Monday, May 31, 2010

ரத்த வெறி இன்னும் அடங்கலையா?

ரத்த வெறி இன்னும் அடங்கலையா?


ஏற்கனவே ஏராளமான மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்களை கொன்று
குவித்த மாவோயிஸ்டுகள் தற்போது அப்பாவி மக்களை அராஜகமாக
கொன்று வருகின்றனர். சத்தீஸ்கர் பேருந்து கொலைக்குப் பின்பு இப்போது
ரயில் தகர்ப்பு. சாமானிய உழைப்பாளி மக்கள்தான் இவர்களின் வர்க்க
எதிரிகளா? அழித்தொழிப்பு யாருக்காக? ரத்த வெறி பிடித்த பாசிச மம்தாவிடம் மேற்கு வங்கத்தை ஒப்படைக்கவா? இந்தியாவிற்கு மிகப்
பெரிய சவால் மாவோயிஸ்டுகள் என்று சொல்லும் மன்மோகன் சிங்
மம்தாவை இன்னமும் அமைச்சரவையில் வைத்திருப்பது எதற்க்காக?
அவரும் ரத்த தாகத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறாரா? கொள்கையற்ற 
 இக்கூட்டத்தை   மாவோயிஸ்டுகள் என்று சொல்வது  மாவோவிற்கு  இழுக்கு. இக்கூட்டத்தின் வருடாந்திர வருமானம் 2000 கோடி ரூபாயாம்.
ஆள் கடத்தல், மிரட்டல் வேலைகள், கஞ்சா அபின் வளர்த்தல் மூலம்
பணம் சேர்க்கும் இவர்கள் அப்பாவி ஏழை விவசாயிகளையும் விட்டு வைப்பதில்லை. மாபியா கூட்டம் என்றழைப்பதே சரியாக இருக்கும்.
மார்க்சிஸ்டுகளை வீழத்த வேண்டும் என இவர்களை வளர்ப்பது
பாம்பிற்கு பால் வார்க்கும் கதைதான்.

Thursday, May 27, 2010

நிஷா , பிஜ்லி, அய்லா, லைலா.... அடுத்து பாண்டு!அடுத்த புயல் எப்போது தாக்கும் என்று தெரியாது. ஆனால் அது எப்போது வருவதாக இருந்தாலும் அதன் பெயர் நிச்சயம் மாறப்போவதில்லை. அதன் பெயர் பாண்டு! முன்பெல்லாம் புயல் தாக்கினால் அந்த புயலுக்கு எந்தப் பெயரும் இருக்காது. ஆனால் இப்போது அப்படியில்லை மிக அழகான பெயர்களில் அவை நமக்கு அறிமுகமாகின்றன.


உலக வானிலை அமைப்பு , ஐக்கிய நாடுகள் ஆசிய பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் இவை இரண்டும் சேர்ந்து குறிப்பிட்ட விதிமுறைப்படி தான் இந்த பெயர்களைச் சூட்டும் நடைமுறையைக் கொண்டு வந்துள்ளனவாம். இதன்படி இந்தியப் பெருங்கடலின் வடபுலத்தில் அமைந்துள்ள வங்க


தேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகளும் வரிசைப்படி 64 பெயர்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கின்றனவாம். அதன்படி தான் பெயர் சூட்டப்படுகிறது.


தற்போது ஆந்திராவைத் தாக்கிய புயலுக்கு 'லைலா' எனப் பெயர் சூட்டியது பாகிஸ்தானாம்! இந்த இந்தியப் பெருங்கடலின் வடபுலத்து நாடுகளில் அடுத்தபடியாக வீசப்போகும் புயலுக்கும் பெயர் தயாராக உள்ளது. அதன் பெயர் பாண்டு! இது இலங்கை வழங்கிய பெயர். அதற்கு அடுத்ததாக வரப்போகும் புயலுக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயர் பெட். இந்தப் பெயரை வைத்தது தாய்லாந்து. உலக வானிலை அமைப்பு பரிந்துரைத்த பட்டியல் படி இந்த பெயர்களை அடையாளப்படுத்துவதாக இந்திய வானிலைத் துறை புயல்கள் பிரிவு இயக்குநர் எம்.மொகபத்ரா கூறியுள்ளார்.


பாதிப்பைச் சந்திக்க இருப்போருக்கு எளிதில் சென்று சேரும் வண்ணம் இது போல் பெயர் சூட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே ஐ.நா. முடிவு செய்திருக்கிறது. அதன்படி தான் இந்த நடைÓறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த காலங்களில் தாக்கிய புயல்களுக்கு பெயர் வைத்த நாடுகளைக் கொஞ்சம் தெரிந்துகொள்வோமே! நிஷா (வங்கதேசம்), பிஜ்லி (இந்தியா), அய்லா (மாலத்தீவு), பூயான் (மியான்மர்), வார்ட் (ஓமன்).உலக அளவில் 1970ம் ஆண்டு முதலே இந்த பெயர் வைக்கும் நடைமுறை இருந்தாலும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்த நடைமுறை 2000வது ஆண்டு முதல் தான் பின்பற்றப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். எல்லாம் சரி, எளிமைக்காக இத்தகைய பெயர்களைச் சூட்டுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் புயல்களுக்கு பெரும்பாலும் பெண்கள் பெயரையே சூட்டுவது ஏன்? பேரழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு பெண்களின் பெயரைச் சூட்டுவது அவர்கள் ஆங்கார குணம் கொண்டவர்கள் என்ற மனப்பாங்கை ஏற்படுத்தத்தானோ?


ஹூம், எதிலெல்லாம் பெண்ணடிமைத்தன, ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது பாருங்கள்! இத்தகைய பெயர் சூட்டும் பேர்வழிகள் புயலைவிட மோசமானவர்கள் என்றுதான் படுகிறது.


நன்றி - தீக்கதிர்

Sunday, May 23, 2010

முதல் கோணல்

முதல் கோணல்


செம்மொழி மாநாட்டின் முதல் கோணலாக மிக அதிகமாக விளம்பரம்  செய்யப்பட்ட செம்மொழிப்பாடல்   அமைந்து
போனது. ரோஜாவில்   தொடங்கி இன்று வரை தமிழ் 
 வார்த்தைகளை கடித்துக் குதறித் துப்பிக் கொண்டிருக்கும் ரஹ்மானின் புரியாத  இன்னும் ஒரு பாடலாக செம்மொழிப் பாடல் உள்ளது
வருத்தமாகவே  உள்ளது.  தமிழக    ஆட்சியில் நாடகங்கள் 
  நடக்கிறது, மக்களின்  பணத்தில்.  அதுவும் இப்படி விரயமாகவே 
போகிறது. இன்னும் எத்தனை கூத்துக்களோ?

Saturday, May 22, 2010

நான் ஒரு மார்க்சிஸ்ட் என்ற தலாய் லாமா அறிக்கையை விட வேறு நகைச்சுவை வேண்டுமா என்ன?

Sunday, May 16, 2010

கிரிக்கெட்டை கொஞ்சம் தடை செய்வோமே!

ஊழலில் மூழ்கிப்போன கிரிக்கெட் விளையாட்டை கொஞ்ச நாளாவது தடை செய்வது என்பது இந்திய விளையாட்டு உலகிற்கு நல்லது. உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த்துள்ள ஆனந்த், தடுமாறிக் கொண்டிருந்த ஹாக்கி அணி மலேசியாவில் பெற்ற வெற்றிகள் எல்லாமே யாருக்கும் கவனத்தில் இல்லை. தோற்றுப் போன கிரிக்கெட் அணிக்காக இன்னும் எத்தனை நாள் இழவு வீடாக இந்தியா இருக்கப்போகிறது? கொடிகள் சம்பாதிப்பதும் கும்மாளம் அடிப்பாதுமே தொழிலாகக் கொண்ட இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதில் தேச பக்தி இல்லை. அன்னியப் பல்கலைக் கழகங்களின் படையெடுப்பு, விலைவாசி உயர்வு, மாவோயிஸ்டுகளின் அட்டகாசம், அதற்கு ஆதரவாய் மம்தா என கவலைப்பட, போராட ஏராளமாய் பிரச்சினைகள் உள்ளது.
கிரிக்கெட் இழவை தூக்கிஎறிந்து விட்டு இவற்றை கவனிப்போமே.

Tuesday, May 11, 2010

மண்டையிடி மந்திரிகள் ... மன்மோகன் பரிதாபம்
பாவம் மன்மோகன் சிங் ! ஒவ்வொரு அமைச்சருமே தகராறு பிடித்தவர்களாக மாறி வருகிறார்கள். நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை என்ற கொள்கைப் பிடிப்போடு அழகிரி, ஊழல் கறையோடு ராசா, ரத்த வெறி பிடித்த மம்தா, ஐ.பி.எல் புகழ் பவார், பிரபுல் படேல் வகையறாக்கள், அதிகப்பிரசங்கிகள் சசி தரூர் ஜெயராம் ரமேஷ், உள்துறையை வெறுக்கும் ப.சி, அவரோடு மோதும் மற்ற வட நாட்டு மந்திரிகள் என எத்தனை பேர் , எத்தனை பிரச்சினை, எத்தனை குழப்பம்...
அடுத்த வெளி நாட்டு டூர் எங்கப்பா ? அங்கேயாவது கிடைக்குமா நிம்மதி !