Showing posts with label லஞ்சம். Show all posts
Showing posts with label லஞ்சம். Show all posts

Friday, December 1, 2023

இதுதான் அமலாக்கத்துறை லட்சணம்

 


அமலாக்கத்துறை என்பது டிமோவின் ஏவல் நாய் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். பாஸ் யாரை கைகாட்டுகிறாரோ அவர்களை கடித்துக் குதறும் விசுவாசமிக்க நாய் என்பதும் தெரியும்.

 




முதலாளி சொல்வதை மட்டும் கேட்டால் தான் எப்படி செழிப்பாக இருப்பது என்ற எண்ணத்தில் அலைகிற திருட்டு நாயும் கூட என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

இந்த லட்சணத்துல இந்த ஏவல் நாய்கள்தான் ஊழலை அழிக்கும் கருவிகளாம் . .

Monday, June 19, 2023

சுகர் வந்துறப் போகுது ஆட்டுக்காரா

 



லூலு மால் அமைக்க ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க விட மாட்டோம் என்று சொன்ன ஆட்டுக்காரன் மௌனமாக 65 ஸ்வீட் பாக்ஸ் கொடுக்கப்பட்டதாக ஜூனியர் விகடன் எழுதுகிறது.

 


ஒரு மனிதன் 65 ஸ்வீட் பாக்ஸில் உள்ள இனிப்புக்களை சாப்பிட்டால் என்னாவது? சர்க்கரை வியாதி இல்லாத ஆளுக்குக் கூட அது வந்து விடுமே!

 பாத்து ஆட்டுக்காரா! கமலாலயத்தில் உள்ள மற்ற சங்கிகளோடு ஸ்வீட்டை பகிர்ந்து சாப்பிடவும்.

 ஆமாம். ஸ்வீட் பாக்ஸ் என்றால் நிஜமாகவே இனிப்புக்கள் அடங்கிய பெட்டிதானே, இல்லை அது ஏதாவது கோட் வேர்டா?

Wednesday, May 25, 2022

அதுக்குள்ளயா?

 


பஞ்சாப் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா என்பவர் அரசு டெண்டரில் 1 % லஞ்சம் கேட்ட காரணத்துக்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

 பஞ்சாப் முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

 சில கேள்விகளும் இயல்பாகவே எழுந்தது.

 ஆட்சி அனுபவம் இல்லாத ஆட்கள் இவர்கள். பதவிக்கு வந்து இரண்டு மாதங்கள் முழுமையாக முடியாத நிலையிலேயே பணம் சம்பாதிக்க துடிக்கிறார்கள் என்றால் அவர்களின் பின்னணி என்ன? ஊழலுக்கு எதிரான அமைப்பு என்றே அறியப்படும் ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சரே லஞ்சம் வாங்குபவர் என்றால் மற்றவர்கள் எப்படி? இந்த சம்பவம் தனித்த நிகழ்வா அல்லது பானைச் சோறுக்கான உதாரணமா?

 மந்திரியோடு அவரது சிறப்பு அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகார வர்க்கம் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாறாது. தன் குணாம்சத்தின் படியே செயல்படும் என்பதை சொல்கிறது இந்த சம்பவம்.

 

Friday, April 15, 2022

தற்கொலைக்கு தூண்டிய மந்திரியின் நேர்மை.

 


கமலேஷ் படீல் பாஜக காரர்தான். ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பல ரௌடி இயக்கங்களில் ஒன்றான ஸ்ரீராம் வாகினியின் கர்னாடக அமைப்பாளர் வேறு. அவர் ஒரு ஓட்டல் விடுதியில் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு விஷமறுந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காரணம் என்ன?

ஈஸ்வரப்பா எனும் மந்திரி.

சாலை போடும் ஒப்பந்ததாரரான கமலேஷ் படீலுக்கு நான்கு கோடி ரூபாய் பணம் வர வேண்டியுள்ளது. தனக்கு 15 லட்சம் தந்தால்தான் பில் ரிலீஸ் ஆகும் என்று ஈஸ்வரப்பா வற்புறுத்தியதால் அந்த பணத்தைக் கொடுத்தும் அரசு பில் தொகையை ரிலீஸ் செய்யவில்லை. அதனால் கடன் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி வைத்துள்ளார்.

பஞ்சத்துக்கு சங்கியான பொம்மை தன் அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பாரா?

தன் கட்சி உறுப்பினராக இருந்தாலும் லஞ்சம் கேட்பதில் கறாராக இருந்த பிஜேபி மந்திரியின் நேர்மை எனக்கு பிடித்துள்ளது.

Wednesday, October 25, 2017

அந்த பத்து லட்சம் - கேஷா? டிஜிட்டலா மோடி?




பாஜக கட்சியில் சேர ஒரு கோடி ரூபாய் அளிப்பதாகவும் பத்து லட்ச ரூபாய் முன்பணம் அளித்ததாகவும் குற்றம் சுமத்தி படேல் சமுதாய தலைவர் நரேந்திர படேல் என்பவர் பாஜகவில் சேர்ந்து வெளியேறி உள்ளார்.

காது வரை கிழியும் வாய் கொண்ட பாஜககாரர்கள் யாரும் இந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லை.

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.

அந்த பத்து லட்ச ரூபாய் முன்பணத்தை நரேந்திர மோடியின் ஆட்கள் நரேந்திர படேலுக்கு எப்படி கொடுத்திருப்பார்கள்?

ரொக்கமாகவா?

அல்லது

ஏதேனும் டிஜிட்டல் வடிவிலா?

என்ன இருந்தாலும் பாஜககாரர்கள் கொள்கைக் குன்றுகள் அல்லவா, அதனால் டிஜிட்டல் வடிவில்தான் பணத்தை மாற்றி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.