Showing posts with label வெட்கம் கெட்டவர்கள். Show all posts
Showing posts with label வெட்கம் கெட்டவர்கள். Show all posts

Monday, August 22, 2022

வெட்கமா இருக்குமா மாலன்?

 


"மாலனை கடுமையா போட்டு தாக்கறீங்களே! அவரிடமிருந்து ஏதாவது எதிர்வினை வருமா?" என்று  கடந்த வாரம் எங்கள் தஞ்சைக் கோட்டத் தலைவர் தோழர் எஸ்.செல்வராஜ் கேட்டார். 

ஒரு காலத்தில் அந்த மனிதனின் வாசகனாக இருந்ததால்தான் அவரின் இன்றைய மோடி ஜால்ரா கடுப்பேற்றுகிறது. அவரின் அபத்தமான மோடி துதியை வசை பாட வைக்கிறது என்று பதில் சொன்னேன்.

மாலனின் அந்த கால பேட்டி ஒன்றை தோழர் இக்பால் அகமது முக நூலில் பகிர்ந்து கொண்டிருந்தார், 


அது கோபத்தை இன்னும் அதிகமாக்கி விட்டது. மார்க்சியம் பேசிய, பேசும் போலிகள் கூட்டத்தைப் பார்த்தால் கோபம் வர வேண்டும். 

இப்படியெல்லாம் பேசி விட்டு இப்போது மோடிக்கு ஜால்ரா அடிப்பதற்கு கொஞ்சமாவது வெட்கம் வருமா மாலன்?