Showing posts with label பைத்தியங்கள். Show all posts
Showing posts with label பைத்தியங்கள். Show all posts

Thursday, March 27, 2025

மோடிக்கு போட்டியாகும் முனைவர் முனிவர். . .

 


நேற்று முகநூலில் பல நண்பர்களின் பக்கத்தில் பார்த்த பதிவு கீழே உள்ளது.


இந்த பதிவை படிக்கும் போது சிரிப்பாகவும் எரிச்சலாகவும் அதே நேரம் பரிதாபமாகவும் இருந்தது.

ஒரு வேளை நக்கல் பதிவோ என்ற சந்தேகத்தில் அவர் பக்கத்திற்கு சென்றால், இந்த குறிப்பிட்ட பதிவை காணவில்லை. ஆனால் அது பற்றி அவரின் நண்பர்கள் குறிப்பிட்டிருந்தனர். அப்படியே அவரின் மற்ற பதிவுகளை பார்த்தால் தலை சுற்றியது. நவீன ஜோதிடரான அவரது விளக்கங்கள் எல்லாம் சராசரியான எனக்கு புரியவே இல்லை. அவர் மனநிலை குறித்து அறிய உதவிய பதிவு கீழே உள்ளது.

தன்னை முனைவர் முனிவர் என்றழைத்துக் கொள்ளும் இந்நபரை அவரது நண்பர்கள் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது. மன நோய் முற்றுவதற்குள் சிகிச்சையை துவங்குங்கள்.

இப்படித்தான் இந்த பதிவை முடிக்க நினைத்திருந்தேன். "முனைவர் முனிவரே, மருத்துவரிடம் செல்லுங்கள் " என்றுதான் தலைப்பும் வைத்திருந்தேன்.

பிறகுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

தான் இயற்கையாக ஒரு தாய் மூலமாக பிறக்காத தெய்வக்குழந்தை என்று மோடி தன்னை சொல்லிக் கொள்ளும் போது இந்த ஜோசியர் மட்டும் தன்னை தெய்வம் என்று சொல்லிக் கொள்ளக்கூடாதா?

அடிச்சு விடுங்க முனைவர் முனிவரே! மோடியை விட அதிகமாக உங்களால் கதை விட முடியாது என்ற போதிலும் முயற்சியை கைவிடாதீர்கள். குறைந்த பட்சம் ஆட்டுக்காரனுக்கு பதிலாக தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுவீர்கள். வாழ்த்துக்கள் . . .

Thursday, March 13, 2025

கிறுக்கனிடம் சிக்கிக் கொண்டு . . .

 


உக்ரைன் ரஷ்யா மீதான போரை நிறுத்த வேண்டும். உக்ரைனுக்கு இனி ஆயுத சப்ளை கிடையாது,  அமெரிக்கா இதுவரை செய்த உதவிக்கு மாற்றாக உக்ரைன் தன் கனிம வளத்தை கொடுத்து விட வேண்டும் என்றெல்லாம் ட்ரம்ப் சொல்லிக் கொண்டிருந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேறும் என்ற அறிவிப்பிற்கே பாரக் ஒபாமா நோபல் அமைதி விருது பெற்றது போல ட்ரம்பிற்கும் ஆசை போல என்று நினைத்திருந்தேன்.

அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்பதை இன்றைய செய்தி உணர்த்தி விட்டது. அமெரிக்கா உக்ரைனுக்கு மீண்டும் ஆயுத சப்ளையை தொடங்கி விட்டது.

அப்பறம் என்ன?

போர்தான்! அழிவுதான், மறு கட்டமைப்புதான், அதுக்கான டீலிங்தான்.

ஒரு கிறுக்கனிடம் சிக்கிக் கொண்டு உலகமே தவிக்கிறது . . .

Wednesday, January 15, 2025

அந்த சிகண்டி சங்கி பைத்தியங்க . . .

 


விஜய்  தந்தை பெரியார் படத்திற்கு மாலை போடும் புகைப்படத்தை


போட்டோஷாப் மூலம் சூரியனுக்கு மாலை போடுவது போல் செய்து விஜய்யை பைத்தியம் என்று சொல்லும் மத்யமர் ஆட்டுக்காரன் குழு சிகண்டி ஃபேக் ஐடியை 


பைத்தியம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது!


மேலேயுள்ள பின்னூட்டத்திற்கு அந்த போலி ஐடியோ நீதி நேர்மை தவறாத நடுநிலை மாடரேட்டரோ பதில் கொடுக்கவேயில்லை. பதுங்கி விட்டார்கள்.


Tuesday, August 11, 2020

அவங்களுக்கு புடிச்ச கலரு????????

 

மெண்டல்களுக்கு புடிச்ச கலரு எது?

 கோவையில் ஒருவன் தந்தை பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசினான். அவன் மன நிலை பாதிக்கப்பட்டவனாம்.

 புதுவையில் ஒருவன் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்துள்ளார். அவன் கூட மன நிலை பாதிக்கப்பட்டவனாம்.

 நாகர்கோயிலில் அறிஞர் அண்ணா சிலையின் மீது காவிக்கொடி கட்டியவனும் கூட மன நிலை பாதிக்கப்பட்டவன்தானாம்.

 ஆக இதிலிருந்து தெரிகிற உண்மை என்ன?

 இப்போ சொல்லுங்க!

 மெண்டல்களுக்கு புடிச்ச கலரு என்ன?

 அந்த எழவை எதுக்கு நான் ஏன் என் வாயால சொல்லனும்?


அதான் ராசாவே சொல்லிட்டாரே!


பிகு: எழுதி ரொம்ப நாளா ட்ராப்டிலேயே இருந்தது. விகடனில் மேலே உள்ள படத்தை பார்த்ததும் எழுதியதை கொஞ்சமாக மாற்றி இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.