Showing posts with label பயணம். வேகம். Show all posts
Showing posts with label பயணம். வேகம். Show all posts

Thursday, May 5, 2016

பறக்கும் குதிரை தள்ளி விட்டதோ?




இன்று திருப்பத்தூர் சென்றிருந்தேன். பஸ் ஸ்டாண்ட் பார்க்கிங்க் பாயிண்டில் இருந்து  வண்டியை எடுத்து வருகையில் க்ரீன் சர்க்கிள் அருகே சிக்னலில் காத்திருந்த போது முன்னே இருந்த வண்டி கவனத்தை கவர்ந்தது. அந்த ஸ்கூட்டியில் பறக்கும் குதிரை ( Flying Horse) என ஆங்கிலத்தில் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. அடுத்தது கண்ணில் பட்டது, அந்த வாகன ஓட்டுனரின் இடது கையில் கட்டை விரல் நீங்கலாக போடப்பட்டிருந்த மாவுக்கட்டு, செருப்பையும் மீறி காலில் தெரிந்த க்ரீப் பேண்டேஜ்.

பறக்கும் குதிரை தள்ளி விட்டு இந்த காயம் ஏற்பட்டதா என்று கேட்க தோன்றினாலும் முன்பின் தெரியாதவரிடம் எதற்கு தேவையற்ற கேள்வியும் மனதில் வந்தது. 

அதற்குள்ளாக பச்சை விளக்கு எரிய அந்த பறக்கும் குதிரை ஓரிரு நொடிகளிலேயே கண்ணிலிருந்து மறைந்து விட்டது.

பறக்கும் குதிரை தள்ளி விட்டிருக்கலாம். வாய்ப்பு உண்டு.