Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts
Showing posts with label ஜல்லிக்கட்டு. Show all posts

Monday, February 6, 2017

கொடுத்ததை சொல்லாத விமு





ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது எழுத்தாளர் திரு வினாயக முருகன் அவர்கள் “சாகித்ய அகாடமி விருதை யாராவது திருப்பித் தந்தால் விருது தொகையைப் போல மூன்று மடங்கு தொகையை நான் தருகிறேன்”  என்று முகநூலில் எழுதியிருந்தார். பழைய அனுபவத்தின் அடிப்படையில் அதற்கான வாய்ப்பு எங்கே வரப்போகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

அதன் பின்பு நான் எங்கள் அகில இந்திய மாநாட்டிற்காக எர்ணாகுளம் சென்று விட்டேன். ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழக அரசால் மத்தியரசு பாணியில் நசுக்கப்பட்டது. நானும் திரு வினாயக முருகனின் அறிவிப்பை மறந்தே போய் விட்டேன்.

இரண்டு நாட்கள் முன்பாக திரு லக்ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” படித்து விட்டு அந்த நூலைப்பற்றியும் பகிர்ந்து கொண்டேன். படிக்காதவர்கள் இந்த இணைப்பிற்குச் சென்று கொஞ்சம் படித்து விடுங்கள்.

திரு லக்ஷ்மி சரவணகுமார் அவர்களின் முக நூல் பக்கத்திற்கு சென்று நான் எழுதியதை பின்னூட்டமாக பகிர்ந்து கொண்ட போதுதான் அவர் கானகன் நாவலுக்காக பெற்ற சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதை திருப்பித் தந்ததும் திரு வினாயக முருகன் தான் சொன்னபடியே நடந்து கொண்டதையும் அறிந்து கொண்டேன்.

லக்ஷ்மி சரவணகுமார், முகநூலில் எழுதியதை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 போராட்டம் துவங்கிய நாளில் நண்பர் விநாயக முருகன் முகநூலில் ஒரு அறிவிப்பு செய்திருந்தார். சாகித்ய அகதெமி விருதை திருப்பி அளிப்பவர்களுக்கு மூன்று மடங்கு தொகையை தருவதாக. நான் விருதை திருப்பி அளிப்பதாக சொன்னவுடனேயே என்னிடம் வந்து பணம் அனுப்ப வங்கிக் கணக்கு கேட்டார். நான் மறுத்துவிட்டாலும் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் உங்களுக்காக இல்லாவிட்டாலும் பதிப்பகத்துக்காக வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னதால். மோக்லி பதிப்பகத்தின் பெயரில் அத்தொகை பெற்றுக் கொள்ளப்பட்டது. அவரது நிதியில் இருந்து வெளிவரும் முதல் நூல் தை எழுச்சி. அவர் கொடுத்த தொகைக்காக புத்தக பதிப்பு விவரங்கள் அவ்வபொது அவருக்கு அனுப்பி வைக்கபடும்.
நன்றி விநாயக முருகன்.

தான் வாங்கிய யுவ புரஸ்கார் விருதை திருப்பி அளித்த திரு லக்ஷ்மி சரவணகுமாருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

சொன்னபடியே பணம் கொடுத்தாலும் அதைப் பற்றி திரு வினாயக முருகன் ஒரு வார்த்தை கூட எங்கேயும் குறிப்பிடவில்லை. மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்க வேண்டாம் என்பதற்கு உதாரணமாக இருக்கிற திரு வினாயக முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நேசமும்.

ஸ்கூட்டி கேட்பதை மட்டும் விட்டு விடாதீர்கள் வி.மு. அதற்கான முழு உரிமை உங்களுக்கு உண்டு.

Thursday, January 19, 2017

முதலில் அடக்க வேண்டியது இவர்களின் திமிரைத்தான்




ராதா ராஜன் - ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான முக்கியமான பெண்மணி. 

மாணவர்களின் போராட்டம் தொடர்பாக பி.பி.சிக்கு அவர் அளித்த ஒரு பேட்டியில்  Free Sex க்கு கூட ஐம்பதாயிரம் பேர் திரள்வார்கள் என்று ஆணவத்தின் உச்சகட்டத்தோடு கூறியிருக்கிறார்.

 http://www.bbc.com/tamil/38670535

எவ்வளவு கொழுப்போடு போராடும் மாணவர்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார் பாருங்கள்!

தீண்டாமையைக் கடைபிடிப்பேன், பால்ய விவாகம் செய்து வைப்பேன் என்று ஏற்கனவே திமிரோடு பேசிய இவர் காவிக் கூட்டத்தின் பிரதிநிதி.

ஜல்லிக்கட்டில் மாடுகளை அடக்குவதற்கு முன்பாக அடக்க வேண்டியது இவரைப் போன்ற ஆதிக்க சக்திகளின் கொழுப்பைத்தான்.  

தமிழர்களை பொறுக்கி என்று அழைக்கும் சுப்ரமணிய சாமியையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும்.  

மாணவர்கள் வெல்லட்டும், தொடரட்டும்



ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க தமிழகமெங்கும் மாணவர்கள் நடத்தி வரும் உறுதியான போராட்டம் வெல்லட்டும்.

அரசியல்வாதிகள் வேண்டாம் என்று சொல்பவர்கள் இன்றைய நிகழ்வின் மூலமாக ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னே உள்ளே அரசியலை புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

அவசரச்சட்டம் மூலமாகவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி, 

ஆதார் அட்டையை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று பல முறை உச்ச நீதிமன்றம் சொன்னாலும் தொடர்ந்து அதை உதாசீனம் செய்து வரும் நரேந்திர மோடி,

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திய நரேந்திர மோடி

இப்போது மட்டும் நீதிமன்றத்தை காரணம் காண்பித்து கை விரிப்பது அப்பட்டமான மோசடி என்பதை 

உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உணர்வோடும் உரிமையோடும் தொடர்புடைய பிரச்சினை. 

இப்போராட்டம் வெல்லட்டும். உறுதி வெல்லும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

ஜல்லிக்கட்டோடு உங்கள் போராட்ட உணர்வு நின்று போய் விட வேண்டாம்.

இப்போராட்டம் உணர்வோடும் உரிமையோடும் தொடர்புடையது என்றால் நம் வாழ்வோடும் உயிரோடும் வளர்ச்சியோடும் தொடர்புடைய ஏராளமான பிரச்சினைகள் உள்ளது. அதைப்பற்றி பேச இது பொருத்தமான நேரமில்லை. 

உங்கள் மனதில் மூண்ட தீயை அணையாமல் பாதுகாத்து வையுங்கள். 

அரசியல் இல்லாமல் எதுவுமில்லை. மக்களுக்கான அரசியல் எது என்பதையும் அந்த அரசியல் களத்தில் மக்களுக்காக உண்மையிலேயே நிற்பவர்கள் யார் என்பதையும் இப்போராட்டத்தின் இறுதியில் அறிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு

போராட்டம் வெல்லட்டும் என மீண்டும் வாழ்த்துகிறேன்.

Thursday, January 12, 2017

பரவாயில்லை ஓ.பி.எஸ், பயப்படாதீங்க




அரசியல் பிளாக்மெயிலரும் தரகருமான சுப்ரமணியசாமி "ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்படும்" என்று மிரட்டியுள்ளார். 

இதுதான் நல்ல வாய்ப்பு திரு ஓ.பி.எஸ்.

தயவு செய்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜல்லிக்கட்டை நடத்த ஏற்பாடு செய்யுங்கள்.

சசிகலா முதலமைச்சராவதற்காக நீங்கள் பதவியை ராஜினாமா செய்யும் அசிங்கத்திலிருந்து தப்பிக்க இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது. தமிழக மக்களின் உணர்வுகளை பாதுகாத்த காரணத்தால் பதவியை இழந்தார் என்ற கௌரவமும் கிடைக்கும்.

சுனாசாமியின் பவிசு என்னவென்றும் தெரிந்து விடும்.

 

 

Tuesday, January 12, 2016

ஜல்லிக்கட்டு எதிர்ப்பில் ஒளிந்திருக்கும் சதிகள்

 முக நூலில் படித்த ஒரு கட்டுரை. இதில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் மனதிற்கு நெருக்கமாக உள்ளதால் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்திய அழகிகள் உலக அழகிகள், பிரபஞ்ச அழகிகள் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் அழகு சாதனப் பொருட்களின் விற்பனைக்குமான இணைப்பு போல இதிலும் பன்னாட்டு நிறுவனங்களின் லாப வெறி அடங்கியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு  நியாயமாகவே தெரிகிறது. 

நாய்க்கடிக்கான மருந்து தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை மூட முயற்சித்து  தனியாருக்கு ஒப்படைக்க முயற்சித்ததற்கும்  தெரு நாய்கள் மீது கருணை காட்டுவதற்கும் கூட தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது.







யார் இந்த பீட்டா?
--------------------------
#‎PETA‬- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப் பதிவு செய்து கொண்டது.

(எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதியோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி... அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்தது பீட்டா.

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால்கள் பீட்டாவிற்கு தெருநாய்களைப்பற்றி வரத் துவங்கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா.

அந்தச் சட்டத்தின் படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்த நாயைத் தத்தெடுக்க முன்வராவிட்டால் பீட்டா அந்த நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.

இவ்வாறு 2015 ம் ஆண்டு மட்டும் பீட்டா கொலை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிற விலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

அதிர்ச்சி அடைய வேண்டாம்...

35000. ஆமாம் நண்பர்களே... முப்பத்தி ஐந்து ஆயிரம் !!!


இந்தக் கருணை நிறைந்த மகா கொலைகாரர்கள் நம்மிடம் வந்து சொல்கிறார்கள்...

நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!

கொம்பைப் பிடிக்கிறாய்!


கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!


அதனால் நீ மாட்டை மிருக வதை செய்கிறாய்... எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!


'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்பார்களே நம்மூரில்... பீட்டா செய்வது அதுவே தான்!!


பீட்டா - மிருகவதை வியாபாரம்
-----------------------------------------------
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக் கொலை என்ற பெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களையும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?


அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பணமும், இடமும் இல்லை என்பது மட்டும் தான் உண்மையான காரணமா? இதற்கான பதிலில் தான் இருக்கிறது சூட்சுமம்!

அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக்கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.

எனவே வளர்ப்புப் பிராணிகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப் பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.
சரி.

அப்படியானால் அமெரிக்காவில் பீட்டாவைத் தவிர வேறு ஆதரவற்ற விலங்குகளைக் காப்பாற்றும் அமைப்புகள் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.


நிறைய இருக்கின்றன.ஆனால் பீட்டா அந்த நிறுவனங்கள் மீது தனது உளவாளிகளை ஏவி அவர்கள் அந்த விலங்குகளைப் பராமரிக்கும் விதத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கிறது. ( நம்மூர் ஜல்லிக்கட்டில் நடந்ததும் இதேதான்) அந்த ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தை அணுகி அவர்களை முடக்குகிறது.

போட்டியே இல்லாமல் நடக்கும் இந்த மிருகவதை வியாபாரம் பீட்டாவின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் நாள்தோறும் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது என்பதே இன்றைய நிலை!

சரி... நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் பீட்டாவிற்கு ஏன் இத்தனை அக்கறை?

பீட்டா - தோலிருக்க சுளை முழுங்கும் ஆளு !
-----------------------------------------------------------------
நம்ம தெருவில் சாதாரணமாக காணும் காட்சிதான் இது. இரண்டு அல்லது மூன்று மாடுகளை பக்கத்து வீட்டுக்காரர் சொந்தமாக வைத்திருப்பார்.

பகலில் அந்த மாடு சர்வசாதாரணமாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கும். கிராமங்களில் வயல்வரப்பின் ஓரமாக மேய்ந்து கொண்டிருக்கும். 

நம் வீட்டுப் பெண்கள் அதற்கு வீட்டில் மீதமாகிப் போன கஞ்சியை பாத்திரத்தில் வைப்பார்கள். அதுபாட்டுக்கு குடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கும்.

காலையிலும், மாலையிலும் அந்த மாட்டின் சொந்தக்காரர் பத்து வீடுகளுக்கு பால் ஊற்றிவிட்டுப் போவார். அவருக்கான வருமானம் அதுதான்.

இது போக ஆவின் மாதிரியான கூட்டுறவு பால் பண்ணைகளுக்கு இந்த மாடு வைத்திருப்பவர்கள் பால் கறப்பார்கள்.

பீட்டாவின் கண்ணை ஊறுத்துவது இதுதான். இதிலென்ன இருக்கிறது உறுத்துவதற்கு? என்று உங்களுக்குத் தோன்றலாம்.

தமிழ்நாட்டில் மட்டும் இது போல் சிறு விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்பவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் பால் உற்பத்தி சந்தையின் மதிப்பு ஒரு ஆண்டிற்கு எவ்வளவு தெரியுமா நண்பர்களே?

மூன்றரை இலட்சம் கோடிகள்!

சரி... இதற்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு?

இருக்கிறது. கோவில் மாடு என்ற ஒரு விஷயம் நம்ம ஊரில் உண்டு. அந்த மாடு வருடம் முழுதும் ஊர் சுற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கும்.
அந்த ஊரில் ஒரு முன்னூறு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அத்தனை மாடுகளுக்கும் இனவிருத்தி செய்வது அந்த மாடுதான்.

இதுபோக ஜல்லிக்கட்டு விடுவதற்காக வளர்க்கப்படும் மாடுகளும் அந்த இனவிருத்தி வேலையைச் செய்யும். இந்த நாட்டு மாடுகள் அதிக பராமரிப்பு தேவைப்படாதவை.

சிறிய அளவிலான மேய்ச்சல் அதற்கான உணவுத் தேவையை தீர்த்துவிடும்.

ஜல்லிக்கட்டில் விடப்படுவது இது போன்ற காயடிக்கப்படாத நாட்டுமாடுகள் தான்.

வட இந்தியா மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் மாட்டுவண்டிப் பந்தயங்களில் பயன்படுத்தப்படுவது எல்லாமும் காயடிக்கப்பட்ட மாடுகளே!

எனவே தான் பீட்டா இந்த நாட்டுமாடுகளைக் குறிவைக்கிறது. இந்த மாட்டினத்தை முற்றிலும் அழிக்காவிட்டால் அவர்களால் கலப்பின மாடுகளை இங்கே இறக்கமுடியாது. கலப்பின மாடுகளுக்கு மேய்ச்சல் உணவு போதாது. அதற்கு தீவனம் வைத்தாக வேண்டும்.

உலகின் மிகப் பெரிய மாட்டுத்தீவன மற்றும் ஊக்க மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் பீட்டாவின் பின்னணியில் இருக்கிறது என்பதே உண்மை.

அவர்கள் கண்ணை தமிழகத்தின் மூன்றரை இலட்சம் கோடிகள் கொண்ட பால் உற்பத்தி சந்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது.

ஜல்லிக்கட்டை நிறுத்தாவிட்டால் அவர்களால் இங்கே காலூன்றவே முடியாது.

அதனால் தான் அவர்கள் இந்த வீரவிளையாட்டை மிருகவதை என்ற பெயரில் முடக்க தீவிரம் காட்டுகிறார்கள் !

* பீட்டா முகமூடிக் கிழிப்பு தொடரும்...

‪#‎Peta_fraud‬
நன்றி-இரா.குண அமுதன்.