இந்திய மூவர்ணக் கொடி போல மிதியடி விற்ற அமேசானின் அக்கிரமத்தை மறந்திருக்க மாட்டீர்கள். சுஷ்மா ஸ்வராஜ் சொன்னது போல மன்னிப்பு கேட்டார்களா என்று தெரியவில்லை.
நான் எழுதப் போவது வேறு ஒரு விஷயம்.
கீழே உள்ள படம் வாட்ஸப்பில் வந்தது.
அதன் படி பார்த்தால் ஒரே ஒரு மாவிலையின் விலை என்ன தெரியுமா?
இதயக் கோளாறுகள் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்.
ஒரு மாவிலையை அமேசானில் நீங்கள் ரூபாய் 220 கொடுத்துதான் வாங்க வேண்டாம்.
தகவல் சரியா என்று அமேசான் தளத்தில் தேடினால் இந்திய சந்தை நிலவரம் தெரியவில்லை.
ஆனால் அமெரிக்காவில் விற்கப்படும் மாவிலை பற்றிய விபரம் கிடைத்தது.
நாற்பது மாவிலைகள் 24.95 டாலர்கள். இந்திய மதிப்பில் கணக்கிட்டுப் பார்த்தால் (இன்று ஒரு டாலருக்கு 68.18 ரூபாய்) ஒரு மாவிலையின் ரூபாய் 42.52.
இதையெல்லாமும் சேர்த்துதான் பொங்கலுக்கு மூன்று லட்சம் பொருட்கள் என்று விற்கிறார்கள் போல.
இதையும் வாங்க சில கனவான்கள் இருப்பார்கள் என்பதும் இந்திய யதார்த்தம்தானே.
வறட்டியைக் கூட ஆன்லைனில் விற்றதை நாம் மறந்து விட முடியுமா என்ன?