Showing posts with label ரயில்வே துறை. Show all posts
Showing posts with label ரயில்வே துறை. Show all posts

Monday, April 7, 2025

மோடி கைய வச்சா ராங்கா போகுமடா

 


நேற்று மோடி புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்துள்ளார். ஏற்கனவே நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்திற்கு பதில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. பழைய பாலத்தை கட்டியது குஜராத்திகள் என்று பொய் சொல்லி அசிங்கப்பட்டது வேறு கதை. அந்தாளு உண்மை பேசினால்தான் அது அதிசயம்.


கப்பல் வரும் போது பாலத்தின் கதவுகள் திறக்கும். இந்த புதிய பாலத்தில் அவை லிப்ட் போல மேலே உயர்ந்து திறக்கும். அது நேற்று வேலை செய்ய தடுமாறி இருக்கிறது. இதுதான் மோடியின் ராசி என்று வழக்கம் போல பலரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

மோடி துவக்கி வைத்த எல்லா திட்டங்களிலும் சிக்கல் வருகிறது என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு.

அந்த திட்டங்கள் முழுமையடையும் முன்பே மோடி திறக்க வேண்டும் என்று அவசரம் அவசரமாக அரைகுறை வேலை செய்தால் அவை இப்படித்தான் பல் இளிக்கும். 

இந்த பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் சரியாக இல்லை, ஏராளமான குறைபாடுகள் இருக்கிறது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது.

ராம நவமி அன்று ராமேஸ்வரத்தில் மோடி ஒரு பாலத்தை திறந்தார் என்று சீன் போட்டால் அது ரிப்பேர்தான் ஆகும்.

மோடி கைய வச்சா அது ராங்காதான் போகுமடா . . .

Sunday, October 13, 2024

சதியென்று தொடங்கிய கையாலாகாதவர்கள்

 


இரண்டு நாட்கள் முன்பாக திருவள்ளூர் அருகே நடந்த ரயில் விபத்து எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. உயிரிழப்பு இல்லையென்பதால் சிறு நிம்மதி. 

மோடியின் ஆட்சிக்காலத்தில் ரயில்  விபத்துக்கள் மிகவும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டதால் அதிர்ச்சி ஏற்படுவதே இல்லை.

ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பது, வந்தே பாரத் என்று அதி உயர் கட்டண ரயில்களை அறிமுகம் செய்து கல்லா கட்டுவது, ரயில் நிலையங்களில் லட்சக்கணக்கில் செல்ஃபி பாய்ண்ட் என்ற பெயரில் மோடியின் மூஞ்சிக்கு விளம்பரம் தேடுவது ஆகியவற்றில் காண்பிக்கும் அக்கறையை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கோ, பயணிகளின் வசதிகளுக்கோ காண்பிப்பதில்லை. 

ரயில் விபத்துக்களை தவிர்ப்பதற்கான "கவச்" தொழில் நுட்பம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத, கற்றுக் கொள்ள விரும்பாத கையாலாகாத அரசு மோடியின் அரசு. இதிலே இத்துறை அமைச்சர் வேறு பயங்கர புத்திசாலியாம்.

இந்த புத்திசாலித்தனம் எப்படி பயன்படுகிறது?

திருவள்ளூர் - கவரப்பேட்டை விபத்தின் பின்னணியில் ஏதேனும் சதிச்செயல் இருக்கிறதா என்று ஆய்வு செய்கிறோம் என்று பொய் சொல்லி கையாலாகாததனத்தை திசை திருப்புவதில் பயன்படுத்துகிறது.

ஆம்.

இப்போதெல்லாம் எந்த ரயில் விபத்து என்றாலும் சதிச்செயல் என்று பேசி மோடி அரசு தன்னுடைய செயலற்ற தன்மைக்கு "கவச்" போட்டுக் கொள்கிறது. 


Wednesday, June 19, 2024

"கவச்” எங்கேய்யா மோடி?

 


ரயில் விபத்துக்களை தவிர்க்க “கவச்” என்றொரு தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து ரயில்களிலும் பொருத்தப்பட்டு விட்டது என்று சில வருடங்களுக்கு முன்பு ஆரவாரமாக மோடியால் அறிவிக்கப்பட்டது.

 20 சதவிகித ரயில்களில் கூட “கவச்” பொருத்தப்படவில்லை என்ற மோசமான உண்மை, கடந்த வருடம் ஒடிஷாவில் 200 உயிர்களைக் குடித்த விபத்தின் போதுதான் தெரிய வந்தது.

 ஒரு கொடிய விபத்திற்குப் பிறகாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்றால் எதுவும் நடக்கவில்லை என்பது இன்னொரு விபத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

 இந்த ஒரு வருடத்தில் என்னதான் நடந்துள்ளது?

 வந்தே பாரத் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை நடத்தும் ரயில்களை அதிகரித்துள்ளார்கள், அதற்கு கொடியசைக்க தெய்வக் குழந்தை ஊர் ஊராகப் போனது.

 ஆறே கால் லட்ச ரூபாய் செலவில் மோடியின் மூஞ்சியோடு புகைப்படம் எடுக்க செல்ஃபி பாயிண்ட் ஸ்டேஷன் ஸ்டேஷனாக அமைக்கப்பட்டது.

 சாதாரண படுக்கை வசதி பெட்டிகள் வெட்டப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டது.

 சீனியர் சிட்டிசன்களுக்கான  சலுகை வெட்டப்பட்டது தொடர்கிறது.

 ரயில்வே நிலத்தை விற்கும் முயற்சி, தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என்று ரயில்வேவிற்கு மூடு விழா காணத்தான் ஆசைப்படுகிறது மோடி அரசு.

 இதெல்லாம் செய்யத் தெரிந்த மத்திய அரசுக்கு விபத்தை தவிர்க்க மட்டும் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

 காரணம்?

 திமிர், அலட்சியம், பொறுப்பின்மை, இத்யாதி, இத்யாதி . . .

 இந்த எழவெடுத்த ஆட்சியில் இன்னும் என்னென்ன நடக்குமோ?

 

 

 

 

 

 

 

Saturday, April 27, 2024

மந்திரியே மன்னிப்பு கேள்

 


கடந்த வருடம் ஆந்திராவில் நடைபெற்ற கொடுமையான விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மூன்று வண்டிகள் மோதியதால் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட முப்பது பேர் இறந்து போனார்கள். விபத்துக்குள்ளான ஒரு டிரெயினின் ஓட்டுனர் மற்றும் துணை ஓட்டுனர் இருவரும் அலைபேசியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் விபந்து நடந்ததாக ரயில்வே மந்திரி அஸ்வினி எழவு பத்திரிக்கையாளர்களிடம் சொல்லியுள்ளார்.

இன்று வந்த செய்தியின்படி அந்த இருவரின் தொலைபேசிகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்திய போது அவர்கள் தொலைபேசிகளை பேசக்கூட பயன்படுத்தவில்லை, இணையத்தை பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. விபத்திற்கு இவர்கள் காரணமில்லை என்பது தெளிவாகிவிட்டது என்று ரயில்வே உயிரதிகாரிகள் சொல்லி விட்டனர்.

மோடி பெரிதாக பீற்றிக் கொண்ட "கவச்" எனும் பாதுகாப்பு ஏற்பாடு விபத்துக்குள்ளான எந்த டிரெயினிலும் பொருத்தப்படவில்லை, சிக்னல் கோளாறுகளை சரி செய்ய வேண்டும், அதற்கு நிதி வேண்டும் என்பதை புறக்கணித்து மோடி வந்தே பாரத்திற்கு பச்சைக்கொடி காட்டவும் மரண தூதன் மோடியோடு புகைப்படம் எடுக்க செல்ஃபி பாயிண்ட் அமைக்க ஊதாரித்தனமாக கோடிக்கணக்கில் செலவழித்தது ரயில்வே துறை. மோடியைப் போலவேதான் எல்லா மந்திரிகளும் கேவலமானவர்களாகவே இருக்கிறார்கள். 

அதன் கையாலாகத, நிர்வாகம் நடத்த அருகதையற்ற கேவலத்தை மறைக்க, பதில் சொல்ல வாய்ப்பில்லாத இறந்து போன ஓட்டுனர்கள் மீது பழி போட்டார் ரயில்வே மந்திரி. இதில் இந்தாளு மிகப் பெரிய மேதைன்னு வேற சங்கிங்க பீற்றிக் கொண்டார்கள்.

உன் தவறை மறைக்க இறந்தவர்கள் மீது களங்கம் சுமத்திய கேடு கெட்ட, கேவலமான ரயில்வே மந்திரியே, நீ செய்த அவதூறுக்கு பகிரங்க மன்னிப்பு கேள். 

Sunday, January 21, 2024

லாபமல்ல, அக்கிரமம்.

  


டிமோ ரயில்வேயில் லாபம் ஈட்டி விட்டார் என்று சங்கிகள் ஒரு தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  



நிஜமாகவே லாபமா என்பது ஆய்வுக்குரிய ஒன்று. அப்படியே அது உண்மையென்றாலும் அதில் பெருமைப்பட ஏதுமில்லை. ஏனென்றால் அத்தொகை மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை வெட்டி அதில் கிடைத்த லாபமாக இருக்கும். இதில் பெருமைப்பட ஏதுமில்லை சங்கிகளே, நியாயமாக நீங்கள் வெட்கப்பட வேண்டும்.

Friday, April 21, 2023

வந்தே பாரத்.ரஷ்யாவுக்கு லாபம்

 


வந்தே பாரத் ட்ரெயின் கோளாறுகளைச் சொன்னால் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஐ.சி.ஃஎப்பில் தயாரிப்பை குறை சொல்லலாமா என்று சங்கிகள் சண்டைக்கு வந்தார்கள்.

ஆனால் இப்போது வந்தே பாரத் தயாரிப்பு ரஷ்ய நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கும் என்ன முட்டு கொடுக்கிறார்கள் தெரியுமா?

கம்பெனி ரஷ்யக் கம்பெனிதான். ஆனால் இந்தியாவில்தான் தயாரிக்கப் போகிறார்கள் என்று.

"மாப்பிள்ளை அவருதான். அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" என்பது போல கம்பெனி இந்தியாவில் செயல்படும். ஆனால் லாபம் ம்ட்டும் ர்ஷ்யக் கம்பெனிக்கு போகும்.

இந்த "மேக் இன் இந்தியா'? 

அதெல்லாம் வழக்கமான ஜூம்லா  . . . 

Wednesday, May 25, 2022

பொய் சொன்னால்தான் மோடி மந்திரி

 மோடியின் அமைச்சரவையில் இடம் பெற பொய்யனாய் இருக்க வேண்டியதுதான் முதல் தகுதி போல.

 


*நாளொரு கேள்வி: 24.05.2022*

 

தொடர் எண்: *723*

 

இன்று நம்மோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் *சு.வெங்கடேசன்* 

#######################

 

*முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா?*

 

கேள்வி: ரயில்வே துறையில் தனியார் மயம் இருக்காது என அத்துறை அமைச்சர் கூறி இருக்கிறாரே?

 

*சு. வெங்கடேசன்*

 

சென்னை வருகை தந்த

அமைச்சர்  ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என்று அறிவித்திருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுஆகும். 

 

*தேசிய ரயில் திட்டம்* என்ற ஒன்றை இந்திய ரயில்வே  அறிவித்திருக்கிறது. வெளியிட்டிருக்கிறது. இதனை நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். அந்தத் திட்டத்தில் கூறப்பட்டு இருப்பது என்ன?

 

* 2031 க்குள் அனைத்து சரக்கு ரயில்களும் தனியார்மயம் ஆகிவிடும். 

 

* இந்திய ரயில்வே வேகன் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது. 

 

* அதேபோல லாபம் வரக்கூடிய குளிர்சாதன இருக்கை மற்றும் 3 அடுக்குபடுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை மட்டும் கொண்ட விரைவு வண்டிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். 

 

இப்படி அந்த  திட்டத்தில் கூறப்பட்டுள்ளதா இல்லையா?  

 

*லாபம் வரும் வண்டிகள் அனைத்தும் தனியாருக்கு. இழப்பு ஏற்படும் வண்டிகள் மட்டும் அரசுக்கு* என்ற கொள்கையை அறிவித்துவிட்டு ரயில்வேயில் தனியார்மயம் இல்லை என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது இல்லாமல் வேற என்ன? 

 

அனைத்து வண்டிகளும் தனியார்மயமானால்

*பயணக் கட்டணம் உயரும். பயணிகள் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் ரயில்வேயின் நிரந்தர வேலை வாய்ப்புகள் பறிமுதலாகும் .சமூக நீதி பாதிக்கப்படும்.* 

பொதுமக்கள் கட்டுப்படியான ரயில் பயண வசதி இன்றி பாதிக்கப்படுவார்கள். 

 

*செவ்வானம்*

 

Thursday, January 27, 2022

மோடியின் சாதனைக்கு கலவரமே சாட்சி

 


பீஹாரில் ரயில்வேவுக்கு எதிராக கலவரம் மூன்று நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.

ரயில்வே தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சுமத்தி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு ரயில் கூட எரிக்கப்பட்டுள்ளது.

அடிப்படையில் இதற்கெல்லாம் என்ன காரணம்?

3,528 காலியிடங்களுக்கு ஒரு கோடியே இருபத்தி ஐந்து லட்சம் விண்ணப்பங்கள் வந்ததும் அதிலிருந்து ஏழு லட்சம் விண்ணப்பங்கள் வடிகட்டப்பட்டுள்ளது. அதில்தான் முறைகேடு என்று குற்றச்சாட்டு.

3,524 காலியிடங்களுக்கு ஒரு கோடியே இருபத்தி ஐந்து லட்சம் விண்ணப்பங்கள் வந்தது எதை காண்பிக்கிறது?

மோடியின் ஏழாண்டு ஆட்சிக் காலத்தில் வேலையின்மை பிரச்சினை பல மடங்கு பெருகியுள்ளது என்பதைத்தான்.

எரிந்து போன ரயிலை அலங்கார ஊர்தியாக தயார் செய்து அடுத்த குடியரசு தினத்தில் மோடியின் சாதனையாகக் காண்பிப்பதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். 

Tuesday, May 12, 2020

AC வேண்டுமா? வேண்டாமா?


மோடி அரசு டெல்லியிலிருந்து பதினைந்து நகரங்களுக்கு ரயில்களை இயக்குகிறது. இன்னொரு 15 ரயில்கள் அங்கிருந்து டெல்லிக்கு திரும்பி வரும்.

குளிர்சாதனப் பெட்டிகள் மட்டுமே இயங்கும், ராஜ்தானி ரயில் போல கட்டணம் ஆகியவை அந்த ரயில்களின் சிறப்பம்சங்கள். ராஜ்தானி ரயிலின் கட்டணம் செலுத்த வசதி உள்ளவர்கள் மட்டும் பயணித்தால் போதுமா? அந்த அளவிற்கு வசதி இல்லாதவர்கள், அதே நேரம் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிக்கு கட்டணம் செலுத்தும் சக்தி உள்ளவர்கள் பயணிக்க வேண்டாமா? 

பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிற ஆட்சிதான் மோடி ஆட்சி என்பதை இச்சம்பவமும் நிரூபித்துள்ளது.

நிற்க

இன்னொரு சந்தேகமும் வருகிறது.

தமிழக அரசு பல கடைகளை திறக்க கொடுத்துள்ள அனுமதியில் குளிர்சாதன வசதி கொண்ட துணிக்கடையோ, நகைக்கடையோ அனுமதிக்கப்பட மாட்டாது. அப்படி அவர்கள் இயங்கினால் குளிர்சாதன வசதியை பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

குளிர்சாதன வசதி வேண்டுமா, வேண்டாமா?

மோடி அரசு மக்களை ஏமாற்றுகிறதா?

அல்லது

எடப்பாடி அரசு மக்களை ஏமாற்றுகிறதா?


Friday, June 10, 2016

ரயில்வேயால் கொல்லப்படும் தமிழ்



லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ள ரயில்வே துறையில் உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டிய  பணி என்ன தெரியுமா?

தமிழாசிரியர்.

என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?

“வாழ்க்கை, நேரத்தை விட விலை மதிப்பற்றது. ஆள் இல்லா தண்டவாளங்களை கடக்கும் முன் கவனித்து செல்லவும்”  

இது ரயில்வே சொல்ல நினைத்துள்ள செய்தி.

ஆனால் எப்படி சொல்லியுள்ளார்கள் என்பதை கீழே பாருங்கள். தென்னக ரயில்வேயிலிருந்து வந்துள்ள குறுஞ்செய்தி இது.




வடிவேலுவின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் “முடியல”