Showing posts with label ஜெமோ. Show all posts
Showing posts with label ஜெமோ. Show all posts

Saturday, December 28, 2024

ஜெயமோகன் சிஷ்யன் கேரளா போனால்????

 ஜெயமோகனுக்கு முன்னாள் தான் இறந்து போகக்கூடாது என்பதுதான் தமிழ் இலக்கியவாதிகளின் முக்கியமான பிரார்த்தனையாக இருக்கும். இறந்த பின்பு அவர்களை சிறுமைப்படுத்துவது என்பது புளிச்ச மாவு ஆஜானுக்கு அல்வா சாப்பிடுவது போல.

ஜெயமோகனுடனான சகவாசம் இன்னொரு எழுத்தாளரையும் அதே பாணியில் மறைந்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரையும் சிறுமைப்படுத்த வைத்துள்ளது. 

ஒட்டு மொத்தமாக எம்.டி.வாசுதேவன் நாயரை சராசரி என்றால் சிக்கலாகும் என்ற அச்சத்தில் இலக்கியத்தில் சராசரி, திரைக்கதையில் உச்சம் என்று சமாளிக்கப்பார்க்கிறார்.

யார் எந்த ஜெமோ சிஷ்யன்?

நவீன கதை சொல்லி என்று அழைக்கப்படுகிறவர் அவர். 

பதிவை படித்தால் உங்களுக்கே புரியும்.

இல்லையென்றாலும் கடைசியில் சொல்கிறேன்.

தன் புத்தகத்தின் தமிழ் மொழி, மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவிற்காகத் திருவண்ணாமலைக்கு வந்திருந்த மனோஜ் குருர் (நிலம் பூத்து மலர்ந்த நாள்), சந்தோஷ் எச்சிகானும், நா. முருகேச பாண்டியன் ஆகியோரோடு ஒரு பின்னிரவில் பத்தாயத்துக் களத்து மேட்டில் கொஞ்சம் கலங்கிய நிலையில் உட்கார்ந்து இருந்தபோது, நான் தான் அந்த காட்டமான உரையாடலை ஆரம்பித்தேன். “உண்மையிலேயே எம். டி. வாசுதேவ நாயர் மலையாளத்தில் ஒரு காத்தரமான புனை எழுத்துக்காரர் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?” மூவருமே மௌனம் காத்தார்கள். கொஞ்ச நேரத்தில் நானே அந்த மௌனத்தைக் கலைத்தேன் .“இரண்டாம் இடத்திற்குப் பின் இப்பொழுது இறுதி யாத்திரை (விலாபயத்ரா) வாசித்தேன். இரண்டுமே என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. என் குறைந்தபட்ச வாசிப்பில் அவரை விட 10க்கும் மேற்பட்ட மிகச் சிறந்த புனைவு எழுத்துக்காரர்கள் தமிழில் உண்டு,” என்றேன்.

மனோஜ் குருர், சந்தோஷ் எச்சிகானும் என்னை எழ வைத்து கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். அந்த நெருக்கத்திற்கு அனுமதிக்காமல், “ஆனால் அவர் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர் இல்லையா?” எனக் கேட்டேன். மூன்று பேருமே அதை 100% ஒத்துக்கொண்டார்கள்.


ஏழெட்டு வருடங்களுக்கு முன் என் மலையாள மொழிபெயர்ப்பாளர் கே. எஸ். வெங்கடாசலம் அவர்களின் கோரிக்கையை ஏற்று, நான் சைலஜா நஜீப் ஆகியோர் இரவு 8 மணி அளவில் கோழிக்கோட்டில் உள்ள எம். டி. வீட்டில் அவரை சந்திக்க அனுமதி கேட்டபோது, உடனடியாக அந்த அனுமதி மறுக்கப்பட்டது. அப்போதுதான் கண் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தார். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில், நாங்கள் நான்கு பேரும் அவர் முன் அடுத்த சில நொடிகளில் அமர வைக்கப்பட்டிருந்தோம். ஒரு மணி நேரம் நீடித்த உரையாடல் எவ்வகையிலும் சுவாரஸ்யமானது அல்ல; கேரள பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட்டதாக இருந்தது.

கண் அறுவை சிகிச்சை அவருக்கு வலியையும் சலிப்பையும் தந்திருந்தது. நாம் போன நேரம் அப்படிப்பட்டது. பின் ஒரு சுவாரசியமான சந்திப்பில் எம். டி. உடனான சந்திப்பை என் நண்பர் மம்முட்டி இடம் சொன்னபோது, “கிழவன் என்ன சொன்னார் பவா?” என மிகச் செல்லமாக ஆர்வப்பட்டார். அது அவர்களுக்குள்ளே இருந்த நட்பைப் பிரதிபலிப்பதாயிருந்தது. மலையாள இலக்கியத்தில் சராசரியாகவும் திரைக்கதையில் உச்சமாகவும் சாதித்த ஒரு நல்ல கலைஞனை, ஒரு நல்ல கலைஞனின் விலாபயத்ரா இன்று தொடங்குகிறது. என் ஆழ்ந்த அஞ்சலிகள்.

இந்த பதிவை எழுதிய ஜெயமோகன் சிஷ்யன் பவா.செல்லத்துரை. தன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திட்ட த.மு.எ.க.ச வை தன்னை முன் வைத்து ஜெயமோகன் சிறுமைப்படுத்திய போதே கள்ள மவுனம் சாதித்து வேடிக்கை பார்த்த மனிதனுக்கு எம்.டி.வாசுதேவன் நாயரெல்லாம் எம்மாத்திரம்! என்ன இவர் எழுதியது கேரளாக்காரர்களுக்கு தெரிந்தால் இவர் கேரளாவிற்குள் நுழைவதுதான் சிரமம். 

பிகு: அதென்ன கலங்கிய நிலை? சரக்கடிப்பதை எழுத்தாளர்கள் இப்படி ரொமாண்டிஸைஸ் செய்தால் டாஸ்மாக் விற்பனை அதிகமாகாதா? குற்றங்கள்தான் பெருகாதா?

Tuesday, October 8, 2024

சோ.அதர்மன் ஐ.ஏ.எஸ் ஸா?

 


தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு போஸ்டரில் பு.மா.ஆஜானின் சீடர் கடலூர் சீனுவின் பரிந்துரையால் சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ.தர்மன் அவர்களுடைய பெயருக்குப் பின்னால் இ.ஆ.ப (இந்திய ஆட்சிப்பணி) என்று போட்டுள்ளார்கள்.


திராவிட இயக்கத்தை தூற்றுவதையே பிழைப்பாகக் கொண்டிருக்கிற சங்கி எழுத்தாளர் மீது ஏன் திமுக அரசு ஓவர் கரிசனமாக இருக்கிறது?

Thursday, July 18, 2024

என்னமோ நடக்குது !!!

 


"தமிழ் மணம்" வலை திரட்டி செயல்பாட்டில் இருந்தவரை எனது வலைப்பக்கத்தின் பார்வைகள் (HITS) சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரத்திலிருந்து ஆயிரத்து இருநூறு வரை இருக்கும். தமிழ்மணம் முடங்கிய பின்பு அது சராசரி ஐநூறு என்ற அளவில்தான் இருந்து வருகிறது. மக்களவைத்தேர்தல் சமயத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் அளவுக்குச் சென்றது.

ஆனால் நேற்று முன் தினம் இரவு முதல் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. செவ்வாய் இரவு ஒன்பது மணி அளவில் வீடு திரும்பிய போது கூட 360 தான் இருந்தது. நேற்று இரவு பார்த்தால் செவ்வாயன்று பார்வைகள் 5168 என்றும்  நேற்று இரவு வரை 7037  என்றும்  இருந்தது.



காலையில் இப்போதைய நிலவரம் இது . . .




நேற்று முன் தினம் இரவு முதல் யார் என் வலைப்பக்கத்திற்கு படையெடுத்து வந்தார்கள்?

சமீபத்திய பதிவுகள் தொடங்கி பத்தாண்டுகளுக்கு முந்தைய பதிவுகள் வரை படிக்கப்பட்டுள்ளது. புளிச்ச மாவு ஆஜான் குறித்து எழுதிய பெரும்பாலான பதிவுகள் பல முறை படிக்கப்பட்டுள்ளது. மாலன் பற்றிய எந்த பதிவும் சீண்டப்படவில்லை என்பது வேறு விஷயம்! 

திடீரென ஏன் இந்த பரபரப்பு?

இது நல்லதா? கெட்டதா?

எதுவாக இருந்தாலும் I am waiting.  . . .



Thursday, May 30, 2024

பு.மா ஆஜானை காப்பியடித்த மோடி

 


யார் சொன்னார் என்ற தகவல் இல்லாமல் “திரைப்படம் வந்த பின்னரே காந்தியை உலகுக்கு தெரியும்” என்ற அற்புதமான கருத்தைத்தான் முதலில் பார்த்தேன்.

இது போன்ற அரிய கருத்துக்களை வெளியிடும் ஆற்றல் நம் புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகனுக்கு மட்டுமே உரியதல்லவா என்று அவர் பக்கம் போய் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். பிறகு இன்னொன்றும் தோன்றியது. ஜெமோ அப்படியெல்லாம் தன்னைத் தவிர இன்னொருவருக்கு அதிலும் வெளிநாட்டு கிறித்துவர் ரிச்சர்ட் அட்டன்பரோவுக்கெல்லாம் பெருமை தர மாட்டாரே என்பது நினைவுக்கு வந்தது. பிறகுதான் தெரிந்தது அது மோடி சொன்னது என்று.

மோடியின் கருத்து பற்றி என்ன சொல்ல? அந்த முட்டாளுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று சென்று விட முடியுமா? கோட்சேவை கும்பிடும் மோடி எனும் ஜந்து மகாத்மா காந்தியினை இழிவு படுத்துவது இது முதல் முறையல்ல. மகாத்மா காந்திடின் சிறப்பு என்று ஏராளமாக இருக்க, தூய்மை என்ற ஒன்றை மட்டும் வைத்து சொச்ச பாரத் என்று விளக்குமாறோடு ஒரு நாள் போட்டோஷூட் முடித்த ஆள்தானே இது!

இந்த முறை மகாத்மாவை இழிவு படுத்த மோடி கையாண்ட டெக்னிக் காப்பியடித்தது. புளிச்ச மாவு ஜெயமோகனிடம் காப்பியடித்தது.

“பின் தொடரும் நிழலின் குரல்” என்ற அந்தாளின் கம்யூனிசத்தின் மீது வெறுப்பை கக்கும் நாவலைப் படித்த பின்பே “லெனின் என்று ஒருவர் இருந்தார்” என்று தனது வாசகர்கள் அறிந்து கொண்டார்கள் என தடம் இதழிற்கு அளித்த நேர்காணலில் பெருமையாக சொல்லிக் கொண்டார்.

லெனின் யாரென்று தெரியாத கூமுட்டைகள்தான் அவரது வாசகர்கள் என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஆஜோனுக்கோ அப்படிப்பட்ட கூமுட்டைகள் வாசகர்களாக இருப்பதுதான் பெருமை.

மோடி தன் பாணியை காப்பியடித்து விட்டார் என்று ஆஜான் எப்போது எண்பது பக்க கட்டுரை எழுதப் போகிறாரோ?

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்…

மோடி, ஜெயமோகன் போன்ற சில்லறைகளால் மகாத்மா காந்தியின் புகழையோ, புரட்சித்தலைவர் தோழர் லெனினின் புகழையோ சிறுமைப் படுத்திட முடியாது. இந்த சில்லறைகள் நெருங்க முடியாத சிகரத்தின் உச்சியில் இருப்பவர்கள் அந்த மகத்தான இரு தலைவர்களும் . . .

 

Thursday, January 4, 2024

ஆஜான் Vs ஆ.கு.ப.த லச்சூ

 


ஆம். பேய்க்கும் பேய்க்கும் சண்டை என்பது போல ஆஜானுக்கும் ஆஜான் குண்டர் படைத் தளபதி லட்சுமி மணிவண்ணனுக்கும் மோதல்.

 லச்சூவின் முகநூல் பதிவு, பின்னூட்டங்கள் கீழே உள்ளன.

 









ஜெமோவின் அத்யந்த நண்பர்களாக ஒரு கோஷ்டி உண்டு. அவர்களை நான் குண்டர் படை என்றும் லச்சூதான் அதன் தளபதி என்றும் பல முறை எழுதி உள்ளேன். இப்போது லச்சூவும் அதையே  ஜெமோவின் வாசகர்களை bouncer என்று அழைக்கிறார்.

 ஜெயமோகனையும் தோழர் ஆதவன் தீட்சண்யாவையும் நீங்கள் ஒப்பிட்டால் நான் இலக்கிய உலகை விட்டே வெளியேறி விடுவேன் என்கிற அளவிற்கு எழுதி தன் ஆஜான் விசுவாசத்தை காண்பித்து  லச்சு ஏன் இப்போது ஆஜானுக்கு எதிராக?

 அதற்கும் பதில் கிடைத்து விட்டது. ஒரு பின்னூட்டத்தில் லச்சூவே சொல்லி விட்டார்.

 


ஆக, ஆஜான், தன் மகன், மனைவி, மகள் ஆகியோரை மட்டுமே முன்னிறுத்துவதுதான் பிரச்சினையாக இருந்திருக்கிறது. “நாங்க உனக்காக அடி வாங்குவோம். நீ உன் குடும்பத்தைத்தான் வாரிசுன்னு சொல்வியா” என்பதுதான் லச்சுவின் கோபத்திற்குக் காரணம்.

 

வழக்கமாக ஆஜான் போலிப்பெயர்களில்  கேள்வி எழுப்பி நூறு பக்கங்களில் பதில் சொல்வார்.

 

செல்ஃபி கேள்வி கேட்கும் சிரமத்தை அவருக்கு குறைக்கலாம் என்று பின் வரும் கேள்வியை அவருக்கும்  அவர் அட்மினுக்கும் அனுப்பி வைத்தேன்.

 ஐயா,


உங்களின் பிரதான பிரச்சாரகராக இருந்த திரு லட்சுமி மணிவண்ணன், உங்கள் உரைநடைகளை "பகுதி உண்மைகளின் உளறல்கள்" என்றும் உங்கள் வாசகர்களை "பௌன்ஸர்களாக மாற்றிக் கொண்டிருப்பதாக"வும் குறை சொல்லி, "மனைவியை, மகனை, மகளை முன்னிறுத்துவதாகவும் விமர்சித்துள்ளாரே.

இது பற்றிய உங்கள் விளக்கத்தை உங்கள் தளத்தில் அளிப்பீர்களா?

இவண்

உங்களால் இணைய மொண்ணை பட்டம் அளிக்கப்பட்ட
எஸ்.ராமன், வேலூர்.

இதோ இந்த பதிவை முடிக்கும் வரை ஆஜானிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. பாவம், அவரால் எப்படி பதில் சொல்ல முடியும்! ஆஜானின் இந்த பயம் எனக்கு பிடிச்சிருக்கு…

புமா ஆஜானே, மறுபடியும் முதலேருந்தா?

 


கீழடி தொடர்பாக புளிச்ச மாவு ஆஜான் சமீபத்தில் உதிர்த்த முத்து கீழே


கீழடி தொடர்பாக இதற்கு முன்பாகவும் ஆஜான் வாங்கிக் கட்டிக் கொண்டாரே என்பது நினைவுக்கு வர ஏழாண்டுகளுக்கு முன்பு எழுதிய பதிவை கண்டு பிடித்தேன். அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

கீழடி ஆய்வை டிமோ அரசு முடக்க முயன்ற போது அதற்கெதிரான இயக்கத்தை தமுஎகச முன்னெடுத்ததும் அன்றைய தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசனின் முயற்சிகளும் ஆஜானுக்கு எரிச்சல் தர, "இவர்கள் யார் கீழடிபற்றி பேச, தொல்பொருள் ஆராய்ச்சியாளரா, வரலாற்று அறிஞரா" என்றெல்லாம் கேட்டிருந்தார்.

அப்போது எழுதிய பதிவு கீழே

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரே ஒரு கேள்வி ஆஜானே?

  

ஜெமோவின் எழவெடுத்த பக்கம் வழக்கமாக செல்ல மாட்டேன். மாணவி அனிதாவின் மரணம் குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி போல இந்த மனிதனும் ஏதாவது பிதற்றியுள்ளாரா என்று பார்க்கச் சென்றேன். இன்னும் ஆசான் அது பற்றி எழுதவில்லை. ஆனால் கீழடி பற்றி பத்து பக்கங்களுக்கு மிகாமல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.கிட்டத்தட்ட நிர்மலா சீத்தாராமனின் குரல் அது.

 கீழடிப் பிரச்சினையை கையிலெடுத்துள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்திற்கு 

 தமிழ் ஃபாசிஸ்டுகள்,

அசடுகள்

அரை வேக்காடுகள்

 என்றெல்லாம் முத்திரை குத்தியுள்ளார்.

 தமுஎகச தோழர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

 கீழடி பற்றி யார் பேச வேண்டும் என்று அறிவுரை கொடுத்துள்ளார்.

அதைப் படியுங்கள்.

 கீழடியைக் குறித்தவரை இவ்விவாதம் உருவாவதற்கு இன்னும் நெடுங்காலம் ஆகும். அங்கு இன்னும் ஆய்வே முறையாகத் தொடங்கப்படவில்லை.    கிடைக்கும் பொருட்களைக் கொண்டு ஆய்வாளர்கள் ஒருவிவாதத்தை 

தங்களுக்குள் இப்போதுதான் தொடங்கியிருக்கிறார்கள். 

அதற்குள்ளாகவே      இங்கே     மேடைப்பேச்சாளர்களும் சினிமாக்காரர்களும் அரசியல்வாதிகளும் – அதாவது    தொல்லியலாளர்கள்  வரலாற்றாய்வாளர்கள் தவிர்த்த அத்தனை பேரும் எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்னென்ன முடிவுகளுக்கு வர

வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

மேலே ஆசான் சொன்ன அடிப்படையில் அவருக்கு ஒரே ஒரு கேள்வி.

 அந்தந்தத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினையில் வேறு யாரும் பேசக் கூடாது என்றால் செல்லா நோட்டு விவகாரத்தில் மோடிக்கு முட்டு கொடுத்து வரிந்து வரிந்து எழுதினீர்களே, நீங்கள் என்ன பொருளாதார நிபுணரா? இல்லை அல்லவா?

 பின்னே என்ன எழவிற்கு அதைப் பற்றி எழுதினீர்கள்?

---------------------------------------------------------------------------------------------------------

ஆஜானை ஏற்கனவே பிளக்க ஆரம்பித்து விட்டார்கள். வடிவேலு பாணியில் "மறுபடியும் முதலேருந்தா" என்று புலம்பிக்கொண்டிருப்பதாக தகவல்.

கீழடியை மட்டம் தட்டும் வேலையை நீ மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தால் அடியும் மறுபடியும் முதலில் இருந்துதான் கிடைக்கும்.

அப்பா சுயமோகா, கீழடி பற்றி வரலாற்று அறிஞர்களும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்களும்தான் பேசனும்னு ஏழு வருஷம் முன்னாடி உபதேசம் செஞ்சியே, நீ மட்டும் என்ன வரலாற்று அறிஞரா? இல்லை தொல்பொருள் ஆராய்ச்சியாளரா?

பதில் சொல்லுய்யா . . .

பிகு: இந்த பதிவெல்லாம் ஜுஜுபி. ஆஜான் தொடர்பான இன்னொரு பதிவு மாலையில் வரும். அது பரபரப்பானது. உங்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அளிக்கும்.  


Sunday, December 10, 2023

ஜெமோ - முட்டாள், ஸோம்பி

 


மேலே உள்ளதை சத்தியமா நான் சொல்லலைங்க. 

மணிரத்தினம் சொன்னது. மணிரத்தினம் அப்படித்தான் திட்டுவார்னு எழுதினது யார் தெரியுமா?

அது ஆஜான்தாங்க  . . .

ஆமாம். நெசமாத்தாங்க!

ஆஜான் தன் மகன் திருமணம் தொடர்பா இருபது பக்கத்துக்கு ஒரு பதிவு போட்டிருக்காரு. வழக்கமா தன்னை பீற்றிப்பாரு. இந்த முறை மகனை . . .

அதில எழுதினதுதான் இது.

நம்பிக்கையில்லையா. ஸ்க்ரீன் ஷாட்டே எடுத்து வச்சுட்டேன். பாருங்க . . .


பொன்னியின் செல்வன் உள்ளிட்ட சில மணிரத்னம் படங்களுக்கு ஆஜான்தான் வஜனம். 

அதனால மணிரத்னம் சொன்னா சரியாதான் இருக்கும். . .

பிகு: இருபது பக்க கட்டுரையை இந்த ஒரு வாக்கியத்துக்காக படிச்ச நான் எவ்வளவு பாவம்! இதுலே வெள்ளிக்கிழமை ஐ.டெஸ்டு செஞ்சு கண்ணு இன்னும் முழுசா நார்மலாகாதபோது . . .

Tuesday, October 10, 2023

பவா – பிம்பம் தகர்ந்தது நல்லதே

  


பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் எப்போதும் பார்ப்பதில்லை. இப்போது நடைபெறும் நிகழ்வில் திருவண்ணாமலை வம்சி பதிப்பக உரிமையாளரும் கதை சொல்லி என்றழைக்கப்படுபவருமான, புளிச்ச மாவு ஆஜானின் நெருங்கிய நண்பருமான பவா செல்லதுரை கல்வி அவசியமில்லை என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பது பற்றி படித்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. சில மாதங்கள் முன்பாக அவரைப் பற்றி எழுதியிருந்தேன். அதை முதலில் படித்து விடுங்கள்.

அற்பன் ஜெமோவும் கலை இரவுகளும்

மாதம் ஒரு அசிங்கப்படுவது என்பதை ஒரு விரதம் போல ஜெயமோகன் கடைபிடிக்கிறார் என்று சில நாட்கள் முன்பாகத்தான் எழுத்தாளர் தோழர் இரா.முருகவேளின் ஆஜான் பற்றிய முகநூல் பதிவிற்கு பின்னூட்டம் எழுதியிருந்தேன். மாதம் ஒருமுறை என்பதை ஆஜான் வாரம் ஒரு முறை என்று மாற்றி விட்டார்.

 தமுஎகச தமிழகமெங்கும் தொடர்ச்சியாக வீரியத்தோடு நடத்தி வரும் கலை இரவுகளைப் பற்றி ஆஜான் எழுதியிருப்பது கீழே.

 


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பு முன்னெடுத்த ஒரு நிகழ்வை அன்று அந்த அமைப்பின் திருவண்ணாமலை பொறுப்பாளராக இருந்த ஒருவரோடு மட்டும் சுருக்கப் பார்க்கும் விஷமத்தனம். ஆஜான் குறிப்பிட்டவரோடு மட்டுமல்லாமல் மறைந்த தோழர் கருப்பு கருணா, ஓவியர் பல்லவன் ஆகியோரும் இணைந்து துவக்கிய நிகழ்வு கலை இரவு. தமுஎச என்ற அமைப்பின் சார்பில் மட்டுமே முன்னெடுக்கப்பட்ட  நிகழ்வு அது.

 ஒற்றை பத்தியில் எத்தனை பாட்டில் விஷத்தை கக்குகிறார் ஜெமோ என்று பார்ப்போமா!

 தனி நபர் முன்னெடுத்த நிகழ்வு.

அரசியல் புகுந்தது,

அரசியலால் அழிந்தது.

திருவண்ணாமலையில் மட்டும் முதலில் முன்னெடுத்தவரால் மட்டும் உயிர்ப்போடு உள்ளது.

 தனி நபர் மட்டும் முன்னெடுத்தது அல்ல. தனி நபருக்கான பாத்திரம் இருப்பினும் அமைப்பின், அமைப்பின் மற்ற பொறுப்பாளர்களின் பங்களிப்பும் சற்றும் குறைந்தது அல்ல.

 அரசியல் என்பது புகவில்லை. உழைக்கும் மக்களுக்கான அரசியலோடுதான் தொடங்கியது. உழைக்கும் மக்களுக்கான செய்தியை கலை வடிவில் எடுத்துச் செல்வது என்பதுதான் நோக்கம்.  கலை கலைக்காகவே என்று அதனை புனிதப்படுத்துவது ஜெயமோகனின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் கலை மக்களுக்காக என்பதை கோட்பாடாகக் கொண்ட தமுஎச அமைப்பு எப்படி அரசியல் பார்வை இல்லாமல் ஒரு நிகழ்வை நடத்தும்! கட்சி அரசியல் அல்ல, வர்க்க அரசியல், பாட்டாளி வர்க்க அரசியல்

 கலை இரவு நிகழ்ச்சி அரசியலால் அழிந்தது என்பது அவருடைய அடுத்த குற்றச்சாட்டு.  

 திருவண்ணாமலை கலை இரவைத் தொடர்ந்து சென்னையில் கலை இரவு நடைபெறுகிறது. அந்த நிகழ்வின் பொறுப்பாளர்களில் ஒருவர் மறைந்த எங்கள் இன்சூரன்ஸ் தோழர் டி.ஏ.விஸ்வநாதன். ஒரு நீண்ட ரயில் பயணத்தில் (கான்பூர் முதல் சென்னை வரை மூன்றே தோழர்கள் ஒரு அகில இந்திய செயற்குழு முடிந்து திரும்பி வந்தோம்) சென்னை கலை இரவு முடிந்ததும் கட்சியிலிருந்து கலை இரவு வடிவம் மிகவும் அதிகமான மக்களை சென்றடைவதால் அனைத்து மாவட்டங்களும் முயற்சிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையே அனுப்பினார்கள் என்று சொன்னது நினைவில் உள்ளது.

 தமுஎகச தாண்டி தொழிற்சங்கங்களும் கலை இரவு நடத்தத் தொடங்கினார்கள். இந்தியன் வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு வேலூரில் நடைபெற்ற போது அதனால் ஈர்க்கப்பட்ட நாங்களும் 1998 ல் புதுவையில் நடைபெற்ற எங்கள் கோட்ட மாநாட்டில் முதல் முறையாக கலை இரவு நடத்தினோம். எங்கள் கோட்டத்தில் பிரிக்க முடியாத அங்கமாக கலை இரவு மாறி விட்டது. 1999 ம் ஆண்டு எங்கள் மாநாடு திருவண்ணாமலையில் கோட்ட மாநாடு நடைபெற்ற போது வரவேற்புக்குழுக் கூட்டத்தில் தமுஎகச  பொறுப்பாளர் தோழர் கருப்பு கருணாதான் “மக்கள் ஒற்றுமை கலை விழா” என்று பெயர் சூட்டுங்கள் என்ற ஆலோசனைப்படி இப்போதும் நாங்கள் “மக்கள் ஒற்றுமை கலை விழா” என்றுதான் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

கலை இரவுகள் எப்போதும் போல இப்போதும் கொண்டாட்டமாக உயிர்ப்போடு தமிழகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வடிவம் அழிந்து விட்டது என்று சொல்வது ஜெயமோகனின் வக்கிர புத்தி. அந்த வடிவம் அழிய வேண்டும் என்ற அவரின் விருப்பத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார். ஜெயமோகனின் பார்வைக் கோளாறு என்பதைத் தாண்டி இக்குற்றச்சாட்டில் ஏதுமில்லை.

 திருவண்ணாமலையில் அந்த கனவை அவர் உயிர்ப்போடு வைத்திருக்கிறார் என்பது ஆஜானின் அடுத்த ஸ்டேட்மெண்ட்.

 ஆஜான் குறிப்பிடும் பவா செல்லத்துரைக்கு அவருடைய முகநூல் பதிவு ஒன்றில் “உங்களை முன்னிறுத்தி ஜெயமோகன் தமுஎகச அமைப்பை சிறுமைப்படுவது தொடர்பாக உங்களின் மௌனத்தை கலையுங்கள் தோழர்” என்று பின்னூட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த நிமிடம் வரை அவர் மௌனம் கலையவில்லை. சுயமோகன் சொல்வதை அவர் ரசிக்கிறார் என்றுதான் அந்த கள்ள மௌனம் தெரிவிக்கிறது. அதனால் அவருடைய முந்தைய பதிவொன்றி ஏற்பட்ட நெருடலையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 தோழர் கருப்பு கருணா மறைந்த போது அவர் நீண்ட பதிவொன்றை எழுதி இருந்தார். தமுஎகச அமைப்பின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்ற போது அதற்கான நிதியை திரட்டும் பொறுப்பு அவர் தலையில் சுமத்தப்பட்டு விட்டது என்பது அதில் ஒரு குற்றச்சாட்டு. எந்த ஒரு பெரிய நிகழ்விற்கான நிதியை தனி ஒருவரால் திரட்ட முடியும் என்பதெல்லாம் எந்த காலத்திலும் சாத்தியமானதில்லை.

  திருவண்ணாமலையில் ஒரு குறிப்பிட்ட நாளன்று வீடு வீடாக மக்களை சந்தித்து நிதி திரட்டினார்கள் என்பதை நான் அறிவேன். அதற்காக ஏராளமான சுவரொட்டிகளை நகரெங்கும் ஒட்டியிருநார்கள். நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களும் மற்ற வெகு ஜன அமைப்புக்களின் தோழர்களும் அந்த பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

 அன்றைய தினம் எங்களின் கோட்ட செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில்தான் நடந்து கொண்டிருந்தது. வெங்கடேசன் என்ற கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமையிலான குழு எங்கள் செயற்குழுக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது திடிரென உள்ளே நுழைந்து எங்களிடம் நிதி திரட்டினார்கள். இப்படி கூட்டத்தின் நடுவில் ஒரு தகவல் கூட சொல்லாமல் வந்து விட்டார்களே என்று ஒரு சிறு எரிச்சல் கூட வந்தது. அப்படிப்பட்ட தோழர்களின் உழைப்பை சிறுமைப்படுத்தியது ஜெயமோகனின் சகவாசத்தினால்தானோ என்று கூட தோன்றியது.

 இட்லி வேகவில்லை என்ற புகாரைக் கூட என்னிடம் தெரிவித்தார்கள் என்பதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டு. மாநாட்டு வரவேற்புக் குழு செயலாளரிடம்தான் மாநாட்டு பங்கேற்பாளர்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்க முடியும். இது சொந்த அனுபவமும் கூட, மாநாட்டு பங்கேற்பாளனாகவும் அமைப்பாளராகவும்.

 நான் ஒரு படைப்பாளி, எழுத்தாளன், என்னிடமா இதையெல்லாம் சொல்வது என்ற புலம்பல் எல்லாம் அமைப்பை விட தான் மிகவும் மேலானவன் என்ற கொம்பு முளைத்த சிந்தனையின்றி எதுவுமில்லை.

 கலை இரவு கனவை, தமுஎகச அமைப்பை அதன் பொறுப்பாளர்கள் இன்றளவும் உயிர்ப்போடுதான் வைத்திருக்கிறார்கள். ஆஜானின் சிந்தனைதான் எப்போதும் போல புளித்த தோசை மாவு.

 அவர் நண்பர் கனவை எப்படி உயிர்ப்போடு வைத்திருக்கிறார்! உண்டாட்டு என்ற நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம். அது என்ன உண்டாட்டு? கறி சோறுடன் கூடிய மது பான விருந்து.

 ஜெயமோகனின் பொய்களை, அராஜகங்களை அம்பலப்படுத்தக் கூடிய பலரும் இருப்பது தமுஎகச அமைப்பு என்பதால் அதனை சிறுமைப்படுத்த முயற்சித்து இன்பம் காணுகிறார் ஆஜான். எந்த ஒரு மன நல மருத்துவரும் குணப்படுத்த முடியாத அளவிற்கு அவரது மன வியாதி முற்றி விட்டது என்பதுதான் உண்மை.

இந்த பதிவிற்கு வந்த இரண்டு பின்னூட்டங்களையும் கீழே தந்துள்ளேன்.

எனது நினைவுகளில் 90-கள் அல்ல 80-களிலேயே தோழர் ராஜன் (ஆர்.ஜெகதீசன்) செயலாளராக இருந்த போது தோழர்.கவிஞர்.வெண்மணியால் வித்தூன்றப்பட்டதே கலை இரவு முயற்சி.

*********************

 Next target is Comrade Bava? கமலின் தேவர் மகன் டயலாக் தான் நியாபகம் வருகிறது.... (அதை கொஞ்சம் மாற்றி) புரிந்து கொள்ளவும்.

***********************************************

(என்னுடைய பதில்)

இதிலே டார்ஜெட் எங்கிருந்து வருகிறது? சில உண்மைகளை வெளிப்படையாக பேச வேண்டிய நேரம் வந்து விட்டது. அவ்வளவுதான்.

 *******************************************************

முதல் பின்னூட்டம் கலை இரவு முயற்சியை முன்பே துவக்கி விட்டனர் என்ற உண்மையை சொல்கிறது. அதிலே கவிஞர் வெண்மணியோடு இணைந்து செயல்பட்டது எங்கள் கோட்டச்சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் என்ற செய்தி பெருமிதமும் அளிக்கிறது.

 

இரண்டாவது பின்னூட்டம் தோழர் பவாவை அடுத்த இலக்காக கொண்டுள்ளீர்களா என்று கேட்டது. அதற்கு நான் பதிலும் கொடுத்து விட்டேன்.

*******************************************************************

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

 இதில் மகிழ்ச்சியடைய என்ன இருக்கிறது என்பதுதானே உங்கள் கேள்வி!

 ஆமாம். கண்டிப்பாக இருக்கிறது.

 தமிழ்நாட்டின் பெரும் பண்பாட்டு அமைப்பான தமுஎகச வை சுயமோகன் இவரை பயன்படுத்தி தொடர்ந்து சிறுமைப்படுத்திக் கொண்டிருந்தார். இவரோ கள்ள மவுனத்தோடு அப்படிப்பட்ட அவதூறுகளை ஊக்குவித்துக் கொண்டே இருந்தார். இவருக்கு கிடைத்திருந்த அறிவுஜீவி முத்திரை, கதை சொல்லி முத்திரை ஆகியவை எல்லாம் இவரை ஏதோ மிகப் பெரும் முற்போக்கு ஆளுமை என்ற பிம்பத்தை உருவாக்கியிருந்தது. கல்வி அவசியமில்லை என்று இவர் சொன்னதன் மூலம் அந்த முற்போக்கு பிம்பம் தகர்ந்து போய் உள்ளத்தில் ஒளிந்திருந்த பிற்போக்குத்தனம் அம்பலமாகியது மகிழ்ச்சிதான்.

 அமைப்பின் பொறுப்புக்களில் இருந்தோ அல்லது அமைப்பிலிருந்தோ வெளியே வந்த பின்பு தான் இருந்த, வளர்வதற்கு காரணமாக இருந்த அமைப்பை நாசமாக்க வேண்டும் என்று அலைகிற, அமைப்புக்கு  எதிரானவர்களோடு கை கோர்த்து அமைப்பை அவதூறு செய்ய நினைப்பவன் எப்பேற்பட்ட கொம்பனாக இருந்தாலும் அது போன்ற நபர்களை நான் எந்நாளும் மதிக்க மாட்டேன். ஏதோ சில காரணங்களுக்காக அப்படிப்பட்ட நபர்களை ஆதரிப்பவர்கள் எப்பேற்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களும் மனதில் ஒரு படி கீழிறங்கி விடுவார்கள்.

 இப்படிப்பட்ட போலிகள் நிச்சயமாக அம்பலப்பட்டு அசிங்கப்படுவார்கள்.

 அதனை காலம் விரைவிலேயே செய்ததால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

 

Monday, October 9, 2023

நோபல் பரிசு – பயந்து வருது

 



 இந்தாண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஜோன் ஃபோஸ் என்ற நார்வே எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வரவில்லை அச்சம்.

 அவரது லேட்டஸ்ட் படைப்பான செப்டாலஜி என்ற நாவல் ஒரு முற்றுப்புள்ளி கூட இல்லாமல் 1250 பக்கங்கள் கொண்டதாம் என்ற செய்திதான் அச்சத்தை தந்தது.

 அவரை விட இன்னும் அதிகமான பக்கங்கள் கொண்ட நாவலை முற்றுப்புள்ளி இல்லாமல் நான் தமிழில் எழுதுகிறேன் என்று தமிழின் முதன்மையான எழுத்தாளன். மாஸ்டர் என்று தனக்குத்தானே கிரீடம்  சூட்டிக்கொள்ளும் ஆஜான் கிளம்பி விட்டால் என்ன ஆவது?

 நாவலை மக்கள் படிக்காவிட்டாலும் மகத்தான கதை சொல்லி அந்த கதையை சொல்ல ஆரம்பித்தால் என்ன ஆகும்!

 

 

 

Wednesday, July 26, 2023

டிமோவுக்கு பயமோ பயம் . . .

 


தெனாலி சோமன் போல டிமோவுக்கு எல்லாத்துலயும் பயம் வந்துடுச்சு. 

ஆமாம்.

கீழே உள்ள செய்தியை பாருங்க . . .



விருது கொடுப்பதை விட விருது பெற்றவர் அதை திருப்பி கொடுப்பதுதான் பெரிய செய்தி.

அதற்குத்தான் டிமோ பயந்து போயிட்டாரு.

மாலன், ஜெமோ, சாரு மாதிரியான ஆளுங்களுக்கு விருது கொடுங்க டிமோ. அவங்க யாரும் திருப்பி தரவே மாட்டாங்க. நீங்க கொடுக்கற காசுக்கு மேல பல மடங்கு கூவுவாங்க....


Friday, June 2, 2023

ஜெயமோகனை ஜெயிலில் போடுங்கள்

 


கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நாத்திகவாதிகளுக்கும் எதிராகவும் அவர்களை அவதூறு செய்தும் இந்து மதத்தை இழிவு செய்து பேசினால் கோடிக்கணக்கில் பணம் தரப்படுவதாகவும் புளிச்சமாவு பேசிய காணொளி ஒன்று உண்டு.

அதை மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

ஜெயமோகனுக்கு விபரம் தெரியும் என்றால் அதை போலீசிடம் சொல்ல வேண்டுமே தவிர, விளம்பரத்திற்காக வீடியோ போடக்கூடாது. அந்த வீடியோவை தரவிறக்க முடிந்ததால் அதை இணைத்து காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். 


பெறுனர்

காவல்துறை தலைவர்,
தமிழ்நாடு, சென்னை

மதிப்பிற்குரிய ஐயா,

மத மோதலை தூண்டுவதற்கு எதிரான புகார்.

எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் பேசிய காணொளி ஒன்றை முக நூலில் பார்க்க நேரிட்டது.

மத மோதல்களை உருவாக்கும் வண்ணம் அவர் பேசியுள்ளார். பணம் வாங்கிக் கொண்டு மத மாற்றத்திற்காகவும் இந்து மதத்தை பழித்தும் பேசுபவர்களை தனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே அவருக்கு அப்படிப்பட்ட தகவல்கள்   தெரியுமாயின் காவல் துறையில் புகார் அளித்திருக்க வேண்டும். அதுவன்றி இப்படி பேசி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வது தேவையற்ற பிரச்சினைகளுக்கு 
வழி வகுக்கும்.

குறிப்பிட்ட காணொளியை இத்துடன் இணைத்துள்ளேன்.

தக்க நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இவண்
எஸ்.ராமன்,


பார்ப்போம், காவல்துறை எனக்கு பதிலாவது அனுப்புகிறதா என்று!

Friday, April 7, 2023

விஷமோகனை எதுவும் மன்னிக்காது

 

விஷ மோகன் மீண்டும் ஒரு விபரீத சர்ச்சையை தூண்டியுள்ளார்.

அவருடைய செல்பி கேள்வி பதில் பகுதியில் கோழை சாவர்க்கரை உயர்த்திப் பிடிக்க பல நச்சுக்களை கக்கியுள்ளார்.

"சாவர்க்கர் அளவிற்கு மகாத்மா காந்தியை பிரிட்டிஷார் துன்புறுத்தவில்லை.

சாவர்க்கர், பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய மூவரையும் ஒன்றாக, ஒரே மாதிரியாகத்தான் பார்க்க வேண்டும். மூவரும் சமம். இவர்களில் யார் ஆட்சிக்கு வந்திருந்தாலும் இந்தியா பேரழிவை சந்தித்திருக்கும்."

இவை மட்டுமல்ல இன்னும் ஏராளமான பிட்டுக்களை அள்ளி வீசியுள்ளார். 

பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பகத்சிங்கிற்கும் சுபாஷ் சந்திர போஸிற்கும் சுதந்திர இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக, எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற நாடாக இருக்க வேண்டும் என்ற கனவு இருந்தது.

மத வெறியை தூண்டி, பிரிவினைக்கு காரணமாக இருந்து மகாத்மா காந்தியை கொலை செய்ய திட்டம் தீட்டிய, பிரிட்டிஷாரிடம் மண்டியிட்ட கோழை சாவர்க்கரை இரு பெரும் வீரர்களோடு ஒப்பிட்ட அயோக்கியன் ஜெயமோகனை, வரலாறும் மன்னிக்காது, சமூகமும் மன்னிக்காது. புளிச்ச மாவு பாக்கெட் கூட மன்னிக்காது. 


Wednesday, April 5, 2023

ஆஜானின் டெலிகேட் பொஸிஷன்

 


அயோத்தி திரைப்படத்தின் கதை தொடர்பான சர்ச்சை ஓடிக் கொண்டுள்ளது. பீகாரிலிருந்து வந்த கிராம வங்கி ஊழியருக்கு ஏற்பட்ட துயரத்தின் போது பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் செய்த உதவி தொடர்பாக வங்கி ஊழியர் சங்கத் தலைவர் தோழர் ஜா.மாதவராஜ் வலைப்பக்கத்தில் எழுதியதே திரைப்படமாக வந்துள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணன் செய்த கதைக் களவு தொடர்பாக ஆஜான் ஏதாவது எழுதியுள்ளாரா என்று அவர் தளத்தில் தேடிப் பார்த்தேன். ஆல்.இன்.அழகுராஜாவாக எல்லா பிரச்சினைகளிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஆஜான், இந்த பிரச்சினையில் மட்டும் வாய் திறக்கவே இல்லை.

ஆமாம். அவர் நிலைமை கஷ்டம்தான்.

எஸ்.ரா வை ஆதரித்தாலும் பிரச்சினை. 

இந்தாளோட சர்க்காரே திருட்டுக்கதை, அதனாலதான் ஆதரிக்கிறார்

என்று சொல்வார்கள்.

விமர்சித்தால்

உன்னோட சர்க்காரே திருட்டுக்கதை, நீ அவரை சொல்றியா என்பார்கள்.

அதனால் கள்ள மவுனத்தைத் தவிர வேறு வழியில்லை . . .

பிகு: எழுதி ரொம்ப நாள் ஆனதுதான். ஆஜான் தொடர்பாக புதிய பஞ்சாயத்துக்களுக்கு போகும் முன்பு இந்த பழைய பஞ்சாயத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்பதால் பகிர்ந்து கொள்கிறேன். 

Thursday, March 16, 2023

திருக்குறள் படிக்கலையா ஆட்டுக்காரா?

 

அண்ணாமலையின் பழைய சகா மதன் ரவிச்சந்திரன், புளிச்ச மாவு ஆஜானின் மகளிரணித் தலைவி வெண்பா ஆகியோர் வெளியிட்டுள்ள வீடியோக்கள்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பு.

அம்பலப்படுத்தியவர்கள், அம்பலப்பட்டவர்கள் என யார் மீதும் எந்த மரியாதையும் இல்லாததால் இச்செய்திக்கு முக்கியத்துவம் அவ்வளவு அவசியமில்லை. 

ஆனால் ஒரே ஒரு ஆடியோ மட்டும் ஈர்த்தது.

"இளைஞர் அணிக் கூட்டத்தில பேசனும் ப்ரதர் நாலு திருக்குறள் அனுப்புங்க, ஜல்லிக்கட்டு பத்தி கூட சொல்லுங்க ப்ரதர்"

என்றெல்லாம் ஆட்டுக்காரன் கேட்டதுதான்  அது.

20,000 புக் படிச்ச ஆட்டுக்காரன் திருக்குறள் மட்டும் படிக்கவில்லை போல...

மதனை கேட்டதற்கு பதிலாக மாலனைக் கேட்டிருக்கலாமே,  கொடுத்த காசுக்கு கூவுவதை விட பல மடங்கு அதிகமாக கூவியிருப்பாரே!


Tuesday, January 31, 2023

ஆரம்பிச்சுட்டாராய்யா, சீமான் ஆரம்பிச்சிட்டாரு

 


இறந்து போனவர்களை வைத்து கதையளக்கும் வேலையை கொஞ்ச காலம் செய்யாமல் இருந்த சீமான், தன்னுடைய கற்பனைத்திறனை வெளிப்படுத்தும் வேலையை மீண்டும் ஆரம்பித்து விட்டார்.

இதோ அந்த கற்பனை.


ஆனாலும் சொல்வேன், புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகனுக்கு சீமான் நூறு மடங்கு மேல். சீமான் இறந்தவர்களை வைத்து சொல்லும் பொய் நமக்கு நகைச்சுவை. ஆனால் ஜெயமோகனோ இறந்தவர்களை எவ்வளவு கீழ்த்தரமாக எழுத முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக எழுதுவார். ஆமாம், அவர் பேனாவில் மைக்கு பதிலாக சாக்கடையை ஊற்றி எழுதுபவர்.