Showing posts with label டி.எம்.எஸ். Show all posts
Showing posts with label டி.எம்.எஸ். Show all posts

Friday, March 25, 2022

டி.எம்.எஸ் 100 - ஒரு நாள் தாமதமாக

 


தமிழ் திரையிசை உலகை நீண்ட காலம் ஆட்சி செய்த டி.எம்.எஸ் அவர்களின் நூற்றாண்டு நேற்று தொடங்கியது என்பதை இரவுதான் அறிந்தேன்.

நடிகர் திலகம், மக்கள் திலகம் இருவரின் பாடல்களும் இவர் குரலில் ஒலிக்கும் போதுதான் முழுமை பெறும். மற்ற பாடகர்கள் பின்னாளில் பாடினாலும் அது அந்த நடிகர்களின் பாடலாக தோன்றாது. அதுதான் டி.எம்.எஸ் அவர்களின் சிறப்பம்சம்.

அவரின் நூற்றாண்டை முன்னிட்டு அவரின் பத்து பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன். உற்சாகம், சோகம், கம்பீரம்,  நம்பிக்கை என்று பலவும் கலந்த பாடல்கள். இதிலே சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோரின் பாடல்கள்தான் அதிகம். அவை தவிர்க்க முடியாதது என்பது உங்களுக்கே தெரியும்.

ஏறாத மலைதனில் - 



தூக்கு தூக்கி படத்தில்தான் நடிகர் திலகத்திற்கு முதல் முறையாக டி.எம்.எஸ் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தூங்காதே தம்பி தூங்காதே


மலர்களைப் போல் தங்கை



அச்சம் என்பது மடமையடா


பாட்டும் நானே, பாவமும் நானே



புதிய வானம், புதிய பூமி



யார் அந்த நிலவு


நல்லவர்கெல்லாம் சாட்சிகள் உண்டு


அன்னக்கிளி உன்னை தேடுதே



நண்டூறுது, நரியூறுது



இறுதியில் போனஸாக அவருக்கு அவரே பாடிய "முத்தைத் தரு" திருப்புகழ் பாடல்


இந்த ஒரு பதிவு அவருக்கு போதாது என்பதுதான் பதிவை நிறைவு செய்கையில் தோன்றிய எண்ணம். எனவே பதிவுகள் தொடரும், அவருடைய பாடல்களோடு . . .

பிகு : முகப்பு ஓவியத்தை வரைந்தவர் தோழர் ரவி பாலேட், மதுரை.