பொதுவுடமை சாத்தியம் என்பதை
முதன் முதலில் சாதித்த,
அடிமையாய் கிடந்த
உழைப்பாளிகள் கைகளுக்கு
ஆளும் வர்க்கத்தை முறியடித்து
ஆட்சியை வரவழைத்த
எல்லாரும் எல்லாமும் பெறும்
முன்னுதாரணம் படைத்திட்ட
இன்றும் முதலாளிகளை
நடுங்க வைக்கிற
உலகின் முதல் புரட்சித்தலைவருக்கு
தோழர் லெனினுக்கு
இன்று பிறந்த நாள்.
செவ்வணக்கம் தோழரே
கீழே உள்ள படம் நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நிறுவப்பட்ட தோழர் லெனினின் கம்பீரமான சிலையோடு எடுத்துக் கொண்டது.
No comments:
Post a Comment