Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Wednesday, September 8, 2021

அமுதே, தமிழே, அழகிய மொழியே, எனதுயிரே . . .

 



இன்று மறைந்த புலவர் புலமைப்பித்தன் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலி. கவியரசு கண்ணதாசனும் வாலியும் கோலோச்சிய காலத்திலும் பல முத்தான பாடல்கள் மூலம் முத்திரை படைத்தவர். எம்.ஜி.ஆரின் துவக்க கால அரசியலுக்கு பட்டுக்கோட்டையார் பாடல்கள் உதவியது என்றால் திரைத்துறையிலிருந்து தீவிர அரசியல் களத்திற்கு என்ற காலத்தில் உதவியது புலமைப்பித்தனின் பாடல்களே.

திரைத்துறைக்கே உரித்தான பந்தாக்கள் இல்லாத எளிமையானவர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல முறை அவரை கையில் ஒரு சின்னப்பையோடு தன்னந்தனியே பார்த்த காரணத்தால் இதைச் சொல்கிறேன்.

 திரு புலமைப்பித்தனை நினைவு கூர்கிற வகையில் அவர் எழுதிய சில பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன்.


 

அமுத தமிழில் எழுதும் கவிதை

 




நாளை உலகை ஆள வேண்டும்

 


இந்த பச்சைக்கிளிக்கொரு 

 


பூமழை தூவி

 


நீங்க நல்லா இருக்கோணும்



அந்தப்புரத்தில்   ஒரு மகராணி

 


மான் கண்டேன், மான் கண்டேன்

 


அமுதே தமிழே

 


செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு

 


ஓ வசந்த ராஜா



தமிழே, எனதுயிரே என வாழ்ந்தவருக்கு என் அஞ்சலி


பிகு : மேலே உள்ள பாடல்களில் எம்.ஜி.ஆர் பாடல்கள் மெல்லிசை மன்னரின் இசையமைப்பிலும் மற்ற பாடல்கள் இளையராஜாவின் இசையிலும் அமைந்தது யதேச்சையான ஒற்றுமையே. 

Thursday, July 25, 2019

அந்த குரலில் அப்படியே மயங்கி . . .


நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது ஒரு வேலையாக வெளியே போயிருந்தேன். திரும்பி வருகையில் திமுக பிரச்சார வாகனம்(ஆமாம். வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் ஐந்து அன்று நடைபெறவுள்ளது) ஒன்று காலியாக  முன்னே போய்க் கொண்டிருந்தது. 

அந்த வாகனத்தில் ஒரு பிரச்சாரப் பாடல்.  மறைந்த நாகூர் ஹனீபாவின் குரலில் அப்படியே மயங்கி விட்டேன். மெதுவாகச் சென்ற  அந்த வாகனத்தை ஓவர் டேக் செய்து போயிருக்கலாம். ஆனால் அந்த கம்பீரக்குரல் அப்படிச் செய்ய அனுமதிக்கவில்லை. 

எங்கள் அலுவலகம் வரும் வரை அந்த குரலைக் கேட்டபடி வந்து கொண்டே இருந்தேன்.

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற  அடிப்படையில்  திரு நாகூர் ஹனீபாவின் குரலில் ஒலித்த இரண்டு  திரைப்பாடல்களின் காணொளி இணைப்புக்கள் கீழே

நட்ட நடு கடல் மீது

உன் மதமா? என் மதமா? ஆண்டவன் எந்த மதம்?

நாகூர் ஹனிபா என்றாலே மனதில் நினைவு வரக்கூடிய இரண்டு பாடல்களை பகிர்ந்து கொள்ளாவிட்டால் எப்படி சரியாக இருக்கும்?

எல்லோரும் கொண்டாடுவோம் . . .

இந்த பாடல் அவருடைய குரலுக்காக மட்டுமே

இறைவனிடம் கையேந்துங்கள்


Sunday, May 12, 2019

எம்.எஸ்.வி, கண்ணதாசன் மே, மே




கீழேயுள்ள செய்தியை நீண்ட நாட்கள் முன்பாகவே இயக்குனர் திரு ஏ.சி.திருலோக்கசந்தர் அவர்களின் கட்டுரைத் தொடரில் படித்தது நினைவில் உள்ளது.

1975-ல் வெளியான நடிகர் திலகத்தின் 175வது படமான " அவன் தான் மனிதன்" திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்.

இப்பாடல் குறித்த சுவாரஸ்ய நிகழ்வொன்று உண்டு. இப்படத்தில் அனைத்து பாடல்களும் தயாராகி விட்ட நிலையில் முழுக்க சிங்கப்பூரில் படமாக்க வேண்டிய இப்பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதி தரவில்லை. மே மாதம் படப்பிடிப்பிற்கு தயாரான நிலையில் மெல்லிசை மன்னர் MSV கவிஞரை பார்க்கும் போதெல்லாம் அண்ணே மே மாதம் ! மே ! மே ! என்று நச்சரித்து வந்தார்.

கவிஞர் கடுப்பாகி என்னடா விச்சு எப்ப பார்த்தாலும்  மே! மே! னு ஆடு மாதிரி கத்திக்கிட்டு இருக்க. நீ மே தான கேட்ட இந்தா போட்டுக்கோ பல மே என்று பாடலின் ஒவ்வொரு வரியும் மே என்று முடியும் மாதிரி எழுதினார் கவிஞர்.

இது மே மாதம் இல்லையா அதற்கான பாடல் இந்த பாடலில் அனைத்து வரிகளும் மே மே என்று முடியும்!



பாடலின் காணொளி இணைப்பு  இங்கே உள்ளது

இப்போது இன்னொரு தகவல் உலா வருகிறது.

கர்ணன் திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே சிறப்பானது. அதிலே மிகவும் இனிமையானது “இரவும் நிலவும் மலரட்டுமே!”

அந்த பாடல் உருவானது பற்றி இப்போது உலவும் தகவல் கீழே

அந்த பாடல் கம்போஸிங்கிற்காக மெல்லிசை மன்னர் கவியரசரை அழைத்துள்ளார். இன்று மே தினம். எனக்கு விடுமுறை நாள் வர முடியாது என்று மறுத்துள்ளார். எம்.எஸ்.வி விடவில்லை. கவிஞரின் வீட்டிற்கே சென்று அடம் பிடித்து அவரை அழைத்துச் சென்றுள்ளார். மே தின விடுமுறையை கெடுத்து விட்டாயே என்று சொல்லி விட்டு ஒவ்வொரு வரியும் “மே” யில் முடிவது போல எழுதிக் கொடுத்து விட்டார்.

இத்தகவல் உண்மையா என்று சொல்ல இருவரும் இல்லை. கர்ணன் திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே பெங்களூரில் ஒரு விடுதியில் தங்கி ஒரு வார காலத்தில் எழுதப்பட்டது என்றும் படித்துள்ளேன். அத்தகவல் உண்மையாயிருக்கும் பட்சத்தில்  மேதினத்தன்று  எழுதப்பட்டது என்பது தவறு.

எது எப்படி இருந்தால் என்ன?



அந்த இனிமையான பாடலை இன்னொரு முறை கேளுங்களேன்.

காணொளி இணைப்பு  இங்கே உள்ளது

Sunday, October 29, 2017

இன்னும் ஒரு பத்து பாட்டு






நேற்று ஜானகியம்மாவின் பதினோரு பாடல்களின் இணைப்பை பகிர்ந்து கொண்டேன்.

இன்னும் ஒரு பத்து பாடல்களை பகிர்ந்து கொள்ளலாமே, ஏன் இந்த கஞ்சத்தனம் என்று தோன்றியதால் இன்னும்  ஒரு பத்து பாட்டு இன்று.














ஆஹா, கணக்கு தப்பாயிடுச்சு போல இருக்கே, பத்து பாட்டுக்கு மேலயே இருக்கே.

சரி அதனால் என்ன?

இசையில் மூழ்கும்போது கணக்கு பார்க்க முடியுமா என்ன?

பின் குறிப்பு : மேலே உள்ள படங்கள் நேற்றைய  மைசூர் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டவை

 



 

 

Thursday, July 16, 2015

எம்.எஸ்.வி மற்றும் சில கதாநாயகிகள்



 
நேற்றைய பதிவு மெல்லிசை மன்னரின் இசையில் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் அளித்த பாடல்கள். இன்றைய பதிவில் கதாநாயகிகளை மையப்படுத்தி எம்.எஸ்.வி இசையமைத்த பாடல்களைப் பார்ப்போம்.

இரட்டையர் பிரிந்த பின்னர் எம்.எஸ்.வி தனியாக இசையமைத்த முதல் படம் கலங்கரை விளக்கம். அதிலே பாவேந்தரின் இப்பாடலுக்கு சரோஜாதேவி ஆடும் நடனம் அற்புதம்.

பாடலை பாடுபவர் என்னமோ நடிகர் திலகத்திற்காக டி.எம்.எஸ். ஆனால் நம்மை ஈர்த்தது என்னமோ நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் நடனம்.

கே.ஆர்.விஜயாவால் இப்படிக் கூட நடனமாட முடியுமா என்று இப்பாடலை இன்று பார்ப்பவர்கள் அதிசயித்துப் போவார்கள். நின்றபடியே கவனத்தை நடிகர் திலகமும் அள்ளிச் செல்வார்.

காதலின் வருகைக்காக காத்திருக்கும் ஏக்கத்தை குரல் வழியாய் பி.சுசீலா வெளிப்படுத்த வாணிஸ்ரீ அதை தனது நடிப்பில் பிரதிபலிப்பார்.

சுதந்திர வேட்கையுள்ள  ஒரு பெண்ணின் உணர்வும் உற்சாகமும் ஜெயலலிதாவின் நடிப்பில்  வெளிப்படும்.

காஞ்சனாவிற்கு அழியா புகழை தேடிக் கொடுத்த பாடல் இது.

காற்றுக்கு இல்லாத வேலி எனக்கு மட்டும் ஏன் என்று கேட்கிறார் சுஜாதா.

ஸ்ரீவித்யா மறைந்தாலும் எம்.எஸ்.வி இசையமைத்த இந்த இப்பாடல் என்றும்  நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.

இரண்டு கதாநாயகர்கள் இருந்தாலும் இப்பாடலில் ஜொலிப்பது என்னவோ ஜெயப்பிரதா தான்.

வறண்டு போன நிலத்தில் சரிதா பாடும் கண்ணீர் ததும்பும் தாலாட்டு

நாளை வேறு வித்தியாசமான தொகுப்போடு சந்திக்கிறேன்.

பின் குறிப்பு : எல்.ஐ.சி நிறுவனத்தில் எனது முப்பதாவது ஆண்டு பணி இன்று தொடங்கியது. 

Wednesday, June 24, 2015

அவர்கள் நிரந்தரமானவர்கள் - ஆமாம்

தமிழ்த் திரையுலகின் ஒப்பற்ற விற்ப்பன்னர்கள் இருவருக்கும் இன்றுதான் பிறந்தநாள் என்பது ஒரு அதிசயமான ஒற்றுமை.

 http://www.msvtimes.com/images/rare/MSV-Kannadasan.JPG

1927 ம் ஆண்டு 24 ஜூன் அன்று பிறந்த கவியரசு கண்ணதாசனும் 1928 ம் ஆண்டு 24 ஜூன் அன்று பிறந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும்  இணைந்து பல காலத்தால் அழியாத பாடல்களை அளித்தார்கள் என்பது சிறப்பு. 

மெல்லிசை மன்னருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறி அவரும் கவியரசும் இணைந்து அளித்த பாடல்களில் பத்து பாடல்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்றும் சகோதரப் பாசத்திற்கு எடுத்துக்காட்டு, உள்ளத்தை உருக்கும் இப்பாடல்தானே! 

உண்மையான நட்பிற்காக உயிரை அர்ப்பணித்த ஒரு உத்தமனின் பெருமையைச்  சொல்லும் உருக்கமான பாடல் இது. (எத்தனை உ?)

கனியிருப்ப காய்  எதற்கு என்ற வள்ளுவன் வாக்கை பொருந்தாமல் செய்யும்  இப்பாடல். 

சித்தாந்தத்திற்கும் வேதாந்தத்திற்கும் என்ன  வித்தியாசம் என்பதை கவிஞர் எழுத, அதற்கு மெல்லிசை மன்னர் இசையமைக்க, யேசுதாஸ் மெருகூட்டிய பாடல் இது.

மன்னன் மயங்கும் மர்மம் என்ன   என்பது இப்பாடலைக் கேட்டால் தெரிந்து விடும்.

பெரும் புலவர்கள் எல்லாம் நிஜமாகவே ஏமாந்து போனார்களா என்ன?

மே மாதம் படப்பிடிப்பிற்குச் செல்ல வேண்டும் என்று  மீண்டும் மீண்டும் கேட்டதால். என்ன ஆடு போல மே, மே என்று சொல்லுகிறாய் என்ற கவியரசு கொடுத்த பாடலிலும் ???

இருவரில் ஒருவ்ரின் ஆடல் கொஞ்சம் சங்கடப் படுத்தினாலும்  தமிழின் சிறந்த நடனப் பாடல்களில் இதுவும் ஒன்று.

இப்படி ஒரு பாடல் கேட்டால்  புவி அசைந்தாடாதா என்ன?