Showing posts with label ஆணாதிக்க சிந்தனை. Show all posts
Showing posts with label ஆணாதிக்க சிந்தனை. Show all posts

Sunday, July 13, 2025

தந்தையால் கொல்லப்பட்ட வீராங்கனை

 


மேலே படத்தில் உள்ளவர் ராதிகா யாதவ், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சிறந்த டென்னிஸ் வீராங்கனை.

அவரை இரண்டு நாட்கள் முன்பாக  அவரது அப்பா தீபக் யாதவ் சுட்டுக் கொன்று விட்டார்.

காரணம் என்ன?

டென்னிஸ் போட்டிகளில் பெறும் வெற்றிகள் மூலம் டென்னிஸ் பயிற்சிப் பள்ளி மூலமும் அவருக்கு பணம் குவிகிறது.

சமூக வலைதளங்களிலும் அவருக்கு லைக்குகள் குவிகிறது.

பெண்ணின் பணத்தில் பிழைப்பு நடத்துபவன் என்று கிராமத்தினர் கிண்டல் செய்ய, வலைதள செல்வாக்கு பொறாமையை வளர்க்க, தந்தையே மகளை சுட்டுக் கொன்று விட்டு இப்போது சிறையில் . . .


நாலு பேர் சொல்வதைக் கேட்டு நம்ம வீட்டு முடிவுகளை எடுப்பதன் விளைவுதான் இந்த கொலை.

மனதில் ஊறிப் போன ஆணாதிக்க சிந்தனை மகளையும் கூட பலி வாங்குகிறது. மாநிலத்தின் பிற்போக்குச் சிந்தனையும் ஒரு காரணி. பல வருடங்களாக பாஜக திணித்த பிற்போக்கு இது . . .

Monday, January 22, 2024

தெய்வக்குழந்தையா? முட்டாப்பசங்களா . .

 


உத்தரப்பிரதேசத்தில் இன்று மெயின் கேலிக்கூத்தைத் தவிர ஒரு  கேலிக்கூத்திற்கும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். 

பல தனியார், அரசு மருத்துவமனைகளில் சிசேரியன் ஆப்பரேஷன் செய்து இன்று ஆண் குழந்தைகளை பிரசவிப்பதற்கான ஏற்பாடு. கருவின் பாலினம் கண்டறிவதே கிரிமினல் குற்றம். ஆனால் இங்கே அதற்கடுத்த நிலைக்கு செல்கிறார்கள்.

எதற்கு?

இன்று பிறக்கும் ஆண் குழந்தைகள் ராமர் போல தெய்வக்குழந்தைகளாக இருப்பார்களாம்.

அட முட்டாப்பசங்களா!

குழந்தை, தாய் இருவரின் உடல் நிலை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் செய்யப்படுகிற முட்டாள்தனம். முழுமையாக வளர்ச்சி அடையாத குழந்தையை வெளியில் எடுத்தால் அதன் எதிர்காலம் என்னாகும்?

அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனை!

அதுவும் பொருத்தம்தான் ...

கட்டிய மனைவியை தீயில் இறங்க வைத்து பின் கர்ப்பிணி என்றும் பாராமல் காட்டிற்கு அனுப்பியவரைப் போல குழந்தை வேண்டும் என்று  விரும்புபவர்கள் மட்டும் சமத்துவ சிந்தனையோடா இருப்பார்கள்!

ஆணாதிக்கவாதிகள்தான் . சங்கி குணாம்சம்தானே இது!

Wednesday, June 5, 2019

ஆணாதிக்கம் இல்லையென்றால் நீ ஏன்?



இந்த அபத்தமான பதிவை இப்போதுதான் பார்த்தேன்.



ஆரோக்கியமற்ற, அசிங்கமான, அருவெறுப்பான ஒரு ஆணாதிக்கப் பழக்கத்திற்கு ஒரு அறிவுஜீவி மோடி ஆளுங்க போலவே ஒரு அறிவியல் முலாம் பூச முயன்றுள்ளது.

இந்த கேவலமான நடைமுறை ஆணாதிக்கம் இல்லை என்று வேறு சொல்கிறது அந்த ஜென்மம்.

எழவு, அந்த ஜென்மத்திற்கு வேறு என் பெயர்தான்.

அந்த ஜென்மத்திற்கு ஒரே ஒரு கேள்வி.

இந்த அறிவியல் கட்டுக்கதைகளை எல்லாம் ஒதுக்கி விடலாம். இந்த பழக்கம் ஆணாதிக்கம் இல்லை  என்றால்

இனிமேல் உன் மனைவி சாப்பிட்ட எச்சில் தட்டில் நாளை முதல் நீ சாப்பிடு பார்ப்போம்.

Sunday, April 28, 2019

மோடியின் வாரிசாக இவரே பொருத்தம்

இன்றைய  தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தியைப் படித்த போது தோன்றியதுதான் மேலே  உள்ள தலைப்பு,


முட்டாள்தனமான உளறல்கள். அராஜக நடவடிக்கைகள், குதிரை பேர மோசடிகள் ஆகியவற்றோடு மனைவியை கொடுமைப் படுத்துவதிலும் மோடியின் பாரம்பரியத்தை பின்பற்றும் பிப்ளப் குமாரே மோடியின் வாரிசாக இருக்க தகுதியானவர். 

திரிபுரா பாஜக முதல்வர் அடித்து துன்புறுத்துகிறார்... விவாகரத்து கேட்டு மனைவி வழக்கு




அகர்தலா:
திரிபுரா மாநில பாஜக முதல்வர் பிப்லவ் குமார் தேப். உளறல்களுக்குப் பெயர் போனவர். முதல்வராகி பேசிய கன்னிப்பேச்சிலேயே, “மகாபாரத காலத்தில் சேட்டிலைட், இண்டர்நெட் வசதிகள் இருந்தது” என்று கூறி அதிர்ச்சி அளித்தவர். 

“ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தது சரி, ஆனால், டயானா ஹெய்டனுக்கு எதற்காக உலக அழகிப்பட்டம் கொடுத்தார்கள்?” என்று ஆதங்கப்பட்டதாகட்டும், “சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும்” என்று கூறியதாகட்டும்; “வேலையில்லாத இளைஞர்கள் பீடா கடை வைக்க வேண்டும்” என்று இலவச ஆலோசனை வழங்கியதாகட்டும்- குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமானவர் பிப்லவ் குமார் தேப்.“குளத்தில் வாத்துகள் நீந்துவதால் தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும், தண்ணீர் சுத்தமாகும்” என்று பிப்லவ் தேப் கூறியது பற்றி இப்போது வரை விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுஒருபுறமிருக்க, பிப்லவ் தேப் குமாரிடமிருந்து விவகாரத்து வழங்குமாறு, அவரின் மனைவி நிதி, தில்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிப்லவ் தேப் குமார் தன்னை மிகக்கொடூரமாக அடித்துத் துன்புறுத்துவதாகவும் அந்த மனுவில் நிதி குற்றம் சாட்டியுள்ளார்.

Wednesday, April 3, 2019

சிப்பு சேகரின் மனைவியின் கவனத்திற்கு




சிப்பு சேகரின் மனைவி இதைப் படிப்பாரா?
படித்தால் அவரது எதிர்வினை என்னவாக இருக்கும்?


மேலே உள்ள திரைப்படக் காட்சிகள் வீட்டிலும் நடக்க வேண்டும். அப்போதுதான் இவனைப் போன்றவர்கள் அடங்குவார்கள்.