Monday, February 28, 2011

புதைகுழிக்குள் போவோமா?

பிரணாப் முகர்ஜி  இன்று சமர்ப்பித்த  பட்ஜெட் ஏமாற்றம்  அளிப்பது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.  பட்ஜெட்டின் துவக்க பாராக்களில்
பண வீக்கம், விலைவாசி உயர்வு,  விவசாயிக்கும் நுகர்வோருக்கும் 
உள்ள இடைவெளி பற்றியெல்லாம்  கூறி விட்டு  அதற்கான நடவடிக்கை
எதுவும் எடுத்துள்ளாரா  என்று பார்த்தால்  உள்ள நிலைமையை  மேலும் 
மோசமாக்கத்தான்  பார்த்துள்ளார். 

உணவுப் பொருட்கள், உரம், பெட்ரோலியப் பொருட்களின் மானியத்தை 
குறைக்க மட்டுமே  செய்துள்ளார்.  இதன் விளைவு  விலைவாசி உயர்வு 
மிகவும் கடுமையாக  எதிர்காலத்தில்  இருக்கும்  என்பதுதான். குளிர் பதனக் கிடங்குகளை  அதிகப்படுத்தினால்  பிரச்சினைகள்  எல்லாம் தீர்ந்து போகும்  என்பது போல அங்கங்கே மாய்ந்து மாய்ந்து  கூறுகின்றார். 
அதற்கு  ஏராளமான  சலுகைகள் வேறு. குளிர்பதனக் கிடங்குகள் அதிகரிப்பதில்  பதுக்கல்  அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.  இன்னொன்று 
சோனியா குடும்பத்தினர் ஒரு வேளை  இந்த வியாபாரத்தில்  இறங்கியிருக்கக் கூடுமோ? 

கறுப்புப் பணத்தைப் பற்றி மிகவும் கவலைப்படும் பிரணாப் முகர்ஜி, 
அவற்றை  வெளியே கொண்டு வர சில நாடுகளோடு  ஒப்பந்தம் போடப்
பட்டதாக வேறு  தெரிவிக்கிறார். ஆனால்  மொரீஷியஸ், சுவிஸ் போல 
எந்த நாடுகளில்  அதிகமாக இந்தியப் பணம் பதுக்கப்படுகின்றதோ, 
அந்நாடுகளோடு  ஒப்பந்தம் போடாதது ஏன்? 

தனி நபர் வருமான வரி விலக்கு குறைந்தபட்சம்  இரண்டு லட்சமாக 
உயராதா என்று ஏங்கியவர்கள்  எல்லாம் ஏமாற்றமடைந்துள்ளனர். 
பெண்களுக்கு  அளிக்கப்பட கூடுதல் முப்பதாயிரம் ரூபாய் விலக்கு 
இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை. அதைப்பற்றி கடந்த
பட்ஜெட்டுகள்  தனியாக, தெளிவாக  சொல்லும். இப்போது அதைப் பற்றி
எந்த பேச்சும் இல்லாததால் அச்சலுகை பறிக்கப்பட்டதாகவே  நான்
உணர்கிறேன்.  

நிதித்துறை சீர்திருத்தங்கள்  பற்றி  அவர் பட்டியல் இட்டுள்ளது மிகவும்
ஆபத்தான  விஷயங்கள். 

இன்சூரன்ஸ் துறை தொடர்பாக இரு மசோதாக்களை  நிறைவேற்றுவோம்  என்று  சொல்லியுள்ளார். 

எல்.ஐ.சி யின் மூலதனத்தை  உயர்த்துவது, பின்பு கொல்லைப்புற வழியாக  பங்கு விற்பனை செய்வது போன்ற மசோதாவில்  உள்ள 
மோசமான அம்சங்களை   நிதியமைச்சகத்திற்கான நாடாளுமன்ற 
நிலைக்குழு ஒருமனதாக  நிராகரித்துள்ளது.  

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய மூலதனத்தை  உயர்த்துவது என்பது
இந்திய மக்களின் சேமிப்பை அந்நிய கம்பெனிகளின் கட்டுப்பாட்டில் 
ஒப்படைப்பது என்பதே. இதற்கான மசோதா பற்றி  
நிதியமைச்சகத்திற்கான   நாடாளுமன்ற   நிலைக்குழு   இன்னமும் தனது
பரிந்துரையை அளிக்கவேயில்லை. 

ஆனால் அமைச்சரோ இப்போதே, இந்த கூட்டத்தொடரிலேயே 
நிறைவேற்றுவேன்  என்கிறார். அமெரிக்க கம்பெனிகளுக்கு அளித்த
உறுதி மொழி இவ்வாறு  சொல்ல வைக்கிறது. 

மற்ற மசோதாக்களும் அப்படித்தான். பின்பு அவை பற்றி விவரமாக
பார்ப்போம்.  சர்வதேச பொருளாதார நெருக்கடி பற்றி பேசிக்கொண்டே 
அதே புதை குழிக்குள்  நம்மை தள்ளும் ஆபத்தான பட்ஜெட் இது.



 

Sunday, February 27, 2011

அடி வாங்கிய பின்பாவது உணர்வார்களா?

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி விட்டு தமிழக
முதல்வரைப் பார்க்கச்சென்ற  தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கத்தின் 
தோழர்கள் மீது காவல்துறை  கொடுந்தாக்குதல்  நடத்தியிருக்கிறது. 
இந்தப் படங்களைப் பாருங்கள் 




இந்தத் தாக்குதலைத்தான்  தமிழக அரசு மென்மையான தடியடி நடத்தி
போராட்டக்காரர்களைக் கலைத்ததாகக் கூறியது. அநேகமாக அனைத்து 
முதலாளித்துவ ஊடகங்களும்  அரசு சொன்ன அதே  வார்த்தையைத்தான் 
தங்கள்  செய்திகளில் பயன்படுத்தியது. ஆங்கிலப் பத்திரிகைகள் Mild Lathi charge  என்று  எழுதின.  இந்த மென்மையான தாக்குதலிலேயே  மண்டை 
உடைந்தது, உதடுகளும் காதுகளும் கிழிந்தது, முதுகெங்கும்  வரிகள். 

மென்மையான தாக்குதலே  இப்படி என்றால் இவர்கள் பலமாக 
தாக்கினால் உயிரே  போயிருக்கும் போல.  ரஜனிகாந்தின் பாட்சா 
படத்தில் " உடல், புத்தி எல்லாவற்றிலும் சண்டை வெறி ஊறிப்போன 
ஒருவனால்தான் இப்படி அடிக்க முடியும் " 

அது போல நம் காவல்துறையின் நாடி நரம்பெல்லாம் மிருக வெறி 
ஊறிப்போயுள்ளதால்தான்   இப்படி ஒரு கொடூரத் தாக்குதலை 
நிகழ்த்தியுள்ளனர். கலைஞரின் இரும்புக்கரம்  இந்த ஐந்தாண்டுகளில் 
இது போன்ற ஏராளமான  தாக்குதலை நடத்தியுள்ளது. 

ஆட்சியில் பங்கு, அதிகமான சீட்டுக்களைக் கேட்கும் காங்கிரஸ் 
கட்சியிடம் காண்பிக்க முடியாத வீரத்தை, கையாலாகாததனத்தை 
இப்படி போராடுபவர்களிடம் காண்பிக்கிறார், இந்த சூராதி சூரர். 

தடியடி பெற்றது ஒரு சங்கத்தின் தோழர்கள்  என்றாலும்  ஒட்டு மொத்த
அரசு ஊழியர்கள் மீது விழுந்த அடியாகவே கருத வேண்டும். பிட்டுக்கு 
மண் சுமந்த கதையில் வருவது போல சிவா பெருமானின் முதுகில் 
விழுந்த அடியின் வலியை  அனைவருமே உணர்ந்தது போல  தங்கள் மீது விழுந்த அடியாக  ஒவ்வொரு  அரசு ஊழியரும்  உணர வேண்டும். 
பகை முடிக்கும் பணி  இந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும்  வந்துள்ளது என்பதை  மறக்கக் கூடாது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இடைக்கால நிவாரணம் 
அளித்து  அரசு ஊழியர்களை நன்றாகவே  கலைஞர்  ஏமாற்றினார். 
இன்னும் கொடுப்பார், எதுவும் கொடுப்பார், போதாது போதாது என்றால்
தன்னைக் கொடுப்பார், தன உயிரும் தான் கொடுப்பார்  என்று நம்பி
பட்டன் தேயும் வரை அழுத்தி  காங்கிரஸ் கூட்டணிக்கு கூடுதல் 
இடம் பெற்றுக் கொடுத்ததில்  அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு 
முக்கிய பங்கு உண்டு. 

நாடாளுமன்றத் தேர்தலில்  நுண் பார்வையாளராக ( Micro Observer) 
வாக்கு எண்ணிக்கைக்கு சென்றிருந்தேன்.  நான் இருந்தது ஒரு 
சட்டமன்றத் தொகுதிக்கான  வாக்குகள் எண்ணப்பட்ட அறைக்கு. 
ஒரே ஒரு சுற்றித் தவிர மீதமுள்ள  அனைத்து  சுற்றுகளிலுமே 
திமுக கூட்டணி முன்னிலையில் இருந்தது. வாக்கு எண்ணிக்கை 
நிலவரம் தெரிகின்ற போதெல்லாம் வாக்கு எண்ணும் பணியில் 
இருந்த ஊழியர்களே  திமுக வெற்றியை மகிழ்ச்சியோடு  
கொண்டாடினார்கள்.  ஏன்  இந்த உற்சாகம் என்று கேட்டதற்கு 
தேர்தலுக்குப் பிறகு  ஆறாவது ஊதியக்குழுவின்  அனைத்து  
பலன்களும் தங்களுக்கும்  கிடைக்கும்  என காரணம்  சொன்னார்கள். 

ஆனால் கிடைத்தது  வெறும் ஏமாற்றம் மட்டுமே. இப்போது கூடுதல் 
ஊக்கத்தொகையாக  அடியும் உதையும்.  ஒரு கையெழுத்தில் ஒரு 
லட்சம் ஊழியர்களை வீட்டிற்கு  அனுப்பிய ஜெயலலிதாவை  மீண்டும் 
ஆதரிப்பதா  என்ற நியாயமான  கேள்வி அரசு ஊழியர்கள் மத்தியில் 
உள்ளது.  ஜெயலலிதா அரசை  ஐந்தாண்டுகள் முன்பு வீட்டிற்கு அனுப்பிய 
பெருமை  அரசு ஊழியர்களுக்கு உண்டு,

இப்போதும் அதே பணியை செய்து திமுக அரசை வீழ்த்தினால்  இனி வரும்  எந்த  அரசும்  உழைப்பாளி மக்கள் மீது  கை வைக்க யோசிக்கும். 
மீண்டும் கலைஞரையே   ஆதரித்தால்  அடியும் உதையும் அன்றாட 
நிகழ்வாகி விடும். 

அனைத்து  அரசு ஊழியர்களும் இந்த உண்மையை உணர்ந்திட வேண்டும்.
 

 

சிம்பு, பரத், நமீதா கலந்து கொண்ட பேரணியில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பு!

பிப்ரவரி மாதம் 23 ம் நாள்  புதுடெல்லியில்  சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள்  கலந்து கொண்ட  பேரணி. நம்மில்  எத்தனை 
பேருக்கு  அதைப்பற்றி  தெரியும்? எத்தனை  தொலைக்காட்சிகள் 
அதைக் காட்டின? எத்தனைப் பத்திரிகைகள்  இப்பேரணி  பற்றி 
பிரசுரித்தன? கீழே  உள்ள படங்களை தீக்கதிர் தவிர வேறு  எந்த
பத்திரிக்கையிலும்  நான் பார்க்கவில்லை.








  
அனைத்து  முதலாளித்துவ ஊடகங்களின்  அரசியலே  இப்பேரணி 
பற்றிய இருட்டடிப்பிற்கு காரணம்.  பேரணி பற்றி  செய்தி வெளியிட்டால்  ஆளும் வர்க்கத்திற்கு  இரண்டு சங்கடம். 
ஒன்று  பேரணியின் கோரிக்கைகளான விலைவாசி உயர்வு, 
பொதுத்துறை  பங்கு விற்பனை கூடாது, போன்றவை பற்றியெல்லாம்
விவாதம்  வருவது அவசியமற்றது  என்று  கருதுகின்றனர். 
இன்னொன்று காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான  ஐ,என்,டி.யு.சி 
பங்கேற்பதைப் பற்றியும்  எழுத வேண்டும்.  இது இன்னொரு தர்ம சங்கடம். 


பேரணியைப் பற்றி எழுதுவதை விட இருட்டடிப்பு செய்வது என்பது 
எளிதான வழியாக இருந்தது. 


ஒரு வேலை நமீதா  போன்ற நட்சத்திரங்கள்  பங்கு பெற்றிருந்தால் 
வேண்டுமானால்  இந்திய ஊடகங்கள் அக்கறை  செலுத்தியிருக்கலாம்.


பின்குறிப்பு: தலைப்பைப் பார்த்துதானே  நீங்களும் பதிவை படிக்க 
வந்தீர்கள்?
 

Saturday, February 26, 2011

அப்படி என்ன அவசரம்? அறிவற்றவர்கள்!

மிகுந்த வேதனையோடும் எரிச்சலோடும்  எழுதும் பதிவு இது. 
இன்று  மாலை  ஒரு  ஏழு மணி  போல  வேலூர் ஆபிசர்ஸ் லைனில்
(இப்போது  அண்ணா சாலை ) மகனோடு  இரு சக்கர வாகனத்தில்  
சென்று  கொண்டிருந்தேன்.  பின்னே  ஒரு  ஆம்புலன்ஸ் வரும்  ஒலி
கேட்டு  ஒதுங்கினேன்.  
ஆனால்  அப்போது  சாலையில்  சென்று கொண்டிருந்தவர்களில்  ஒருவர் 
கூட  ஆம்புலன்சுக்காக  ஒதுங்கத் தயாராகவில்லை.  அரசுப்பேருந்து, 
தனியார் பேருந்து,  கார், இரு சக்கர வாகனம்  என யாருமே  வழி விடத் 
தயாராகவேயில்லை. ஆம்புலன்ஸ் எழுப்பிய சைரன், ஹாரன்  ஒலிகள் 
அவர்களது  காதிலேயே  விழாதது போல  பரபரப்பாக  சென்று 
கொண்டிருந்தார்கள். 

அப்படி  எதைச்சாதிக்க  கொஞ்சம் கூட மனிதாபிமானமே  இல்லாமல் 
போய்க்கொண்டிருந்தார்கள்  என்று  தெரியவில்லை.  நிச்சயமாக 
எகிப்து போல, துனிஷியா போல  மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு 
எதிராக போராடச்செல்லவில்லை . ஒரு உயிர்  போராடிக்கொண்டிருக்கிறது  என்ற உணர்வே  இல்லாமல்  வேலூர் கோட்டையைப் பார்த்து விட்டு வந்த சுற்றுலாப்பயணிகள் கும்பல் 
ஒன்று  ஆம்புலன்சை  நிறுத்தி விட்டு  சாலையைக் கடந்தது  ஒரு 
கொடுமை. 

அனைத்து நேரங்களிலும்   இந்த தேசத்தின் மக்கள்  இவ்வளவு  வேகமாகவா  உள்ளார்கள்.  ரேஷன் கடையிலோ,  வங்கியிலோ  
வரிசையில் நிற்க வேண்டுமென்றால் அலுத்துக் கொள்வார்கள். 
அவர்களின் பணிச்சுமை, குறைந்து வரும் ஊழியர்  எண்ணிக்கை 
குறித்தெல்லாம்  இவர்களுக்கு  என்ன  கவலை? வாக்களிக்க நிற்பது 
மிகப் பெரிய தியாகம்!

ஆனால் திரை அரங்குகளிலோ  அல்லது, திருப்பதி, வேலூர் பொற்கோயில்  போன்ற  கோவில்களிலோ  எத்தனை மணி நேரம் 
வேண்டுமானாலும்  முகம் சுளிக்காமல்  காத்திருப்பார்கள்.
இப்படி கொஞ்சம் கூட  சமூகப் பொறுப்பே  இல்லாதவர்களைப் 
பார்த்து கோபத்துடன் திட்டத் தோன்றுகிறது. 

அறிவற்றவர்கள் 

 


  

Friday, February 25, 2011

புதிய சர்வதேச தொழிற்சங்கக் கூட்டமைப்பு உதயம்

உலகெங்கும்  உள்ள  வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில்  பணியாற்றும் 
ஊழியர்களுக்கான  புதிய சர்வதேச தொழிற்சங்கக் கூட்டமைப்பு உதயமாகி உள்ளது. நேற்றும் இன்றும் புதுடெல்லியில்  நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு  நாடுகளில்  உள்ள நிதித்துறை  ஊழியர்களின்  சங்கங்களின் பொறுப்பாளர்கள்  பங்கேற்றனர்.  இப்புதிய கூட்டமைப்பு  கிரீஸ் நாட்டிலிருந்து  செயல்படுகின்ற  உலகத் தொழிற்சங்கக் கூட்டமைப்போடு (World  Federation of Trade Unions) இணைக்கப்பட்டுள்ளது. 

இவ்வமைப்பின் பொதுச்செயலாளராக  அகில இந்திய வங்கி ஊழியர் சங்க  தோழர் சி.ஹெச .வெங்கடாசலம் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். 

இவ்வமைப்பின் செயலாளராக  எங்கள்  அகில இந்திய இன்சூரன்ஸ்
ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்  தோழர் கே.வேணுகோபால் 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வைரவிழாவைக் கொண்டாடும்  இந்நேரத்தில்  இச்செய்தி மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. 
தோழர் கே.வேணுகோபால்  அவர்களுக்கு வாழ்த்துக்கள். 


புதிய கூட்டமைப்பின் பணிகளும் பயணமும் வெல்லட்டும்.
 

 

Wednesday, February 23, 2011

அயோத்தி தீர்ப்பு கரசேவையின் ஆயுதம்

 எங்கள்  வேலூர் கோட்டச்சங்கத்தின்  செய்தி மடலான 
சங்கச்சுடரின்  பிப்ரவரி மாத இதழிற்காக  எழுதியது. 


Ëô¢ Üø¤ºèñ¢
¹î¢îèñ¢ :  Ü«ò£î¢î¤ î¦ó¢ð¢¹
         èó«ê¬õò¤ù¢ Ý»îñ¢

ªî£°ð¢¹ñ¢ ªñ£ö¤ªðòó¢ð¢¹ñ¢ : Ü«ê£èù¢ ºî¢¶ê£ñ¤

ªõ÷¤ò¦´  : ð£óî¤ ¹î¢îè£ôòñ¢
         ªêù¢¬ù 18

õ¤¬ô   : Ïð£ò¢ 30/ -

Þï¢î¤ò£õ¤ù¢ åø¢Á¬ñ袰ñ¢ ñîê£ó¢ð¤ù¢¬ñ袰ñ¢ ÜꢲÁî¢îô¢ ãø¢ð´î¢¶õî£ò¢ Þù¢ø÷¾ñ¢ à÷¢÷ ð¤óê¢ê¤¬ù Ü«ò£î¢î¤ð¢ ð¤óê¢ê¤¬ù. êó¢ê¢¬ê袰ó¤ò ï¤ôñ¢ ò£¼è¢° ªê£ï¢îñ¢ âù¢ð¶ °ø¤î¢î Üôè£ð£î¢ àòó¢ ï¦î¤ñù¢øî¢ î¦ó¢ð¢¹ ðø¢ø¤ ðô õ¤îñ£ù è¼î¢¶è¢è÷¢ ªõ÷¤ õï¢îù. êì¢ìó¦î¤ò¤«ô£, õóô£ø¢Á ó¦î¤ò¤«ô£ ܬñò£ñô¢ ðë¢ê£ò î¦ó¢ð¢¹ «ð£ô ܬñ÷¢÷¶ âù¢ø è¼î¢«î ªð¼ñ¢ð£ô£ùõó¢è÷£ô¢ ºù¢¬õè¢èð¢ðì¢ì¶. î¦ó¢ð¢¹ ðø¢ø¤ êì¢ì 魯íó¢è÷¢ ã.ü¤.Ëóù¤, ó£«üï¢î¤ó êê¢ê£ó¢, ®.Ýó¢.Üï¢î¤òó¢ü¦ù£ ñø¢Áñ¢ õóô£ø¢Á Ýò¢õ£÷ó¢è÷¢ ªó£ñ¤ô£ î£ðó¢, ®.âù¢.ü£, ü£õ¦î¢ Ýôñ¢ Ý褫ò£ó¢ è좴¬óè÷£è¾ñ¢ «ïó¢ è£íô¢è÷£è¾ñ¢ ªîó¤õ¤î¢î è¼î¢¶è¢è÷¤ù¢ ªî£°ð¢«ð Þï¢î Ëô¢. î¦ó¢ð¢¹ ðø¢ø¤ò è´¬ñò£ù õ¤ñó¤êñ£è ܬñ÷¢÷ Þï¢î𢠹î¢îèî¢î¤¬ù ªî£°î¢¶ â¿î¤»÷¢÷ Ü«ê£èù¢ ºî¢¶ê£ñ¤ êé¢ðó¤õ£óè¢ °ñ¢ð¬ô»ñ¢ ï¦î¤î¢¶¬ø¬ò è£õ¤ñòñ£è¢è ªêò¢òð¢ð´ñ¢ ºòø¢ê¤è÷¢ ðø¢ø¤ îù¶ è좴¬óò£ù ó£ñó¢ «è£ò¤½ñ¢ è¿ñóºñ¢ âù¢ø ï¦í¢ì è좴¬óò¤ô¢ Üñ¢ðôð¢ð´î¢¶è¤ù¢ø£ó¢.

¹î¢îèî¢î¤ù¢ ê¤ô ð°î¤è÷¢
“ ê£è¤î¢èë¢ê¢ ñÅî¤ õöè¢è¤ô¢ 1722 ñ¢ Ýí¢´ å¼ ñÅî¤ èì¢ìð¢ðì¢ìîø¢è£ù ºú¢ô¤ñ¢ Üøè¢èì¢ì¬÷ò¤ù¢ ñÁè¢è º®ò£î Ýî£óñ¢ Þ¼è¢è¤ù¢ø¶. Ýù£ô¢ ܶ 1762ñ¢ Ýí¢®ø¢°ð¢ ð¤ù¢ùó¢ Üï¢î ñÅî¤ ê¦è¢è¤òó¢è÷¤ù¢ õêñ¢ õï¢î¶. Þ¼ðî£ñ¢ Ëø¢ø£í¢®ô¢ ªê£î¢¶ «õªø£¼õó¤ìñ¢ Þ¼è¢è¤ø¶ âù¢è¤ø Ü®ð¢ð¬ìò¤ô¢ ñ£õì¢ì ï¦î¤ñù¢øñ¢, ô£Ãó¢ ï¦î¤ñù¢øñ¢, ð¤¬óõ¤ è¾ù¢ê¤ô¢ Ýè¤ò¬õ ºú¢ô¤ñ¢èÀ袰 âî¤ó£è î¦ó¢ð¢ð÷¤î¢îù. Üï¢î î¦ó¢ð¢¬ð ó ªêò¢¶ êì¢ìñ¤òø¢Áñ£Á â¿ð¢ðð¢ðì¢ì «è£ó¤è¢¬èè¬÷ ðë¢ê£ð¢ ºîô¬ñê¢êó¢ ê¤è¢èï¢îó¢ ýò£î¢ è£ù¢ ï¤ó£èó¤î¢î£ó¢. ü¤ù¢ù£ Üõ¬ó º¿¬ñò£è Ýîó¤î¢î£ó¢. Þð¢«ð£¶ å¼ ê¦è¢è¤ò °¼î¢õ£ó£õ£è Üï¢î ñÅî¤ Þù¢Áñ¢ Þ®è¢èð¢ðì£ñô¢ ô£Ãó¤ô¢ Þ¼è¢è¤ù¢ø¶.
--- ã.ü¤.Ëóù¤
ñèù¢ îî¬òè¢ ªè£ù¢ø£ô¢, îîò¤ù¢ ªê£î¢î¤ø¢° õ£ó¤ê£°ñ¢ àó¤¬ñ 褬ìò£¶ âù¢Á ªð£¶õ£ù êì¢ìñ¢ ÃÁè¤ù¢ø¶. Ýù£ô¢ Þ颫è ñÅò Üö¤î¢î °í¢ìó¢è÷¢ î£é¢è÷¢ õ¤¼ñ¢ð¤ò¬î ªðÁè¤ù¢ø£ó¢è÷¢.
---ï¦î¤òóêó¢ ó£«üï¢î¤ó êê¢ê£ó¢
«è÷¢õ¤ : õóô£ø¢Á àí¢¬ñ¬ò»ñ¢ ïñ¢ð¤è¢¬è¬ò»ñ¢ ñ£í¢¹ñ¤° ï¦î¤ðî¤è÷¢ «õÁð´î¢î¤ð¢ ð£ó¢î¢î¤¼è¢è «õí¢ì£ñ£?

ðî¤ô¢: õóô£ø¢Áê¢ ê£ù¢Áè÷¤ù¢ Þìî ïñ¢ð¤è¢¬è ð¤®ð¢ðîø¢° âð¢«ð£¶ñ¢ ÜÂñî¤î¢î¤¼è¢èè¢ Ã죶. è£óí è£ó¤ò Üø¤¬õ ïñ¢ð¤è¢¬è ªõù¢Á õ¤ì¢ì¶ «ð£ô ªîó¤è¤ù¢ø¶. Þ¶ ¶ó¢ð£è¢è¤òñ£ù¶. ïñ¢ð¤è¢¬è õóô£ø¢¬ø ñÁè¢è¤ù¢ø¶.
--- ®.âù¢.ü£
õöè¢è¤ô¢ êñ¢ðï¢îð¢ðì¢ì å¼ èì¢ê¤è¢è£óó¢ êì¢ìî îù¢ ¬èè÷¤ô¢ â´î¢¶è¢ ªè£í¢´ ޼袰ñ¢ 郎ô¬ò îùè¢°ê¢ ê£îèñ£ù õ¬èò¤ô¢ ñ£ø¢ø¤è¢ªè£í¢ì£ªóù¤ô¢ (Þõ£î¤èÀ袰 ê£îèñ£è 1992ô¢ ñÅî¤ Þ®è¢èð¢ðì¢ì¶ «ð£ô) Üîø¢° ºù¢ð¤¼ï¢î 郎ô¬ò ñ¦ì¢ªì´è¢è «õí¢´ñ¢ âù¢Úî£ù¢ ï¦î¤ñù¢øñ¢ àî¢îóõ¤´ñ¢. Þ¶î£ù¢ ï¦î¤ò¤ù¢ Ü®ð¢ð¬ì õ¤î¤ò£°ñ¢.

Þï¢î õöè¢è¤ô¢ ܶ «ð£ô ê£î¢î¤òñ¤ô¢¬ô âù¤ô¢, êì¢ì õ¤«ó£îꢪêòô¤ô¢ ß´ðì¢ì èì¢ê¤è¢è£ó¼è¢° ܶ ÜÂÃôñ£è Þ¼ð¢ð¬î ï¦î¤ñù¢øñ¢ ÜÂñî¤è¢è£¶. ï¦î¤ò¤ù¢ Þï¢î Ü®ð¢ð¬ì õ¤î¤¬ò Üôè£ð£î¢ àòó¢ï¦î¤ñù¢øî¢ î¦ó¢ð¢¹ Üôì¢ê¤òð¢ð´î¢î¤ õ¤ì¢ì¶.
---®.Ýó¢.Üï¢î¤òó¢ü¦ù£
500 Ýí¢´èÀ袰 ºù¢¹ èì¢ìð¢ðì¢ì å¼ ñÅî¤, ïñ¶ ð£óñ¢ðó¤òî¢î¤ù¢ å¼ ð°î¤ò£è Å¢Çí¸¢Â ´Õ ´Õ ÁÝÊ þÊì¸ôÀð¼Ð. þó¾ Áݾ¢¨Â ´Õ ¦ÅÈ¢ À¢Êò¾ Üð¼õ þÊò¾Ð. þó¾ ÌõÀÖìÌ ´Õ «Ãº¢Âø ¸ðº¢Â¢ý ¾¨ÄÅ÷ ¯üº¡¸ãðÊ즸¡ñÊÕó¾¡÷. ¿ÁÐ À¡ÃõÀ¡¢Âò¾¢üÌ ±¾¢Ã¡É þó¾ ÌüÈõ §ÅñΦÁý§È ¿¢¸úò¾ôÀð¼Ð. þ¨¾ìÌÈ¢òÐ, ¾£÷ôÀ¢ý ÍÕì¸ò¾¢ø ±ó¾Å¢¾Á¡É¦¾¡Õ ¸ñ¼ÉÓõ ¦¾¡¢Å¢ì¸ôÀ¼Å¢ø¨Ä.
-         ¦Ã¡Á£Ä¡ ¾¡ôÀ÷


«ÎòÐ ÅÕõ ¸ÕòÐ Á¢¸×õ Ó츢ÂÁ¡ÉÐ. «Ð¾¡ý ¾¡÷ò¾Á¡ÉÐõ ܼ
§¸ûÅ¢ : «Ä¸¡À¡ò ¯Â÷¿£¾¢ÁýÈò ¾£÷ôÒ ¿¡ðÊÖûÇ ÅÌôÒÅ¡¾ ºì¾¢¸¨Ç ÅÖôÀÎòÐõ ±ýÚ ¿£í¸û ¿¢¨É츢ȣ÷¸Ç¡?

À¾¢ø : ÝÆ¨Ä º£÷¦¸ÎôÀ¾¢ø ÅÌôÒÅ¡¾ ºì¾¢¸û ¦ÅüÈ¢¦ÀÚõ ±ýÚ ¿¡ý ¿¢¨Éì¸Å¢ø¨Ä. ºÓ¾¡Âõ «¾üÌ «ôÀ¡ø ¿¸÷óРŢð¼Ð. ¦À¡Ð ¦ÅǢ¢ø áÁ÷ À¢Ã¨É ¬¾¢ì¸õ ¦ºÖòÐõ ¿¢¨Ä¨Â «ÛÁ¾¢ì¸ ºÓ¾¡Âõ ¾Â¡Ã¡¸ þø¨Ä. «ýÈ¡¼ Å¡ú쨸ô À¢Ã¨É¸¨Ç Ó츢ÂÁ¡É¨Å¸Ç¡¸ Áì¸û ¸Õи¢ýÈ¡÷¸û.
-         ƒ¡§Åò ¬Äõ
¾£÷ôÒ ÀüȢ   Áɺ¡ðº¢Â¢ý ÌÃÄ¡¸ «¨ÁóÐûÇÐ þó¾ áø. º¢ì¸Ä¡É À½¢¨Â ¦ºõ¨Á¡¸ ¦ºöÐûÇ¡÷ «§º¡¸ý Óòк¡Á¢. கரசேவையின்  ஆயுதம் என்ற தலைப்பிற்கும் பாராட்டுக்கள்.



Tuesday, February 22, 2011

நாளை நமது நாள்

நாளை இந்தியாவின் தலைநகரம்  குலுங்கப் போகிறது. இத்தேசத்தை 
உண்மையாய் நேசிக்கிற  உழைப்பாளி மக்கள் இந்தியாவின் அதிகார 
மையமாம் நாடாளுமன்றத்தை  நோக்கி பேரணியாக  செல்லவுள்ளனர். 
முதலாளித்துவ அரசியல் கட்சிகள்  தங்களின்  அரசியல் ஆதாயத்திற்காக நடத்துகின்ற வெற்று  முழக்கங்களோடான நடவடிக்கை அல்ல இந்தப் பேரணி. குவார்ட்டர் பாட்டிலும் கோழி பிரியாணியும் கொடுத்து அழைத்துவரப்படும் கூட்டமும் அல்ல. 

ஏன் இந்தப் பேரணி? 

யாரெல்லாம் பேரணியாய் செல்கின்றனர்? 
இத்தேசத்தின் தொழிற்சங்க இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து 
நடத்துகின்ற பேரணி இது. ஆலைகளில்  உழைக்கிற தொழிலாளி முதல் 
சாலைகளில் ரிகஷா இருக்கிற தொழிலாளி முதல் பீடி சுற்றும் 
தொழிலாளி, சமையலறை அடுப்புக்களில் வெந்து போகும் சத்துணவு,
அங்கன்வாடி ஊழியர்கள், மத்திய, மாநில, பொதுத்துறை ஊழியர்கள், 
ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு ஊழியர்களும்  பங்கேற்கின்ற 
பேரணி இது. 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துங்கள், ஆன்லைன் வர்த்தகத்தை 
தடை செய்யுங்கள், பொது விநியோக முறையை  பலப்படுத்துங்கள்! 
பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறையுங்கள். வரி விதிப்பு 
முறையை மாற்றியமைத்தால் அது சாத்தியமே.

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை  நிறுவனங்களில் புதிய பணி
நியமனத்திற்கு  போடப்பட்டுள்ள தடைகளை  அகற்றுங்கள். 


ஊக்கத்தொகை, தொழில் மானியம், ஊக்கச்சலுகை  என்று பல 
பெயர்களில்  அரசிடமிருந்து  உதவி பெறும்  எந்த ஒரு நிறுவனமும் 
ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது  என்று நிபந்தனை 
விதியுங்கள்.


வேலை உறுதிச்சட்டத்தை  இருநூறு நாட்களுக்கு விரிவு படுத்துங்கள் 


அணி சேராத தொழிலாளர்களுக்கு  சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.


விவசாயப் பொருட்களுக்கு  நியாயமான விலை கிடைப்பதை 
உத்தரவாதப்படுத்துங்கள்


சர்வதேச பொருளாதார நெருக்கடியில்  இந்தியா சின்னாபின்னமாகாமல் 
காத்து நின்ற பொதுத்துறை  வங்கிகள், எல்.ஐ.சி மற்றும்  பொதுத்துறை 
பொதுக்காப்பீட்டு  நிறுவனங்கள்  எதையும் சீர்குலைக்கும்  முயற்சிகளை 
கைவிடுங்கள். 

நடுத்தர ஊழியர்களுக்கான வருமான வரி வரம்பை மூன்று லட்சமாக 
உயர்த்திடுங்கள். 


சில்லறை வர்த்தகத்தில்  அந்நிய மூலதனத்தை அனுமதிக்காதீர்கள்

பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்காதீர்கள்

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடக்கிற பேரணி இது. 

இக்கோரிக்கைகளை  ஏற்றால்  மத்தியரசு வார்த்தைகளில் மட்டுமே 
உருகுகின்ற ' அம் ஆத்மி ' க்களின் சாமானிய மனிதர்களின் 
வாழ்நிலை  உயரும். அப்போது தேசமும் உண்மையிலேயே  
வளம் பெறும். 

மாற்றத்திற்கான கொள்கைகளை முன்வைத்து நடக்கிற 
இப்பேரணியில் கலந்து கொள்ளப் போகின்றவர்கள்  பல லட்சம்
என்றால், அதே உணர்வோடு தேசம் முழுவதும் பரவி உள்ளவர்கள்
சில கோடி. 

இந்த உணர்வு உழைப்பாளி மக்களை ஒன்று படுத்தும். 
நாளை டெல்லி சிவக்கும்,
எகிப்து போல எழுச்சி அளிக்கும்.
நிச்சயம் நாளை நமது நாள். 
உழைப்பாளி மக்களின் நாள்.    

Monday, February 21, 2011

பார்வதி அம்மாவை கொன்றது இந்திய அரசுதான்

பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மா அவர்களின் மரணம் 
வருத்தமளிக்கிறது. இந்த இறப்பை தவிர்த்திருக்க முடியும். தாமதித்து 
இருக்க முடியும். மருத்துவ சிகிச்சைக்கு வந்தவரை திருப்பி அனுப்பி, 
மீண்டும் வராமல்  இருக்க ஆயிரத்தெட்டு நிபந்தனைகள்  விதித்து 
இந்திய அரசு அவரைக் கொன்று விட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த
ப.சிதம்பரம்  உள்துறை அமைச்சராய் இருந்து இக்கொலைக்கு தலைமை
தாங்கினார் என்றால்  அதற்கு உடந்தையாக இருந்த பெருமை தமிழினக் 
காவலர் கலைஞருக்கு உண்டு. 
இவர்களை காலம் மன்னிக்காது.
 

நீங்கள் யார் பக்கம்?

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி  அவர்களே 
நீங்கள்  யார்  பக்கம்? 

உங்களை 12 ஜனவரி 2011  அன்று ஒன்பது  மத்திய தொழிற்சங்கங்களின் 
தலைவர்கள்  சந்தித்துள்ளார்கள்.  ஒரு வேலை  எவ்வித சிக்கலும் இல்லாமல்  உங்களால்  இவ்வாண்டு  நிதிநிலை  அறிக்கை தாக்கல் 
செய்ய இயலுமானால்   அதிலே  அவர்கள்  என்ன எதிர்பார்க்கின்றார்கள் 
என்பதையும்  விளக்கியுள்ளார்கள்.  தலைப்பாகை  கட்டிய நமது 
மரியாதைக்குரிய பிரதமர்  தான்  விரும்பாத  எதுவும்  தன் செவிகளில் 
வந்து விழக்கூடாது  என்பதற்கு  எப்படி  தன் டர்பனையே  கவசமாக 
பயன்படுத்துகின்றாரோ, அது போல  தொழிற்சங்கத் தலைவர்கள்  
சொல்வது  உங்கள்  காதில், மூளையில்  ஏறாவிட்டால்  என்ன செய்வது 
என்ற அச்சத்தோடு  தங்கள்  கோரிக்கைகளை  ஒரு மனுவாக எழுதியும் 
உங்கள் கையில் அளித்துள்ளார்கள். அதைப் படித்து விட்டீர்களா? இல்லை
தண்ணீர் தண்ணீர் திரைப்படம் போல போக வேண்டிய  இடத்திற்கு 
சென்று விட்டதா? 

பரவாயில்லை. அந்த மனுவின் முக்கிய அம்சங்களை மட்டும் நான் 
நினைவுபடுத்துகின்றேன். 

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துங்கள், ஆன்லைன் வர்த்தகத்தை 
தடை செய்யுங்கள், பொது விநியோக முறையை  பலப்படுத்துங்கள்! 
பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறையுங்கள். வரி விதிப்பு 
முறையை மாற்றியமைத்தால் அது சாத்தியமே.

மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை  நிறுவனங்களில் புதிய பணி
நியமனத்திற்கு  போடப்பட்டுள்ள தடைகளை  அகற்றுங்கள். 


ஊக்கத்தொகை, தொழில் மானியம், ஊக்கச்சலுகை  என்று பல 
பெயர்களில்  அரசிடமிருந்து  உதவி பெறும்  எந்த ஒரு நிறுவனமும் 
ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது  என்று நிபந்தனை 
விதியுங்கள்.


வேலை உறுதிச்சட்டத்தை  இருநூறு நாட்களுக்கு விரிவு படுத்துங்கள் 


அணி சேராத தொழிலாளர்களுக்கு  சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.


விவசாயப் பொருட்களுக்கு  நியாயமான விலை கிடைப்பதை 
உத்தரவாதப்படுத்துங்கள்


சர்வதேச பொருளாதார நெருக்கடியில்  இந்தியா சின்னாபின்னமாகாமல் 
காத்து நின்ற பொதுத்துறை  வங்கிகள், எல்.ஐ.சி மற்றும்  பொதுத்துறை 
பொதுக்காப்பீட்டு  நிறுவனங்கள்  எதையும் சீர்குலைக்கும்  முயற்சிகளை 
கைவிடுங்கள். 

நடுத்தர ஊழியர்களுக்கான வருமான வரி வரம்பை மூன்று லட்சமாக 
உயர்த்திடுங்கள். 


சில்லறை வர்த்தகத்தில்  அந்நிய மூலதனத்தை அனுமதிக்காதீர்கள்

பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்காதீர்கள் 

இதைப்போல  எத்தனையோ  கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 
இவற்றை அமுலாக்க தேவையான நிதியாதாரத்தை  திரட்டும் வழியையும்  சொல்லியுள்ளார்கள் 


நிறுவன வரியாக மட்டும் வசூலிக்கப்படாத  தொகை இரண்டு லட்சம் 
கோடி ரூபாய். கடந்தாண்டுகளில்  நீங்கள் அள்ளி விட்ட சலுகைகள் 
1 .8  லட்சம்  கோடி ரூபாய் ( அது என்ன உங்கள் ஆட்சியில்  எல்லா 
தொகையும்  ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாகவே  உள்ளது?)
பழைய வரி பாக்கியை கறாராக வசூலித்து  நிறுவன வரியை சற்று 
உயர்த்தினாலே  போதும். தேவைப்படும் நிதி வந்து குவியும். 


நம் ஒட்டு மொத்த அன்னியக்கடனைக் காட்டிலும்  இரு மடங்குத்தொகை 
வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கொண்டுள்ளதே, அதை கொண்டு 
வந்தால் பற்றாக்குறை பட்ஜெட்  என்ற பேச்சுக்கே இடம் கிடையாதே! 


இந்திய வங்கிகளில் கடன் வாங்கிய பல பெரிய மனிதர்கள் அதை திருப்பிச்செலுத்தாமல்  ஏய்த்து வருகின்றனரே  அதை கண்டிப்பாக 
வசூல் செய்யுங்கள்! 


இதுதான்  தொழிற்சங்கங்கள்  உங்களிடம் வைத்துள்ள கோரிக்கைகள். 
சி.ஐ.டி.யு  போன்ற  இடதுசாரி தொழிற்சங்கங்கள்  மட்டுமல்ல  உங்களது
காங்கிரஸ் கட்சியின்  ஐ.என்.டி.யு.சி,  பொருளாதாரக் கொள்கைகளில் 
உங்களோடு ஒட்டி  உறவாடுகின்ற  பாரதீய ஜனதா கட்சியின் சங்கமான
பி.எம்.எஸ்  கூட  மற்றவர்களோடு  ஒன்றிணைந்து  நிற்கிறார்கள். 
நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் ? 


கிட்டத்தட்ட நாட்டின் மக்கட்தொகையில்  99 சதவிகிதம் இக்கோரிக்கைகளை  நிறைவேற்றினால் பலனடைவார்கள். அதைச்செய்யப போகின்றீர்களா?

  அல்லது 

11 ஜனவரி அன்று  உங்களைப் பார்த்த பெரு முதலாளிகள் 

நிறுவன வரியைக் குறைக்க வேண்டும்

சில்லறை வணிகத்தை அந்நிய முதலாளிகளுக்கு திறந்து விட வேண்டும்

பாதுகாப்பு தளவாட உறபத்தியையும் அந்நிய முதலாளிகளுக்கு திறந்து விட வேண்டும். 

இன்சூரன்ஸ் துறையை  வேறு இன்னும் அதிகமாக  வெளிநாட்டினருக்கு 
திறந்து விட வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளா? 
சுய நலன் மட்டுமே
சார்ந்த கோரிக்கைகளா?

நிதியமைச்சரே, நீங்கள் யார் பக்கம்? 
அறிந்து கொள்ள ஆவலுடன் 
காத்திருக்கிறோம்.

இவன் 
ஒரு சாதாரண ஊழியன்   


 






Saturday, February 19, 2011

எதிர்காலம் பத்திரமாய் ...

எதிர்காலம் பத்திரமாய் ... 
                      எல்.ஐ.சி.யின் கைகளில் ... 
இணையுண்டோ  இவ்வுலகில் ...

  •  35 கோடி  தனி நபர் மற்றும்  குழுக்காப்பீட்டு   பாலிசிகளைக் கொண்ட    உலகின்   முதல் பெரும் நிறுவனம்.  இதோ  இவ்வாண்டின் முதல்  பத்து  மாதங்களில்  மட்டும்  இன்னும்  கூடுதலாய்  இரண்டரை கோடி  பாலிசிகள்.
  • தலைநகர் தொடங்கி மாநகரம், நகரம்,  கிராமம், குக்கிராமம், குடிசைகள் என  எங்கெங்கும்  இன்சூரன்ஸ் பயனை கொண்டு சேர்க்கிற உலக அதிசயம்.
  • பாலிசிதாரர் உரிமப்பட்டுவாடாவில்  99 .86 சதவிகிதம்.  கண்களை விரிய வைக்கிற  ஒப்பற்ற  சேவை
  • ஆணிவேராய்... 
  • இந்தியப் பொருளாதாரத்தின்  ஆணிவேர்  எல்.ஐ.சி, 
  • அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு  ஆண்டிற்கு  1 ,10 ,000  கோடிகள் 
  •  அள்ள  அள்ளக் குறையாத களஞ்சியமாய் சமூக நலத் திட்டங்களுக்கு ரூபாய்  6 ,50 , 000    கோடிகள்,
  • பங்குச்சந்தை  வீழும்போதெல்லாம் அபயக்குரல் கேட்டு ஓடோடி வந்து சரிவைத் தடுக்கும்  அற்புதம்.
  • ஐந்து கோடி  தந்த அரசுக்கு  டிவிடெண்டாக   ஆண்டிற்கு  ரூபாய் 1030    கோடிகள்.
  • இரயில்வே, நெடுஞ்சாலை, மின்சாரம் போன்ற ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு  ஆயிரமாயிரம்  கோடிகள் 
  • நெருப்பாற்றில் கரையேறி ....
  • உலகப் பொருளாதார நெருக்கடியில்  29 மாதங்களில் அமெரிக்காவில்  ௩௨௫ தனியார் வங்கிகள்  திவால்,
  • பன்னாட்டு இன்சூரன்ஸ்  நிறுவனங்களின்  வீழ்ச்சி,
  • கீறலோ, காயமோ  இல்லாமல்  நிமிர்ந்து  கம்பீரமாய்  நிற்கிற  எல்.ஐ.சி 55 வது  ஆண்டே வார்த்தை  தவறாது  வாக்குறுதிகளை நிறைவேற்றும்  நேர்மையான  செயல்பாடு 

பெரியோர்களே!  தாய்மார்களே!! 
எதிர்காலம் பத்திரம்.... நிச்சயம்!
எல்.ஐ.சி யின் கைகளில் ....
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
                              நமக்காக  - குடும்ப நலனுக்காக - தேசத்திற்காக 
                     உங்களுக்காக  காத்திருக்கிற எல்.ஐ.சி யின் திட்டங்கள் 


   பாரம்பரியக் காப்பீட்டுடன்                               உத்திரவாதமான  வருவாயுள்ள 
இணைக்கப்பட்ட பங்குச்சந்தை பாலிசி         முதலீட்டு காப்பீட்டுப் பாலிசி 
எண்டோமென்ட் ப்ளஸ்     பீமா அக்கவுண்ட் 1 & ௨

அகில இந்திய இன்சூரன்ஸ்
ஊழியர் சங்கம் 

(இதுதான் நாங்கள் வெளியிட்ட பிரசுரம். அற்புதமான  முறையில்  தயாரித்தது
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு
 

Friday, February 18, 2011

இதுதாண்டா சங்கம்!

மனது  உண்மையிலேயே  மகிழ்ச்சியில்  திளைக்கிறது.  எங்களது 
அகில இந்திய இன்சூரன்ஸ்  ஊழியர் சங்கத்தின்   22 வது பொது மாநாடு 
நவம்பரில் புது டெல்லியில் நடைபெற்றது. மாநாடு  பல முக்கிய 
முடிவுகளை  எடுத்தது.  அதில் ஒன்று  எல்.ஐ.சி  மற்றும்  பொதுத்துறை 
பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின்  சிறப்பம்சங்களையும்  வலிமையையும்  விளக்கும்  பிரசுரங்களை  மக்கள்  மத்தியில்  எடுத்துச்சென்று  பொதுத்துறை  காப்பீட்டு   நிறுவனங்களிலேயே  
காப்பீடு  செய்யுங்கள்  என்று  கேட்டுக் கொள்வதுதான். 

1990 ல்  எப்போது  அமெரிக்கா, இந்தியா தனது  சேவைத்துறைகளை 
திறந்து விடாவிட்டால் ,  தனது நாட்டு சட்டமான சூப்பர் 301 ன் படி  
இந்தியா மீது தடைகள் விதிப்போம்  என்று  மிரட்டத் தொடங்கியதோ 
அது முதலே  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்  தொடர்ந்து 
உறுதியாக  ஏராளமான  போராட்டங்களையும்  பிரச்சார இயக்கங்களையும்  நடத்தி வருகின்றது. இன்சூரன்ஸ் துறையில்  
தனியாரை  அனுமதிக்க வேண்டும்  என்று  1994 ல்  மத்தியரசு  நியமித்த
மல்ஹோத்ரா குழு அறிக்கை பரிந்துரைத்ததோ  அதிலிருந்து  எத்தனையோ   வேலை நிறுத்தங்கள்,  தெரு முனைக் கூட்டங்கள், 
சைக்கிள், வேன், ஆட்டோ பிரச்சாரங்கள்,  மாநாடுகள், கருத்தரங்குகள்,
பேரணிகள்,  மனிதசங்கிலிகள், கையெழுத்து  இயக்கங்கள்  என்று எத்தனையோ  இயக்கங்கள் இத்தேசம் முழுதும்  இன்னும்  நடந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு இயக்கத்தின்போதும்  பிரசுரங்களை  வெளியிட்டு மக்களிடம் கொண்டு  செல்வது   என்பது ஒரு முக்கிய 
அம்சம்.

எங்களது வேலூர் கோட்டத்தில் மட்டும்  எத்தனை பிரசுரங்கள்  
வெளியிட்டிருப்போம்   என்று  ஒரு முறை  கணக்கிட்டுப்பார்த்தால் 
அது எத்தனையோ  லட்சங்களை  தாண்டியது. பிரசுரங்கள் பல விதம்.
மத்தியஅரசின்  கொள்கைகளை  சாடியிருப்போம்,  தனியார்  காப்பீட்டு
நிறுவனங்கள்  முன்பு  எப்படி மோசமாக  செயல்பட்டன  என்பதை 
மக்களுக்கு நினைவு படுத்துவோம்,  தனியார் நிதி நிறுவனங்கள் 
அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி ஏமாற்றியதை அம்பலப்படுத்தி
எச்சரிப்போம், எல்.ஐ.சி யின்  செயல்திறன் பற்றி விளக்குவோம். 
எல்.ஐ.சி யின் நிதி எவ்வாறு  தேசத்திற்கும்  மக்களுக்கும் பயன்படுகிறது
என்ற விவரங்களைச் சொல்வோம்.  தனியார் கம்பெனிகள்  வந்தாலும் 
அது  பாலிசிதாரர்களுக்கு  சேர வேண்டிய பணத்தை  தருவதில்  செய்யும்
பிரச்சினைகளை  அம்பலப்படுத்துவோம்.  உலக அளவில்  ஏற்பட்டுள்ள 
பொருளாதார நெருக்கடி  என்று  பல விஷயங்களும்  இப்பிரசுரங்களில் 
இருக்கும்.  அந்தந்த சூழலின்  வெப்பத்தைப் பொறுத்து  உள்ளடக்கமும் 
அதன் கலவையும்  மாறும். 

இம்முறை நாங்கள்  வெளியிட்ட  பிரசுரம்  என்பது  முற்றிலுமாக 
எல்.ஐ.சி யின்  சிறப்பம்சங்களை  மட்டுமே  முன்வைத்தது. அற்புதமான
தமிழில்  கவனத்தை  கவரும் வார்த்தைகளுடனான  ஒரு பிரசுரத்தை 
எங்களின்  தென் மண்டல  இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு  தயாரிக்க
அதை  எங்கள்  வேலூர் கோட்டத்தில்  ஒரு லட்சம் பிரதிகள்  அச்சிட்டோம்.  தனியார் கம்பெனிகளின் செயல்பாடு, மற்றும்  அரசின் 
அடிபணிதல்  பற்றி  ஒரு வாசகமாவது  இணைத்துக் கொள்ளலாமா  என
எங்கள்  தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதனிடம் 
கேட்ட போது. வேண்டாம் தோழர்  இப்பிரசுரம் நம் நிறுவனத்தின் நல்ல 
அம்சங்கள்  பற்றி மட்டுமே  சொல்லட்டும்  என்று  கூறி விட்டார். 

நேற்றும்  இன்றும்  அப்பிரசுரம்  மக்கள்  மத்தியில்  கொண்டு செல்லப்பட்டது.   எந்த ஒரு நோட்டீஸ்  அதிகமாக  கீழே போடப்படாமல் 
மக்களால்  அவர்களது பைகளில்  வைக்கப்படுகின்றதோ, அது அவர்களை 
ஈர்த்துள்ளது  என்பதன்  அடையாளம். நேற்று  அதனை  உணர முடிந்தது. 

இன்று காலை ஒரு மூத்த தோழர்  தனது அனுபவத்தை  பகிர்ந்து கொண்டார்.  அவர் அளித்த பிரசுரத்தை  வாங்கிக் கொண்ட இரு 
பெரியவர்கள்  ' பொதுவாக  ஒரு தொழிற்சங்கம்  தனது நிர்வாகத்தை 
திட்டும், நிறுவனம் பற்றி கவலையே  கொள்ளாது. ஆனால் உங்கள் 
நிறுவனத்தின்  வளர்ச்சிக்காக  உங்கள்  சங்கம்  மக்களிடம் செல்வது 
பாராட்டுக்குரியது. அனைவருக்குமான முன்னுதாரணம்"  என்று 
சொல்லி  ஒரு சங்கம்னா  இப்படித்தான் இருக்கணும் என்று  அவர்களுக்குள்  பேசிக்கொண்டு  போனார்கள், எனக்கு மிகவும் 
பெருமையாகவும்  மகிழ்ச்சியாகவும்  இருந்தது  என்றார் அவர். 
அவருக்கு மட்டுமல்ல எனக்கும்தான்.  இதே   அனுபவத்தை  பல 
தோழர்களும் பல கிளைகளிலிருந்தும்  பகிர்ந்து கொண்ட போது 
உண்மையிலேயே  பாஸ் என்கிற பாஸ்கரன் படத்து சந்தானம் 
போல "சங்கமடா"  என்று உரக்க முழக்கமிட வேண்டும்  என்றே 
தோன்றியது.

 

 
 


Thursday, February 17, 2011

பென் அலி , முபாரக் வரிசையில் மன்மோகன்சிங்?

சர்வ சக்தி கொண்டவராக  கருதப்பட்ட  துனீஷியாவின்  ஜனாதிபதி 
சைனலாபுடீன்    பென்  அலி  பதவி விலகி  எங்கோ  ஓடிவிட்டார். 
முப்பதாண்டுகள்  இரும்புக்கரம் கொண்டு  ஆட்சி  நடத்திய  எகிப்து 
ஜனாதிபதி  ஹோஸ்னி முபாரக்கை  அந்நாட்டு  மக்கள்  தூக்கி 
எறிந்து விட்டனர். நாற்பது ஆண்டுகளாக  ஆட்சி நடத்தும்  முயாமர்
கடாபிக்கு   எதிராக  லிபிய மக்கள்  போர்க்கொடி  உயர்த்தி விட்டனர்.
ஏமனிலும் சூடானிலும்   கூட ஆட்சியாளர்களுக்கு  எதிர்ப்பு  வலுத்து 
வருகின்றது.  
இதுநாள் வரை  கொடுமைகளைப் பொறுத்திருந்த  இந்நாடுகளின்  
மக்கள்  கிளர்ந்தெழுந்து விட்டார்கள். அடக்குமுறைக்கு அஞ்சாமல் 
எகிப்திலும்  துனீஷியாவிலும்  வெற்றியும் பெற்று விட்டார்கள். 
அமெரிக்கா  ஆடிப்போயிருக்கிறது. அரேபிய அரசர்கள்  அச்சத்தில் 
தவிக்கிறார்கள். 
அகற்றப்பட வேண்டிய ஆட்சியாளர்கள் பட்டியலில்  மக்கள் விரோத
மன்மோகன்சிங்கிற்கு  முக்கிய  இடம்  உண்டு. அவரையும் காங்கிரஸ் 
கட்சியையும் நாடு கடத்துவதற்கான நியாயங்கள்  முழுமையாக 
உண்டு. 
போராட்டங்கள் நடைபெற்ற நாடுகளிலெல்லாம்  இளைஞர்  பட்டாளம்தான்  முன் நின்றது. 

அது போன்ற நிலை இங்கு வருமா?  சந்தேகம்தான்,  இந்திய 
இளைஞர்கள்தான்  பாழாய்ப்போன  உலகக்கோப்பையை 
பார்க்க தொலைக்காட்சி முன் தவமிருக்கின்றார்களே!
 

பற்கள் நீண்ட வாயில் ரத்தம் ஒழுகும் மன்மோகன்சிங்

இந்தியாவின் மிக மோசமான  பிரதமர்களின்  பட்டியலில்  முதலிடம் 
பிடித்து விட்டார் மன்மோகன்சிங்.  தொலைக்காட்சி  ஆசிரியர்களுக்கு 
அவர் அளித்த  பேட்டி  அவரது  முகத்திரையை  கிழித்து விட்டது.  
கூட்டணி  தர்மத்தின் விளைவு  ஊழல் என்று சொல்லி  தி.மு.க வும் 
ராசாவும் மட்டுமே  ஸ்பெக்ட்ரம்  ஊழலுக்குப் பொறுப்பு  என்று 
கைகழுவி விட்டு தான் ரொம்ப யோக்கியன்  போல காண்பிக்க 
முயற்சிக்கிறார்.  ஆதர்ஷ் ஊழலும்  காமன்வெல்த் ஊழலும் 
காங்கிரஸ்காரர்கள் செய்யாமல்  செவ்வாய்கிரகத்துவாசிகளா 
செய்தார்கள். 

விலைவாசியை  கட்டுப்படுத்த முடியாதாம். இதைத்தான்  அவர் 
ஹார்வர்ட்  பல்கலைக்கழகத்தில்    படித்த புடலங்காய் பொருளாதார 
படிப்பு கற்றுக் கொடுத்தது போலும். ஆன்லைன் வர்த்தகத்தை  
தடை செய்யுங்கள், பதுக்கலை தடை செய்யுங்கள்  என்று இடதுசாரிகள்
கரடியாக கத்திக் கொண்டிருக்கிறார்களே, இவர் காதை  என்ன 
டர்பனுக்குள்  ஒளித்து  வைத்திருக்கிறாரோ! 

இதை விட மிகப் பெரிய கொடுமை  ஸ்பெக்ட்ரம் ஊழலில்  தேசம் 
இழந்ததை  உணவுப் பொருட்களுக்கு வழங்கும்  மானியத்தோடு 
ஒப்பிட்டடதுதான்.  அன்றாட  வருமானம் இருபது  ரூபாய் கூட 
இல்லாத  ஏழை மக்களுக்கு  ரேஷன் கடையில்  புழுத்த  அரிசி  
வாங்க அளிக்கும்  மானியமும்  பெரும் பெரும் செல்வந்தர்கள் 
கொள்ளையடித்ததும்  ஒன்றாம்.  மனசாட்சியே இல்லாத  
அராஜகப்பேசசு. 
இதை சொல்லும்போது  மன்மோகன்சிங்கின் பற்கள் நீண்டு 
அடுத்தவரின்  ரத்தம்  ருசித்து  அது கடைவாயில்  ஒழுகியது 
போலவே  இருந்தது.  இடையில் அவர் பதவி விலக மாட்டாராம்,
அதை மட்டும் உறுதியாகச்சொல்லிவிட்டார். அப்போதுதானே 
அமெரிக்காவிற்கு மிச்சம் மீதி இருப்பதையும் விற்க முடியும்!
பகத்சிங்கையும்  ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தையும்  இந்த தேசத்திற்கு
அளித்த பஞ்சாப் மண் இந்த தேச துரோகியையும்  அளித்தது 
என்பது  எவ்வளவு பெரிய முரண்பாடு?