Showing posts with label மரண வியாபாரிகள். Show all posts
Showing posts with label மரண வியாபாரிகள். Show all posts

Sunday, July 18, 2021

மரண வியாபாரிகளின் மகிழ்ச்சி ஏன்?

 


தாலிபன்களால்  ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட புகைப்படக்காரர் டேனிஷ் சித்திக்கின் கொலையை சங்கி மரண வியாபாரிகள் கொண்டாடியது தொடர்பாக நேற்று பதிவிட்டிருந்தேன்.

அவர் எடுத்த முக்கியமான புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன். அவை ஒன்றிய ஆட்சியாளர்களின் அவலங்களை அம்பலப்படுத்தியது. கலவரத்துக்கான சதியை அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீஸ் வேடிக்கை பார்த்த கேவலத்தை உலகிற்கு சொன்னது.

அதனால்தான் சங்கிகள் மகிழ்கிறார்கள். ஜனநாயகவாதிகள் கண்ணீர் வடிக்கின்றார்கள்.

பொய்யான படம் என்று நேற்று ஒரு சங்கி சொன்னதை எழுதி இருந்தேன். இன்று ஒரு சங்கி போட்டோவை பணத்திற்கு விற்றவன் என்று என் வலைப்பக்கத்தில் வாந்தி எடுத்திருந்தது. அதை சுத்தம் செய்து விட்டேன். இன்றும் சுத்தம் செய்ய துடைப்பத்துடன் காத்திருக்கிறேன்.