Showing posts with label கொடூரம். Show all posts
Showing posts with label கொடூரம். Show all posts

Thursday, October 28, 2021

மொட்டைச்சாமியாரின் மனதின் குரல்

 


மோடி மந்திரி மகன் காரேற்றி கொன்ற கொடூர சமபவத்திற்கு சாட்சி சொல்ல ஏன் ஆட்கள் முன்வரவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு மொட்டைச்சாமியாரின் மனசாட்சி என்ன பதில் அளித்திருக்கும் என்ற சிந்தனையில் எழுதியதே மேலே உள்ளது.               

 


Wednesday, October 6, 2021

இதற்கென்ன சொல்லும் சுப்ரீம் கோர்ட்?

 


மொட்டைச் சாமியார் மாநிலத்தில் கொடூர நிகழ்வு நடந்ததும்

"விவசாயிகள் தலைவர்கள் வன்முறையை கட்டுப்படுத்த இயலாதவர்கள்" என்று கடுமையான விமர்சனத்தை உச்ச நீதிமன்றம் வைத்தது.

"தங்கள் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கல்லெறிந்ததால் கார் தடுமாறி வ்ழுந்ததில்தான் இரண்டு விவசாயிகள் இறந்து போனார்கள்"

என்ற மந்திரியின் கட்டுக்கதையை நம்பி சொன்ன விமர்சனம் இது.

இப்போது உண்மை வெளியாகி விட்டது.

விவசாயிகளின் பேரணி மீது வாகனம் வேகமாக வந்து மோதியதன் விளைவே விவசாயிகளின் கொலை என்பதையும் கல்லெறிதல் சம்பவமே நிகழவில்லை என்பதையும் காணொளி அம்பலப்படுத்தி விட்டது.

அயோக்கிய மந்திரியின் பேச்சை நம்பிய உச்ச நீதிமன்றம் இப்போது என்ன சொல்லப் போகிறது?

அயோக்கிய மந்திரியை, மந்திரி மகனை கைது செய்ய உத்தரவிடுமா?

Monday, October 4, 2021

கறுப்புக் கொடிக்கு காரேற்றி கொலை . . .

 மொட்டைச்சாமியார் ஆளும் மாநிலத்தில் நேற்று நடந்த கொடூர சம்பவம் இது.






லகிம்பூர் கேரி  என்ற மாவட்டத்தில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மோடியின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பேணி,, போராட்டத்தை கொச்சைப்படுத்தி  பேசியதால் அந்த மனிதன் நேற்று சொந்த ஊருக்கு வர கறுப்புக் கொடி காண்பித்துள்ளார்கள். 

அதிலே கடுப்பான மந்திரியின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்றியதில் நான்கு விவசாயிகள் இறந்துள்ளனர். அவர்களின் எதிர்வினை இன்னும் நான்கு உயிர்களை போக்கியுள்ளது.

பேயரசு ஆட்சியில் இப்படித்தான் நடக்குமா?

மோடி தன் மந்திரி மீது நடவடிக்கை எடுப்பாரா?

இல்லை. மாறாக பாதுகாப்பார்.

கொலைகார ஆட்சியில் கொலைகாரர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்!

Sunday, April 11, 2021

அவர்கள் எழுத மாட்டார்கள்

தோழர் கவிஞர் சுகிர்தராணியின் கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்.


 சாதியற்றவனின் மரணம்

******************************
நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்



ஒரு ரயில் நிலையத்தில் அமர்ந்துகொண்டு
அதன் நடைபாதையில்
கொட்டிக் கிடக்கும் மஞ்சள் பூக்களை

தூரத்தில்
தாய்ப்பால் புகட்டியபடி
வேர்க்கடலையைப் படி நிறைய
அளந்து விற்கும் பெண்ணொருத்தியின்
தாய்மை பூத்திருக்கும் முகத்தை

சிதிலமடைந்த கற்கோவிலின்
படியிலமர்ந்து
உங்கள் முகத்தை நீங்களே ஏந்தி
தொல்பொருளாய்க் காத்திருக்கும்
அந்த ஏகாந்தத்தை

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்

உங்கள் பண்ணைநிலம் ஊடாக
நடக்கும்போது
நடவு நடும் பெண்ணின்
ரவிக்கைக் கிழிசலை மறைக்க
நீங்கள் வீசி எறிந்த
துண்டின் பெருமையை

வீட்டு முற்றத்தில்
காலைநேர தேநீரை
நீங்கள் அருந்தும்போது
நேநீர்க் கோப்பையின் நிழலில்
இளைப்பாறும் சிட்டுக்குருவியை
நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்

இராக்கால மொட்டைமாடி பொழுதுகளில்
எரிந்து விழும் நட்சத்திரங்களுக்கிடையே
குளிர்ந்து வீசும் தென்றலை

உங்களுக்கான மர அலமாரியில் ஒளித்து வைத்திருக்கும்
உங்கள் காதலியுடையதோ காதலனுடையதோ
பழந்துணியின் வாசத்தை

நீங்கள் யாவற்றையும் எழுதுங்கள்



ஆனால் ஒருபொழுதும்
எழுதி விடாதீர்கள்

அரிவாளால் வெட்டுண்டு
ஈ மொய்த்தபடி
வாய் பிளந்து கிடக்கும்
ஒரு சாதியற்றவனின் மரணத்தை.

Saturday, August 10, 2019

மம்தா-காளகேயா : பொருத்தமா இருக்கே!


மம்தா பேசிய தமிழ், பாகுபலி காளகேய மொழிக்கு இணையாக இருந்ததாக இந்த காணொளி நக்கலடிக்கிறது.

மொழி எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். மம்தாவின் தமிழ் குறித்து நான் எதுவும் சொல்லப் போவதில்லை. 

ஆனால் திரையில் தோன்றிய காளகேயனின் கொடூரத்திற்கும் மம்தா மேற்கு வங்கத்தில் நடத்தும் கொடூர ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

ஆகவே இந்த ஒப்பீடு அவ்வகையில் பொருத்தமே


Thursday, June 20, 2019

முன்னுரிமை இதற்குத்தான் மோடி



இந்த படத்தை முழுமையாக (காயம் மறைக்கப்பட்டுள்ளது)  பார்க்கும் போதே பதறியது.

 செய்தியை  படிக்கும் போது இன்னும் அதிகமாக பதறியது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் வார்தா வில் ஒரு ஆலயத்துக்குள் நுழைந்த ஒரு தலித் சிறுவனின் ஆடைகளை அகற்றி வெறும் தரையில் வெயிலில் உட்கார வைத்ததில் அச்சிறுவனின் பின் பக்கம் வெந்து போய் விட்டது.

காட்டுமிராண்டித்தனம் என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்று ஜனநாயக விரோதமான ஒரு நடவடிக்கைக்காக நேரத்தை வெட்டியாக விரயம் செய்வதற்குப் பதிலாக

"அனைவருக்குமான நாடு, அனைவருக்குமான உரிமைகள்"

என்று சிந்தித்து அதனை அமலாக்க முயற்சி செய்யவும் மோடி. 

இதுதான் உடனடித் தேவை