சிறைக்குள்ளே இருக்கும் அம்மாவிற்கு தங்கள் கண்ணீரை காணிக்கையாக்கி மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட அழுகாச்சி காவியம். இது உலக வரலாற்றில் மிகவும் முக்கியம்தான்.
ஆம், உலகிலேயே ஒரு அமைச்சரவை பதவியேற்பு இவ்வளவு சோகத்துடனும் கண்ணீரோடும் எங்காவது இதுவரை நடந்ததுண்டா?
ஆக இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க புகைப்படங்களை காணத் தவறாதீர்கள்.
ஒன்றிரண்டு படங்களே நேரடியாக கிடைத்தது.
மற்றவையெல்லாம் யூட்யூபுலிருந்து ஒவ்வொரு அமைச்சராக பார்த்து பாஸ் ( Pause) செய்து பிறகு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பெயிண்டில் சேவ் செய்து பிக்சர் எடிட்டர் மூலம் கிராப் செய்து எடிட் செய்து போட்டது.
ஒரு வரலாற்று ஆவணத்திற்கு இவ்வளவு கூட மெனக்கெடவில்லையென்றால் எப்படி?