Showing posts with label சாவர்க்கர். Show all posts
Showing posts with label சாவர்க்கர். Show all posts

Saturday, March 22, 2025

சங்கி பெரும் கரடிகளே தூற்றிய சாம்பாஜி

 


சங்கிகள் இன்று சத்ரபதி  சிவாஜியின் மகன் சாம்பாஜி மீது  திடீரென பாசத்தை பொழிந்து கொண்டு ஔரங்கசீப்பின் மீது வெறுப்பை கக்கிக் கொண்டு கலவரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 சாம்பாஜி  பற்றி வரலாறு சொல்வது என்ன?

 வரலாற்றை விட்டுத்தள்ளுங்கள்

 சங்கிகளின் குருமார்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்?

 மகாத்மா காந்தி கொலை வழக்கு புகழ், தனக்குத்தானே வீரன் பட்டம் கொடுத்துக் கொண்ட சாவர்க்கர் என்ன சொல்லியுள்ளார் என்பது கீழே உள்ளது.

 

“மராத்தா சாம்ராஜ்யத்தை ஆள சாம்பாஜி தகுதியற்றவன், முன் கோபி, குடிகாரன், ஸ்த்ரீ லோலன்.”

 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது சர்சங்சாலக்கான கோல்வாக்கர் எழுதிய “சிந்தனைக் கொத்துக்கள்” என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கை பிரகடன நூலில் சாம்பாஜி பற்றி எழுதியுள்ளது கீழே உள்ளது.

 


சாம்பாஜி குடிகாரன், பெண்களை வேட்டையாடுபவன், காண்டோ பல்லாலின் சகோதரி மீது சாம்பாஜியின் கொடிய பார்வை விழுந்ததும் அவன் தன் சகோதரியை தற்கொலை செய்ய வைத்து மானத்தை காப்பாற்றிக் கொள்ளச் செய்தான்”

 ஆக சங்கிகளின் குருமார்களான கோழை சாவர்க்கர் மற்றும் கோல்வாக்கர் ஆகிய இருவரும் சாம்பாஜியை

 குடிகாரன், பெண்களை வேட்டையாடுபவன்

 என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

 அப்படிப்பட்ட ஒரு மோசமான ஆளை முன் வைத்து சங்கிகள் கலவரம் நடத்துகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் சாம்பாஜி  மீதான பாசம்  அல்ல, இஸ்லாமியர்கள் மீதான  வெறுப்புதான்.

 பிகு: அடுத்த பதிவு :  காண்டோ பல்லால் – முதல் சங்கி மூடன்

Friday, December 2, 2022

அது சாவர்க்கர் மன்னிப்பல்ல . . .

 


மோடி விளம்பரம் செய்த, மொட்டைச்சாமியார் உள்ளிட்ட பாஜக முதல்வர்கள் வரி விலக்கும் விடுப்பும் கொடுத்த "காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்தை கழுவி கழுவி ஊற்றிய கோவா சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழுவின் தலைவர் நடவ் லேபிட் மன்னிப்பு கேட்டு விட்டார் என்று சங்கிகள் புளகாங்கிகத்தோடு ஒரு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அச்செய்தி உண்மையா?

அம்பாள் என்றைக்கடா பேசியிருக்கிறாள்? என்பது போல சங்கிகள் என்றைக்கடா உண்மை பேசியிருக்கிறார்கள் என்ற உங்கள் குரங்குக் குளியல் எனக்கு கேட்டு விட்டது.

அவர் சங்கிகளின் பிதாமகர்கள் செல்ஃபி சாவர்க்கரோ, ஆர்.எஸ்.எஸ் தேவரஸோ இல்லை, சர்வ சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்க . .

"காஷ்மீரில் பாதிக்கப்பட்ட பண்டிட்டுகள் யாருக்காவது நான் சொன்னது மனதை புண்படுத்தி இருக்குமானால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரம் "காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்தைப் பற்றிய எங்கள் தேர்வுக் குழுவின் கருத்தின் எந்த மாற்றமும் இல்லை. வெறுப்புணர்வை தூண்டும் இழிவான பிரச்சாரப் படம் அது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" 

என்றுதான் அவர் கூறியுள்ளார்.

சர்ச்சையே அவர் திரைப்படம் பற்றி கூறியதுதான். அந்த கருத்தில் மாற்றம் இல்லை என்று சொல்கிற போது மன்னிப்பு கேட்டார் என்பதே அபத்தமானதல்லவா!

என்ன! தாங்கள் அடி முட்டாள்கள் என்பதை சங்கிகள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்கள். அவ்வளவுதான் . . .


Monday, August 29, 2022

புல்புல் சாவர்க்கர் – 2 கேள்விகள்


 புல்புல் பறவையின் மீது அமர்ந்து சாவர்க்கர் தன் தாய் நாtட்டைப்  பார்க்க வந்த கதை குறித்து எல்லோரும் எழுதி விட்டார்கள். மோடி முதலையை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்ததை விட மோசமான கதை இது. 

 எனக்கு இரண்டு கேள்விகள்தான்.

 அந்தமான் ஏதாவது வெளி நாடா?  அதுவும் இந்தியாவின் ஒரு பகுதிதானே!  அப்படியென்றால் அவர் சென்ற தாய் நாடு எது? அவர் மன்னிப்பு கேட்ட மாட்சிமை தாங்கிய எலிசபத் மகாராணியின் இங்கிலாந்தா?

 புல்புல் பறவை மீதமர்ந்து அன்றாடம் தாய் நாட்டை பார்வையிடச் சென்ற சாவர்க்கர் ஏன் தினசரி அந்தமான் சிறைக்கே திரும்பி வர வேண்டும்? முதல் முறையாக வெளியே சென்ற போதே தப்பித்து இந்திய விடுதலைக்காக போராடி இருக்கலாமே! அப்படி ஒன்றும்  சட்டத்தை மதிக்கும் நல்லவர் கிடையாதே! காந்தியைக் கொல்ல திட்டமிட்டு துப்பாக்கி கொடுத்தனுப்பிய ஆள்தானே!

 கதை விடுங்கடா! கொஞ்சம் அளவோட கதை விடுங்கடா!!!

 கர்னாடகா மாநில கல்வித்தரம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்பதுதான் இந்த நகைச்சுவையையும் மீறி கவலை அளிக்கிற விஷயம்.

 அதே போல சாவர்க்கர் மாதிரியான ஆசாமிகளுக்கு கட்டமைக்கிற பிம்பம் உண்மையிலேயே மிகவும் ஆபத்தானது. ஆம் இன்னொரு கதையையும் பார்த்தேன். அது நாளை.