சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Monday, March 17, 2025
போட்டோவுக்கு போஸ் கொடுக்க வெட்கமில்லையா?
Wednesday, October 16, 2024
அருமையான, அதிசயமான,அற்புதமான புகைப்படம்
சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்ணன், முகநூலில் பகிர்ந்து கொண்ட பதிவையும் புகைப்படத்தையும் அவருக்கு நன்றி சொல்லி பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த புகைப்படத்தைக் கண்டு நீங்களும் நிச்சயம் அதிசயிப்பீர்கள்.
இதோ தோழர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் பதிவு
Saturday, November 25, 2023
அழகல்ல, அழிவு
மூன்று நாட்கள் முன்பு காலை ஆங்கில இந்து நாளிதழை கையிலெடுத்ததும் மேலோட்டமாக பார்த்த போது
முதல் பக்கத்தில் இருந்த படம் அழகாக இருப்பது போல தோன்றியது.
உயிர்ச்சேதம்
ஏதுமில்லை என்பது மட்டுமே சின்ன ஆறுதல்.
Monday, October 16, 2023
டிமோவுக்கு சைன்டிஸ்டுன்னு நெனப்பு
என்னமோ சந்திராயனை கண்டுபிடிச்ச சைன்டிஸ்டே இவர்தான் என்ற நெனப்பில் கட் அவுட் வைத்திருக்கிறார்கள். அநேகமா இது போன்ற கேலிக்கூத்து எல்லா ரயில் நிலையத்திலும் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் யாரும் எழுதி நான் பார்க்கவில்லை.
Thursday, April 13, 2023
"வெறும் நரேந்திரா"வும் விசு வஜனமும் . ..
கீழேயுள்ள புகைப்படத்தை பார்த்ததும்
குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் வரும்
"பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற் ஒரு ஒரு பைத்தியக்கார வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா அந்த பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கற பைத்தியக்கார வைத்தியர் தன்னோட பைத்தியத்துக்கு எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கற எந்த பைத்தியக்கார வைத்தியர் கிட்ட வைத்தியம் பார்த்துப்பாரு?"
ஒரு வேளை அந்த மூன்றாவது போட்டோகிராபரைத்தான் "வெறும் நரேந்திரா" போட்டோ எடுத்திருப்பாரோ?
Thursday, May 12, 2022
கோடைக்கானல், குறிஞ்சி மலரின் . . .
கடந்த வாரம் மூன்று நாட்கள் கொடைக்கானலில் ஒரு பயிலரங்கம். ஓய்வுக்காக அளிக்கப்பட்ட நேரத்தில் வேகம் வேகமாக சென்று கொடைக்கானலின் இயற்கை அழகை கண்களால் பருகியது மட்டுமல்ல, அதனை உங்களுக்கும் தவணை முறையில் பரிமாறுகிறேன். இப்பதிவு முதல் தவணை
பிகு: முகப்பில் எதற்கு அந்த படம்?
வாகனத்தில் செல்கையில் இரண்டு தோழர்கள் "அன்புக்கு நான் அடிமை" படத்தில் வரும் "காத்தோடு பூவா ராசா" பாடலின் வரும் "கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி" என்ற வரிகளை இரு வேறு சந்தர்ப்பங்களில் பாட, அது மனதில் ஒட்டிக் கொண்டது. அதனால்தான் அது இங்கே
Saturday, March 12, 2022
இயற்கை அளித்த எழில் ஓவியங்கள்
பயணங்கள் பல சந்தர்ப்பங்களில் இயற்கை எனும் அற்புதக் கலைஞன் வரையும் ஓவியங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பைத் தரும்.
Saturday, December 18, 2021
அழகிய வேலூர் கோட்டை
கீழே உள்ள படங்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டவை.
வேலூர்
கோட்டை கம்பீரமானது, வரலாற்றுச் சிறப்பு மிக்கது, சுதந்திரப் போரின் அடையாளம் என்பது
மட்டுமல்ல, அழகானதும் கூட . . .
Friday, December 17, 2021
அதிகாலை அழகே !
கடந்த வாரத்தில் ஒரு அதிகாலைப் பயணத்தின் போது பார்த்த ஒரு அழகிய காட்சி புகைப்படமாக உங்களுக்காக . . . .
Sunday, December 12, 2021
சென்னையில் வானவில்
நேற்று முன் தினம் சென்னையில் தோன்றிய வான வில்லின் அழகிய தோற்றம் உங்களுக்காக . . . .
படங்களை எடுத்தது என் மகன் . . .
தன் அலுவலக மாடியிலிருந்து எடுத்தது.
Tuesday, September 28, 2021
கேமரா மேன் 😜😜😜
Monday, August 30, 2021
வரலாற்றில் நிலைக்கும் புகைப்படம்
உலக வரலாற்றில் சில புகைப்படங்கள் மறக்க முடியாதவை. அவை
அமெரிக்காவின் ரசாயன குண்டின் தாக்கம் தாங்க முடியாமல் ஆடைகள் இன்றி ஓடி வரும் சிறுமி,
சிறுமியின் மரணத்திற்குக் காத்திருக்கும் வல்லூறு,
புதைகுழியில் கண் மூடிய போபால் விஷ வாயுவில் பலியான சிறுவன்,
ஐரோப்பியக் கடற்கரையில் ஒதுங்கிய சிரிய நாட்டு சிறுவனின் சடலம்
என்று துயரங்களின் வெளிப்பாடாகவே இருக்கும்.
மாறாக தாலிபன் கூட்டத்திடமிருந்து தப்பித்து பெல்ஜியம் மண்ணில் இறங்கியதும் மண்ணில் கால் படாமல் உற்சாகத்துடன் துள்ளிச் செல்லும் சிறுமியின் புகைப்படம் உற்சாகத்தின் வெளிப்பாடு, விடுதலையின் வெளிப்பாடு.
Tuesday, April 13, 2021
சூரியன் உதிக்கும் தருணம்
நீண்ட காலத்திற்குப் பிறகு நேற்று சென்னையை நோக்கி ஒரு அதிகாலைப் பயணம். அப்போது எடுத்த படங்கள் கீழே.
அரசியல் பதிவு என்று நினைத்தீர்களா?
அதுவும் சரிதானே!
Wednesday, January 20, 2021
Saturday, December 12, 2020
Saturday, November 28, 2020
Wednesday, August 19, 2020
உலக புகைப்பட நாளை முன்னிட்டு
உலகப் புகைப்பட நாளை முன்னிட்டு நான் எடுத்து எனக்கு பிடித்தமான சில புகைப்படங்களின் அணிவகுப்பு இங்கே.
எப்போதுமே இயற்கையின் அழகிற்கு ஈடு இணை ஏது?