Showing posts with label மாலன். Show all posts
Showing posts with label மாலன். Show all posts

Tuesday, January 28, 2025

மறுபடியும் சிக்கிய மாலன்.

 


போன திங்கட்கிழமை  அன்று நடைபெற்ற சம்பவம் இது.

தீக்கதிர் சென்னை பதிப்பின் முன்னாள் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன், முகநூலில் அந்நாள், இந்நாள் கம்யூனிஸ்டுகளைப் பற்றி ஒரு நண்பரோடு நடந்த உரையாடலை பகிர்ந்து கொண்டிருந்தார்.

தன் பக்கத்தை இறுக்கமாக பூட்டி வைத்திருக்கும் மூத்த்த்த மாலன் அங்கே சம்மனின்றி ஆஜராகி  அப்போதுள்ளவர்கள் போல இப்போது இல்லை என்று பட்டியல் போட்டு கடைசியில் கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்துவதில் வந்து நின்றார்.


 

“அப்போதிருந்த ஊடகவியாளர்கள் மாதிரி இப்போதும் இல்லை. மோசமான ஊடகவியலாளருக்கு உம்மை உதாரணம் காண்பிக்கலாம். உங்களுக்கு கம்யூனிஸ்டுகளைப் பற்றி பேச அருகதை கிடையாது.  எங்கள் மகத்தான் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் சொல்வது போல பணத்திற்காகவும் விருதுகளுக்காகவும்  நீரெல்லாம் பேனாவை வாடகைக்கு விடும் வியாபாரி”  என்று சூடாகவே பின்னூட்டம் எழுதினேன்.

 


அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

 “என்னை வசைபாடுவது பதிலாகாது. நான் ஊடகத்தலைமையில்  இருந்தவரை எந்த அரசிடமிருந்தும்  விருது பெறவில்லை”

 என்று அவர் சொல்ல

 “நான் வசை பாடவில்லை. உங்களைப் பற்றிய உண்மையைச் சொன்னேன். கம்யூனிஸ்டுகளை விமர்சிக்கும் அருகதை உங்களுக்கு கிடையாது என்று மீண்டும் அழுத்தமாக வலியுறுத்துகிறேன். உத்தமர் போல வேடம் போட வேண்டாம். உலகிற்கு உங்களைப் பற்றி நன்றாக தெரியும்”

 


என நான் திருப்பி கொடுக்க

 மூத்த்த்தவர்  மீண்டும் பதுங்கி விட்டார். நீண்ட நாட்களாக கண்ணில் படாமல் தப்பித்துக் கொண்டிருந்தவர் வசமாக சிக்கிய போது எப்படி வாய்ப்பை இழப்பது, அடிக்காமல் இருப்பது.

 “வார்டன்னாலே அடிப்போம்” என்பது போல மாலன்னாலே அடிதான்.

Monday, September 9, 2024

மடை மாற்றி மாலன்

 


மூட நம்பிக்கை பேச்சாளர் மஹாவிஷ்ணு குறித்து எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான தோழர் அ.முத்துகிருஷ்ணன், முகநூலில் பல பதிவுகள் எழுதியிருந்தார். அதில் ஒரு பதிவில் மஹாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தோழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தையும் அமைச்சரிடம் பேசியதையும் பாராட்டி  இருந்தார்.

வழக்கம் போல அங்கே வந்த மூத்த்த்த்த்த்த்த்த்த எழுத்து வியாபாரி, அவரது வழக்கமான மடை மாற்றும் உத்தியாக "கலைஞர் யோகா செய்வார், கலைஞர் அசைவம் சாப்பிடுவதை விட்டு விட்டார்" என்று சம்பந்தமில்லாமல் பிதற்றியிருந்தார்.



இப்படி மடை மாற்றுவதே அவர்கள் தரப்பு பலவீனமாக உள்ளது என்பதன் அர்த்தம். 

வயதான காலத்தில் இப்படி வாங்கிய காசுக்கு வாலாட்டுவதை நிறுத்திக் கொண்டால் மாலன் அசிங்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம். 

Thursday, July 18, 2024

என்னமோ நடக்குது !!!

 


"தமிழ் மணம்" வலை திரட்டி செயல்பாட்டில் இருந்தவரை எனது வலைப்பக்கத்தின் பார்வைகள் (HITS) சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரத்திலிருந்து ஆயிரத்து இருநூறு வரை இருக்கும். தமிழ்மணம் முடங்கிய பின்பு அது சராசரி ஐநூறு என்ற அளவில்தான் இருந்து வருகிறது. மக்களவைத்தேர்தல் சமயத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் அளவுக்குச் சென்றது.

ஆனால் நேற்று முன் தினம் இரவு முதல் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. செவ்வாய் இரவு ஒன்பது மணி அளவில் வீடு திரும்பிய போது கூட 360 தான் இருந்தது. நேற்று இரவு பார்த்தால் செவ்வாயன்று பார்வைகள் 5168 என்றும்  நேற்று இரவு வரை 7037  என்றும்  இருந்தது.



காலையில் இப்போதைய நிலவரம் இது . . .




நேற்று முன் தினம் இரவு முதல் யார் என் வலைப்பக்கத்திற்கு படையெடுத்து வந்தார்கள்?

சமீபத்திய பதிவுகள் தொடங்கி பத்தாண்டுகளுக்கு முந்தைய பதிவுகள் வரை படிக்கப்பட்டுள்ளது. புளிச்ச மாவு ஆஜான் குறித்து எழுதிய பெரும்பாலான பதிவுகள் பல முறை படிக்கப்பட்டுள்ளது. மாலன் பற்றிய எந்த பதிவும் சீண்டப்படவில்லை என்பது வேறு விஷயம்! 

திடீரென ஏன் இந்த பரபரப்பு?

இது நல்லதா? கெட்டதா?

எதுவாக இருந்தாலும் I am waiting.  . . .



Monday, May 13, 2024

அய்யோ! மாலனுக்கு எம்பூட்டு அறிவு?

 


ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் பக்கத்தில்தான் கீழேயுள்ள படத்தைப் பார்த்தேன். மூத்த்த்த்த்த்த்த வார்த்தை வணிகர் மாலன் அதற்காற்றிய எதிர்வினையையும் பற்றியும் படித்தேன். அதனால் தோழர் விஜயசங்கர் குறிப்பிட்டிருந்த திரு அகிலன் கண்ணன் அவர்களின் பக்கத்திற்கே சென்றால் மாலனின் அறிவைக் கண்டு அப்படியே அசந்து போய் விட்டேன்.

 


நான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகமும் என்ற நல்லெண்ணத்தில் அந்த படம் தொடர்பாக  நடந்த உரையாடலும் கீழே.

 




மாலன் அறிவாளி என்று நிஜமாகவே வியக்கிறேன். அறிவு இருப்பதால்தான் படம் சொல்லும் செய்தி மத வெறியை உசுப்பேற்றி கீழ்த்தரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிற மோடியைத்தான் இந்த படம் நக்கலடிக்கிறது என்பதை  புரிந்து கொண்டுள்ளார். அவரைப் போலவே மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள் என்பதையும் அவர் அறிந்து கொண்டு விட்டார். அதனால்தான் அதை திசை திருப்ப பிரெட் ஆம்லட் என்று ஒரு முட்டாள்தனமான கேள்வியோடு வந்து விட்டார்.

 

கொடுத்த காசுக்கு மேல் கூவுகிறார் மாலன்.

 

Wednesday, February 21, 2024

ஆனாலும் செம நக்கல் சுவெ

 


மரண பங்கம் என்பது இதுதான். டிமோவுக்கு திருக்குறள் சொல்லித்தரும் மாலன் கயிற்றில் தொங்க வேண்டும்.

Friday, February 9, 2024

மாலனுக்காக கவுண்டமணி வாய்ஸா?

 



 முன் குறிப்பு : நீண்ட நாட்களாக ட்ராப்டிலேயே இருந்த பதிவு. போனால் போகட்டும் மாலன் என்று கருதி பிரசுரிக்காமல் இருந்தேன். மூத்த்தது புது பஞ்சாயத்து ஒன்றில் சிக்கியுள்ளதால் அதற்கான சிகிச்சைக்கு முன்பாக இப்பதிவு.

 எழுத்து வியாபாரி மாலனை ஊமைக்குத்தாக குத்திய பதிவொன்றை தோழர் ஷோபனா நாராயணன் அவர்கள் எழுதியிருப்பதாக குறிப்பிட்டிருந்தேன். அந்த பதிவை அவருக்கு நன்றி சொல்லி பகிர்கின்றேன்.

 முன்குறிப்பு: பதிவை கவுண்டர்மகான் வாய்சில் படிக்கவும்.

 ஏன்டா நீங்கல்லம் மனுசனுகளா.. வூட்லருந்து போகும்போது பை கொண்டு போக துப்பில்லாதவனுகதானடா நீங்கல்லாம். ஒரு மூடித்தேங்கா வாங்குனதுக்கு ஒரு கேரி பேக் வாங்கிருக்கிங்க. அதவிடவாடா காந்திய டுமீல் பண்ணது தப்பாப்போச்சு.. அயோக்கியப்பயலுவளா...

 அதென்னது ஆங் அணுகுண்டு அணுகுண்டு.. அதப்போயி டெஸ்ட்பண்ணிருகிங்களேடா..(அய்யா அது வாஜ்பாய் அப்துல்கலாம் காலத்துலயும் நடந்திருக்குது-கம்முனு இரு இவனுக மறந்திருப்பானுக)... அதவிடவாடா அந்த வயசான மனுசனுக்கு உடம்பு நோவக்கூடாது சளிக்காச்சல்ல கஷ்டப்படக்கூடாதுன்பு போட்டுத்தள்ளுனது தப்புங்கறிங்க..

 அவனவன் உக்காந்து ராட்டை சுத்தி வேட்டி கட்டாத அம்பானி அதானிகிட்ட பொருள் வாங்குனதுகளுக்கு லொல்லப்பாரு பேச்சப்பாரு எகத்தாளத்ப்பாரு(அய்யா அம்பானி அதானி நம்ம பிரெண்டுக..கம்முனு இரு ஒரு ப்ளோல வந்திருச்சு)..இதவிடவா ஒரே ஒரு டமால் டுமீல் தப்பாப்போச்சு..

 நீங்கள்லாம் தான்டா எங்க காந்தித்தாத்தாவ அனிமல் ஆல்பாமேலாட்டம் விதவிதமா கொ%%&னிங்க.. நாங்க சும்மா ஒரே தபா.. துப்பாக்கில சுட்டு&&&ட்டோம்..என்னவோ  வந்ட்டானுக பெருசா...எங்கள தீவிரவாதின்ட்டு..போங்கடா.. 

 --- மாலன் அவர்கள் பதிவிற்கு கவுண்டமணி  உரை  புத்தகத்தின் ஏழாவது அத்தியாயத்திலிருந்து

 

Thursday, February 1, 2024

குதர்க்க மாலனை தொங்க விடுங்கய்யா


கீழேயுள்ள பதிவை முதலில் படியுங்கள். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தக்கலை ஹலீம் முஸ்தபா என்பவர் எழுதிய நெகிழ்ச்சியான பதிவு இது. முகநூலில் ஏராளமானவர்கள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். முதலில் இதை படித்து முடித்து விட்டு கீழே வாருங்கள்.

   'மயிலேறும் ராவுத்தர்' என அழைத்து அருணகிரிநாதர்  பாடிய முருகனின் 

பழனி கோவிலுக்குள் இந்து அல்லாதார் நுழைவது குறித்த நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் முஸ்லிம்கள் கூறும் முகமனான ஸலாம் என்பதையும் முருகனுக்குக் கூறுவார்

 முருகன் வழிபாட்டிற்கும் முஸ்லிம் களுக்கும் இருக்கின்ற தொடர்பு தமிழ்ச் சூழலில் மிக முக்கியமானது. பழம் மதுரையின் அடையாளம் திருப்பரங் குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் மேலே சிக்கந்தர்; கீழே ஸ்கந்தன்

 பக்தி, நம்பிக்கை, வேண்டுதல், சுற்றுலா, தொல்லியல், பண்பாடு, பொழுது போக்கு என வழிபாட்டு இடங்களுக்கு வருகிறவர்கள் பல தரப்பட்டு இருப்பார்கள். மதங்களைக் கடந்து, சாதிகளைக் கடந்து மக்களாகக் கூடுகிற இந்த இடங்களின் மீது தலையீடு நிகழ்த்தி மக்களில் ஒரு சாராரை வழி மறிப்பது என்பது ஆபத்தான போக்கு .

 வைதீகப்படாத மக்களின் வாழ்வில் அந்தச் சாமி, இந்தச் சாமி பேதங்கள் எதுவுமில்லை. சமீபத்தில் திருமணப் பத்திரிகை ஒன்று பார்த்தேன்,  

அருள்மிகு பெரிய நாயகி துணை/ அருள்மிகு ஆனந்த வல்லி, அருள்மிகு கால பைரவர், அருள்மிகு முத்தால ராவுத்தர் துணை என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இதுதான் தமிழரின் நம்பிக்கை மரபு. ‘எந்தச் சாமியைக் கும்பிட்டால் என்ன ? யாராவது ஒரு சாமி வரம் கொடுக்காதா?!’ என்னும் எளிய மக்களின் நம்பிக்கையில் நெருப்பை அள்ளிப் போடுகிறது நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு

 சூரியன் மறைந்த நேரம் மெல்லிருட்டு முஸ்லிம்களின் தொழுகைப் பள்ளி வாசல்களின் முன்னால் முஸ்லிம் அல்லாத தாய்மார்கள், தந்தையர்கள் தங்களின் குழந்தைகளோடு வரிசை யாக நிற்பார்கள் . தொழுகையை நிறைவு செய்துவிட்டு வருபவர்கள் அந்த வரிசைகளை நோக்கி வருவார்கள். ஏதேனும் ஒரு திருக் குர்ஆன் வசனத்தை  ஓதி ஒவ்வொரு குழந்தையின் நெற்றி யிலும் ஊதுவார்கள். தமிழகம்     முழுவதும் இந்தக் காட்சியை நம்மால் காண முடியும் 

.குழந்தைகளைக் கொண்டுவந்து காத்து நிற்கும் பெற்றோருக்கும், குழந்தை  களின் நெற்றியில் ஓதி ஊதும் அந்தத் தொழுகையாளிகளுக்கும் இடையில் மதம்   ஒருபோதும்  வதும் இந்தக் காட்சியை நம்மால் காண முடியும் .

 வீட்டில் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்றால், அருகிலிருக்கும் பள்ளி   வாசலுக்கு எடுத்துச் சென்று மந்திரித்துப் பார்க்கும் சகோதர சமய உறவுகள் அடர்ந்த நிலம் இது

 மாதா கோவில் குருசடிக்கு மெழுகு வர்த்திக் காணிக்கை செலுத்தும் கிறிஸ்தவர் அல்லாத மக்கள் ஏராளம் உண்டு.  

 மண்டைக்காட்டு அம்மனையும் குளச்சல் கடற்கரைப் புதூரின்  லூசியாளையும் அக்காள் தங்கைகளாக உறவுமுறைப் பேணும் மரபு இந்த மண்ணிற்குரியது. குமரி மாவட்டத்தின் பல தர்ஹாக்களின் அருகில் காவல் தெய்வமாகச் சுடலை மாடன் நிற்பதைப் பார்க்க முடியும்

 இவை போன்ற புண்ணிய இடங்கள் மதமற்றவை. மதம் கடந்து மக்கள் கூடுபவை. அங்கே அவர்கள்அவர்களின் சுய அடையாளத்துடன் வரலாம் என்பதே அவற்றின் அழகு.

 தக்கலை சுற்றுவட்டாரத்தில் உயர் நிலை, மேல் நிலைப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்  இன்றும் தேர்வு நாளன்று தக்கலை பீர் முஹம்மது     அப்பாவை வழிபட்டுச் செல்லும் மரபைப் பார்க்க முடியும்

 முஸ்லிம்களுக்கு அவர் இறைநேசர், முஸ்லிம் அல்லாதவர்க்கு அவர் சித்தர், பள்ளிநாயன், அல்லா சாமி. அங்கு வழங்கப்படும் உணவு முஸ்லிம்களைப் பொறுத்தவரை நேர்ச்சைமற்றவர்களுக்கு அது பிரசாதம். வேறு வேறு அடையாளங்கள் கொண்டோ, வேறு வேறு பெயர்கள் கொண்டோ அழைப்பதனால் எந்த வேறுபாடும் இல்லை

 இயல்பாக மக்கள் இணைந்து கொள்கிற இத்தகைய ஒற்றுமைத் தலங்களின் மீது பெரும்பான்மை அடிப்படைவாதமும் , சிறுபான்மை அடிப்படைவாதமும் நீண்ட காலமாகவே குறி வைத்துத் தாக்குதலை நிகழ்த்தி வருகின்றன. மக்கள் இணக்கமாக இருத்தல் என்பது அவர்களின் அடிப்படைவாத அரசியலுக்கு ஒத்து வராது

 ஆனால் அதே அடிப்படைவாதக் குரலை நீதிமன்றத்தில் இருந்து கேட்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.     ஆகம விதிகளால் அல்ல, மக்கள்   தங்களின் வாழ்வில் பேணும் ஆகும் விதிகளைக்கொண்டு மக்களை அரவணைத்துக் கொள்வதே அழகு...

 Thuckalayhameem Musthafa

 அப்படி பகிரப்பட்ட ஒரு பதிவில் மூக்கை நுழைக்க வந்து விட்டார் மாலன். பதிவின் அடிப்படையை விட்டு விட்டு முஸ்லீம்கள் முருகனுக்கு கோயில் கட்டினீர்களா? உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்கிறார்களா என்றெல்லாம் அபத்தமான கேள்விகளை கேட்டார். மக்கள் மதங்களை கடந்து நல்லிணக்கத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள் என்ற அழகிய செய்தியிலிருந்து கவனத்தை திசை திருப்பி மத மோதலை உருவாக்கும் குதர்க்க புத்திதான் மாலனின் கேள்விகளின் பின்னணி. பதிவர் பதிலளித்த பின்னும் மீண்டும் மீண்டும் திசை திருப்பும் வேலையையே செய்து கொண்டிருந்தார்.




 “நல்லிணக்கத்தை குலைக்க விஷத்தை கக்குகிறீர், வெட்கக் கேடு” என்று நானும் திட்டினேன். மற்ற பலரும் திட்டினார்கள்.  வேலூரில் ஒரு சின்ன பிள்ளையார் கோயிலுக்கு ஒரு முஸ்லீம் முதலாளி பெயிண்ட் உபயம் செய்த என் பழைய பதிவின் இணைப்பையும் கொடுத்தேன்.

தார்ச்சட்டிக்காரர்களே, இதுதான் இந்தியா என்ற பதிவை இந்த இணைப்பின் மூலம் படியுங்கள்

 ஆனால் இதனால் எல்லாம் அந்தாளுக்கு ரோஷம் வராது.

 வின்னர் படத்தில் ரியாஸ்கான் கைப்பிள்ளையைப் பார்த்து “உன்னை அடிச்சும் பார்த்தாச்சு, அவுத்தும் பார்த்தாச்சு, ஆனாலும் திருந்த மாட்டேங்கற” என்று சொல்லி மரத்தில் தொங்க விடுவார். அது போல ஏதாவது செய்தாலாவது வாங்குகிற காசுக்கு டிமோவுக்கு வாலாட்டிக் கொண்டு மற்றவர்களை கடிக்க வரும் இந்த ஜந்து அடங்குகிறதா என்று பார்க்க வேண்டும்.

 எச்சரிக்கை: இன்னும் இரண்டு பதிவுகள் இந்த ஜந்துவைப் பற்றி உள்ளது. ஒன்று நேற்றைய பதிவில் சொன்னது போல தோழர் ஷோபனா நாராயணன் அவர்கள் கொடுத்த பதிலடி.

 

இன்னொன்று விஜயகாந்த் மறைவை ஒட்டி பட்டுக்கோட்டை பிரபாகரின் பதிவில் இவர் எழுதிய கேவலமான பின்னூட்டங்கள் பற்றியது