Showing posts with label பதக்கம். Show all posts
Showing posts with label பதக்கம். Show all posts

Saturday, July 24, 2021

வெள்ளி மங்கை மீராபாய்க்கு வாழ்த்துக்கள்

 


டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான 49 கிலோ பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் கணக்கை துவக்கி வைத்துள்ள வீராங்கனை மீராபாய்க்கு வாழ்த்துக்கள்.

மேலும் பல வெற்றிகளும் பதக்கங்களும் இந்தியாவிற்கு குவியட்டும். . .


Thursday, August 18, 2016

வாழ்த்துக்கள் சாக்ஷி, அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சிந்து




ஒலிம்பிக்கில் இன்று இந்தியாவிற்கு நல்ல நாள்.

பதக்கப்பட்டியலில் இருந்த காலியிடத்தை காணாமல் போகச் செய்த முதல் பதக்க மங்கை சாக்ஷி மாலிக் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

பாட்மிண்டன் அரை இறுதிப் போட்டியில் இன்று அற்புதமாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இரண்டாவது பதக்கத்தை (அது தங்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும் கூட) உறுதி செய்த பி.வி.சிந்து அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

மாஸ்கோ ஒலிம்பிற்குப் பிறகு சில ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லாமல் இருந்தது. பிறகு ஒன்று, இரண்டு என கிடைத்தது. போன ஒலிம்பிக்கில்தான் கொஞ்சம் முன்னேற்றம். 

எங்கே பழைய நிலைமைக்கு போய் விடப் போகிறதோ என்ற அச்சம் இன்றுதான் நீங்கியது. கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சும் வருகிறது.

மீண்டும் வாழ்த்துக்கள் வீராங்கனைகளே.