  சொல்ல வேண்டியுள்ளது. WE ARE WITH YOU. 

Wednesday, November 30, 2022

இதற்குத்தானா வியந்து வியந்து வியந்து வியந்து?

 


வியந்து வியந்து வியந்து வியந்து மோடிக்கு பாராட்டு மாலை சூட்டிய காசி தமிழ்ச் சங்கமத்தின் யோக்கியதை கீழே பல்லிளிக்கிறது.


"ஸ்டேக்கே ஓப்பி யூனிட்டி" க்கு பிறகு இன்னொரு கொலை.

"உங்களுக்கு ஓட்டு வேண்டுமானாலும் போட்டு விடுகிறோம். தமிழை விட்டு விடுங்கள்" என்று சொல்ல வைக்கும் தந்திரமோ!

பிகு: வேறு சில தலைப்புக்கள் கூட தோன்றியது.

அவை

காசியில் தமிழைக் கொல்லும் கழிசடைகள்.

சங்கமம் நடத்தும் சனியன்கள்.

Friday, November 25, 2022

அதற்கு எங்கே ஆதாரம் மேடம்?

 


கங்கையில் மூழ்கிய முத்துசாமி தீட்சிதருக்கு சரஸ்வதி தேவி அளித்த வீணை அருங்காட்சியகத்தில் உள்ளது என்று இளையராஜா சொன்னார்.

 சொப்பனசுந்தரி வைத்திருந்த கார் இப்போது யாரிடம் உள்ளது என்பது போல தீவிரமான ஆராய்ச்சி நடத்திய தினமலர் முத்துசாமி தீட்சிதரின் வீணை அவரது ஏழாம் தலைமுறை வாரிசான முத்துசாமி ஆடிட்டரிடம் கோவையில் உள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

 இந்த ஆராய்ச்சிக்காக தினமலருக்கு நன்றி சொல்லி அதனை புளகாங்கிதத்தோடு பகிர்ந்து கொண்டுள்ளார் நிர்மலா அம்மையார்.

 


தீட்சிதரின் வீணை எங்கே இருக்கிறது என்பதற்கான ஆதாரம் முக்கியமில்லை மேடம், அந்த வீணையை முத்துசாமி தீட்சிதர் கங்கையில் முழுகிய போது சரஸ்வதி தேவிதான் கொடுத்தார் என்பதற்கான ஆதாரத்தை முதலில் கொடுங்கள்.

 

புராணப் பொய்களை புனிதமாக்காதீர்.

Sunday, November 20, 2022

அதே பரவசம் ராஜா!

 அபிராமியைக் கண்ட குணாவின் கண்களில் தென் பட்ட அதே பரவசம் மோடியைப் பார்த்த உங்கள் கண்களிலும் தெரிகிறதே!



நல்லதோர் வீணை புழுதியில் விழுந்து நலங்கெட்டதே என்ற ஆதங்கம்தான் . ..

எம்.பி பதவி என்ன செய்யும்?

 


எம்.பி பதவி என்ன செய்யும்?



சாய்ந்து சாய்ந்து சாய்ந்து சாய்ந்து

என்று முன்பு கம்போஸ் செய்த பாடலின் வரிகளை

வியந்து வியந்து வியந்து வியந்து

என்று மாற்றிப் பாட வைக்கும். . . .

Sunday, September 25, 2022

எந்த மொழிப் பாடலென்பேன்?

 


"தும்பி வா தும்பக்குடத்தில்' என்று மலையாளத்திலும்

"சங்கத்தில் பாடாத கவிதை" என்று தமிழிலும்

"ஆகாசம் ஏனாதிதோ"  என்று தெலுங்கிலும்

"கும் சும் கும்" என்று இந்தியிலும்

பிரபலமான 

இளையாராஜாவின் இசைக்கோர்வையின்

வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் . . .

அதன் யூட்யூப் இணைப்பு இங்கே


இந்த பாடலை எந்த மொழிப்பாடல் என்றழைப்பது?


Friday, July 29, 2022

இளையராஜா காவிச் சிப்பாயாம் . . .



 

மோடியை வரவேற்று பாஜக ஒட்டியுள்ள சுவரொட்டியில் காவிச்சிப்பாய்கள் என்ற அடைமொழியில் இளையராஜாவையும் இணைத்துள்ளார்கள்.

நாமெல்லாம் அவரை இசை அரசராக கருதிக் கொண்டிருந்தால் சங்கிகள் அவரை மோடியின் சிப்பாயாக மாற்றி விட்டார்கள்.

மோடியை அண்ணல் அம்பேத்கரோடு ஒப்பிட்டதற்கு அவருக்கு இந்த இழிவெல்லாம் தேவைதான் . . .

Thursday, July 7, 2022

வாழ்த்த மனமில்லை ராஜா . . .


 போயும் போயும் இதற்குத்தானா?

மாநிலங்களவை நியமன உறுப்பினராவதற்கா தங்கமான தலைவர் அண்ணல் அம்பேத்கரை தரங்கெட்ட தரகன் மோடியோடு ஒப்பீட்டீர்?

மாநிலங்களவை உறுப்பினர் மட்டுமல்ல, அதற்கு மேலுமுள்ள பொறுப்புக்களுக்கு செல்லும் தகுதி உங்களுக்கு உண்டு. எம்.பி யாக அல்ல, மந்திரியாக அல்ல, பிரதமராக அல்ல, அதற்கும் மேல் இசையின் அரசனாக ஒரு மகத்தான இடத்தை தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு கொடுத்துள்ளனர். 

இந்த நியமனம் மூன்று மாதங்களுக்கு முன்பாக, உங்களின் மோசமான முன்னுரை வெளிவருவதற்கு முன்பாக நிகழ்ந்திருந்தால் அது இளையராஜா எனும் ஆளுமையின் திறமைக்கு கொடுக்கப்பட்டதாக இருந்திருக்கும்.

ஆனால் இப்போது?

நீங்கள் மறக்க நினைக்கிற அடையாளத்தை உங்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கத்தான் உங்களை மோடியை அண்ணல் அம்பேத்கரோடு ஒப்பிட வைத்தார்கள். உங்கள் மூலமாக தமிழ்நாட்டு தலித் மக்கள் மத்தியில் ஊடுறுவ முடியுமா என்ற முயற்சிக்கு பலியாகி விட்டீர்கள். இந்த நோக்கம் இல்லையென்று உங்களிடம் தரகு வேலை பார்த்த உங்கள் தம்பியை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.

தமிழ்த்திரை இசையின் முகமான இளையராஜாவிற்கு கொடுக்கப் பட்ட பதவி அல்ல இது. மோடி எனும் மோசடி மனிதனுக்கு முலாம் பூசியதற்கு கொடுக்கப்பட்ட கைமாறு.

அதனால் உங்களை வாழ்த்த மனமில்லை.

உங்கள் மீது அப்போதும் இப்போதும் குவியும் விமர்சனங்களும் கண்டனங்களும் உங்களை பிடிக்காத காரணத்தால் அல்ல. நமக்கு மிகவும் பிடித்த, நாம் நேசிக்கிற ஒரு மனிதர் தவறான பாதையில் பயணிக்கிறாரே என்ற ஆதங்கத்தால்தான். 

பிகு: ஓவியம் தோழர் ரவி பாலேட்


Sunday, June 19, 2022

ராஜராஜசோழன் நான் . . .

 


 பாலு மகேந்திரா இயக்கிய "ரெட்டை வால் குருவி" படத்தில் இளையராஜா இசையில் உருவான பிரபலமான பாடல் "ராஜராஜசோழன் நான்" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் வாசிப்பில் . . .

யூட்யூப் இணைப்பு இங்கே

Sunday, June 5, 2022

விக்ரம் - என் பார்வையில்

 


புதிய விக்ரம் இன்னும் பார்க்கவில்லை. இன்று 6.30 மணி காட்சிக்கு முன்பதிவு செய்துள்ளேன்.

புதிய விக்ரம் வந்துள்ள சூழலில் பழைய விக்ரமை ஆகா, ஒகோ என பலரும் புகழ்ந்து கொண்டுள்ளார்கள். நிஜமாகவே பழைய விக்ரம் சூப்பர் படமா?

நினைவுகளை ஓட விட்டு எழுதுகிறேன்.

குமுதத்தில் தொடராக வந்து ஆவலை உருவாக்கிய படம். 

அதற்கு சில வருடங்கள் முன்பாக அது போல குமுதத்தில் தொடராக வந்த படம் பாக்யராஜ் எழுதி இயக்கிய "மௌன கீதங்கள்" அந்த சமயம் திருக்காட்டுப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். திருக்காட்டுப்பள்ளி பெரிய அக்கா வீட்டிலிருந்து புதுக்கோட்டை இரண்டாவது அக்கா வீட்டுக்கு தஞ்சாவூர் வழியாக சென்று தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகிலிருந்த தியேட்டரில் வீட்டுக்குச் சொல்லாமல் கருப்பில் பார்த்த படம் அது. பிடிக்கவே பிடிக்காத வாத்தியாரும் அந்த காட்சிக்கு வர அவர் கண்ணில் படக்கூடாது என்பதற்காக எல்லோரும் வெளியேறும் வரை காத்திருந்து கடைசியாக வெளியே போனது நினைவுக்கு வந்தது.

விக்ரம் வந்த போது எல்.ஐ.சி பணியில் நெய்வேலியில் சேர்ந்திருந்தேன். அங்கே அப்போதிருந்த அமராவதி தியேட்டரில் எந்த ஒரு புது படமும் ஆறு மாதத்திற்குப் பிறகே வரும்.

விக்ரம் வெளியான சமயம் கும்பகோணத்தில் என் கடைசி அக்காவின் திருமணம் நடந்தது. மண்டபத்தை சுற்றி சுற்றி விக்ரம் பட போஸ்டர்கள்தான். ஆனால் திருமண வேலைகள் காரணமாக திரைப்படம் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

ஆகவே அமராவதி தியேட்டரில் வரும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. 

மூன்றே மாதத்தில் வந்து விட்டது. அதுவே அப்படம் பெரிதாக ஓடவில்லை என்பதற்கான சான்று.

கடுமையான தண்டனை அறிவிக்கப்பட்டதைக் கூட காது கொடுத்து கேட்காமல் ஆடுபுலி ஆட்டம் விளையாடும் குற்றவாளிகள், அந்த குற்றவாளிகள் மூன்று மதங்களையும் சார்ந்தவர்களாக காண்பித்தது, அக்னிபுத்திரன் ஏவுகணையை சுகிர்தராஜா எனும் சத்யராஜ் கடத்துவது, அதை கண்டுபிடிக்க விக்ரமை கேட்பது, வில்லன் ஆட்கள் விக்ரமின் மனைவியைக் கொல்வது, உளவுத்துறை அலுவலகத்திலேயே வில்லனின் உளவாளி இருப்பது, அவன் மூலமாக வில்லன் யார் என்பதை அறிவது, பரபரப்பான சேஸிங் காட்சிக்குப் பின் சினிமா தியேட்டர் நியூஸ் ரீல் மூலமாக வில்லன் இருப்பது சலாமியா என்று கண்டறிவது வரை தீயாய், பரபரப்பாய் படம் செல்லும்.

அதன் பிறகு சலாமியாவுக்குப் போன பிறகு படம் படுத்து விடும். ஜனகராஜ் திருநங்கையாக செய்யும் காமெடிகள் எரிச்சலூட்டும். டிம்பிள் கபாடியை எவ்வளவு தூரம் கவர்ச்சியாக காண்பிக்க முடியுமோ, அந்த அளவு காண்பிப்பது, ஷோலே வில் நடுங்க வைத்த அம்ஜத்கானை காமெடியனாகக் காண்பித்த பரிதாபம் என்றெல்லாம் இரண்டாவது பாகம் மிகவுமே சோதித்து விடும்.

அதிலும் கிளைமேக்ஸ் கொடூரம். சத்யராஜ் செல்லும் விமானத்தின் மீது தாவி, அவர் கீழே குதிக்கையில் அவர் மீது பாய்ந்து அவரது பாராசூட்டைப் பறித்து அந்தரத்தில் பறந்த கதாநாயகியையும் சேர்த்துக் கொண்டு கீழே வருவதெல்லாம் மிகப் பெரிய காமெடி. அதிலும் பாவம் அப்போது கிராபிக்ஸ் தொழில் நுட்பம் வேறு சரியாக வராமல் ஒழுங்காக ஒட்டாமல் பிசிறு பிசிறாக இருக்கும். உதாரணம் கீழே உள்ளது.



இரண்டாவது பாதியில் கதையை விட கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்ததால் சொதப்பலாகிப் போன படம்தான் விக்ரம். 

இளையராஜாவின் இசை, சில வசனங்கள், சத்யராஜ், ராஜஸ்தான் அரண்மனைகளின் அழகு ஆகிய நல்ல அம்சங்கள் இரண்டாவது பகுதியின் சொதப்பலை தாங்க வைத்தது.

பார்ப்போம் புதிய விக்ரம் எப்படி இருக்கிறதென்று . . .

கைதி தந்த நம்பிக்கையில் செல்கிறேன்...

முடிந்தால் நாளை அது பற்றி எழுதுவேன்.

Saturday, June 4, 2022

நீதானே எந்தன் பொன் வசந்தம் . .

 


மறைந்த எஸ்.பி.பி க்கு இன்று பிறந்த நாள். அதனை முன்னிட்டு அவரது பிரபலமான பாடல்களில் ஒன்றான "நீதானே எந்தன் பொன் வசந்தம்" பாடலை வயலினில் வாசித்துள்ளான் என் மகன்.

யூட்யூப் இணைப்பு இங்கே

Thursday, June 2, 2022

நீ ஒரு காதல் சங்கீதம்

 


இளையராஜா, மணிரத்னம் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் இணைந்து பணியாற்றிய "நாயகன்" படத்தின் "நீ ஒரு காதல் சங்கீதம்" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் . . . .

யூட்யூப் இணைப்பு இங்கே