Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Tuesday, October 22, 2024

மோடி தமிழுக்கு பாதுகாப்பா? முருகா!!

 


தமிழுக்கு போதுமான நிதி ஒதுக்குவது கிடையாது தமிழ்நாட்டைச் சேர்ந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு கிடையாது. தமிழ்த்தாய் வாழ்த்துக்களின் வரிகளை வெட்டுபவரின் ஆளுனர் பதவி பாதுகாப்பாகவே இருக்கிறது. இதையெல்லாம் விட பெரிய கொடுமை ஒன்று உண்டு.

 ஆமாம்.

 


ஒவ்வொரு முறை தமிழ்நாட்டிற்கு வரும் போதும் தப்பு தப்பா திருக்குறலைச் சொல்லி  அதை கொலை செய்வது.

 பெட்ரோல் விலை உயர்வு பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாம்ல் ;”ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” என்று சத்தம் போட்டுக் கொண்டே தப்பித்துக்    சென்றதைக் கூட    மன்னித்து விடலாம் எல்.முருகன், தமிழுக்கு மோடிதான் பாதுகாப்பு என்று சொலவதை விட்டு மன்னிக்கவே முடியாது எல்.முருகன்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

Wednesday, August 14, 2024

வெயிகல்கவர்?????

 


நாளிதழுடன் வந்த விளம்பர நோட்டீஸில் அச்சிடப்பட்டிருந்த "வெயிகல்கவர்" என்ற வார்த்தையை மட்டும் முதலில் படித்து விட்டு ஒரு கணம் குழம்பிப் போனேன்.

படத்தைப் பார்த்ததும்தான் புரிந்தது. அது "VEHICLE  COVER"

அய்யா விளம்பரதாரர்களே, அச்சகத்தாரே, தமிழை கொஞ்சம் விட்டு விடுங்களேன். தமிழ் வாழ வேண்டும். 

Monday, December 12, 2022

காசி தமிழன்னையும் கருப்புதான்

 


 கீழே உள்ள படங்கள் காசி தமிழ்ச் சங்கமத்திற்கு சென்ற ஒருவர் முக நூலில் பகிர்ந்து கொண்ட, அங்கே நிறுவப்பட்டுள்ள தமிழன்னையின் சிலையின் படங்கள்.

 



ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட தமிழணங்கு படத்தில் தமிழ்த்தாயை கருப்பாக வரைந்து அவமானப் படுத்தி விட்டார்கள் என்று ஆட்டுக்காரன், எச்.ராசா வகையறாக்கள் குதித்தார்கள்.

 இதோ, இப்போது மோடியும் மொட்டைச்சாமியாரும் அமைத்துள்ள சிலையிலும் தமிழன்னை கருப்பாகத்தான் இருக்கிறார்.

 தமிழன்னையை அவமானப்படுத்தி விட்டார்கள் என்று தமிழ்நாட்டு சங்கிகள் இப்போது மோடிக்கும் மொட்டைச் சாமியாருக்கும் எதிராகவும் பொங்குவார்களா? 


அவர்களுக்கு பிரச்சினை தமிழணங்கு கருப்பாக இருந்ததில்லை. அதனை வெளியிட்டது ரஹ்மான் என்பதுதான்.                                                                                                                                                           

Saturday, April 16, 2022

தமிழணங்கில் என்ன பிரச்சினை?

 



ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கு ஓவியத்தை சங்கிகள் விமர்சனம் செய்து கொண்டுள்ளார்கள்.

இவர்களின் பிரச்சினை என்ன?

 தமிழணங்கு கருப்பாக தலை விரி கோலமாக இருப்பதா? ஓவியர் தன் கற்பனையை படமாக வரைகிறார். ஆற்றலின் வடிவமாக தமிழணங்கு இருப்பதாக நான் பார்க்கிறேன். யாரும் பார்த்திராத தமிழ்த்தாயின் உருவம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உத்தரவு போடும் அதிகாரம் யாருக்கு உண்டு?

 இவர்கள் பிரச்சினை வேறு.

 அதனை முதன்முதலில் பகிர்ந்து கொண்டது ஏ.ஆர்.ரஹ்மான் என்பதுதான் பிரச்சினை.

 இந்திதான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் இளைய கூட்டாளி சொன்னதன் எதிர்வினையாக கருதுவதால் வரும் பிரச்சினை.

 அவர்கள் விமர்சனத்தை புறந்தள்ளி ‘தமிழணங்கை” இந்த வடிவத்திலும் கொண்டாடுவோம்.

Monday, February 21, 2022

பாவம்யா திருவள்ளுவர்!

 


உலகத் தாய்மொழி நாளில் இப்படி ஒரு பதிவு எழுதுவது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனாலும் வேறு வழி இல்லை. தாய்மொழி தமிழை கொண்டாடுவது என்பதில் அதனை பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் அடக்கம்தானே!

 

சங்கிகள் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அசிங்கப்படுத்தினால் இன்னொரு கூட்டம் அவரை பெருமைப் படுத்துவதாக நினைத்து ஏராளமான எழுத்துப் பிழைகளோடு ஒரு டி.ஷர்ட் தயாரித்து விற்றுள்ளனர்.

 


பாவம்யா திருவள்ளுவர்! அவரை விட்டு விடுங்களேன். . .

 

Friday, January 28, 2022

தமிழ்த்தாய் வாழ்த்து – மாலனுக்கும் கொழுப்பு

 


 

விஜயேந்திர சரஸ்வதி தமிழ்த்தாய் வாழ்த்திற்கு நிற்காதது தவறில்லை என்று நீதிமன்றம் சொன்னதற்குப் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்தை மாநிலத்தின் கீதம் என்றும் அது ஒலிக்கப்படும் போது எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழ்நாட்டு அரசு அரசாணை பிறப்பித்தது.

 அந்த அரசாணையை எச்.ராசாவின் ஹைகோர்ட்டாக மதித்து தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க வேண்டியதில்லை என்று சென்னையில் இயங்கும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் நடந்து கொண்டதற்கு கொழுப்பு, கொழுப்பைத் தவிர வேறு காரணமில்லை.

 அந்த திமிர் பிடித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

 மாறுதல் வாங்கிக் கொண்டு வேறு மாநிலம் எதற்காவது ஓடட்டும்..

 கொழுப்பு அவர்களுக்கு மட்டும் கிடையாது.

 மூமூமூமூத்த்த்த்த்த்த்த பத்திரிக்கையாளர் மாலனுக்கு அவர்களை விட கொழுப்பு இன்னும் பல மடங்கு அதிகம்.

 ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலைக் கண்டித்த ஒருவருக்கு மாலன் போட்ட பின்னூட்டத்தைப் பாருங்கள்.

 


அவமரியாதை செய்தவர்களுக்குக் கூட தோன்றாத கருத்துக்களை இவர் எடுத்துக் கொடுக்கிறார்.

 ஆனால் அனைத்தையும் விட மோசம். அதற்கு ஒரு மதச்சாயம் பூசி திசை திருப்புகிறாரே, அதுதான். அவரது சங்கித்தனம் அங்கேதான் பல்லிளிக்கிறது.

 அதனால்தான் மாலன் ஒரு விஷ ஜந்து என்று நான் தொடர்ந்து சொல்கிறேன்.

 துடைப்பத்தால் அடித்து சுத்தம் செய்ய வேண்டிய விஷ ஜந்து.

Saturday, August 14, 2021

இவர்களை எப்படி திட்டலாம்?

 


நேற்று முன் தினம் வரை தமிழில் வழிபாடு என்பதற்காக தமிழையே அசிங்கப்படுத்திக் கொண்டிருந்த சங்கி அயோக்கியர்கள், தமிழ்நாட்டின் நிதியமைச்சர் நிதி நிலை அறிக்கையில் தமிழை கொலை செய்ததாக குறை சொல்லி தமிழ்க்காவலர் வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

பெட்ரோல் விலையைக் குறைத்து மோடியின் கொடூர முகத்தை அம்பலப்படுத்திய காரணம் ஒன்று போதுமே, இந்த ஜந்துக்கள் இன்று ஒப்பாரி வைப்பதற்கு!

 பொறுக்கி என்பதைக் கூட பொர்கி என்று சொல்லும் சுனாசாமி ஆதரவாளர்களான, சொட்டு நீர்ப் பாசனம் என்பதற்குப் பதிலாக வேறு தமிழாக்கம் செய்த எச்.ராசாவின் ஜால்ராக்களான, வெட்கம் என்பதே இல்லாத இந்த ஜந்துக்களை,

எப்படி திட்டலாம் என்று சொல்லுங்களேன்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பின் அமலாக்கம் வேறு தொடங்கி விட்டதால் இன்னும் எரிச்சல் அதிகமாகி உளறத் தொடங்கி விட்டனர்.

என்ன இந்த் ஜந்துக்களுக்கெல்லாம் இதய நோயே வராது. 

ஏனென்றால் நான் முன்னரே குறிப்பிட்டது போல

சங்கிகள் எனும் ஜந்துக்களுக்கு இதயமும் மூளையும் கிடையாது.


ஒழுங்காக

Saturday, July 17, 2021

அருமை. ஆனால் அவர்களுக்கு ??????

 


ஒடிஷா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் திரு ஆர்.பாலகிருஷ்ணன், இரண்டே வரிகளில் சொல்லியுள்ள அருமையான கருத்து. அதற்கு தோழர் வெண்புறா சரவணன் அழகான வடிவம் அளித்துள்ளார்

ஆனால் டுமில்நாடு, டுமிலர்கள் என்று பிதற்றும் அற்ப சங்கிகளுக்கு இதுவெல்லாம் புரியாது.

Thursday, June 27, 2019

அம்மா இல்லை, இலையும் இல்லை



ஆமாம்

இனி  

அ  - அம்மா
ஆ - ஆடு
இ -  இலை

என்றெல்லாம் குழந்தைகளுக்கு சொல்லித்தர மாட்டார்களாம்.

அதற்குப் பதிலாக பாஜகவின் செயல்திட்டத்தை அரங்கேற்றி உள்ளார்கள்.

ஒன்றாம் வகுப்புப் புத்தகத்தில் கூட கொலைகாரர்களின் முழக்கம் வந்து விட்டது.

தமிழ்ப் புத்தகத்திற்கு இப்படி ஒரு நிலைமை!

பாரதியின் வெள்ளைத் தலைப்பாகைக்கு காவிச்சாயம் பூசிய கயவர்கள் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்!

பிகு: சர்ச்சைக்குரிய அந்த தமிழ்ப் பாடப் புத்தகத்திற்கு தேவையற்ற விளம்பரம் அவசியமில்லை என்பதால் அப்படத்தை வெளியிடாமல் தவிர்த்துள்ளேன்.




Thursday, February 21, 2019

தாய்மொழி தினம் – வாழ்த்துக்களைத் தாண்டியும் . . .




யுனெஸ்கோவின் அறிவிப்பின் படி இன்று தாய்மொழி தினம்.

அனைவருக்கும் தாய்மொழி தின வாழ்த்துக்கள்.

என்னைப் போலவே தமிழ்மொழியை தாய்மொழியாய்க் கொண்டவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

வருடத்தில் ஒரு நாள் அனுசரிப்பதோ இல்லை வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதோ மட்டும் போதுமானதில்லை.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணேன்”

என்ற பாரதி பாடலின் பெருமிதத்தோடும் நின்று போய் விட முடியாது.

தமிழை தாய்மொழியாகக் கொண்டாலும் தமிழ் படிக்க, எழுதத் தெரியாததை பெருமையாக பேசுபவர்கள் இருக்கிறார்கள்.

பள்ளி வளாகத்திற்குள் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் பள்ளிகளும் இந்த மாநிலத்தில் இருக்கிறது.

பனிரெண்டாம் வகுப்பு வரை ஒரு மொழிப்பாடமாகக் கூட தமிழை பயிலாமலேயே இருப்பதற்கான வாய்ப்பும் இங்கேதான் இருக்கிறது.

தமிழக அரசின் அலுவல் மொழியாக தமிழ் இருப்பினும் இன்னும் நீதிமன்றத்தில் தமிழ் அதிகாரபூர்வமான அலுவல் மொழியாக மாறவில்லை.

தமிழ்வழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புக்களில் முன்னுரிமை என்பது இன்னும் கோரிக்கையாகவே உள்ளது.

திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதற்குக் கூட ஊக்கத் தொகை அறிவிக்க வேண்டியுள்ளது.

ஆனால் அதே நேரம் சத்தமில்லாமல் ஹிந்தி திணிப்பு என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நெடுஞ்சாலை மைல் கற்களில் கூட தமிழை அகற்றி ஹிந்தியை திணிக்க நடந்த முயற்சிகளை மறந்து விட முடியுமா என்ன?

பல மத்தியரசு நிறுவனங்களில் ஹிந்தியை படிவங்களில், இணைய தளங்களில், மின்னஞ்சல்களில், ஆணைகளில், சுற்றறிக்கைகளில் என்று எத்தனையோ வடிவங்களில் திணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஹிந்தியின் பயன்பாடே இல்லாத இடங்களிலும் கூட இது நடைபெறுகிறது. அதற்காக தாராளமாக நிதியும் ஒதுக்கிறார்கள். திணிப்பு முறையாக நடைபெறுகிறதா என்று கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் கூட இருக்கிறது.

எங்கள் நிறுவனத்தில் இது போன்ற முயற்சிகளை எங்கள் சங்கம் கண்டித்திருக்கிறது. வருகைப்பதிவில் வாரம் ஒரு நாள் ஹிந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று சொல்லப்பட்ட போது அதை எதிர்த்து அந்த உத்தரவை திரும்பப் பெற வைத்தோம். அந்த உத்தரவுக்குப் பிறகு  வருகைப் பதிவேட்டில் நான் தமிழில் கையெழுத்திடத் தொடங்கினேன் என்பது வேறு விஷயம்.  

சமூகப் பொறுப்புணர்வோடு செயல்படுகிற தருணங்களில் ஒரு வணிக நிறுவனத்திற்கு இந்த பொறுப்புணர்வெல்லாம் அவசியமில்லை என்று சொல்பவர்களுக்குக் கூட ஹிந்தித் திணிப்பை தலை மேல் சுமப்பதும் ஒரு வணிக நிறுவனத்திற்கு அவசியமில்லை என்று சொல்லாமல் மௌனம் சாதிப்பதும் ஒரு வினோதம்.

தாய்மொழி தவிர வேற்று மொழிகளை பயில்வதில் தவறில்லை. அது அவரவர்களின் சுய விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் திணிப்பதாக இருக்கக் கூடாது. அப்படி திணிக்கிற வேலையை அரசுகள் ஒரு போதும் செய்யக் கூடாது.

தாய்மொழி தினத்தை கொண்டாடும் வேளையில் தமிழகத்தின் மீது நிகழ்த்தப்படும் ஹிந்தித் திணிப்பையும் எதிர்ப்பதுதான் சரியாக இருக்கும்.


Thursday, August 9, 2018

"இனி தமிழ் வாழுமாம்" - அடப்பாவி !!!

ஒரு சங்கி "இனி தமிழ் நன்றாக வாழும்" என்று முக் நூலில் போட்டிருந்த அநாகரீகப் பதிவை அங்கேயே கண்டித்திருந்தேன். எத்தனை அநாகரீகப் பேர்வழிகள் உள்ளார்கள் என்ற கணக்கெடுப்பையே அங்கே எடுக்க முடிந்தது. படிப்போ, உயர் பதவியோ நாகரீகத்தை தராது என்பதும் புரிந்தது. 

கலைஞர் மீதான வன்மத்திற்கு அந்த கூட்டத்தின் ஜாதி வெறிதான் முக்கியக் காரணம் என்பது நன்றாகவே புரிந்தது. சங்கிகள் எப்போதுமே முட்டாள்கள் என்பதை நிரூபிக்கக் கூடிய விதத்தில்தான் அந்த சங்கி "  இனி  தமிழ் நன்றாக வாழும்' என அபத்தமாக எழுதியிருந்தார். "சமஸ்கிருதம் அல்லது இந்தி" என்று எழுதுவதற்குப் பதிலாக தமிழ் என்று எழுதியதில் முட்டாள்தனம் அம்பலமாகி விட்டது.

அந்த சங்கிக் கூட்டத்திற்கு ஒரு சவால்.

கீழே உள்ள காணொளியில் கலைஞர் வசனத்தை  நடிகர் திலகமும் லட்சிய நடிகரும் பேசிய காட்சிகள் உள்ளது.








அதைப் போல சங்கிகள் யாராவது தமிழில் எழுத முடியுமா?

Saturday, April 14, 2018

"அ" "ஒ" இல்லா அழகிய தமிழ்க் கோலங்கள்

வாட்ஸப்பில் வந்த அழகிய தமிழ்க் கோலங்கள்.

"அ" மற்றும் "ஒ"   மட்டும் ஏனோ தவறி விட்டது.

பரவாயில்லை. மற்றவற்றை ரசிப்போமே!













Wednesday, June 14, 2017

தமிழில் ஒரு திருமணம் –நிறைவாக . . .





கடந்த வாரம் ஒரு பி.எஸ்.என்.எல் தோழரின் மகனின் திருமணத்தில் கலந்து கொண்டேன். வித்தியாசமான அனுபவமாக இருந்ததால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

சமஸ்கிருத மந்திரங்கள் முற்றிலும் விலக்கப்பட்டு முழுமையாக தமிழிலேயே நடைபெற்ற திருமணம் அது. திருமணத்தை நடத்தி வைத்தவர் காவி வேட்டி கட்டி ருத்ராட்சர மாலை எல்லாம் அணிந்திருந்தாலும்

அத்திருமணத்தில்

மூத்தோர் வழிபாடு,
பெற்றோர் வழிபாடு

ஆகிய இரண்டு அம்சங்களே பிரதானமாக இருந்தன.

அவைகளுக்குப் பின் மங்கல நாண் அணிவித்தல் என்பதோடு திருமண விழா நிறைவுற்றது.

புரியாத மொழியில் யாரோ செல்வதை மணமக்கள் ஒன்றும் தெரியாமல் அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் சடங்குகள் இல்லாதது மனதுக்கு நிறைவாக இருந்தது.

இத்திருமணத்தை முழுமையாக நல்ல தமிழில் நடத்தி வைத்தவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஒரு மேலதிகாரி என்று அறிந்த போது கொஞ்சம் ஆச்சர்யமாகவே இருந்தது.

பின் குறிப்பு : சமஸ்கிருத மந்திரங்களின் பொருள் தெரிந்தால் அவற்றைச் சொல்லி யாருமே திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். இது பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரை “மகளிர் சிந்தனை” இதழில் பிரசுரமானது. அதை தேடிக் கண்டுபிடித்து விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

Friday, June 10, 2016

ரயில்வேயால் கொல்லப்படும் தமிழ்



லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ள ரயில்வே துறையில் உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டிய  பணி என்ன தெரியுமா?

தமிழாசிரியர்.

என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?

“வாழ்க்கை, நேரத்தை விட விலை மதிப்பற்றது. ஆள் இல்லா தண்டவாளங்களை கடக்கும் முன் கவனித்து செல்லவும்”  

இது ரயில்வே சொல்ல நினைத்துள்ள செய்தி.

ஆனால் எப்படி சொல்லியுள்ளார்கள் என்பதை கீழே பாருங்கள். தென்னக ரயில்வேயிலிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது.




வடிவேலுவின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் “முடியல”