Showing posts with label அரசியல் சாசனம். Show all posts
Showing posts with label அரசியல் சாசனம். Show all posts

Wednesday, April 9, 2025

மொழி புரியாவிட்டாலும் உணர்வூட்டும் . . .

 


முகநூலில் பார்த்த காணொளி கீழே உள்ளது.

அரசியல் சாசனத்தின் முகப்பு பின்புலத்தில் உள்ளது. இது பாடலா, முழக்கமா அல்லது சேர்ந்திசையா?

மொழி புரியவில்லை.

ஆனால் உணர்வூட்டுகிறது.

ஆசாதி என்று மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது. அது விடுதலைக்கான தேடல் என்பது புரிகிறது. 

அரசியல் சாசனத்தை முடக்க நினைக்கும் அராஜக சக்திகளிடமிருந்து மக்களுக்கான விடுதலையை வலியுறுத்தும் பாடலாக நான் கருதுகிறேன். மொழி தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். 

பிகு: நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. மொழித் திணிப்புக்கு மட்டுமே எதிரானவர்கள்.

இப்போது காணொலிக்கு செல்லுங்கள்



Saturday, January 25, 2025

ஜனநாயகக் கொடி பறக்கட்டும்

 


இந்தியராய் பிறந்த அனைவருக்கும்
சமூக நீதி,
பொருளாதார சமத்துவம்,
அரசியல் சமத்துவம்
கிடைத்திடவும்

கருத்துரிமை, 
எழுத்துரிமை,
பேச்சுரிமை
வழிபாட்டுரிமை,
கிடைப்பதை உறுதி செய்திடவும்

சமத்துவமும் சம வாய்ப்பும் 
அனைவர் மத்தியில் நிலவிடவும்
உறுதியேற்ற
சோஷலிச, மதச்சார்பற்ற, இறையாண்மை கொண்ட,
இந்திய ஜனநாயகக் குடியரசு நாட்டின்
மூவர்ணக்கொடி 
அரசியல் சாசனத்தின் அனைத்து விழுமியங்களையும்
பறை சாற்றி உயரத்தில் பறக்கட்டும்.

பாழ்படுத்த நினைக்கும் வீணர்களை
வீழ்த்தட்டும் இந்திய ஜனநாயகம்.
காவிக்கொடியை புறந்தள்ளி 
ஜனநாயகத்தின் பாதுகாவலர்களின்

செங்கொடியும் பட்டொளியும் வீசி பறக்கட்டும்.


Tuesday, November 26, 2024

இந்தியா “மதச்சார்பற்ற, சோஷலிச” க்குடியரசுதான்.

 


நேற்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை அளித்துள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பிலிருந்து “மதச்சார்பற்ற, சோஷலிச” என்பதை அகற்ற வேண்டும் என்று சுனா சாமி தொடுத்த  வழக்கில் “அதெல்லாம் முடியாது போடா” என்று உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது.

அனைத்து மதங்களையும் சமமாக கருத வேண்டும் என்பதால் மதச்சார்பு என்பது பொருத்தமானதே என்று விளக்கமளித்து விட்டார்கள்.

சோஷலிசம் என்றால் அது இடதுசாரி பொருளாதரமோ இல்லை வலதுசாரி பொருளாதாரமோ  கிடையாது. மக்கள் நல அரசு என்று பொருள்.

அதனால் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பில் “மதச்சார்பற்ற, சோஷலிஸ”  என்ற வார்த்தைகள் தொடரும்     என்று சொன்ன நீதிபதிகள் நாற்பத்தி ஐந்துவ் வருடங்களுக்கு பிறகு வழக்கு தொடுப்பதே உள் நோக்கம் கொண்டது என சுனாசாமியையும் கண்டித்துள்ளனர்.

அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்ற வெறியை மனதுக்குள் வைத்துக் கொண்டு, அரசியலமைப்பு தினம் எனும் நாடகம் நடத்தும் மோடி வகையறாக்களுக்கு சரியான சவுக்கடிதான் இந்த தீர்ப்பு.

Monday, November 27, 2023

கவிழ்க்கும் நாடகம் அது . . .

 


அரசியல் சாசன தினம் என்றொரு நாடகத்தை வழக்கம் போல டிமோ அரசு நடத்தியுள்ளது. ஞாயிறு விடுமுறை, கார்த்திகை பணடிகை என்றெல்லாம் இருந்தாலும் கூட பொதுத்துறை ஊழியர்களை அரசியல் சாசன உறுதிமொழி எடுத்துக் கொள்ள வரச்சொல்லியுள்ளது. 

அரசியல் சாசன முகப்பில் உள்ள 

இந்திய மக்களாகிய நாங்கள்

 இந்தியாவை, இறையாண்மையுடைய, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு நாடாக நிர்ணயிக்க உளமாற உறுதியேற்று

 அனைவருக்கும்

 சமூக, பொருளாதார, அரசியல் நீதியையும்  சிந்திக்கிற, கருத்து சொல்கிற, வழிபாட்டு, உரிமையையும் அனைவருக்கும் சம வாய்ப்பினையும் சகோதரத்துவத்தையும் கண்ணியமாக வாழ்வதற்கான வாய்ப்பினையும்

அளித்து

 இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் கௌரவத்தையும்   பாதுகாப்போம்

என்பதை ஏற்காத கும்பல் இது. அரசியல் சாசன தின நாடகத்தின் முதல் காட்சி ஒன்பது வருடங்களுக்கு முன்பு மக்களவையில் நடந்த போது "மனுதர்மத்தின் அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாகியிருந்தால் நன்றாக இருக்கும்" என்று ராஜ்நாத்சிங்கும் டிமோவும் சொன்னதை மறக்க முடியுமா?

அரசியல் சாசனம் குறைபாடானது என்று ஆர்.எஸ்.எஸ்.ரெவி பேசியதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

வில்லாதி வில்லன் படத்தின் வில்லன் கேரக்டர் பூவு சத்யராஜ், யாரையாவது கீழே தள்ளி கொல்லும் முன்பு காலில் விழுவார், டிமோ அரசு அரசியல் சாசனத்தின் காலில் விழுவது அதனை கீழே தள்ளி அழித்திடத்தான்.

நேற்று நடந்த ஒரே ஒரு உருப்படியான விஷயம் உச்ச நீதிமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை திறந்தது மட்டுமே . . . 

உச்ச நீதிமன்ற நிகழ்வென்பதால் அந்த சிலையை திறக்கும் வாய்ப்பு ஜனாதிபதிக்கு கிடைத்தது. 

Thursday, April 14, 2022

அண்ணல் அம்பேத்கரை கொண்டாடும் வேளையில்

 


இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள். ஒன்றிய அரசு இன்று அரசு விடுமுறை அளித்துள்ளது.

அண்ணல் அம்பேத்கரை நாம் கொண்டாடும் வேளையில் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து விடக் கூடாது.

இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி என்று நாம் அவரை போற்றுகிறோம். அந்த அரசியல் சாசனத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள ஆபத்தை மறந்து விடக் கூடாது.

அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள அடிப்படை உரிமைகள் எல்லாம் இன்றைய ஆட்சியாளர்களால் தாக்கப்படுகிறது. கருத்துரிமை தொடங்கி உணவு உரிமை உட்பட பலவும் கைநழுவிக் கொண்டிருக்கிறது.

அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான இயக்கங்களில் பங்கேற்பதுதான் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அர்த்தம் கிடைக்கும்.

 

Tuesday, January 25, 2022

உண்மையான குடியரசு தினத்தை நோக்கி

  


இந்திய மக்களாகிய நாங்கள்

 இந்தியாவை, இறையாண்மையுடைய, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு நாடாக நிர்ணயிக்க உளமாற உறுதியேற்று

 அனைவருக்கும்


 சமூக, பொருளாதார, அரசியல் நீதியையும்
சிந்திக்கிற, கருத்து சொல்கிற, வழிபாட்டு, உரிமையையும்
அனைவருக்கும் சம வாய்ப்பினையும்
சகோதரத்துவத்தையும்
கண்ணியமாக வாழ்வதற்கான வாய்ப்பினையும்

அளித்து

 இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் கௌரவத்தையும்
 பாதுகாப்போம்

 என்று சொல்கிற அரசியல் சாசனத்தை இந்தியா அமலாக்கிய நாள்தான் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது

 என்பதை நினைவு படுத்த வேண்டிய நிலையில் இன்றைய ஆட்சியாளர்கள் நம்மை வைத்துள்ளார்கள்.

 அரசியல் சாசனம் சொல்லும் எந்த கோட்பாட்டையும்  விழுமியங்களையும் மதிக்காத, அவற்றுக்கு கொஞ்சமும் பொருத்தமும் இல்லாத, அவற்றை அழிக்கிற, சிதைக்கிற காட்டாட்சியை அகற்றி, உண்மையான குடியரசு தினத்தை கண்டிப்பாக கொண்டாடுவோம் என்று உறுதியேற்கிற நாளாக

 இந்த ஆண்டு குடியரசு தினத்தை கொண்டாடுவோம்.

 

Friday, November 26, 2021

நாங்கள் தயார் மோடி. நீங்கள்

 


இன்று அரசியல் சாசன நாள் அனுசரிக்கப்படுகிறது.

அதற்காக முதல் முறை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடந்த போது "மனு தர்மத்தின் அடிப்படையில் அரசியல் சாசனம் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று மோடியும் ராஜ்நாத் சிங்கும் புலம்பியது ஒரு கொடுமை.

இந்திய அரசியல் சாசனம் உறுதியளிக்கிற

சமூக, பொருளாதார அரசியல் நீதியையும்

சிந்திக்கிற, கருத்து சொல்கிற, வழிபாட்டு, உரிமையையும்

அனைவருக்கும் சம வாய்ப்பினையும்

சகோதரத்துவத்தையும்

கண்ணியமாக வாழ்வதற்கான வாய்ப்பினையும்

அனைவரும் பெற வேண்டும், அதற்காக பாடுபட வேண்டும் என்பதில் தேசத்தை நேசிக்கிற குடிமக்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நீங்கள் மோடி?

உங்கள் ஆட்சிக்காலத்தில் அவை அனைத்தையும் பறிக்கிற கேடு கெட்ட பிரதமராகத்தான் செயல்பட்டுள்ளீர்கள்.

இன்றைய நாளை கொண்டாடும் அருகதையற்றவர் நீங்கள்.

Sunday, December 20, 2020

பதிலுண்டா மாலன்?

 


இன்று வேலூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அண்ணல் அம்பேத்கர் வெண்மணி தியாகிகள் நினைவு கருத்தரங்கம் "வீழட்டும் மனு அநீதி, மலரட்டும் சம நீதி" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அதிலே அறிமுக உரை ஆற்ற கிடைத்த வாய்ப்பில் "மனு அதர்மத்தின் அடிப்படையில் அரசியல் சாசனத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் நோக்கம். அதை பரப்புகிற வகையில் அரசியல் சாசன தினம் என்று இவர்களே கொண்டாடக் கூடிய நாளில் அரசியல் சாசனத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று எழுத்து வியாபாரி மாலன் எழுதுகிறார். "அப்பன் வெட்டிய கிணறு என்பதால் உப்பு நீரை குடிக்க முடியுமா" என்றும் அவர் கேட்கிறார் என்று கூறினேன்.

சிறப்புரையாற்றிய எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் இதனை குறிப்பிட்டு

"எங்கள் அப்பன் வெட்டிய கிணற்றின் உப்பு நீரைக் கூட குடிக்க விடாமல் தடுத்ததும்  இப்போதும் மறுக்க நினைப்பதும் யார் என்பதும் மாலனுக்கு தெரியாதா?"

என்று வினவினார்.

என்ன மாலன் கேள்வி புரிந்ததா? இதற்கு பதிலுண்டா உம்மிடம்? 

Friday, November 27, 2020

மாலனின் மனுதர்ம கான்ஸ்டிடியூஷன்

 


அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தின் மீது எந்த மரியாதையோ, மதிப்போ இல்லாதவர்கள்தான் சங்கி கும்பல். 

கடந்த சில வருடங்களாக இவர்கள் அரசியல் சாசன தினம் என்ற ஒன்றை அனுசரிக்கத் தொடங்கியுள்ளார்கள். நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு கூட்டத் தொடர் ஒன்றையும் நடத்தினார்கள்.

அந்த காலகட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு  தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு பிரத்யேகமான நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. இயக்கம் நடத்தியது. அக்கோரிக்கை விவாதப் பொருளாக மாறிய நிலையில் அதனை திசை திருப்ப "அண்ணல் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாக அரசியல் சாசன தினம் கொண்டாடப் படும் என்று மடை மாற்றியது மோடி அரசு.

அந்த கூட்டத்தொடரின் முதல் பேச்சாளரான ராஜ்நாத் சிங்கே "மனு தர்மத்தின் அடிப்படையில் இந்திய அரசியல் சாசனம் அமைந்திருக்க வேண்டும்" என்று தன் வருத்தத்தை தெரிவித்தார். அப்போதே அரசியல் சாசனத்திற்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் இவர்கள் காண்பித்த மரியாதை பல்லிளித்துப் போய் விட்டது.

நேற்றும் அரசியல் சாசன தினம். சங்கிகளின் தமிழ் வார்த்தை வணிகர்களின் மூத்த தரகு எழுத்தாளர் மாலன், அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று எழுத ஆரம்பித்துள்ளார். பழைய சட்டை, ஒட்டு போட்ட சட்டை என்றெல்லாம் சொல்லி வாஜ்பாய் காலத்தில் நடக்காமல் போன அரசியல் சாசன மாற்றத்தை இப்போதாவது மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்.

இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை என்ன?


இதுதான் நம் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு. இதனை ஏற்று அமலாக்கத் தொடங்கியதைத்தான் நாம் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.


அரசியல் சாசனம் அடிப்படையாக சொல்வது என்ன தெரியுமல்லவா?

இந்தியர்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு இறையாண்மை உள்ள, சோஷலிஸ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக உருவாக்கவும்

இந்திய மக்கள் அனைவருக்கும்

அரசியல், பொருளாதார, சமூக நீதி கிடைக்கவும்

கருத்துரிமை, அதை வெளிப்படுத்தும் உரிமை, நம்பிக்கை மற்றும் வழிபாட்டுரிமை கிட்டவும்

சம வாய்ப்பும் சம மதிப்பும் கிடைக்கவும்

அனைத்து மக்கள் மத்தியிலும் சகோதரத்துவத்தை வளர்த்திடவும்

தனி நபரின் கண்ணியத்தையும்
தேசத்தின் ஒற்றுமையையும்  

பாதுகாப்போம்  என்று 

உளப்பூர்வமாக உறுதியேற்கிறோம். 

மோடி வகையறாக்கள் இந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையைத்தான் மனுதர்மத்தின் அடிப்படையில் மாற்ற விழைகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக மாலன் எனும் முதிய குரங்கை (மூத்தவரை குரங்குக் குட்டி என்று சொல்ல முடியுமா?)  விட்டு ஆழம் பார்க்கிறார்கள். 

அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்பு நீரைக் குடிக்க முடியுமா என்று கேள்வி கேட்கிறார்.

கோமியத்தை மட்டுமே குடித்துக் கொண்டிருக்கிற மாலன் வகையறாக்களுக்கு சுவையான குடி நீர் கூட உப்பு நீராக தெரிவதில் வியப்பில்லை. ஏனென்றால் அவர்கள் மூளை எப்போதோ விஷமாகி விட்டது.