Friday, February 21, 2020

எடப்பாடி வகையறா பூஜ்ஜியமாம் . . .


எழுவர் விடுதலை தொடர்பாக நல்ல செய்தி விரைவில் வரும் என்று நேற்று முன் தினம் சட்டப் பேரவையில் எடுபிடி அறிவிக்கிறார்.

அப்படியெல்லாம் அறிவிக்க உனக்கு அருகதை கிடையாது என்று உடனடியாக சவுக்கடி கொடுத்தது போல அமித்ஷா அமைச்சகம் பதில் வெளியிட்டுள்ளது. 

எழுவரை விடுதலை செய்வது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று சொன்னதோடு மட்டுமல்ல, தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு மதிப்பு வெறும் பூஜ்ஜியம்தான் என்று நக்கல் அடித்துள்ளது அந்த அறிக்கை.

ஒரு மாநில அரசின் தீர்மானத்தின் மதிப்பு பூஜ்ஜியம் என்றெல்லாம் சொல்லும் ஆணவம் மோடி வகையறாக்களுக்கு மட்டுமே உரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அற்ற காட்டுமிராண்டி பாசிஸ்ட் கூட்டம் இப்படித்தான் ஆணவமாக பேசும், நடந்து கொள்ளும்.

எழுவர் விடுதலைக்கான குரலை வலிமையாக எழுப்பிட வேண்டும் என்று உள்துறை அமைச்சக அறிக்கை உணர்த்துகிறது, அவர்கள் ஆட்சி செய்ய அருகதையற்றவர்கள் என்பதையும் கூட.

எடுபிடி அரசுக்கு உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சொரணை, ரோஷம் இருந்தால் அவர்கள் இத்தனை நேரம் கடுமையான கண்டனம் எழுப்பியிருக்க வேண்டும்.

ஆனா அவங்கதான் "ரொம்பவே நல்லவனுங்க" ஆயிற்றே

சிவனை இழிவு படுத்துவது ????


காசி மஹாகாள் எக்ஸ்பிரஸ் என்ற புதிய புகைவண்டியில் பி 5 கோச்சில் 64 வது பெர்த்தை சிவபெருமானுக்காக ரிசர்வ் செய்துள்ளார்கள். அந்த இருக்கையில் சிவபெருமானுக்குப் பதில் அவரது படங்கள் வைத்து வழிபாடு நடக்கிறது. பயணிகள் சிவபெருமானின் அனுக்கிரகத்தைப் பெறுவதற்கு இந்த ஏற்பாடாம்!

எல்லாம் சரி, ஆனால் ஒதுக்கிய பெர்த் எண்தான் சரியில்லை.

மூன்று நாட்கள் முன்பாக வேறு ஒரு ட்ரெயினில் பி 1 கோச்சில் அதே அறுபத்தி நான்காம் எண் பெர்த்தில்தான் பயணம் செய்தேன்.

டாய்லட்டிற்கு அருகில் உள்ள இருக்கை. ஆகவே இரவு முழுதும் பயணிகள் கதவை திறந்தும் மூடிக்கொண்டும் சென்று கொண்டே இருப்பார்கள். அதனால் தூக்கம் கெடும். மேலும் கழிப்பறை தூய்மையாக இல்லையென்றால் கதவு திறக்கப்படும் போதெல்லாம் நாற்றம் வேறு வந்து தாக்கும் . .

சைட் அப்பர் பெர்த் என்பதால் எதிரில் உள்ள மிடில் மற்றும் அப்பர் பெர்த் காரர்கள் சிவபெருமானை நோக்கித்தான் காலை நீட்டிக் கொண்டு படுப்பார்கள். சிவபெருமானுக்கு இந்த இழிவெல்லாம் தேவையா?

பார்த்துக் கொள்ளுங்கள் பக்த கோடிகளே!

கடவுளை நம்பாத நாத்தீகர்கள் சிவபெருமானை இழிவு படுத்தவில்லை. 
கடவுளின் பெயரால் அரசியல் செய்யும் அசிங்கமான பேர்வழிகள்தான் கடவுளை இழிவு செய்கின்றனர்.


Thursday, February 20, 2020

"காவி"த் தலைவரா எம்.ஜி.ஆர்?முக நூலில் பார்த்த படம் கீழே உள்ளது.
எந்த ஊர் என்று தெரியவில்லை. எடுபிடி, ஓபிஎஸ், மாப்பா, ராபா ஆகியவரை விட தீவிர பாஜக விசுவாசி போல.

மனதுக்குள் காவிமயமான பின்பு வெளிப்படையாகவே காண்பித்தால் என்ன என்று நினைத்த அந்த ரத்தத்தின் ரத்தத்தின் நேர்மை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு . . .

அநேகமாக அடுத்து

அடிமைப்பெண் படத்தின் 

"காலத்தை வென்றவன் நீ. காவியமானவன் நீ" 

என்ற பாடலை

"காலத்தை வென்றவன் நீ. காவியும் ஆனவன் நீ" 

என்று ரீமிக்ஸ் செய்து வெளியிடப் போகிறார்கள்Wednesday, February 19, 2020

இல.கணேசன் சேம் ஸைட் கோல்
ட்ரம்பிற்காக குஜராத்தில் கட்டப்பட்டுள்ள மறைப்புச் சுவர் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அல்லவா நடக்கிறது என்று பதில் சொல்லியுள்ளார் பாஜக மூமூமூமூமூத்த தலைவர் இல.கணேசன்.

தன் கட்சியின் ஆட்சி குஜராத்தில் நடைபெறுவது கூட தெரியாத கூமுட்டையா இல.கணேசன் என்று கலாய்த்த பல பதிவுகளைப் பார்த்தேன்.

இல.கணேசன் சேம் சைட் கோல் போட்டுள்ளதாகவே நான் பார்க்கிறேன்.

ஆம்.

மறைப்புச் சுவரை அவரால் நியாயப்படுத்த முடியவில்லை. முட்டு கொடுக்க முடியவில்லை.

அதனால் காங்கிரஸ் ஆட்சி என்று திசை திருப்பி விட்டார்.

மறைப்புச் சுவரை விமர்சித்த இல.கணேசன் என்று செய்தி சொல்வதற்குப் பதிலாக நமது ஊடகங்களும் அவர் தவறாக பேசி விட்டார் என்று வெளியிட்டு வருகின்றனர்.


ஜஸ்ட் மூணே முக்கால் கோடி ரூபாய்தான்.
ட்ரம்பின் அகமாபாத் வருகைக்காக மறைப்புச் சுவர் கட்டியுள்ளது, தெரு நாய்கள் அகற்றுதல் ஆகியவை மட்டுமல்ல, அந்த ஒரு நாள் கூத்திற்காக பல நூறு கோடி ரூபாய் பணம் விரயமாக்கப்பட்டு வருகின்றது.

அப்படி ஒரு தண்டச் செலவு மலர் அலங்காரத்திற்காக மூணே முக்கால் கோடி ரூபாய் செலவழிக்கப்ப்டுவதும்தான்.

இதெல்லாம் என்ன தாமோதர்தாஸ் சேர்த்து வைத்த சொத்தா? நரேந்திர மோடி தன் இஷ்டத்திற்கு செலவழிக்க?

அம்மையாரின் ஆல் ரவுண்ட் அட்டாக்

மத்திய பட்ஜெட் குறித்த முழு அலசலை எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் செய்துள்ளார். தீக்கதிர் நாளிதழில் இன்று வெளியான கட்டுரையை பகிர்ந்து கொண்டுள்ளேன். அவசியம் முழுமையாக படிக்கவும்


மத்திய பட்ஜெட்: ஓர் ஆல் ரவுண்ட் அட்டாக் - க.சுவாமிநாதன்


முதலாளித்துவ சமூகத்தில் எல்லா பட்ஜெட்டுகளிலுமே வருமான மறு பங்கீட்டின் மடை மாற்றத்தை ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமாக செய்வது நடந்தேறும். இந்த பட்ஜெட்டில் உள்ள ஒரே வித்தியாசம்,  அதை மூர்க்கத்தனமாக அரங்கேற்றி இருப்பதுதான். ஒரு ஆல் ரவுண்ட் அட்டாக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சமூகத்தின் உழைப்பாளி மக்களின் எந்தப் பிரிவினரும் அதன் குறியில் இருந்து தப்பவில்லை. மக்கள் மத்தியில் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு எழலாம் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியும். ஆகவே திசை திருப்பலையும் பட்ஜெட் உரையிலேயே அவர்கள் செய்துள்ளார்கள்.  சரஸ்வதி சிந்து என்று பேசியிருப்பது அவற்றில் ஒன்றாகும். செல்வம் சம்பந்தப்பட்டது என்பதால் லட்சுமி பற்றி பேசியிருந்தால் கூட, அதில் நமக்கு வேறுபட்ட கருத்து இருப்பினும் கூட, ஏதோ ஒரு லாஜிக் இருந்திருக்கும். எப்படிப் பேசுவார்கள்! லட்சுமியை பற்றிப் பேசுகிற நிலைமை இல்லையே. ஆகவே சரஸ்வதியை பேசி திசை திருப்பியுள்ளார்கள்.
டிங்கரிங்

டிங்கரிங் என்றால் பூச்சு வேலை. பட்ஜெட் கணக்கு களில் அந்த பூச்சு வேலையை நிதியமைச்சர் செய்தாலும் உண்மை நிலவரம் பல்லிளித்து சிரிப்பதை மறைக்க முடியவில்லை. மொத்த வரி வருவாய் 2019- 20 க்கு ரூ.24,61,194 கோடிகள் பட்ஜெட் மதிப்பீடாக போடப்பட்டிருந்தது. தற்போது வெளி யிடப்பட்ட திருத்திய மதிப்பீட்டின் அளவு ரூ.21,63,423 கோடி கள் ஆகும். அதாவது பள்ளம் ரூ.2,97,772 கோடிகள். இவ்வ ளவு பெரிய பள்ளம் இருக்கின்ற நிலையிலும் கூட 2020 - 21 பட்ஜெட்டில் ரூ.24,23,000 கோடி எதிர்பார்க்கப்படுவதாக காண்பிக்கப்படுகிறது. இது சாத்தியமான ஒன்றா? மாநிலங்களுக்கான மத்திய வரி வருவாய் பங்கு என்பது 2019-20 பட்ஜெட் மதிப்பீடின் படி 8.1 லட்சம் கோடிகள் ஆகும். திருத்திய மதிப்பீடோ ரூ.6.6 லட்சம் கோடி. இதில் ஏற்பட்டிருக்கும் பள்ளம் 1.5 லட்சம் கோடி. இந்த 2020-21 பட்ஜெட்டில், ரூ.7.8 லட்சம் கோடி என மதிப்பிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இதுவும் சாத்தியமா? பட்ஜெட் செலவினங்களைப் பொருத்த வரையில் நடப்பு நிதியாண்டு பட்ஜெட் மதிப்பீடிற்கும், திருத்திய மதிப்பீட்டிற்குமான இடைவெளியாக ரூ.88,000 கோடி உள்ளது. ஆனாலும் 2020- 21 ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ.27.86 லட்சம் கோடியில் இருந்து ரூ.30.42 லட்சம் கோடி களாக உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

இது 11 சதவீத உயர்வு ஆகும். இது நடக்கவேண்டும் என்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீத உயர்வு தேவைப்படும். (நடப்பு விலை மதிப்பீட்டிலான ஜி.டி.பி அடிப்படையில்) இது நடப்பது சாத்தியமா? ஆனாலும், இப்படி நிறைய எண் விளையாட்டுகள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. பொதுவாக பட்ஜெட் மதிப்பீடு (BE), திருத்திய மதிப்பீடு(RE), உண்மை மதிப்பீடு (AE) என்பவை வேறுபட்டுத்தான் இருக்கும் என்றாலும் அவற்றிற்கான இடைவெளி இவ்வளவு பெரிதாக இருக்கக் கூடாது. ( உண்மை நிலவரம் வெளியே வர இரண்டு ஆண்டு கள் கூட ஆகிவிடுகின்றன) எதற்காக இவ்வளவு பூச்சு வேலைகள்? இந்த பட் ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் (எப்.ஆர்.பி.எம்) வரையறைக ளுக்காகவும் டிங்கரிங் வேலைகள் செய்யப்பட்டுள்ளன. எப்.ஆர்.பி.எம் என்ற சட்டத்தின் நோக்கமே ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட பொருளாதாரப் பாதையில் மக்களின் கருத்துக்கு இடமின்றி பயணிப்பதே ஆகும். 2019-20 ல் 3.3சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது 3.8 சதவீதத்தை தொட்டுள்ளது. சட்டம் மீறப்பட்டு விட்டதா? இல்லை. எப்.ஆர்.பி.எம் சட்டத்தின் பிரிவு 4 (3) ஓர் தளர்வைத் தருகிறது. 0.5 சதவீதம் வரை நிர்ணய விகிதத்தில் இருந்து விலகல் இருக்கலாம். அதற்காக “கரெக்ட்” ஆக கணக்குகளில் பூச்சு வேலை நடந்துள்ளது. 0.5 அளவிற்கே விலகல் இருப்பது போன்று ஒப்பனை செய்யப்பட்டுள்ளது. முக்கியமான செலவினங்கள் வெட் டப்பட்டுள்ளன. வருமானங்கள் அதீதமாய் மதிப்பிடப்பட் டுள்ளன. இந்த எப்.ஆர்.பி.எம் சட்டம் நவீன தாராள மயப் பாதையில் இருந்து அரசு விலகிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த பட்ஜெட் நிதி ஒழுங்கு என்ற பெயரில்தான் மூர்க்கமான பல தாக்குதல்களை தொடுத்துள்ளது.
மிஸ் ஆன கிசான் ரயில்

பிரதமரின் கிசான் திட்டத்தில் அவர்கள் இலக்கு 14.5 கோடி விவசாயிகளைத் தொடுவது. ஆனால் இத்திட்டத்தில் பதிவு ஆகியிருக்கிற விவசாயிகள் 62 சதவீதம் மட்டுமே. அதிலும் முழு பயன் பெற்றவர்களை மட்டும் பார்த்தால் மொத்த இலக்கில் 50 சதவீதத்திற்கு சரிந்து விடுகிறது. இப்படி பாதிக் கிணறு தாண்டுவதையே வழக்கமாக வைத்துள்ளார்கள். கிசான் ரயில் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருந்தாலும் பட்ஜெட் ரயில் விவசாயிகளை ஏற்றிக் கொள்ளாமலேயே சென்று விட்டது என்பதே உண்மை. அரசு விவசாய கொள்முதலை கைவிடுவதை நோக்கி நகர்கிறதோ என்ற சந்தேகம் வருகிற அளவிற்கு உச்சகட்ட அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 2019-20-இல் உணவு மானிய ஒதுக்கீடு 1,84,220 கோடி களாக இருந்தன. இப்போது அது 1,08,698 கோடிகளாக பெரும் சரிவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை குறைத்துக் காட்டுவதற்காக அரசு கடன் வாங்குவதற்கு பதிலாக இந்திய உணவுக் கழகத்தை கடன் வாங்குகிற நிலைமைக்கு திட்டமிட்டு தள்ளியுள்ளது. அரசு கடன் திரட்டினால் வட்டி குறை வாக இருக்கும். இந்திய உணவுக் கழகம் வங்கிக் கடன் வாங்கினால் அதிக வட்டிக்கு வாங்க வேண்டி வரும். இது உணவுப் பாதுகாப்பை சிதைக்கும். அரசு கொள்முதலை பாதிக்கும். அரசின் ஆதரவு விலைகளை விட குறைவாக இருப்ப தால் விவசாயிகள் வருமானம் கடும் பாதிப்பிற்கு உள்ளா கும்.

இந்த லட்சணத்தில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாவது என்ற வாய் ஜாலங்கள் எல்லாம் எப்படி நடக்கும்? ஒரு புறம் இப்படி வருமானம் பாதிக்கப்படும் போது  மறுபுறம் டீசல், உரம், மின்சாரம், டிராக்டர்கள், ஆயில், கால்நடை தீவனம், பூச்சிக் கொல்லி மருந்து ஆகிய இடு பொருள் விலைகள் ஏறியுள்ளன. டீசல் விலைகள் கிட்டத்தட்ட 10 சதவீதமும், ஆயில் 13 சதவீதமும் அதிகரித் துள்ளன. பால் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்குவது பற்றி பட்ஜெட் பேசியுள்ளது. ஆனால் கால் நடை தீவன விலை உயர்வும், கால்நடை மருத்துவ செலவினங்களின் உயர்வும் அதை அனுமதிக்குமா என்பது கேள்வி. உர மானியம் போன பட்ஜெட்டில் ரூ.80000 கோடிகள். திருத்திய மதிப்பீடு ரூ. 79,997 கோடிகள். ஆனால் 2020-21 பட்ஜெட்டில் ஒதுக்கீடு ரூ.71309 கோடிகள். ஏதாவது தர்க்க நியாயம் உள்ளதா? மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கதையை முடித்து விடுவார்கள் போலிருக்கிறது. 2019- 20ல் ரூ.71000 கோடியாக இருந்த ஒதுக்கீடு 2020-21ல் 61500 கோடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இது 2018-19 தொகை யான ரூ.61815 கோடிகளை விட குறைவான ஒதுக்கீடு ஆகும். 2018- 19 ல் கூலி பாக்கி வேறு இருந்தது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் எவ்வளவு குரூரமான முன் மொழிவு என்பதை புரிந்து கொள்ள இயலும்.
தீம் சாங்கும், சோகப்பாட்டும்

“ஆர்வமிக்க இந்தியா” (ASPIRATIONAL INDIA) என்பது பட்ஜெட்டின் “தீம் சாங்” என்றா லும் இந்திய தொழில்கள் கச்சா பொருட்க ளுக்கும், தொழில் நுட்பத்திற்கும் அந்நிய நாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலைமையை மாற்ற ஓர் அடி கூட எடுத்து வைக்கவில்லை. ஆராய்ச்சிக்கான அறிவிப்போ, ஒதுக்கீடோ குறிப்பிடத் தக்க அளவு ஒன்றுமில்லை. உலகம் முழுவதும் 2019 ல் பதிவுக்காக தரப்பட்டுள்ள காப்புரிமை விண்ணப்பங்களில் அமெரிக்காவை சீனா விஞ்சியுள்ளது. அதன் ஹூவாய் நிறுவனம் காப்புரிமை விண்ணப்பத்தில் உலகில் முதல் இடத்தில் உள்ளது என்பதையும் இங்கு நினைவு கூருவது பொருத்தமா னது. சீனாவின் இந்த வளர்ச்சி இந்திய பொருளாதாரத்தி லேயே பிரதிபலிப்பதை மருந்துகள் உற்பத்தியில் காண முடிகிறது.

தேசமே நலமா?

தேசிய உடல் நலக் கொள்கை ரூ.1.12 லட்சம் கோடி கள் தேவை என கூறுகிறது. இந்த பட்ஜெட்டில் உடல் நலத்திற்கான ஒதுக்கீடு ரூ,65011 கோடிகள். 58 சதவீதம் மட்டுமே. பொது மருத்துவம் சிதைக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவமனை படுக்கை வசதி அதிகரிப்பில் 80 சதவீதத்தை தனியார் மருத்துவமனை களே செய்துள்ளன எனில் மருத்துவம் எவ்வளவு வணிகமயம் ஆகியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்திற்கு சென்ற பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 6400 கோடிகள். டிசம்பர் வரை 16 சதவீதம் மட்டுமே (1014 கோடிகள்) மத்திய அரசால் செல விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, ராஜஸ் தான், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் அவர்கள் கோரியுள்ள தொகை மத்திய அரசிடமிருந்து வராமல் தவிக்கின்றன. கேரளா கோரியுள்ளதில் 39 சதவீதம் மட்டுமே தரப்பட்டிருப்பது ஓர் எடுத்துக்காட்டு. இந்த பட்ஜெட் ஓர் அபாயகரமான முன் மொழிவை யும் வைத்திருக்கிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிலமும் தந்து அவர்களை மாவட்ட அரசு பொது மருத்துவ மனைகளுடன் இணைப்பது என்பதாகும். வளங்களை மடை மாற்றம் செய்வதில் எந்த அளவிற்கு இந்த பட்ஜெட் சென்றுள்ளது என்பதற்கு இது சாட்சியம்.         
                                                                              
   இந்திய மருந்து உற்பத்தி 140 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதாகும். “உலகத்தின் பார்மசி” என்று இந்தியாவை சொல்வார்கள். ஆனால் இந்த மருந்து உற்பத்திக்கு தேவை யான கச்சா பொருட்கள் (API- Active Pharma Ingredients) 69 சதவீதம் சீனாவில் இருந்துதான் வருகின்றன. 1994 ல் பிளேக் நோயை எதிர்கொள்வதில் பெரும் பங்கை ஆற்றிய ஐ.டி.பி.எல் போன்ற பலமான நிறுவனங்களை உருவாக்க, வளர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த பட்ஜெட் உணர்ந்து எதுவும் செய்யவில்லை. இந்தியாவில் சிரிஞ்சை உற்பத்தி செய்கிற நாம் ஊசிகளை இறக்குமதி செய்கின் றோம். இந்த பட்ஜெட் இறக்குமதி வரிகளை உயர்த்தி யுள்ளது. உள்நாட்டு உற்பத்திக்கான சந்தையை உறுதி செய்வதாக கூறியுள்ளது. ஆனால் இருதயங்களில் பொருத்தப்படும் ஸ்டென்டுகள், ரேடியேஷன் இயந்தி ரங்கள், ஹை எண்ட் ஸ்கேனர் ஆகியன வெளி நாடுகளில் இருந்தே எதிர்பார்க்கப்படுகிற நிலையில் இந்த வரி உயர்வு இறக்குமதியை குறைக்காது; மாறாக நுகர்வோர் தலையில் சுமையையே ஏற்றப் போகிறது.

வெற்று முழக்கம்

மிக ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட பல திட்டங்க ளுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டுள்ளன. “மேக் இன் இந்தியா” பற்றிப் பேசுகிற ஆட்சியாளர் கள் ஆராய்ச்சிக்கான ஒதுக்கீடுகள் குறித்து கண்டு கொள்ளவில்லை. இதோ இன்னொரு உதாரணம். மின்னணு உற்பத்தியிலும் மருந்து உற்பத்தி போன்ற நிலைமையே. இந்தியாவில் 6 ஆண்டுகளில் மொபைல் போன் உற்பத்தி தலங்கள் 2 ல் இருந்து 268 ஆக உயர்ந்துள் ளது. 4.58 லட்சம் கோடிகள் மதிப்புள்ள வணிகம் நடை பெறுகிறது. ஆனால் அவை பெரும்பாலும் வெறும் “இணைப்பு” (Assembly) தலங்களாகவே உள்ளன; அவற்றில் நடைபெறுகின்ற மதிப்பு கூட்டல் (Value addition) 7 முதல் 8 சதவீதம் மட்டுமே ஆகும். இறக்கு மதியை சார்ந்து இருப்பதால் இதன் வருவாயில் 93 சத வீதம் சீனாவுக்கு செல்கிறது. (இந்து பிசினஸ் லைன்- 06.02.2020). ஆராய்ச்சிக்கான முனைப்பு அற்ற பட்ஜெட் இவற்றையெல்லாம் எப்படி சரி செய்யப் போகிறது? ஆர்வமிக்க இந்தியா எப்படி உருவாகப் போகிறது? புதுப் புது முழக்கங்கள் பிறக்கும் போது பழைய முழக்கங்கள் சத்த மில்லாமல் மூச்சை விட்டு விடுகின்றன.

இல்லை பெருக்கல் விளைவு

பெருக்கல் விளைவு (Multiplier effect) என்பது பொருளாதாரத்தில் சாமானிய, நடுத்தர மக்கள் கைகளில் பணம் புழங்குவது ஆகும். இது சந்தையில் கிராக்கி- உற்பத்தி தூண்டுதல்- வேலை வாய்ப்பு- கூலி- கிராக்கி என்கிற பெருக்கல் விளைவை உருவாக்கும். இதற்கு பட்ஜெட் என்ன செய்துள்ளது? கடந்த காலங்களில் வட்டி விகித குறைப்புகள், கடன் அடிப்படையிலான சந்தை விரிவாக்கம் போன்றவை செய்யப்பட்டு சந்தையில் தற்காலிக உந்துதல்கள் தரப்பட்டன. ஆனால் தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியின் உக்கிரம் அது போன்ற தீர்வுகளின் வரையறைகளை கடந்ததாக உள்ளது. பெருக்கல் விளைவுகளை (Multiplier effect) உருவாக்கி கிராக்கியை தூண்டக் கூடிய துறைகளான விவசாயம், கிராமப்புற மேம்பாடு, பெண்கள் நலன், குழந்தை கள் மேம்பாடு போன்றவற்றிற்கான பட்ஜெட் ஒதுக்கீடு கள் போதுமானதல்ல. மகாத்மா காந்தி கிராம வேலை உறுதிச் சட்டத்திற்கு ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டிருப்பது அரசின் எதிர் மறை அணுகுமுறைக்கு சான்றாகும். 2019-20 ல் திருத்திய மதிப்பீடு ரூ.71,000 கோடிகளாக இருந்தாலும் 2020-21 க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ரூ.61,500 கோடிகள் மட்டுமே. இத்திட்டத்திற்காக மாநிலங்களுக்கு தர வேண்டிய மத்திய அரசின் பங்கும் உரிய நேரத்திற்கு செல்வதில்லை. கேரளா கேட்ட தொகையில் 39 சதவீதமே அளிக்கப் பட்டுள்ளது. கர்நாடகாவுக்கு 37 சதவீதம், ஆந்திரப் பிரதே சத்திற்கு 41 சதவீதம், ராஜஸ்தானுக்கு 44 சதவீதம் என்ற நிலைதான் உள்ளது. இத்திட்டத்தை மத்திய அரசு நடத்துகிற விதம் படிப்படியாக இத் திட்டத்தை கைவிடும் அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

மாற்றமும் ஏமாற்றமும்

இந்த பட்ஜெட்டில் இரண்டு வகையான வருமான வரி கணக்கீட்டு முறைகள் அறிமுகம் செய்யப் பட்டு, தாமே ஒன்றை தேர்வு செய்துகொள்ளலாம் என வாய்ப்பு தரப்பட்டுள்ளது. முதலாவது, ஏற்கெனவே உள்ள வருமான வரி கழிவு களை உள்ளடக்கியது. இரண்டாவது அத்தகைய கழிவுகள் ஏதுமில்லாத வரி விகித குறைப்பு முறைமை. இதில் பலருக்கு இரண்டாம் முறைக்கு மாறினால் ஏற்கெனவே கட்டுகிற வரிகளை விட அதிகம் கட்ட வேண்டி வரும். இது போன்ற வருமான வரி சலுகைகள் அதிகமாக மூத்த குடி மக்களுக்கு இருக்கும். அவர்களுக்கு புதிய முறைமை எந்த பலனையும் தராது. இந்த இரண்டாம் முறைமை இந்த பட்ஜெட்டில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விட இது எதிர்காலத்தில் சலுகைகளே இல்லாத சூழலை நோக்கி நகரப் போகிறது என்பதையும், இல்லங்க ளின் சேமிப்பு என்கிற வருவாய் ஊற்றையே சந்தைக்காக காவு கொடுக்கப் போகிறது என்பதுமே அது உணர்த்தும் அபாயமாகும். 

என்.ஆர்.ஐ தொழிலாளர் மீதான வரி முன் மொழிவு கள், வரையறைகளில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் சவூதி போன்ற நாடுகளுக்கு பிழைப்பிற்காக சென்றுள்ள சாதாரண, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். எனவேதான் இத்தகைய தொழிலாளர்கள் அதிகம் கொண்டிருக்கும் கேரள மாநிலத்தின் இடது முன்னணி அரசு உடனே எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எல்லாம் இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு சிறப்பு வருமான வரி கழிவுக்கான பிரிவை உருவாக்க வேண்டுமென்று கோரி வந்த நிலையில் இருப்பதையே கேள்விக்கு ஆளாக்குகிற இந்த முன் மொழிவு எதிர்காலத்தில் பெரும் பாதிப்புகளை பொருளா தாரத்தில் ஏற்படுத்தும்.

Sunday, February 16, 2020

ஹம் தேகேங்கே . . .
விசாகப்பட்டிணம் அகில இந்திய மாநாட்டின் ஒரு சிறப்பம்சம் சேர்ந்திசைக்குழு. ஒவ்வொரு நாளும் பல்வேறு மொழிகளில் சிறப்பாக பாடி பாராட்டுக்களை பெற்றார்கள். “தோழர்களே, தோழர்களே, தூக்கம் நமக்கில்லை வாருங்கள்” என்ற தமிழ்ப்பாடலும் அவர்களின் பட்டியலில் உண்டு.


மாநாட்டின் இறுதி நாள் காலையில் அகில இந்திய தலைவர் தோழர் அமானுல்லாகான், சேர்ந்திசை துவங்கும் முன்பாக அவர்கள் பாடப்போகும் ஒரு பாடலைப் பற்றி அறிமுகம் செய்தார்.

“ஃபைஸ் அகமது ஃபைஸ் இந்திய துணைக்கண்டத்தின் மகா கவிகளில் ஒருவர். விடுதலைக்குப் பின்பு பாகிஸ்தானில் வசித்த அவர் ஜியாவுல் ஹக்கின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக ஹம் தேகேங்கே என்ற பாடலை எழுதுகிறார். அந்த பாடல் உலகெங்கும் “எதிர்ப்பு கீதம்” ஆக மதிக்கப்படுகிறது.

இக்பால் பானு என்ற பாடகர் அப்பாடலுக்கு இசை வடிவம் அளித்து ஒரு நிகழ்ச்சியில் பாடுகிறார். கறுப்பு சேலை அணிந்து அவர் அந்த பாடலை பாடுகிறார். கறுப்பு சேலை அணிந்து கொண்டு பாடுவதிலும் ஒரு எதிர்ப்பு அடங்கியுள்ளது. சேலை இந்துக்களின் உடை என்பதால் அதை பாகிஸ்தான் பெண்கள் அணிந்து கொள்ளக் கூடாது என்று ஜியா உல் ஹக் தடை விதித்திருந்தார்.

ஐந்து நிமிடப் பாடலை இக்பால் பானு நிறைவு செய்ய முப்பது நிமிடங்கள் ஆனது. அந்த அளவிற்கு பார்வையாளர்கள் உற்சாகக் கரவொலி எழுப்பினார்கள்.

அந்த எதிர்ப்பு கீதத்தை குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஐ.ஐ.டி கான்பூர் மாணவர்கள் பாட, அப்பாடல் இந்துக்களுக்கு எதிரானது என்று திசை திருப்பும் முயற்சி நடக்க ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாடல் ஜியா உல் ஹக்கின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரானது. அதிலே அவர் அல்லாவை ஒரு உருவகமாக பயன்படுத்தியிருப்பார். அதை வைத்துக் கொண்டு இப்பாடலை இந்துக்களுக்கு எதிரானது என்று சொல்வது கொஞ்சமும் சரியல்ல.

நம் சேர்ந்திசைக்குழுவை இப்பாடலைப் பாடச் சொல்லலாமே என்று ஒரு ஆலோசனை வந்தது. அவர்கள் இப்பாடலை பயிற்சி செய்யவில்லை. ஆனாலும் ஒரு நாள் அவகாசத்தில் தயாராகி உள்ளார்கள் 

என்று அறிமுகம் செய்து வைக்க அற்புதமாக பாடினார்கள். துரதிர்ஷ்டவசமாக அந்த காணொளிதான் கிடைக்கவில்லை. 

இருப்பினும்

மாநாட்டு அறிக்கையில் அப்பாடலின் ஆங்கில வடிவம் அளிக்கப் பட்டிருந்தது. அதனை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். அவ்வளவு திருப்திகரமான மொழி பெயர்ப்பாக அமையவில்லை என்று நானே சுய விமர்சனம் செய்து கொள்கிறேன்.

ஆட்சியாளர்களுக்கு(அது யாராக இருந்தாலும்) எதிரான பாடல்தான் இது என்பதையும் நிச்சயமாக இந்துக்களுக்கு எதிரானது அல்ல என்பதையும் நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்
ஆண்டவனால் நிச்சயிக்கப் பட்ட நாளில்
மலையளவு குவிந்துள்ள கொடுங்கோன்மை
பஞ்சாய் பறக்கப் போவதை
நாங்களும் கூட
பார்க்கத்தான் போகிறோம் என்பது நிச்சயம்.

எங்களின் பாதங்களின் கீழே
ஒடுக்கப்பட்ட எங்களின் பாதங்களின் கீழே
பூமி துடிப்பாய் சுற்றும் வேளையில்
எங்கள் ஆட்சியாளர்களின் தலை மேல்
இடியும் மின்னலும்  இறங்குவதை
நாங்கள் பாஎக்கதான் போகிறோம்.

ஆண்டவனின் உறைவிடத்திலிருந்து
பொய்மையின் அடையாளங்கள் அகற்றப்படுவதை,
புனிதமான இடங்களுக்குள் அனுமதி
மறுக்கப்பட்டு  புறக்கணிக்கப்படும்
உண்மையான விசுவாசிகள் நாங்கள்
உயர் பீடங்களில் அமர்த்தப்படுவதையும்
நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.

மகுடங்கள் நிலை குலையும்
அரியணைகள் தகர்ந்து வீழும்
கண்களுக்குப் புலப்படாது ஆணால் எங்கும் இருக்கிற
ஆண்டவன் பெயர் மட்டுமே நிலைக்கும்.

உண்மையின் குரல் மேலெழும்,
ஆண்டவனின் படைப்பே  ஆட்சி செய்யும்
என்பதை நீயும் பார்க்கப் போகிறாய்,
நாங்களும் பார்க்கப் போகிறோம்.

நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்,
நிச்சயமாய் நாங்களும் கூட
பார்க்கத்தான் போகிறோம்.

பிகு : இக்பால் பானு பாடிய பாடல் கிடைக்குமா என்று யுட்யூபில் தேடிய போது இப்பாடலை ஷாகீன் பாக் போராட்ட களத்தில் டி.எம்.கிருஷ்ணா பாடிய பாடல் கிடைத்தது.இதெல்லாம் நாம கேட்டா?புல்வாமா தாக்குதல் முடிந்து ஒரு வருடமாகி விட்டது. ஆனால் இன்று வரை தேசிய புலனாய்வு முகமை (NIA) யால் அறிக்கை சமர்ப்பிக்க முடியவில்லை.

இது தொடர்பாக இந்து நாளிதழிற்கு பெயர் சொல்ல விரும்பாத என்.ஐ.ஏ அதிகாரி சொன்ன தகவல்கள் சில நாட்கள் முன்பாக வந்திருந்தது. விசாரணையை முடிக்க முடியாததன் காரணங்களாக அவர் சொன்னவை.

குண்டு வெடிப்புக்கு பயன்படுத்திய வெடி மருந்து கடைகளில் கிடைப்பது அல்ல. ராணுவத்தில் பயன்படுத்தப்படுவது. அவை அந்த தீவிரவாதிக்கு எப்படி கிடைத்தது?

பாதுகாப்பு வளையங்களை மீறி தீவிரவாதியின் வேன் எப்படி நெடுஞ்சாலைக்குச் சென்றது?

எச்சரிக்கைகளை மீறி வீரர்களின் பயணத்திற்கு அனுமதித்தது யார்?

இச்சம்பவத்தில் தொடர்புள்ளவர்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எண்கவுண்டரில் கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே முக்கியமான கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் அறிக்கையோ குற்றப் பத்திரிக்கையோ தாக்குதல் செய்ய முடியவில்லை.

இதுதான் அந்த அதிகாரி சொன்னது.

இதே கேள்விகளை நாம் கேட்டால் நம்மை தேசத்துரோகி என்பார்கள்.

புல்வாமா தாக்குதலின் உண்மை மோடி ஆட்சியில் இருக்கும் வரை நிச்சயம் வெளி வரப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் அது இந்த ஆட்சி அகன்றால்தான் கிடைக்கும்.
தரையில் நீர்மூழ்கிக் கப்பல்இந்திய கப்பற்படையில் செயல்பட்ட குர்சுரா என்ற நீர்மூழ்கிக் கப்பலை விசாகப்பட்டிணம் கடற்கரைக்குக் கொண்டு வந்து அதை ஒரு அருங்காட்சியமாக மாற்றி வைத்துள்ளார்கள்.

மிகவும் நீளமான குறுகிய அகலமும் கொண்ட அந்த நீர்மூழ்கிக் கப்பலுக்குள் சென்றது நல்ல அனுபவமாக இருந்தது.

எங்களின் மேற்கு மண்டலத் தலைவராக இருந்த தோழர் வி.எஸ்.நால்வாடே,  எல்.ஐ.சி க்கு வரும் முன்பு கப்பற்படையில் பணியாற்றியவர். ஒரு நீர்மூழ்கிக் கப்பலிலும் பணியாற்றியவர். 

நாங்கள் சென்ற நேரம் அவரும் வந்ததால் அந்த நீர்மூழ்கிக் கப்பலின் பல அம்சங்களை விளக்கினார்.

கப்பலின் கேப்டன் அறையே மிகவும் சிறியது. மாலுமிகள், வீரர்கள் எல்லாம் ட்ரெயின் பெர்த் போன்ற இடத்தில்தான் படுத்துக் கொள்ள வேண்டும். கதவுகள் எல்லாம் அவ்வளவு வலிமை. கடல் நீர் உள்ளே புகக் கூடாதல்லவா!

எண்ணற்ற சிரமங்களுடன்தான் பாதுகாப்புப் படையினர் பணி செய்கின்றனர் என்பதை நீர்மூழ்கிக் கப்பல் உள்ளே சென்று வந்தது உணர்த்தியது.

அவர்களின் தியாகத்தை இன்றைய ஆட்சியாளர்கள் மதிக்கிறார்களா? 

நாளை பார்ப்போம்

பிகு :

முதல் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலின் பின்னணியில் எடுக்கப்பட்ட படம்.

மற்றவை நீர்மூழ்கிக் கப்பலுக்கு வெளியே எடுக்கப்பட்ட படங்கள்கோபி பெப்பர் ப்ரெட்

நீண்ட இடைவெளிக்குப் பின்பு புதிய சமையல் முயற்சிகாலி ஃப்ளவரை சுடு நீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் கொண்டேன். ப்ரெட்டை டோஸ்ட் செய்து சிறிய துண்டுகளாக்கிக் கொண்டேன். வெங்காயத்தை வதக்கி பின்பு காலி ஃப்ளவரையும் சேர்த்து வதக்கி அத்துடன் ப்ரெட் துண்டங்களையும் போட்டு மிளகுப் பொடியையும் உப்பையும் சேர்த்து கிளறி கொத்தமல்லி தூவினால்

கோபி பெப்பர் ப்ரெட் தயார் . . .

Saturday, February 15, 2020

பாட்சா எங்கய்யா போயிட்டாரு?


டெல்லி காவல்துறையின் அராஜகத்திற்கு நாங்கள் கொஞ்சமும் குறைந்தவர்கள் என்பதை தமிழக ஏவல்துறையினர் நிரூபித்து வருகின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் தடியடி நடத்தி ஒரு முதியவரை கொலை செய்து விட்டார்கள். தமிழகம் எங்கும் போராட்டம் தீவிரமாக காரணமாகியுள்ளது காவல்துறையின் அடக்குமுறை.

இப்படியெல்லாம் செய்து மோடியின் விசுவாசிகள் தாங்கள்தான் என்று காண்பித்துக் கொள்ள முயற்சிக்கிறது எடுபிடி அரசு.

ஏவல்துறையின் அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்த காவல்துறை அதிகாரியை தாக்கியதால் தடியடி என்று வதந்தி பரப்பினார் எச்.ராசா. ராசாவை மிஞ்ச வேண்டும் என்பதற்காக சென்னை ஆணையரே தாக்கப் பட்டார் என்று அடுத்த கட்டத்திற்கு போனார் திருப்பதி நாராயணன். வாங்கிக் கொண்டிருக்கும் எலும்புத்துண்டுகளுக்கு விசுவாசமாக ஆமாம் போட்டார் மூமூமூமூமூமூமூத்த பத்திரிக்கையாளர் மாலன்.

இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றால் அங்கே நான் இருப்பேன் என்று சில நாட்களுக்கு முன்பாக வஜனம் பேசினார் பாட்சா அலையஸ் மாணிக்கம் அலையஸ் ரஜினிகாந்த்.

இதோ ஒரு இஸ்லாமிய முதியவர் காவல்துறை தடியடியில் இறந்தே போய் விட்டார்.

அன்வர் பாட்சா கொல்லப்பட்டதற்காக மாணிக் பாட்சாவாக மாறியவர்தான் எங்கே என்று தெரியவில்லை.

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் என்ன வஜனம் பேசிக்கொண்டு இருக்கிறாரோ?

ஆபிசரை மட்டும் திட்டாதீங்க, யுவர் ஆனர்உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் வெடித்துள்ளார்கள்.

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு கட்ட வேண்டிய பாக்கித் தொகையான 1,45,000 கோடியை கண்டிப்பாக கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டும் ஒரு பைசா கூட கட்டாமல் ஏமாற்றுகிறார்கள் என்ற கோபம் வெளிப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு பணத்தைக் கட்டச் சொல்லி அழுத்தம் தரக் கூடாது என்று கடிதம் எழுதிய தொலை தொடர்பு அதிகாரியை காய்ச்சி எடுத்துள்ளார்கள்.

உச்ச நீதிமன்றத்தை விட அவர் பெரியாளா?
இப்படியெல்லாம் இருந்தால் நீதிமன்றத்தையே இழுத்து மூட வேண்டி இருக்கும்.
இந்தியாவை விட்டு வெளியேறி விடுவோம்.
அரை மணி நேரத்திற்குள் அந்த அதிகாரி அந்த கடிதத்தை வாபஸ் வாங்காவிட்டால் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும்.

என்ற நீதிபதியின் கோபம் மிகவும் நியாயமானது.

ஆனால் உங்கள் கோபத்தை அதிகாரியோடு மட்டும் ஏன் நிறுத்திக் கொண்டு விட்டீர்கள் யுவர் ஆனர்?

உங்கள் உத்தரவை அமலாக்க வேண்டாம் என்று கடிதம் எழுதும் துணிவு ஒரு அதிகாரிக்கு எப்படி வரும் என்று சிந்தித்திருக்க வேண்டாமா?

ஆள்பவர்கள் கட்டளையிடாமலோ அல்லது பெரு முதலாளிகள் நிர்ப்பந்தம் அளிக்காமலோ கடிதம் எழுத தைரியம் வந்திருக்குமா என்று ஏன் நீங்கள் யோசிக்கவில்லை?

அம்பின் மீது காண்பித்த ஆத்திரத்தை எய்தவர் மீது வெளிப்படுத்தி இருந்தால்தானே சட்டமும் தர்மமும் நிலைத்திருக்கும்!

Friday, February 14, 2020

ட்ரம்பை வேலூருக்கு வரச்சொல்லுங்க . ..
ட்ரம்பின் அகமதாபாத் வருகையை ஒட்டி தடுப்புச்சுவர் மட்டும் கட்டவில்லையாம்.

அந்த நகரில் உள்ள தெரு நாய்கள், சாலையில் திரியும் கால்நடைகள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்தி உள்ளார்களாம்.

இந்த செய்தியைப் படித்ததும் தோன்றியதுதான் பதிவின் தலைப்பு.

டொனால்ட் ட்ரம்ப் வந்தாலாவது வேலூரின் தெரு நாய் பிரச்சினைக்கு தீர்வு வராதா என்ற ஆதங்கம்தான் . . .

மோடிக்கு மானம் போகுமென்ற பயம் . . .


பாவம் டொனால்ட் ட்ரம்ப் . . .

அகமதாபாத்திற்கு அவர் வருவதை ஒட்டி அங்கே உள்ள சேரிகள் அவர் கண்களில் படக்கூடாது என்பதற்காக தடுப்புச்சுவர் கட்டியுள்ளார்கள்.

ட்ரம்ப் என்ன பெரிய அப்பாடக்கரா?
அமெரிக்காவில் சேரிகள் கிடையாதா? ஏழைகள் கிடையாதா?
சேரிகளைப் பார்த்தால் ட்ரம்பின் கண்கள் அவிந்து போய் விடுமா?

என்று பல கேள்விகளை ட்ரம்பை முன் வைத்து பலர் எழுப்பியதைப் பார்த்தேன்.

இக்கேள்விகள் எல்லாம் அவசியமற்றது. ட்ரம்பை முன்னுறுத்துவதும் கூட.

தன் சொந்த மாநிலம் பற்றி ட்ரம்பிடம் மோடி என்னவெல்லாம் கதை விட்டுள்ளாரோ? அந்த கட்டுக்கதைகள் எல்லாம் அம்பலமாகி விடும் என்ற அச்சமா? மானம் போய் விடும் என்ற பயம்தான் தடுப்புச்சுவராக மாறியுள்ளது. 

இப்படி சுவர் கட்டுகிற காசிற்கு தூய்மைப் பணியாவது செய்திருக்கலாம்?
திருமங்கை ஆழ்வாருக்கே இக்கதியா?நேற்றைய  நாளிதழில் பார்த்த ஒரு செய்தி.

கும்பகோணம் பக்கத்தில் ஒரு கோயிலில் இருந்து அறுபதுகளில் திருடப் பட்ட திருமங்கை ஆழ்வாரின் சிலை லண்டன் மியூசியத்தில் உள்ளதாம்.

அதை மீட்க முயற்சிக்கிறார்களாம் . . .

மன்னனாக இருந்து கொள்ளையனாக மாறி திருமாலுக்கு கோயில் கட்டியவர் திருமங்கை ஆழ்வார் என்று சொல்கிறார்கள். 

சிவாஜி நடித்த திருமால் பெருமை திரைப்படமும் அப்படித்தான் சித்தரிக்கும்.

அவருடைய சிலையையே களவாடி விட்டார்கள் என்பது முரண் நகை அல்லவா!

Wednesday, February 12, 2020

சென்னை செல்லும் வழியில் . . .

நேற்று காலை சென்னை சென்றிருந்தேன்.

அப்போது எடுத்த புகைப்படங்கள். 

நிமிடங்களுக்குள் ஏற்பட்ட மாற்றம்வேற வேலை இருந்தா பாருங்கடா . . .
சங்கிகளின் பொய்த் தொழிற்சாலை உருவாக்கிய ஒரு கட்டுக்கதைக்கு ஒற்றை வாக்கியத்தில் நச்சென்று பதில் சொல்லியுள்ளார் விஜய் சேதுபதி.

அவரின் ட்விட்டர் பதிவு கீழே
Tuesday, February 11, 2020

துடைப்ப அடி செம ஜோர் . . .ஆணவத்தில் அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் மோடி வகையறாக்களுக்கு டெல்லி மாநில மக்கள் துடைப்பத்தாலேயே சரியான அடி கொடுத்துள்ளார்கள்.

மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஏழு இடங்களைப் பெற்றது பாஜக.
இப்போதும் ஏழு இடங்களைத்தான் பெற்றது.

அது ஏழிற்கு ஏழு
இப்போது எழுபதிற்கு ஏழு

கொடுங்கோல் ஆட்சிக்கு தக்க பாடம் புகட்டியுள்ள டெல்லி மாநில மக்களுக்கும் வெற்றி பெற்ற அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் வாழ்த்துக்கள்

Monday, February 10, 2020

முடிவு மாறினால் ஆம் ஆத்மி சின்னம்தான் . .

டெல்லி சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை துவங்க உள்ளது. 

மோடி ஆதரவு ஊடகங்கள் கூட  ஆம் ஆத்மி கட்சிதான் வெற்றி பெறப் போகிறது என்று சொல்லி விட்டன.

ஆனாலும் உள்ளுக்குள் மோடியின் கூட்டணிக் கட்சி என்ன செய்யுமோ என்று ஒரு சின்ன அச்சம் இருக்கத்தான் செய்கிறது.

ஆமாம், பாஜகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேர்தல் ஆணையத்தைத்தான் சொல்கிறேன்.

வாக்குப் பதிவு முடிந்து இருபத்தி நான்கு மணி நேரத்திற்குப் பிறகுதான் அந்த விபரங்களை அறிவிக்கிறார்கள்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளை திறக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள்.

பில்லா ரங்கா கிரிமினல் கூட்டணியின் இளையவர் எப்படியும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்.

ஆக தேர்தல் ஆணையம் ஏதேனும் தில்லுமுல்லு செய்து தங்கள் கூட்டாளி பாஜகவை வெற்றி பெற வைத்தால் தேர்தல் ஆணையத்தை ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னத்தின் மூலம்தான் கவனிக்க வேண்டும்.

ஆமாம்

ஆம் ஆத்மி கட்சியின் சின்னம் என்னவென்று தெரியுமல்லவா?

தெரியாதவர்களுக்காக கீழே 


எது உண்மை எடப்பாடி?

எட்டாம் தேதி ஒரு செய்தி

ஒன்பதாம் தேதி இன்னொரு செய்திஒன்றுக்கொன்று முரணான இவ்விரு செய்திகளில் எது உண்மை எடப்பாடி? 

போஸ் கூட காப்பியா மோடி?எல்லாத்துலயும் ஹிட்லரைத்தான் காப்பியடிக்கிறீங்க. அதுக்காக போட்டோவுக்கு போஸ் கூட சுயமா கொடுக்க மாட்டீங்களா?

இதுல உங்கள அவமதிச்சா தேசத்துக்கு அவமானம்னு வசனம் வேற!

Sunday, February 9, 2020

இதுவே ட்ராகுலா என்றால் . . .கவிஞர் கலாப்பிரியா, சாரு நிவேதிதா, வண்ணதாசன் என்று ஒரு முக நூலில் ஒரு கலவரம் நடப்பதாக அறிந்து அந்த பக்கங்களுக்கெல்லாம் சென்று வந்தேன்.

திரு வண்ணதாசனை ட்ராகுலா என்று சாரு நிவேதிதா வர்ணித்துள்ளது கீழே உள்ளது. சாரு அடிப்பொடிகள் இப்பிரச்சினையை சாதிக் கலவரமாக மாற்ற முடியுமா என்று முயல்கிறார்கள் என்பது இன்னொரு விஷயம். 

வண்ணதாசனை அன்பின் மொத்த உருவம் என்பார்கள். இங்கே முகநூலில் பின்னூட்டம் என்ற பெயரில் ட்ராகுலாவாக மாறியிருக்கிறார் பாருங்கள். அது ஏன் ஐயா, அன்பின் மொத்த வடிவம் கூட சாரு நிவேதிதா என்றால் ட்ராகுலாவாக மாறி விடுகிறீர்கள்? விரைவில் வண்ணதாசனின் பின்னூட்டங்களை இங்கே பதிவு செய்கிறேன். 

இப்படி எழுதிய சாரு நிவேதிதா அந்த பின்னூட்டங்களை இதுவரை பிரசுரிக்காததால் நான் தேடிப் பார்த்து படித்தேன்.

' எல்லோருடனும் நல்ல உறவைப் பேண நினைக்கிற' என்கிற, ' என்னத்துக்கு வம்பு' என்று ஒதுங்கிப் போகிற நம்முடைய இயல்பைத் தான், அவர்கள் முதலில் தாக்குவதற்கான பலவீனமான இலக்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.- கலாப்ரியாவை நாற்பது வருடத்திற்கு முந்திய ஹீரோவாகக் காட்டிவிட்டு, அவர் ஒரு நாவல் எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். மிகுந்த சிரமப்பட்டு அதன் பெயர் வேனல் என்று அறிந்து, மிகுந்த சிரமப்பட்டு அதை வெளியிட்டது சந்தியா பதிப்பகம் என்றும் தெரிந்து கொண்டேன்." என்று எழுதுகிறார். -

அடுத்த அவருடைய நான் லீனியர் அக்கறை இப்படி இருக்கிறது - "அந்த நாவல் வெளிவந்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. யாரும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அப்படி ஒரு நாவல் வெளிவந்ததே யாருக்கும் தெரியாது. புத்தக பைண்டிங்கும் ஏதோ பன்னண்டாம் வகுப்பு கணித நூல் மாதிரி இருக்கிறது''. இவ்வளவு தேடிக் கண்டுபிடித்த , வேறு யாரும் ஒருவார்த்தை சொல்லாத ' வேனல்' பற்றி அவர் நான்கு வார்த்தைகள், குறைந்த பட்சம் எஸ்.செந்தில் குமாரின் க' கழுதைப்பாதை'க்குச் சொன்னது போலவேனும் எழுதியிருக்கலாம் தானே.


பன்னிரண்டாம் வகுப்புக் கணக்கும், அதைச் சரியாகக் கற்றுக்கொடுக்கிற கணித ஆசிரியரும் தான் முக்கியமே தவிர, புத்தகம் அல்ல. பத்தொன்பது வருடங்களுக்கு மேலாக, அவர் கேலிசெய்கிற, பன்னிரண்டாம் வகுப்புக் கணக்குப் புத்தகம் போல இருக்கும் என்னுடைய தொகுப்புகளை, நடந்துகொண்டு இருக்கும் நெல்லை புத்தகக் கண்காட்சி வரை வாங்கி வாசிக்க, கையில் இருநூறும் முன்னூறும் மட்டுமே வைத்திருக்கிற, யாராவது ஒரு பையன் வந்துகொண்டுதான் இருக்கிறான். - சரி.2000 ரூபாய் விலைதான் அவருடைய தர நிர்ணய அளவை எனில், சந்தியா பதிப்பகம்   2000 ரூபாய் விலையில் வெளியிட்டிருக்கும் சில புத்தகங்களின் - உதாரணமாக ஏ.கே.செட்டியார்- தரம் குறித்தோ அல்லது உள்ளடக்கம் பற்றியோ , இந்த ஃபிலிஸ்டைன் சமூகம் பற்றி வருத்தப்படும் அவர் ஏதாவது பதிவு செய்ததுண்டா? -

இந்த கருத்துக்களே ஒருவரை ட்ராகுலா என்று கொடூரமாக வர்ணிக்க வைத்துள்ளது என்றால் புளிச்ச மாவு ஜெயமோகன் போன்றவர்களை நாம் என்னவென்று வர்ணிப்பது? 

அதற்கான வார்த்தைகளையும் சாரு நிவேதிதாதான் சொல்ல வேண்டும். 

ஒவ்வொரு நாளும் அழகாய் . . .அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க விசாகப்பட்டிணம் சென்ற போது கடற்கரைக்கு  எதிரில் உள்ள விடுதியில் எங்களுக்கு அறைகள் ஒதுக்கப் பட்டிருந்தது.

எனவே நான்கு நாட்களும் கடலில் இருந்து சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடிந்தது ஒரு நல்ல வாய்ப்பு. ஒவ்வொரு நாளும் அழகாய் துவங்கியது. 

அந்த அழகிய காட்சிகள்  உங்களுக்கும் . . .

27.01.2020


28.01.202029.01.2020

30.01.2020