தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் இன்று கலந்து கொண்ட போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத்தகத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள்.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Saturday, September 2, 2023
இந்த ஆரெஸெஸ் வரலாறு நல்லாருக்கே!
Monday, August 14, 2023
கேவலமான “பிரிவினை கோர நாள்” அரசியல்
கடந்தாண்டு முதல் டிமோ அரசு ஒரு கேவலமான அரசியலை கையில் எடுத்துள்ளது.
14 ஆகஸ்டை பிரிவினை கோர நாள் என்று அனுசரிக்கிறது. இது பற்றிய எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சுற்றறிக்கையின் ஒரு பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
பிகு: கண்காட்சியில் வைக்கப்பட்ட படங்களை இங்கே பகிர்ந்து அவர்களின் வெறுப்பரசியலை நாமும் பகிரக்கூடாது என்பதால் அவற்றை பகிராமல் தவிர்த்து விட்டேன்.
Thursday, August 10, 2023
மகாத்மா காந்தி கொள்ளுப்பேரனா இருந்தாலும்
நேற்று மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலைய லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமூக செயற்பாட்டாளர் டீஸ்தா செதல்வாட் வீட்டிலேயே அடைக்கப்பட்டு விட்டார்கள்.
என்ன தவறு செய்தார்கள்?
மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.
கடந்தாண்டு தென் மண்டல மாநாடு வேலூரில் நடைபெற்ற போது பிரச்சாரப் பயணத்தின் நிறைவுப் பொதுக்கூட்டத்தை "வெள்ளையனே வெளியேறு தினம்" அன்று நடத்தினோம்.
மேலே சொன்ன இருவரும் அன்றைய தினத்தை குறிக்கும் அமைதிப் பேரணியில் கலந்து கொள்ள புறப்பட்டவர்கள்.
பாஜகவிகுத்தான் அமைதியும் பிடிக்காது, சுதந்திரமும் பிடிக்காது. அதனால் பேரணியை தடை செய்து இவர்களையும் கைது செய்து விட்டனர்.
வெள்ளையனே வெளியேறு தினம் அவர்களுக்கு வில்லங்கமானது கூட.
அப்போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகி, கருங்காலிதான் அடல் பிஹாரி வாஜ்பேய் என்பதும் நினைவுக்கு வருமே.
Sunday, May 7, 2023
இளம் கலைஞருக்கு வாழ்த்துக்கள்
மருந்துவியல் முதலாண்டு படிக்கும் ஸ்ரீகாந்த் என்ற இந்த வாலிபர்தான் அந்த இளம் கலைஞர். கை கொடுத்து பாராட்டினேன். கதவடைப்பு காலத்திலிருந்துதான் ஓவியம் வரைய ஆரம்பித்ததாகச் சொன்னார்.
Tuesday, July 5, 2022
மோடி கம்மிங். தியாகிகள் உஷார்
காலையில் கண்ணில் பட்ட படம் முதலில் உள்ளது. ஆந்திராவில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை மோடி வணங்குகிறாராம்.
விடுதலைப் போரைக் காட்டிக் கொடுத்த களவாணிக் கூட்டத்தின் வாரிசு, விடுதலை வரலாற்றை மாற்றி எழுதும் மோசடிப் பேர்வழி, சுதந்திரத்தின் விழுமியங்களை சிதைக்கும் கொலைகாரன், இந்திய செல்வத்தை விற்கும் தரகன் மோடிக்கு என்ன அருகதை இருக்கிறது!
தியாகிகளே எச்சரிக்கையாக இருப்பீர்!
நாடாளுமன்ற கட்டிடத்தை முத்தமிட்ட மோடி நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் மரபுகளையும் சீரழித்த குற்றவாளி.
உங்களை வணங்கும் கரங்களுக்குள் கொலை வாள் ஒளிந்திருக்கும். எச்சரிக்கையாக இருப்பீர். உங்கள் பென்ஷனைக் கூட அந்த படுபாவி பறிக்கலாம். உங்களை காட்டிக் கொடுத்த கருங்காலி எவனாவது இருந்தால் அவனுக்கும் தியாகி அடையாளி கொடுக்கலாம்.
எலிசபெத் ராணியின் கால்களில் மண்டியிட்டுக் கிடந்த துரோகி கோழை சாவர்க்கரை வீரன் என்று அழைப்பவர்கள் அல்லவா இவர்கள்!
Monday, October 25, 2021
மருது சகோதரர்களும் மத வெறியனும்
மன்னிப்பு கேட்பதில் கோழை சாவர்க்கரின் சாதனையை விஞ்சிய எச்.ராசாவின் முக நூல் பதிவொன்று மருது சகோதரர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு மதச்சாயம் பூசியது. அதற்கு மதுரைத் தோழர் வெண்புறா சரவணன் சூடான எதிர்வினை ஒன்றை அளித்துள்ளார்.
அதனை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். ராசா போன்ற கேவலமான விஷ ஜந்துக்களை சுதந்திரமாக திரிய விடுவது இந்திய மக்கள் ஒற்றுமைக்கு பேராபத்து.
Friday, September 10, 2021
அப்போது கூட சங்கிகள் நீங்கள் ????
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் சங்கிகள் உள்ளார்கள். பிள்ளையார் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும் என்பதற்காக அவர்களின் புதிய வசனம் ஒன்றை பேசத் தொடங்கியுள்ளனர்.
Sunday, September 5, 2021
மோடிக்கு க.ஓ.த பாடல் சமர்ப்பணம்
Wednesday, August 18, 2021
ஒருவராவது பாஜகவில் உண்டா?
மேலே உள்ள படத்தில் இருப்பவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள். கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்.
அனைவருமே இத்தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். நீண்ட சிறைவாசம் அனுபவித்தவர்கள்.
அவர்கள் எத்தனை காலம் சிறைக் கொடுமையை அனுபவித்தனர் என்பதை கீழே உள்ள படம் உணர்த்தும்.
Wednesday, October 28, 2020
ஒருவராவது பாஜகவில் உண்டா?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்கள் என்று அழைக்கப் படுகிற கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழுவில் இடம் பெற்றிருந்த ஒன்பது தலைவர்களும் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டு பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தனர் என்ற தகவல்கள் கீழே உள்ள படத்தில் உள்ளது.
இது
போல சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு போன தலைவர் என்று ஒருவராவது பாரதீய
ஜனதா கட்சியில் உண்டா?
பாஜகவுடையது கோழை, துரோகப் பாரம்பரியம்
Friday, September 11, 2020
சங்கிகளுக்குத் தெரியுமா போராட்ட வரலாறு?
வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் அவர்களின் முக
நூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
அவர் குறிப்பிட்டுள்ள 1921 படத்தை முழுமையாக
பார்க்காவிட்டாலும் நேற்று ஒரு அரை மணி நேரத்திற்கு மேல் பார்த்தேன். நேரம்
ஒதுக்கி முழுமையாக ஒரு நாள் பார்க்க வேண்டும். திரைப்படம் பார்க்காவிட்டாலும் இந்த
போராட்டம் பற்றி படித்துள்ளேன்.
சுதந்திரப் போராட்டத்திற்கும் சங்கிகளுக்கும் உள்ள தொடர்பு
என்பது காட்டிக் கொடுத்த கருங்காலி வேலைதான். அதனால் அவர்கள் சுதந்திரப்
போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் இழிவு படுத்தவே முயற்சிப்பார்கள். அதிலும்
இஸ்லாமியர்கள் என்றால் வெறி பல மடங்கு அதிகமாகி விடும்.
இதிலே மம்முட்டிக்கு துணையாக நின்ற சுரேஷ் கோபி இப்போது ஒரு
அக்மார்க் சங்கி என்பது ஒரு கொடூரமான முரண்.
மலபார் மாப்ளா புரட்சிக்காரர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இல்லை என்று சங்கிகள் தொடங்கியிருக்கிறார்கள்.
மாப்ளா புரட்சியை அடிப்படையாகக் கொண்டு “1921” என்று ஒரு மலையாளப் படம் வந்து இருக்கிறது.
அதைக் கட்டாயம் பார்த்துவிடுங்கள். மிக அருமையான படம். சமூக வரலாற்றை சரியாகக் காட்டியிருப்பார்கள்.
முதல் உலகப் போரில் வட கேரளா முஸ்லீம்கள் பெருமளவில் பிரிட்டிஷ் படைகளில் போரிட்டனர். அவர்கள் நாடு திரும்பிய காலகட்டத்தில் கோவில்கள், பெரும் நிலப்பிரபுக்களாக இருந்த நம்பூதிரிகள் மற்றும் பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறை உச்ச கட்டத்தை எட்டுகிறது.
இந்த சுரண்டலின் மீதான வெறுப்பே பின்பு மாப்ளா கிளர்ச்சியாக வெடிக்கிறது. பண்ணையடிமைகளாக இருந்து கற்பனைக்கெட்டாத கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்ட தலித்துகளும் இந்தக் கலகத்தில் மாப்ளா போராளிகளுடன் இணைந்து கொண்டனர். பலர் முஸ்லீம்களாக மாறினர். (இந்தப் புரட்சிக்கு முன்பே தலித்துகள் முஸ்லீம்களாக மாறுவதை தடுக்க வேண்டும் என்று மலபார் மேனுவலில் வில்லியம் லோகன் எழுதியுள்ளதாக ஒரு நினைவு).
இந்த எழுச்சி கொடூரமாக ஒடுக்கப்படுகிறது. ஒரு கூட்ஸ் வண்டியில் 500 போராட்டக்காரர்கள் அடைக்கப்பட்டு கோவை போத்தனூருக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்களில் 400க்கும் மேற்பட்டவர்கள் மூச்சுத்திணறி மரணமடைந்து இருப்பது போத்தனூரில் கண்டுபிடிக்கப்படுகிறது.
இதெல்லாம் படத்தில் மிக அற்புதமாகக் காட்டப்பட்டிருக்கும். அதிலும் தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும், அவர்கள் மிக இயல்பாக நிலப்பிரபுக்களுக்கு எதிரான நிலை எடுப்பதையும் காட்டியிருப்பார்கள். ஐ வி சசியின் மிகச் சிறந்த படம் இது. இரண்டு அட்டகாசமான மாப்ளா பாடல்களும் உண்டு. மம்முட்டி நடித்தபடம்.
படத்துக்கு தொடர்பு இல்லாத ஒரு துயரமான நிகழ்ச்சியும் இருக்கிறது.
கோவை சிறையில் தூக்கிலிடப்பட்ட மாப்ளா போராளிகளின் உடல்கள் ரயில்வே ஷ்டேஷன், அல்லது ஷண்முகா தியேட்டர் அருகே இருந்த இஸ்லாமியர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்தனவாம். கல்லறை வழிபாடு கூடாது என்று இஸ்லாமிய அடிப்படை வாதிகள் அந்தக் கல்லறையை இடித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்.
இது உண்மையாக இருந்தால் எல்லா அடிப்படைவாதிகளும் ஒன்றுதான். நிலப்பிரபுத்துவக் கொடுமைகளுக்கு எதிராகப் போரிட்ட மாப்ளா போராளிகளுக்கு மத முத்திரை குத்த அனுமதித்த நம்மைப் போன்ற கோவை காகிதப் புலிகள் இன்னும் மோசமானவர்கள்.
சங்கிகளுக்கு ஒரே ஒரு கேள்வி.
இந்துக்களை மாப்ளா புரட்சிக்காரர்கள் கொன்றார்கள் என்கிறார்கள். பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்த நிலப்பிரபுக்கள்தான் அந்த இந்துக்கள். அவர்கள் பல்லாயிரம் தலித்துகளை பண்ணை அடிமைகளாக வைத்து இருந்தனர். குத்தகை விவசாயிகளாக இருந்த மற்ற சாதி இந்துக்களையும் வாட்டி வதைத்னர்.
அப்படியானால் அந்த நிலப்பிரபுக்களால் கொடுமைக்குளான, அவர்களை எதிர்த்துப் போரிட்ட தலித்துகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்?.
பிகு 1 : மேலே உள்ள படம் 1921 படக் காட்சி
பிகு 2: “கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்றுதான்
பதிவிற்கு தலைப்பு வைத்திருந்தேன். கழுதைகளை இழிவு படுத்தக் கூடாது என்பதால்
மாற்றி விட்டேன்.













