Showing posts with label காணொளி. Show all posts
Showing posts with label காணொளி. Show all posts

Saturday, April 5, 2025

இதெல்லாம் மோடியால் முடியாது . . .

 



மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட காணொளி கீழே.

 


மாநாட்டில் பங்கேற்றுள்ள கேரள மாநில பிரதிநிதிகளோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் வருகிறார்.

 அவரும் இயல்பாக வருகிறார். கருப்பு பூனை பாதுகாப்பு, சுற்றி பத்து அல்லக்கைகள் என்று யாரும் கிடையாது.  அவர் வகுகையை கேரள மாநில பிரதிநிதிகளும் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். வெட்டி பந்தாவோ, முகத்தில் பிரமிப்போ,  ஆரவாரமோ இல்லை.

 இதுதான் கம்யூனிஸ்டுகளின் இயல்பு.

மோடியால் இது போல எளிமையாக நடமாட முடியுமா? ஆட்டுக்காரனால் கூட முடியாது. 

Tuesday, February 4, 2025

Pant போட்டால்? காவியானாலும் அடி

 


கீழேயுள்ள காணொளியை பாருங்கள். எந்த இடம் என்று தெரியவில்லை. 30 பேர் நெரிசலில் இறந்து போன மொட்டைச்சாமியாரின் மாநிலமான உபியில் உள்ள அலகாபாத்தாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். பின்புலம் அப்படித்தான் தெரிகிறது.


காவித்துணி அணிந்த சாமியாராக இருந்தாலும் அவர்களின் தேசிய உடையான அரையாடையை அணியாமல் Pant போட்டதற்காக எப்படி அடிக்கிறார்கள். காட்டுமிராண்டிக்காலத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள்!

Friday, December 27, 2024

சவுக்கடின்னா இப்படி இருக்கனும் ஆட்டுக்காரா?

 


சவுக்கடி நாடகம் நடத்திய ஆட்டுக்காரனுக்கு "சவுக்கடி என்றால் எப்படி இருக்க வேண்டும்?" என்று வடிவேலு பாடம் நடத்துவதை பாருங்கள்.




சவுக்கடி என்பது ஒரு கோமாளித்தனம் என்றால் அதை அமலாக்கிய முறை அதை விட பெரிய கோமாளித்தனம்.

காமெடியனாக இருக்கக்கூட ஆட்டுக்காரன் லாயக்கில்லை . . .

Monday, December 16, 2024

வாஹ்! ஜாகீர் …

 


உலகெங்கும் இந்திய இசையின் அடையாளமாக திகழ்ந்த தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் உசேன் காலமாகி விட்டார்.

 தாஜ் மஹால் டீ விளம்பரத்தில்தான் அவரை முதன் முதலில் பார்த்துள்ளேன். அதி வேகமாய் நடனமாடும் விரல்களும் னெற்றியில் அலைபாயும் தலைமுடியும் புன்னகைத்த முகமுமாய்  உள்ளத்தை கவர்ந்தவர். வாஹ்!தாஜ் என்ற அந்த விளம்பரத்தை யாரால் மறக்க முடியும்.



 எப்போதும் சோம்பி வழியும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளில் விறுவிறுப்பான நிகழ்வாக அவரது தபேலா நாதம் ஒலிக்கும்.

 


ஒரே ஒரு முறைதான் அவரது நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

 அது திருவையாறு தியாகராஜ உத்சவம். மாண்டலின் ஸ்ரீனிவாஸின் கச்சேரி அது.

 அந்த நிகழ்ச்சியில் தபேலாவில் ஜாகீர் உசேனும் தவிலில் ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேலுவும் நடத்திய தனி ஆவர்த்தனம் காலம் முழுதும் நெஞ்சில் நிலைக்கும்.

 அதன் இரு  காணொளிகள்  இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

 




ஒரு குழந்தை தன் தந்தையின் தலையில் தபேலா வாசிக்கும். அதுதான் ஜாகீர் உசேன் ஏற்படுத்திய தாக்கம்.

 அவருடைய அப்பா உஸ்தாத் அல்லாரக்கா, பண்டிட் ரவிசங்கருக்கு தபேலா வாசிப்பவர். ஜாகீர் உசேனும் அவருக்கு வாசித்துள்ளார்,

 


தந்தையை மிஞ்சிய தனயானாக, சர்வதேச அளவில் முத்திரை பதித்தவர் ஜாகீர் உசேன். தபேலா என்றால் முதலில் நினைவுக்கு வருபவரும் அவர்தான்.

 அவருக்கு மனமார்ந்த அஞ்சலி.

 

Sunday, December 1, 2024

சேட்டுக்கு கோடிகள், சலவைக்காரருக்கோ

 


ஊடகச்சங்கி ரங்கராஜ் பாண்டேவின் காமெடி காணொளி கீழே உள்ளது. 


மகராஜ் ஜி என்று அழைத்த 750 ரூபாய் சம்பளம் வாங்கிய சேட்டை கோடி கோடியாக புரள வைத்த பூஜை, சாமி என்றழைத்த சலவைக்காரருக்கு செய்யப்பட்ட போது நான்கு சலவைக்கடைகள்தான் கொடுத்து அதே தொழிலில்தான் நீடிக்க வைத்துள்ளது.

சேட்டை அவர் என்று மரியாதையுடன் சொல்லும் பாண்டே சலவைக்காரரை அவன், இவன் என்று சொல்கிறாரே, அங்கே பல்லை இளிக்கிறது சனாதனம். ஜாதிய மேட்டிமை புத்தி. 

Sunday, November 10, 2024

டெல்லி கணேஷ் - மனதில் நிற்கும் நடிகர்

 

தமிழின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் இன்று காலமானார். 

அநேகமாக அனைத்து வகை பாத்திரங்களையும் திறம்பட கையாண்டவர். 

சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி என்று பல படங்களில் அவர் முத்திரை பதித்தாலும் படம் முழுதும் அவருக்கு ஸ்கோர் செய்ய ஸ்கோப் இருந்த படம் "ஆஹா"

டெல்லி கணேஷ் அவர்களுக்கு அஞ்சலி

அவருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் சில காணொளிகள். 

ஆஹா

மைக்கேல் மதன காமராஜன்

அவ்வை சண்முகி


சிந்து பைரவியில் வரும் "பாடறியேன், படிப்பறியேன்" பாடல்



Wednesday, September 11, 2024

நான் ரசித்தது உங்களுக்கும் . . .

 


முக நூலில் நான் பார்த்து ரசித்த ஒரு காணொளி உங்களுக்காகவும், நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு . . .


அந்த குழந்தையின் முயற்சியையும் அதை விட அதன் உடல் மொழியையும் நான் வெகுவாக ரசித்தேன். எதிர்காலத்தில் மிகச் சிறந்த கலைஞனாக உருவெடுப்பான் என்று நம்புகிறேன். . .

Wednesday, June 12, 2024

தமிழிசையை அமித்து மிரட்டுவது ஏன்?

 


கீழேயுள்ள காணொளியை பார்த்து விடுங்கள். ஏற்கனவே பார்த்திருந்தாலும் பரவாயில்லை, இன்னும் ஒரு முறை பார்க்கலாம். தவறில்லை.


அமித்ஷா ஏன் தமிழிசையை மிரட்டுகிறார் என்பது நமக்கு தேவையில்லாத விஷயம். அது அவங்க உட்கட்சிப் பிரச்சினை. 

அமித்ஷா முகத்தின் கொடூரத்தை பார்த்தீர்கள் அல்லவா!

ஒரு பொது மேடையில் ஆளுனராக இருந்த ஒரு பெண்ணை இவ்வளவு கொடூரமாக மிரட்டுகிறாரே, அவர் மற்றவர் கண்ணில் படாமல் என்னென்ன கொடிய செயல்களை செய்வார்! செய்திருப்பார்! இந்த கிரிமினல் உள்துறை அமைச்சர்!

Saturday, June 1, 2024

சோகப்பாடல் இப்போ ரொம்ப சந்தோஷமாக

 


கீழே காணொளியில் உள்ள பாடல் மிக சோகமானது. எப்போது கேட்டாலும் மனதில் சின்ன வருத்தம் வரும். ஆனால் முதல் முறையாக வேறு ஒரு காட்சியுடன் இந்த பாடல் ஒலிக்கையில் மனது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் . . .


நடந்தது தியானமெல்லாம் அல்ல, வெறும் போட்டோஷூட் என்பதற்கு இந்த காணொளிதான் சாட்சி. ஆனாலும் முட்டாள் சங்கிகள் திருந்த மாட்டார்கள்.

Tuesday, April 11, 2023

இது ஆஸ்கார் (இங்கிலிஷ்) கூத்து

 


போன பதிவு ரொம்ப ரொம்ப சூடான ஒன்றாக போனதால் எனக்குமே  கொஞ்சம் ரிலாக்ஸேஷன் தேவைப்பட்டதால் மாறுதலுக்காக ஒரு ஜாலி பதிவு.

ஆஸ்கார் விருது பெற்ற :நாட்டுக் கூத்து"  பாடல் வரிகளை  வேறொரு நடனத்துக்கு இணைத்து யாரோ ஒரு திறமையாளர் தயார் செய்தது.

இந்த பாட்டு வரிகள் ஆங்கில காமெடி நடிகர்கள் லாரல், ஹார்டி க்கு எவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது பாருங்கள்.

நான் பெற்ற இன்பம் பெறட்டும் இந்த வலையுலகமும் . . .


ஒரிஜினல் நடனம் யூட்யூபில் இருக்கிறது. அந்த இசையை விட இவர்கள் நடனத்துக்கு நாட்டுக்கூத்து பாடல்தான் மிகவும் பொருத்தமாக உள்ளது.

அந்த யூட்யூப் இணைப்பு இங்கே உள்ளது

Thursday, January 26, 2023

தேன் குரல் –விருது –பத்து பாடல்கள்

 


தேன் குரல் கொண்ட திருமதி வாணி ஜெயராம் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது அறிவித்துள்ளது மகிழ்சியளித்தது.

அவரின் மிகச் சிறந்த தமிழ்ப் பாடல்களை இன்று கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த பாடல்களின் காணொளிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஐந்து தனிப் பாடல்களும் ஆண் பாடகர்களோடு இணைந்து பாடிய ஐந்து பாடல்களும் பகிர்ந்துள்ளேன். அவர் தேசிய விருது வாங்கிய “ஏழு ஸ்வரங்களுக்குள்” பாடலை இன்று நிறைய பேர் கேட்டிருப்பார்கள் என்பதால் அதை மட்டும் கவனமாக தவிர்த்துள்ளேன்.

நான் பெற்ற இசையின்பத்தை நீங்களும் பெறுவீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

 மல்லிகை என் மன்னன் மயங்கும்

 


 கண்டேன் எங்கும் பூமகள்

 

 

 

டி.எம்.எஸ் அவர்களோடு “இலங்கையின் இளங்குயில்”

 


யேசுதாஸ் அவர்களோடு “தங்கத்தில் முகமெடுத்து

 


ஜெயச்சந்திரன் அவர்களோடு “கண்ணன் முகம் காண”

 


எஸ்.பி.பி அவர்களுடன் “ஒரே நாள், உனை நான்

 

மலேசியா வாசுதேவன் அவர்களுடன் “ எங்கே நான் காண்பேன் என் காதலன்?"

 

வாணி ஜெயராம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பிகு: பத்து பாடல்களுக்கும் காணொளியை தரவிறக்கியிருந்தாலும் இரு பாடல்களைத் தவிர மற்ற பாடல்களில் காற்று மட்டுமே வந்ததால் யூட்யூப் இணைப்பையே வழங்கி விட்டேன்

Tuesday, March 22, 2022

சூப்பர் ஆட்டம்யா

 


 முகநூலில் தோழர் கருப்பு அன்பரசன் பகிர்ந்து கொண்டு நான் மிகவும் ரசித்த  ஒரு காணொளியை  ஒரு மாறுதலுக்காக பதிவிட்டுள்ளேன்.

சிறுவர்களின் விளையாட்டு உலகமும் அவர்களின் விதிகளுமே தனிதான்.


 

Saturday, October 30, 2021

கவிதை கேளுங்கள். என்ன குரல் 👍👍👍👍

 



நேற்று மாலை அலுவலகத்திலிருந்து  வீடு திரும்புகையில் ஒரு டீக்கடையில் ஒலித்த பாடல் சில நொடிகள் காதில் விழுந்து வீட்டிற்கு வந்ததும் முழுமையாக கேட்க வைத்தது.


நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுங்கள்.

 


யப்பா! வாணி ஜெயராமின் குரல், அது என்ன குரல்!

சூப்பர் குரல்

Thursday, October 14, 2021

அவர் வில்லன் மட்டுமல்ல

 


இரண்டு நாட்கள் முன்பு மறைந்த நடிகர் ஸ்ரீகாந்த், சக்தியான வில்லன் நடிகர்களில் ஒருவர்.

வில்லன் மொக்கையாக இருந்தால் நாயகர்களுக்கு அங்கே மதிப்பில்லை. நம்பியார், பி.எஸ்.வீரப்பா, அசோகன், ஆர்.எஸ். மனோகர் தலைமுறைக்குப் பிறகு வந்த வில்லன் நடிகர்களில் ரஜினிகாந்த் வரும் வரை கோலோச்சியவர் இவர்.

துல்லியமான தமிழ் உச்சரிப்பு உடையவர். பின் வரும் காணொளியில் நடிகர் திலகம் "Now let me talk like a police man" என்ற இடம் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த இடம் வருவதற்கு முன்பு ஸ்ரீகாந்த் வெறுப்பேற்றாவிட்டால் நடிகர் திலகத்தின் மிடுக்கு அங்கே எடுபட்டிருக்காது. 



அவர் வில்லன் மட்டுமல்ல. நகைச்சுவை வேடங்களில் கூட கலக்கியவர்.

எதிர் நீச்சல் கிட்டு மாமாவை மறக்க முடியுமா?






ஒரு பழைய தலைமுறை மறைந்து கொண்டே இருக்கிறது. இதுதான் இயற்கை என்றாலும் வருத்தம் வருவதும் இயற்கைதான். 

Wednesday, September 8, 2021

அமுதே, தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே . . .

 



இன்று மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி. கவியரசு கண்ணதாசனும் வாலியும் கோலோச்சிய காலத்திலும் பல முத்தான பாடல்கள் மூலம் முத்திரை படைத்தவர். எம்.ஜி.ஆரின் துவக்க கால அரசியலுக்கு பட்டுக்கோட்டையார் பாடல்கள் உதவியது என்றால் திரைத்துறையிலிருந்து தீவிர அரசியல் களத்திற்கு என்ற காலத்தில் உதவியது புலமைப்பித்தனின் பாடல்களே.

திரைத்துறைக்கே உரித்தான பந்தாக்கள் இல்லாத எளிமையானவர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல முறை அவரை கையில் ஒரு சின்னப்பையோடு தன்னந்தனியே பார்த்த காரணத்தால் இதைச் சொல்கிறேன்.

 திரு புலமைப்பித்தனை நினைவு கூர்கிற வகையில் அவர் எழுதிய சில பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன்.


 

அமுத தமிழில் எழுதும் கவிதை

 




நாளை உலகை ஆள வேண்டும்

 


இந்த பச்சைக்கிளிக்கொரு 

 


பூமழை தூவி

 


நீங்க நல்லா இருக்கோணும்



அந்தப்புரத்தில்   ஒரு மகராணி

 


மான் கண்டேன், மான் கண்டேன்

 


அமுதே தமிழே

 


செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு

 


ஓ வசந்த ராஜா



தமிழே, எனதுயிரே என வாழ்ந்தவருக்கு என் அஞ்சலி


பிகு : மேலே உள்ள பாடல்களில் எம்.ஜி.ஆர் பாடல்கள் மெல்லிசை மன்னரின் இசையமைப்பிலும் மற்ற பாடல்கள் இளையராஜாவின் இசையிலும் அமைந்தது யதேச்சையான ஒற்றுமையே. 

Thursday, June 24, 2021

நிரந்தரமானவர்கள், அழிவென்பதே இல்லை.

 


தமிழ்த் திரை இசையுலகில் நீண்ட காலம் ஒன்றாக பயணித்த கவியரசருக்கும் மெல்லிசை மன்னருக்கும் இன்று  பிறந்த நாள் என்பது அவர்கள் நட்பைப் போலவே சிறப்பானது.

கவியரசர் மறைந்து கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாகப் போகிறது. மெல்லிசை மன்னர் மறைந்தும் ஆறாண்டுகள் கடந்து விட்டது.

"நான் நிரந்தரமானவன், எந்த நிலையிலும் எனக்கு அழிவு இல்லை" என்று கவியரசு பாடியது போல இருவரும் தங்கள் படைப்புக்கள் மூலம் வாழ்கிறார்கள், நிரந்தரமாக, தலைமுறைகள் தாண்டியும்.

அவர்கள் நினைவைப் போற்ற அவர்கள் கூட்டணியில் உருவான பத்து பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

கவியரசு தேசிய விருது பெற்ற "தேவன் வந்தான், தேவன் வந்தான், குழந்தை வடிவிலே"



பி.சுசிலா தேசிய விருது பெற்ற "பால் போலவே வான் மீதிலே'




பி.சுசீலா தேசிய விருது பெற்ற "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு"




வாணி ஜெயராம் தேசிய விருது பெற்ற "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்"



எம்.ஜி.ஆரின்  "விழியே கதை எழுது"




சிவாஜியின் "தேடினேன் வந்தது" (இந்த பாடல் எனக்கு ஏன் பிடிக்கும் என்ற ரகசியம் இரண்டு நாட்களுக்குப்பிறகு எழுதுகிறேன்)




கமலின் "காத்திருந்தேன், காத்திருந்தேன்"




ரஜினிக்கு எம்.எஸ்,வி யின் குரலிலேயே "சம்போ, சிவ சம்போ"




கவியரசு திரையில் தோன்றிய "பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு"




இருவரின் கூட்டணியில் இறுதியாய் உருவான "மேகம் திரளுதடி"






இந்த பாடல்களை பதிவிட்ட பிற்குதான் நினைவுக்கு வந்த பாடல் ஒன்று. மெல்லிசை மன்னர் தன் இறுதி நாள் வரை கவியரசரின் நினைவாக ஒவ்வொரு மேடையிலும் பாடும் முதல் பாட்டு

"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே"




Thursday, June 10, 2021

சிரிப்பதே அவருக்கு அஞ்சலி

 


கிரேஸி  மோகனுக்கு இன்று நினைவு நாள்.

விரசம் இல்லாத நகைச்சுவை அளித்தவர். 

கொரோனா தனிமைப்படுத்தல் காலத்தில் தேவைப்பட்ட மன அமைதிக்கு பெரிதும் உதவியது அவரது வசனத்தில் வந்த மை.ம.கா.ராஜன், ஆஹா, அவ்வை சண்முகி போன்ற படங்களே.

அவருக்கு அஞ்சலியாக அவரது வசனத்தில் வந்த சில திரைக்காட்சிகள்.

சிரிப்பதுதானே அவருக்கு பொருத்தமான அஞ்சலி!






Sunday, June 6, 2021

மூவருமில்லை, யேசுதாஸ் மற்றும் சித்ரா



வலைப்பக்கத்தில் என்ன எழுதுவது என்றொரு யோசனை.

இலக்கியமாமணி விருது குறித்து புளிச்சமாவு ஆஜான் உளறியது பற்றியா?

முகநூலை பூட்டி வைக்கும் முன்பு மாலன் திமிர்த்தனமாக அளித்த ஒரு பதில் குறித்தா?

சீமான் பற்றி படித்த தகவலா?

நாளை நிதானமாக எழுதிக் கொள்வோம். இன்றைய நாள் இசை நாளாகவே இருக்கட்டும் என்று ஒரு தோழர் அனுப்பிய இரு காணொளிகளை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இரண்டும் ஒரே பாடல்தான். பாடியதும் அதே பாடகர்கள்தான். ஆனால் வருடங்கள் வேறு. உருவங்கள் மாறினாலும் அந்த கந்தர்வ குரலிலோ, தேன் குரலிலோ எந்த மாற்றமும் இல்லை.

நீங்களும் அவசியம் பார்த்து மகிழுங்கள்.

அன்று




இன்று



 

Wednesday, June 2, 2021

ராஜா 45 - நான் கேரண்டி

 
 


இளையராஜா இசையமைப்பாளராகி 45 ஆண்டுகள் நிறைவுற்றதாக சில நாட்கள் முன்பாக பலரும் பதிவிட்டிருந்தனர்.

 ராஜாவின் 45 ஆண்டுகளை 45 பாடல்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினேன். பிரபலமான 45 பாடல்கள் என்பதற்குப் பதிலாக ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முக்கியமான பாடல் என்று தொகுக்க விரும்பினேன். இது வரை நான் பகிர்ந்து கொள்ளாத பாடல்களாக இருக்க வேண்டும் என்று கொஞ்சம் மெனக்கெட்டேன். ராஜா முதலில் பதிவு செய்த “அன்னக்கிளியே உன்னை தேடுதே தவிர பெரும்பாலானவை இந்த வலைப் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படாத பாடல்கள்.  அதனால்  கொஞ்சம் தாமதமான பதிவு இது. அவருடைய பிறந்த நாளன்றாவது பகிர்ந்து கொள்வேமே என்று இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

 2005 க்குப் பிறகு ராஜாவிற்கு ஒரு சரிவு இருந்தது என்பதை இப்பதிவுக்கான தரவுகளை தேடுகையில் தெரிந்தது. சில வருடங்களில் சொல்லிக் கொள்ளும் படி ஒரு தமிழ்ப்ப் பாடல் கூட இல்லாததால் அந்த வருடங்களை அப்படியே கடந்திருப்பேன்.

 45 வருடங்களிலிருந்தும் பாடல்கள் வேண்டுமென்று திட்டமிட்டாலும் அது இயலாமல் போய் விட்டது. அதை ஈடு செய்ய சில பின்னணி இசை கோர்வைகளையும் சேர்த்தேன். ஆனால் அதிகபட்ச அளவு தாண்டி விட்டது என்று ப்ளாக்ஸ்பாட் சொன்ன காரணத்தால் தேர்வு செய்து வைத்திருக்கிற பின்னணி இசைக் கோர்வைகளை நாளை பதிவு செய்கிறேன்.  அளித்துள்ளேன்.

  நம் காலத்தின் மகத்தான இசை மேதை இளையராஜா என்பதை வருடங்கள் கடந்த பின்பும் நிற்கும் அவரது பாடல்கள் உணர்த்துகின்றன. பின்னணி இசையில் அவருக்கு நிகர் யாரும் இல்லை என்பதையும் கூட. . . .

மேலே பகிர்ந்து கொண்ட  படம் எங்கள் புதுவை 2 கிளை தோழர் எஸ்.செல்வராஜ் அவர்களின் மகன் செல்வன் அனீஷ் பாரதி வரைந்தது.

இசையென்ற இன்ப வெள்ளத்தில் நீங்கள் மூழ்குவீர்கள் என்பதற்கு நான் கேரண்டி





 

1976 அன்னக்கிளியே உன்னைத் தேடுதே

 


 

1977  வாழ்வே மாயமா?


 

 1978 – ஒரு வானவில் போலவே

 


 

1979 – அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்

 


 

1980 – கொத்த மல்லி பூவே

 


 

1981 – கூந்தலிலே மேகம் வந்து

 


 

1982 – பூவே, இளைய பூவே

 


 

1983 – இசை மேடையில், இன்ப வேளையில்

 


 

1984 – ரோஜா ஒன்று

 


 

1985 – ராஜா மகள், ரோஜா மலர்

 


 

1986- இளஞ்சோலை பூத்ததா?

 


 

1987 – சின்ன சின்ன ரோஜாப்பூவே

 


1988 – தேன் மொழி, எந்தன் தேன் மொழி

 


1989 – பூங்காற்று உன் பேர் சொல்ல

 


 

1990 – குயிலுகுப்பம் குயிலுகுப்பம் கோபுரமானதடி


 

1991 – பூங்காவியம், பேசும் ஓவியம்


 

1992 – யாரும் விளையாடும் தோட்டம்


 

 1993 – தில்லுபரு ஜானே – தில்லு தீவானே

 


1994 – மலைக்கோயில் வாசலிலே

 


 1995 – உல்லாச பூங்காற்றே


 

 

1996 – என் பாட்டு என் பாட்டு

 


1997 -  தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம்


 

1998 – மாலை என் வேதனை கூட்டுதடி

 


 1999 - ஊருக்கு தெக்கே



2000 – நிலவு பாட்டு நிலவு பாட்டு


 

 

2001 – மஞ்சள் பூசும் மாலை வேளை

 


 2002 – ஒளியிலே தெரிவது

 


 2003 – இளங்காத்து வீசுதே

 


 

2004 – கொம்புல பூவை சுத்தி

 


 

2005 -  காற்றில் வரும் கீதமே

 


 

2009 – ஓம் சிவோஹம்

 


 

2010 – தாலாட்டு கேட்க நானும்



2011 – பூவக் கேளு, அந்த காத்தை கேளு

  


 2012 – என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்


 

2016  இடர் வரினும் . . .என் உள்ளம் . . .


 

2020 – உன்ன நெனச்சு நெனச்சு