Showing posts with label மகளிர் தினம். Show all posts
Showing posts with label மகளிர் தினம். Show all posts

Friday, March 8, 2024

மகளிர் ஒதுக்கீடு -வரும் ஆனா வராது.

 


ஒவ்வொரு ஆண்டும் சர்வ தேச மகளிர் தினத்தின் போது "மகளிர் மசோதாவை நிறைவேற்று" என்பதே முக்கியமான முழக்கமாக இருக்கும்.

இப்போது மசோதா சட்டமாகி விட்டது. ஆனால் அமலாகுமா?

"வரும், ஆனால் வராது" என்ற நிலையை உருவாக்கி விட்டது மோடி அரசு.

இவர்கள் எப்போது மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தி, எப்போது தொகுதி மறு சீரமைப்பை செய்து பின் எப்போது மகளிர் இட ஒதுக்கீட்டை அமலாக்குவது?

தானும் செய்யாமல் அடுத்தவரையும் செய்ய விடாமல் மகளிர் மசோதாவையும் ஜூம்லாவாக மாற்றிய மோடி அரசை வீழ்த்துவதே சர்வ தேச மகளிர் தினத்தன்று நாம் எடுக்க வேண்டிய உறுதி மொழி.

அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.

பிகு: காலையிலேயே பதிவிட்டிருக்க வேண்டும். இணைய இணைப்பு சிக்கல் செய்ததால் இப்போது. . .

Wednesday, March 8, 2023

மகளிர் தினம் வாழியவே

 


மார்ச் - எட்டு

போராட்டத்தின் நாள்,

போராட்டம் தந்த வெற்றிகளை நினைவு கொள்ளும் நாள்.

பாலின பேதமற்ற சமுதாயம் படைக்க உறுதியுடன் முன்னேற உத்வேகம் அளிக்கும் நாள்.

அனைவருக்கும் இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள். 

Tuesday, March 8, 2022

வேண்டும் வேண்டும்

 


பாதுகாப்பும் கௌரவமும் வேண்டும்,
தடையில்லா கல்வி வேண்டும்,
நினைத்ததை பேச, எழுத உரிமை வேண்டும்,
சுயமாய் நிற்கும் வலிமை வேண்டும்,
ஆட்சியதிகாரத்தில் உரிய பங்கு வேண்டும்,
அத்தனையும் வென்றெடுக்கப்படும் நாள்
விரைவில் வரும் என்ற நம்பிக்கையோடு

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் 

Wednesday, March 10, 2021

நாசர் போல தொங்க விட வேண்டும்.

 


மத்யமர் சங்கிக்கு சமர்ப்பணம்.

 மத்யமர் குழுவில் “சர்வதேச மகளிர் தினம்” குறித்து ஒரு சங்கி எழுதிய பதிவை நேற்று பகிர்ந்து கொண்டிருந்தேன்.

 மகளிர் தினத்தை இடதுசாரிகள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதை எங்கள் கோவைக் கோட்டத் தோழர் இந்திரா மிக அருமையாக விளக்கி உள்ளார். இதனை அந்த சங்கிக்கு சமர்ப்பிக்கிறேன்.

 விஷமேறிய அந்த சங்கிக்கு இதெல்லாம் புரியுமா என்பது சந்தேகமே!

 தன்னுடைய பதிவை நியாயப்படுத்தி வினோதமான ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதனை கீழே கொடுத்துள்ளேன். அதனையும் படித்து விடுங்கள்.

 *நாளொரு கேள்வி: 08.03.2021*

 இன்று நம்மோடு கோவைக் கோட்ட எல்..சி மகளிர் துணைக் குழுவின் முன்னணி செயற்பாட்டாளர் *இந்திரா*

######################

 *சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்*

 

கேள்வி: சர்வதேச மகளிர் தினம் என்ன முக்கிய செய்தியைத் தாங்கி இன்று நம் மத்தியில் கொண்டாடப்படுகிறது?

 

*இந்திரா*

 இன்று சர்வதேச பெண்கள் தினம்.

 இந்த ஆண்டு .நா வின் முழக்கம் *"WOMEN IN LEADERSHIP: Achieving an equal future in COVID-19 World"* என்பது ஆகும். 

 "பெண்களின் தலைமை: கோவிட் 19 உலகத்தில் பெண்களுக்கு சம எதிர் காலத்தை உருவாக்குதல்" என்கிற இலக்கு உற்சாகம் தருகிறது.

 உண்மையிலேயே இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில் பெண்கள் பல  சாதனைகளையும் சோதனைகளையும் கடந்து வாழ்ந்து வருகின்றனர். கோவிட் பெருந்தொற்றை எதிர் கொள்ள பல பெண்கள்  *முன்களப்பணியாளர்களாக* பணியாற்றி னார்கள்

 இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள் *தூய்மைப்பணியினை* மேற்கொள்வதில் அதிக அளவில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களின் அளப்பரிய சேவையினை பாராட்டும் பொருட்டு பூக்களை தூவி அவர்களை மரியாதை செய்த நிகழ்வுகளை காணொளி வாயிலாக கண்டோம். சற்றே தொற்று பயம் குறைந்த பிறகு அவர்களை நடத்துகின்ற விதம் மாறுபடுவதே வேதனை தருகிறது. தமிழகத்தில் அரசாங்கம் தூய்மைப்பணியாளர்களாக தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களை  நிரந்தரமாக்கிவிடும் என்றெல்லாம் கூட நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் அரசு அவர்களை தற்காலிகபணியில் இருந்தும்கூட விலக்கிவிட்டது

 அதே போல் *செவிலியர்கள்* தங்களுடைய உயிரையும் பணயம் வைத்து வேலை செய்தனர். அவர்களுக்கு சிறப்பு ஊதியம் ஏதும் இதற்காக வழங்கப்படவில்லை. இரவு பகல் பாராது தங்கள் குடும்பத்தை விட்டு பல நாட்கள் தங்கி வேலை செய்து வந்தவர்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்பட்டதா என்றால் இல்லை

 *ஊரடங்கு காலத்தில்* பெண்களும் குழந்தைகளும் அனுபவித்த துயரங்கள் ஏராளம். வீட்டிலே குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் உணவு தயாரிப்பது மற்றும் வீடு பாத்திரம் துணி முதலியவற்றை சுத்தம் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டனர். உழைப்புச் சுரண்டல் என்பது அதிக அளவில் நடந்தது. இதில் வேலை இழப்பின் காரணமாக பொருளாதார நெருக்கடிக்குஆளாகியவர்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். குடும்ப வன்முறை அதிக அளவில் நிகழ்த்தப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 2019 க்கான NCRB (National Crime records bureau) புள்ளி விபரத்தின்படி *பெண்களுக்கு எதிரான குற்றங்கள்* 4,05,861 பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது அதற்கு முந்தைய (2018) ஆண்டை விட 7.3 % அதிகம். பெண்களின் மீது நடத்தப்பட்ட வன்முறை,    கடத்தப்படல்பாலியல் வல்லுறவு என பெண்கள் ஏதோ ஒருவகையில் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

 *குழந்தைகள் எதிர் கொள்ளும் வன்முறை* அதிகரித்திருப்பது சமூகத்தின் மனச் சாட்சியை உலுக்குவதாகும்

 2019 ம் ஆண்டில்குழந்தைகள் எதிர் கொண்ட வன்முறைகள் 148185.

இது 2018 ஆம் ஆண்டை விட 4.5 %அதிகம்.

 குழந்தைகளுக்கு தெரிந்த நபர்களாலேயே வன்முறைகள் நிகழ்ந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. 51% குற்றங்கள் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் நடந்தேறியுள்ளது.

 இந்த பெருந்தொற்று காலத்தில் ஏழ்மையில் உள்ள பெண்கள், மனநலம் குன்றிய நிலையில் உள்ள பெண்கள் மற்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பட்ட துன்பங்கள் அளவில்லாதது. உணவுக்காக அவர்கள் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். Child help line க்கு *'silent calls'* எனப்படும் அமைதியான அழைப்பு அதிக அளவில் வந்திருக்கிறது. குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்த துன்பத்தை வெளிப்படுத்த தெரியாமல் போன்களில் தவித்துள்ளனர்

 இவற்றையெல்லாம் விட சமீபத்தில் மும்பை உயர் நீதி மன்றத்தின் *நாக்பூர் பெஞ்ச்* நீதிபதி அளித்த தீர்ப்பு அதிர்ச்சி அடைய வைத்தது. தோலோடு தோல் நடத்தும் பாலியல் சீண்டல்கள்  மட்டுமே பாலியல் வன்முறையின் கீழ் வரும் என்று தீர்ப்பளித்திருக்கிறது. ஆடையின் மேல் தொட்டால் பாலியல் சீண்டல் ஆகாது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய தீர்ப்பு ஆகும்

 இவ்வாறாக இந்தியாவில் பெண்களின் நிலை இருக்கிறது

 இவற்றையெல்லாம் எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டிய தேவை அதிகரித்து உள்ளது. அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டு தளங்களில் பெண்கள் சம உரிமை அடையும் வரை பெண்களின் போராட்டங்களும் அவசியமாகிறது.

 இவற்றையெல்லாம் மீறி பல்வேறு தளங்களில் சாதனை படைத்த பெண்களைக் கொண்டாடுவோம். வாழ்த்துவோம்

 மார்ச் 8 - சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்

 ****************

*செவ்வானம்*

 மகளிர் தினம் குறித்து மத்யமர் சங்கி எழுதியதன் இணைப்பு இங்கே . நேற்று படிக்காதவர்கள் கொஞ்சம் இணைப்புக்கு போய் படித்து விட்டு வாருங்கள்.

 அந்த பதிவிற்கு கொடுத்துள்ள வியாக்யானம்.



 எழுதறதை எழுதிட்டு இப்போ அந்த திங்கிங், இந்த திங்கிங் என்றெல்லாம் பேசறதை பாருங்க. அவருடைய சொந்த கருத்தாக நினைத்து கமெண்ட் போடுவது அறிவீனத்தின் குறியீடாம். என்ன திமிரு!

 இவங்களை எல்லாம் “மகளிர் மட்டும்” திரைப்படத்தில் நாசரை தொங்க விடுவாங்களே, அது போல தொங்க விட்டாதான் புத்தி வரும்.