ஐம்பது பெரும் பணக்காரர்கள் வாங்கி திருப்பிக் கட்டாமல் ஏமாற்றிய கடன் தொகை 68,000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.
வெளி நாட்டுக்கு தப்பி ஓடிய தேச பக்தர்களான, (ஜெமோவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் தோற்றுப் போன தொழில் முனைவர்கள்) விஜய் மல்லய்யா, நீரவ் மோடி, மெகுல் சோஸ்கி ஆகியோரும் அந்த பட்டியலில் அடக்கம்.
கடன் த:ள்ளுபடி செய்யப்பட்டது என்னமோ வாஸ்தவம்தான், ஆனால் அது அவர்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. அவர்கள் அதனால் திருப்பி செலுத்தினால் அதை வாங்கிக் கொள்வோம். ஆனாலும் நிலுவையில் உள்ள கடன் பட்டியலில் அவர்கள் பெயர் இல்லை என்ற விளக்கம் தரப்பட்டுள்ளது.
ஆமாம், இவர்கள் எல்லாம் உத்தம புத்திரர்கள் அல்லவா! கடனைத் திருப்பிக் கட்டி விட்டுதான் மறு வேலை பார்க்கப் போகிறார்கள்!
இந்த கடனெல்லாம் தள்ளுபடி ஆகும் என்று தெரிந்திருந்தால் ஒரு வேளை இவர்கள் ஓடிப் போயிருக்க மாட்டார்களோ?
அல்லது
ஓடிப்போனவர்கள் மீது வழக்கு எல்லாம் போட்டு சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக தள்ளுபடி செய்யப்பட்டதோ?
ஆனால் ஒன்று கடன் வாங்கினாலும் மோடியின் குஜராத் மாநிலத்தில் வாங்க வேண்டும். அப்போது கண்டிப்பாக தள்ளுபடிதான்.
மிகச்சரியான விளக்கம் நெத்தியடி தோழர்
ReplyDeleteஇளங்கலை படிக்கையில் பேராசிரியர் என்னை இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்ட பொழுது...
ReplyDelete"போத்தி கொண்டு படுப்பதற்கும் படுத்துட்டு போத்துவதற்கும்" என்றேன். அக்காலத்தில் அது நகைச்சுவையாக இருந்தது. ஆனால் படிப்படியாக மாறியது.
http://velvetri.blogspot.com/2020/04/blog-post_29.html
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete