Showing posts with label நை. Show all posts
Showing posts with label நை. Show all posts

Wednesday, March 8, 2023

மாலனை அடிப்பதென்றால் ஆனந்தமே . .

 



மூத்த்த்த்த்த்த்த்த்த்த ………………… மாலன், தன் முகநூல் பக்கத்தை அடுத்தவர் யாரும் பார்க்காவண்ணம் பாதுகாப்பாக பூட்டி வைத்துக் கொண்டுள்ளார். ட்விட்டர் பக்கத்தையும் கூட.

 

அவர் யாருடைய பதிவிலாவது பின்னூட்டம் இட்டால் முகநூல் மெனக்கெட்டு எனக்கு நோடிபிக்கேஷன் கொடுக்கும். அதுவும் ஏனோ இப்போது வருவது இல்லை. என்னுடைய நட்புப் பட்டியலில் உள்ளவர் யாருடைய பதிவிலாவது பின்னூட்டமிட்டால் அது மட்டும் தெரியவரும். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பதிவில் போய் தனது மோடி/பாஜக விசுவாசத்தை வெளிப்படுத்தி வாங்கிக் கட்டிக் கொள்வது அவருக்கு வாடிக்கை.

 

அப்படித்தான் நேற்று ஒரு சம்பவம்.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்கள் ஆட்டுக்காரனை விமர்சித்து ஒரு பதிவு போட்டிருந்தார். அங்கே உடனே பிரச்சன்னம் ஆன மாலன், பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் “டேக் டைவர்ஷன்” பாணியில் திசை திருப்பும் பின்னூட்டம் ஒன்றை இட்டார்.

 

“அண்ணாமலையின் அண்ணனாய் திசை திருப்பாதீர், பதிவுக்கு பதில் சொல்லவும்”

 

என்று அவருக்கு பின்னூட்டமிட்டால்

 

கரகாட்டக்காரன் செந்தில் “அதான் இது” என்று சொன்னது போல “என் பதிலின் முதல் இரண்டு வாக்கியத்தில் உள்ளது” என்று எனக்கு பதில் சொல்ல

 

“என்னய்யா அபத்தமா எழுதுறீர்?”

 

“”சீமான் நிலையை மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கிறதா என்று கேட்ட உம்மைத்தான் சீமானுக்கு தோழர் அருணன் பயன்படுத்திய “லூசு” என்று அழைக்க வேண்டும்”

 

“உமக்கும் உம்ம எஜமானனுக்கும் இன்றைய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்கா? அப்பன் வெட்டிய கிணறு என்பதால் உப்புத்தண்ணியை குடிக்க வேண்டுமா? அம்பேத்கர் உருவாக்கியது என்பதற்காக இன்றைய அரசியல் சட்டத்தை பின்பற்ற வேண்டுமா என்று எழுதிய ஆள் நீர்தானே”

 

என்று தொடர்ச்சியாக கேட்க மூத்த்த்த்த மாலன், மேஜர் மாலனாகி பதுங்குக் குழிக்கு:ள் ஒளிந்து கொண்டு விட்டார்.

 

சம்பவத்தின் ஸ்க்ரீன் ஷாட்டுகள் இங்கே . . .

 






மாலனை அடிப்பதென்றால் எப்போதுமே சந்தோஷமாகவே உள்ளது. அவரு வரலாறு அப்படி.

Thursday, July 8, 2021

இவரை எப்படி மந்திரியாக்கினாங்க?


 

இவரை எப்படி அமைச்சராக்கினார்கள் என்ற கேள்வியை இவரது தவறான ஆங்கிலத்தை வைத்து கேட்கவில்லை.

ஆங்கிலமோ அல்லது வேறு மொழியோ தெரியாவிட்டால் தவறில்லை. மோடி போல எல்லாம் தெரிந்தது போல சீன் போடுவதுதான் தவறு.

"காந்தி தேசத்தந்தை' என்று சொல்லத்தான் அவர் முயன்றுள்ளார். காவிக் கயவர்கள் ஏற்காத ஒன்றாயிற்றே இது! 

கோட்சேவின் சீடர்கள் எப்படி இவரை அமைச்சராக்கினார்கள் என்பதுதான் என் கேள்வி