Showing posts with label ராணுவம். Show all posts
Showing posts with label ராணுவம். Show all posts

Wednesday, January 8, 2025

அம்பலமாகி நிற்கும் போலிப் பேராசிரியன்.

 


அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடத்த பாலியல் கொடுமையில் “சார்” என்று யாராவது இருக்கிறாரா என்று தெரியாது. அந்த குற்றச்சாட்டு உண்மையா பொய்யா தெரியாது என்று தெரியாது.

அதிமுகவும் பாஜகவும் செய்த “யார் அந்த சார்?”  அரசியலில் சார் என்ற வார்த்தையே பாலியல் கொடூரனை குறிக்கும் வார்த்தையாக மாறி விட்டது.

இப்படிப்பட்ட சூழலில் போலிப் பேராசிரியன், பொய்யன் ராம.சீனிவாசன் ட்விட்டரில் ஒரு பதிவு போடுகிறான்.


 

“அமரன்” முகுந்த் வரதராஜனின் தந்தை திரு வரதராஜன் அவர்களுடன் அவன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை போட்டு “என்னோடு படத்தில் இருக்கும் “யாரு இந்த சாரு?” என்று கேட்கிறான்.

 ஒரு பாலியல் குற்றவாளிக்காக அவர்களே உருவாக்கிய “யாரு அந்த சாரு” என்பதை வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரியின் தந்தைக்கு பொருத்துவது எவ்வளவு கேவலமான சிந்தனை!

 பொதுவாக இந்த போலிப் பேராசிரியனின் ட்விட்டர் பக்கம் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும். அதை பரபரப்பாக்க இப்படி ஒரு மட்டமான பதிவை போட்டுள்ளான். அவன் கட்சி ஆளுங்களே பதிவை நீக்குங்கள் என்று எழுதி உள்ளனர்.

 ஆனால் அவனோ அதே பதிவின் தொடர்ச்சியாக மறுநாளும் இன்னொரு பதிவை போட்டுள்ளான்.



“எல்லையில் ராணுவ வீரர்கள்” என்று அளந்து விடும் மோசடிப் பேர்வழிகள் ராணுவ வீரர்களை, அவர்களின் குடும்பத்தினரை இப்படித்தான் மதிக்கிறார்கள்.

இவனுக்கு மதுரையில் ஓட்டு போட்ட அப்பாவி மக்கள்தான் பாவம்!

 

Sunday, December 15, 2024

புது ராணுவ ஓவியம் – மத்யமர் சங்கிகளுக்கு தெரிந்தால்?

 


ராணுவ தலைமையகத்தில் மோடியால் வைக்கப்பட்டுள்ள புதிய் மொக்கை ஓவியத்தை வரைந்தது யார் என்று தெரிந்தால் சங்கிகள், அதிலும் குறிப்பாக மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சங்கிகளுக்கு தெரிந்தால் எப்படி ஜாகீர் உசேன்  ஸ்ரீரங்கம் கோயிலுக்குக் கொடுத்த வைரக்கற்கள் பதித்த மாணிக்கக் கிரீடத்திற்கு எதிராக பொங்கினார்களோ, அது போல பொங்கி எழுந்து எழுதித் தள்ளி விடுவார்கள்.

ஆம்

அதை வரைந்தவர்

சென்னை ரெஜிமெண்டைச் சேர்ந்த லெப்டிணன்ட் கர்னல் தாமஸ் ஜேக்கப்.

ஆமாம்,

சங்கிகளின் மொழியில் பாவாடை.

இந்த தகவல் மட்டும் தெரிந்தால் போதும் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சிகண்டிகள் (பெண்களின் பெயரில் ஒளிந்து கொண்டுள்ள ஃபேக் ஐடிகள்) மோடியை விட்டு விட்டு இந்திய ராணுவத்தை ஒரு வழி செய்து விடுவார்கள்.

ஆமாம்.

அவர்கள் அவ்வளவு நேர்மையானவர்கள், மத வெறி விஷத்தை கக்குவதில் . .

Saturday, December 14, 2024

இந்திய ராணுவத்தை அவமதித்த மோடி

 



மேலே உள்ள படம் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கியமான ஒரு தருணத்தை குறிக்கிறது.

 வங்க தேச விடுதலைக்காக இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த  போரில் இந்தியா வென்றது. இந்தியாவிடம் சரணடைகிறோம் என்று பாகிஸ்தானின் கிழக்கு பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அமீர் அப்துல்லா நியோசி, இந்தியாவின் கிழக்கு பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜீத் சிங் அரோராவிடம் சரணாகதி பத்திரத்தில் எழுதிக் கொடுத்த தருணம் அது.

 சுஜாதா எழுதிய 14 நாட்கள் நாவலில் பத்மா நதிக்கரை ஓரம் நடந்த BATTLE OF PADMA என்று அழைக்கப்படும் போரை ஜே.எஸ்.அரோராவின் கிளாசிக் என்று விரிவாக எழுதியிருப்பார்.

 16.12.1971 அன்று டாக்காவில் இந்த நிகழ்வு நடந்தது.  அந்த நாளைத்தான் இந்தியா வெற்றித் திருநாளாக (VIJAY DIVAS) கொண்டாடி வருகிறது.

 இந்த வரலாற்றுத் தருணம் ஓவியமாக தீட்டப்பட்டு ராணுவத் தலைமையகத்தின் வரவேற்பரையில் வைக்கப்பட்டிருந்தது.

 


இந்திய ராணுவத் தலைமையகத்து வரும் வெளி நாட்டு ராணுவ அதிகாரிகள் பலரும் அந்த புகைப்படத்தின் பின்புலத்தில் புகைப்ப்டம் எடுத்துக் கொள்வது வாடிக்கை.

 


இப்போது அந்த ஓவியத்தை மோடி அரசு நீக்கி விட்டது. அதற்கு பதிலாக வைத்துள்ள புதிய ஓவியம் இது.

 


பாண்டவர்கள் நடத்திய அதர்ம யுத்தத்தின் போது “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்ற உபதேசக் காட்சி, சாணக்கியர், கருடன், மற்றும் இந்திய ராணுவ ஆயுத உபகரணங்கள் (ஊழல் செய்து வாங்கிய ரபேல் போர் விமானம் நீங்கலாக) உள்ளது. இந்த ஓவியம் வெறும் வண்ணத் தீற்றலாக உள்ளதே தவிர அழகும் இல்லை, பொருளும் இல்லை.

 இந்திய ராணுவத்தின் வெற்றியை நினைவு படுத்தும் ஓவியத்தை அகற்றி இந்துத்துவ ஓவியத்தை வைக்க வேண்டிய அவசியம் என்ன?

 1971 போர் வெற்றி என்றால் அது மோடி மிகவும் வெறுக்கும் ராகுல் காந்தியின் பாட்டியும், மோடி இன்னும் அஞ்சும் ஜவஹர்லால் நேருவின் மகளுமான  இந்திரா காந்தியை நினைவு படுத்தும். வங்க தேசப் போர் முடிந்து மக்களவைக்கு வந்த இந்திரா காந்தியை அவங்க கட்சியோட முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயே “மஹிஷாசுர மர்த்தினி, சக்தியின் வடிவம்” என்றெல்லாம் வேறு பாராட்டித் தொலைத்து விட்டார்.

 தன்னுடைய சாதனை என்று எந்த எழவையாவது சொல்ல வேண்டுமென்றால் அப்படி ஒரு எழவும் கிடையாது. சீனா என்று சொல்லக் கூட 56 இஞ்சாருக்கு காலெல்லாம் தலைநகரம் நாய் சேகர் போல நடுநடுங்கும். அதானி வியாபாரம் செய்வதால் பாகிஸ்தானோடும் எதுவும் செய்ய முடியாது.

 அதனால் சரித்திரத்தை மறைத்து விட்டு ஒரு மொக்கை ஓவியத்தை வைத்துள்ளார்.

 முன்னாள் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் பலரும் இதனால் கடுப்பாகி கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிகு :  யார் இந்த ஓவியத்தை வரைந்தது? அது நாளை தனி பதிவாக …

Thursday, October 3, 2024

56 வருடங்களுக்கு முன்பே . . .சூப்பர்

 


நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் பார்த்த செய்தி நெகிழ்ச்சியூட்டியது. 

ஹிமாச்சல் பிரதேசத்தில் 7, பிப்ரவரி, 1968 அன்று இந்திய விமானப்படை விமானம் ஒன்று ரோஹ்தாங் என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 102 பேரும் இறந்து போய் விட்டனர். அந்த விபத்தில் சிக்கிய அனைவரும் இறந்து விட்டாலும் சிலரின் சடலங்கள் கிடைக்கவில்லை.

கடந்த வாரம் நான்கு சடலங்கள் கிடைத்துள்ளன. அதில் ஒரு சடலம் நாராயண் என்ற சிப்பாயினுடையது.


அவரது பேண்ட் பாக்கெட்டிலிருந்த சிறு புத்தகம் மூலம் விபரங்கள் அறிந்து சடலத்தை அவரது வீட்டில் சேர்த்துள்ளனர்.

பசந்திதேவி என்பவரை திருமணம் செய்து கொண்ட இரண்டு வருடங்களில் இந்த விபத்து நடந்துள்ளது.

தன்னுடைய மருமகளின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு நாராயணின் தாய் பசந்திதேவிக்கு தன் உறவுக்கார பையன் ஒருவரோடு மறுமணம் செய்து வைத்துள்ளார்.

பசந்திதேவி, அவருடைய இரண்டாவது கணவர் இரண்டு பேரும் காலமாகி விட்ட சூழலில் அவர்களுடைய மூத்த மகன் ஜெய்வீர்சிங் இறுதிச்சடங்குகளை செய்துள்ளார். தன் தாய்க்கு செய்யும் மரியாதை இது என்றும் தெரிவித்துள்ளார்.

56 வருடங்களுக்கு முன்பு தன் மருமகளுக்கு மறுமணம் பற்றி சிந்தித்து செயல்படுத்திய அந்த தாயின் செயல் பாராட்டுக்குரியது. 

பிகு: தன் தாய்க்கு இந்திய ராணுவம் குடும்ப ஓய்வூதியமோ இல்லை வேறு எந்த இழப்பீடும் தரவில்லை என்று ஜெய்வீர்சிங் குற்றம் சுமத்தியுள்ளார். அதனை ராணுவம் ஆய்வு செய்து உண்மையறிந்து தவறை சரி செய்திட வேண்டும்.  

Sunday, June 2, 2024

சிங்கம் 2 சீன், நிஜத்தில், காஷ்மீரில் . . .


 சூர்யா நடித்து சிங்கம் 2 திரைப்படத்தில் ஒரு காட்சி வரும்.

லாக் அப்பில் அடைக்கப்பட்ட சர்வதேச போதைப் பொருள் மாஃபியா தலைவன் டானியை மீட்க ஒரு கும்பல் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து அங்கே இருக்கும் காவலர்கள் தாக்கி, அடித்து, லாக்கப்பை உடைத்து மீட்டுக் கொண்டு செல்வார்கள். திரும்பும் போது பெட்ரோல் குண்டும் வீசி விட்டுப் போவார்கள்.

திரைப்படக்காட்சி காஷ்மீரில் நிஜமாகியுள்ளது.

ஒரு திருட்டு வழக்கிற்காக போலீஸ் கூட்டிக் கொண்டு வந்த ஒருவரை மீட்க காஷ்மீரில் குப்வாரா என்ற இடத்தில் இதே போல் ஒரு கும்பல் உள்ள் நுழைந்து போலீசை அடித்து தாக்கி அவர்களின் அலைபேசிகளையும் எடுத்துக் கொண்டு போயுள்ளது.

சினிமாவுக்கும் நிஜத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.

சினிமாவில் கிரிமினல் கும்பல் தாக்கியதாக காண்பிக்கப்பட்டது.

நிஜத்தில் அந்த அக்கிரமத்தை செய்தது ராணுவம்.

ஆம்.

சத்தியமாகத்தான் . . .

தங்களின் படைப்பிரிவு வீரரை மீட்க ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் எடுத்த சட்ட விரோத நடவடிக்கை அது.

மூன்று லெப்டினன்ட் கர்னல் உட்பட 16 பேர் மீது போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.


இவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்?

பாதுகாப்புப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் இருக்கும்வரை ஒன்றும் நடக்காது. அந்த சட்டம் நீங்கினால்தான் ராணுவத்தின் கொட்டம் அடங்கும்.

Sunday, June 25, 2023

கூலிப்படை வைத்திருந்தால் , , ,

 


ரஷ்ய நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருந்த கூலிப்படை அரசுக்கு எதிராக திரும்பியது. 

உள்நாட்டுக் கலகம் உருவாகும், புதின் பதவி விலகி வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவார் என்றெல்லாம் ஆரூடம் சொல்லப்பட்டது.

என்ன நடந்ததென்று தெரியாது.

கூலிப்படையின் முயற்சி நின்று போனது. கூலிப்படை நிறுவனர் வெளியேறி விட்டார்.

இந்த சம்பவம் என்ன சொல்கிறது!

அரசு செய்ய வேண்டிய பாதுகாப்பு கடமையை தனியாருக்குக் கொடுத்தால் அவர்கள் அரசுக்கு எதிராகவே திரும்புவார்கள். பாதிப்பு ஆட்சியாளர்களுக்கு அல்ல, மக்களுக்கே.

கூலிப்படை கலகம் கூட யாராவது கொடுத்த பணத்தின் அடிப்படையில் கூட நிகழ்ந்திருக்கலாம்.

ரஷ்யாவைப் பார்த்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இருக்கிறது.

ராணுவத்தில் டிமோ கொண்டு வந்துள்ள ஒப்பந்த முறையான "அக்னிபாத்" திட்டத்தில் பணியிழப்பவர்களைக் கொண்டு கூலிப்படைகள் உருவாக்க முதலாளிகள் முன் வர வேண்டும் என்பது திட்டத்தின் ஒரு பகுதி. 

அப்படி கூலிப்படைகள் உருவானால் அது ஜனநாயகத்திற்கு பேரழிவு.

Monday, November 28, 2022

அவ்ளோ வொர்த் இல்லையே மோடி!

 


காலையில் ஆங்கில இந்துவில் படித்த செய்தி . . .

மர்மமான ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போன முன்னாள் முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு பஞ்சலோகத்தில் சிலை செய்து அதை ராணுவ தலைமையகத்தில் வைக்கப் போகிறார்களாம்.



தங்கம், வெள்ளி, செப்பு, ஈயம் மற்றும் இரும்பின் கலவையே பஞ்சலோகம். கோயில் உற்சவர் சிலைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் கலவை இது. அதன் மதிப்பு அதிகம் என்பதால்தான் சிலைக்கடத்தல் செய்பவர்கள் பஞ்சலோக சிலைகளையே குறி வைப்பார்கள்.

அவ்வளவு மதிப்பில் பஞ்சலோக சிலை வைக்கும் அளவிற்கு பிபின் ராவத் என்ன சாதித்து விட்டார்?

அகால மரணம் அவரை புனிதராக்கி விடுமா என்ன?

இந்திய் ராணுவத்தை காவிமயமாக்கியதும் உளவுத்துறை தகவல்களை அலட்சியம் செய்து ராணுவ வீரர்களை பலி கொடுத்ததும் போர் வந்தால் நடத்த ஆயுதங்களும் வெடி பொருட்களும் இல்லாத அளவிற்கு ராணுவத்தை பலவீனப்படுத்தியதும் காஷ்மீரில் பொய்யான தாக்குதல்களை  ஊக்குவித்ததும்தான் அவர் சாதனைகள்.

அவருக்கு சிலை என்பதே ஓவர். பஞ்சலோக சிலை என்பது ரொம்பவே ஓவர். 


Tuesday, June 21, 2022

அக்னிபாத் – மனு தர்ம சதி

 



 

அக்னிபாத் திட்டத்தினை கொண்டு வருவதில் மிகப் பெரிய மனு தர்ம சதி அடங்கியுள்ளது.

 ராணுவத்தில் சிப்பாய் வேலைகளுக்கு செல்பவர்கள் யார்?

 பத்து வருடங்களுக்கு முன்பாக எங்கள் நிறுவனத்தில் “ஐந்தாண்டுகளுக்கு மேலாக சார் பணியாளராக, நான்காம் பிரிவு பணியில்  பணியாற்றியவர்களுக்கு” உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிரந்தரப் பணி அளிக்கப்பட்டது. எங்கள் கோட்டத்தில் கிட்டத்தட்ட நூறு பேர் பணி நிரந்தரம் பெற்றனர். அவர்களின் சமூக பின்னணியை ஆய்வு செய்த போது பாதிக்கும் மேற்பட்டவர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் மீதியுள்ளவர்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்களாகவுமே இருந்தார்கள். முற்பட்ட வகுப்பினர் என்று சொல்லக் கூடியவர்கள் ஒருவர் கூட இல்லை. பிற கோட்டங்களிலும் இதே நிலைமைதான்.

 அதாவது தற்காலிக சார்பணியாளராக நான்காம் பிரிவு பணியில் வேலை பார்க்க ஒரு முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் கூட முன்வரவில்லை. இதற்கு முன்பாக 1993 ல் நிரந்தரப் பணி நியமனத்தின் போது விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இருந்தது.

 ராணுவத்தில் முற்படுத்தப்பட்டவர்கள் யாருமே கிடையாதா?

 இருக்கிறார்கள்.

 அவர்கள் அதிகாரிகளாக நியமனம் பெற்றவர்கள். அதிகாரத்தின் படிக்கட்டுக்களில் மேலே மேலே செல்பவர்களும் அவர்கள்தான்.

 ராணுவத்தில் சிப்பாயாக வேலைக்கு சேர்பவர்களில் அனைவரும் தேச பக்தியால் உந்தப்பட்டு சேர்பவர்கள்தான் என்று நாம் நினைத்தால் அதை விட பெரிய தவறு எதுவுமில்லை.

 மேற்படிப்பிற்கு வாய்ப்பில்லாமல், வேலைக்கான சந்தையில் மிகவும் சிரமப்பட்டு ராணுவத்தில் சேர்ந்தாலாவது நம் பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கையில் வருபவர்கள். ஓய்வூதியமும் பணி ஓய்வுக்குப் பிறகு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் முன்னாள் ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் முன்னுரிமையுமே ராணுவத்துக்கான ஈர்ப்பு சக்தி.

 இன்று அரசுத்துறையிலும் பொதுத்துறையிலும் பணி நியமனம் என்பது கானல் நீராக மாறி வரும் சூழலில் ஓய்வூதியமே அவர்களுக்கான ஒரே பிடிப்பு.

 அவர்கள் பட்டப்படிப்பு படித்தவர்களாக இருப்பார்கள், குறைந்த பட்சம் பனிரெண்டாவது தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

 17 வயதில் அக்னி வீரனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவனிடமிருந்து பள்ளி மேல் நிலைக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் பறிக்கப்படுகிறது. நான்கு வருடத்திற்குப் பிறகு அவன் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுகிற போது கல்விக்கான காலம் கடந்து போயிருக்கும். மறு வேலை வாய்ப்பு என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதைதான். அரசுத்துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணி நியமனம் என்பதே இல்லாத நிலையில் இந்த மந்திரிகளின் முன்னுரிமை அறிவிப்பெல்லாம் வழக்கமான ஜூம்லாதான். 0*10 % எவ்வளவோ அவ்வளவுதான் இவர்கள் தரும் மறு வேலை வாய்ப்பு.

 புதிய கல்விக் கொள்கை மூலம் குலக் கல்வி திட்டத்தை கொண்டு வரலாமா என்று சதி செய்கிற ஆட்சியாளர்கள், சாதாரண இள நிலை படிப்பிற்குக் கூட நீட் தேர்வை அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ள ஆட்சியாளர்கள், இளைஞர்களின் நான்கு வருட உழைப்பைச் சுரண்டி அவர்களின் கல்வியைப் பறித்து பின்பு நடுத்தெருவில் நிற்க வைக்கும் சதியே அக்னிபாத் திட்டம்.

 நான்கு வருடத்துக்குள் அவர்களுக்கு தேச பக்தி ஊட்டப்படும். அதனால் அவர்கள் வேலை கேட்டோ, ஓய்வூதியம் கேட்டோ போராட மாட்டார்கள் என்று பெருமிதமாக கதையளக்கிறார்கள் சங்கி மூடர்கள்.

 தங்களின் வாழ்வைத் தொலைத்து விட்டு நடுத்தெருவில் நிற்கும் போது அவர்களின் தேச பக்தியை விட பட்டினியும் வறுமையுமே அவர்களை வழி நடத்தும். வெயிலிலும் பனியிலும் நேரம் காலம் பார்க்காமல் தங்கள் உழைப்பைச் சுரண்டியவர்கள் மீதுதான் அந்த கோபம் இயல்பாகவே திரும்பும். இந்த சிறு உண்மை கூட சங்கிகளின் முட்டாள் மூளைக்கு எட்டவில்லை.

 மொத்தத்தில் அக்னிபாத் என்பது ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த வாலிபர்களின் கல்வியை பறித்து ஒப்பந்தக் கூலியாக்கி பின்பு நடுத்தெருவில் நிற்க வைக்கும் மனு தர்ம சதி. சிக்கன நடவடிக்கை என்று சொன்னாலும் உண்மையில் அரசின் நோக்கம் வாலிபர்களின் வாழ்வோடு விளையாடுவதுதான்.

 ராணுவம் போன்ற அமைப்புக்களில் நிரந்தரமான சிப்பாய்கள் இல்லாமல் போனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். நாட்டின் பாதுகாப்பிற்கே ஆபத்து ஏற்படும்.

 எனவே அக்னிபாத்தை கொண்டு வந்தவர்களும் ஆதரிப்பவர்களும்தான் தேசத் துரோகிகள்.

 எதிர்ப்பவர்கள் மட்டுமே தேச பக்தர்கள். . . .

Monday, June 20, 2022

அதெல்லாம் முடியாதுடா தம்பி . . .

 


அக்னிபாத் எனும் அயோக்கியத்திட்டத்தை சரியாக புரிந்து கொண்ட இளைஞர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய ஒவ்வொரு ஒன்றிய மந்தியும் சாரி மந்திரியும் தங்கள் துறையில் வேலை வாய்ப்பில்  10 %  ஒதுக்கீடு அக்னி வீரர்களுக்கு தருவோம் என்று அறிவித்து வருகின்றனர். 

இது போன்ற இட ஒதுக்கீடெல்லாம் கொல்லைப்புற வழியில் வருவதாகும். இதையெல்லாம் அனுமதிக்க முடியாது என்று இரண்டு மாதம் முன்புதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆக இந்த 10 % இட ஒதுக்கீடு என்பதே பெரிய டுபாக்கூர் வேலைதான். மோடியின் மந்திரிகள் மட்டும் மோடியைப் போலவே ஃப்ராடுகள்தானே என்ற உங்கள் மனதின் குரல் கேட்டு விட்டது.

மற்ற மந்திரிங்க அறிவிப்பை கேட்டதும் விமானத்துறை மந்திரியான ஓடுகாலித் தம்பி ஜோதிர் ஆதித்தியா சிந்தியாவும் உணர்ச்சிவசப்பட்டு விமானத்துறையிலும் 10 % இட ஒதுக்கீட்டுன்னு சொல்லிட்டான்.

தம்பி சிந்தியா, ஏர் இந்தியாவை டாடா கிட்ட வித்துட்ட, ஏர்போர்ட்டை எல்லாம் அதானிகிட்ட கொடுத்திட்ட, இவங்கெல்லாம் அக்னிவீரனுக்கு வேலை கொடுப்பாங்களா? (கிழிப்பாங்க) நீ மந்திரியாக இருக்கறதே தண்டம்தான்.  இதுல விமானத்துறையில் 10 % இட ஒதுக்கீடுன்னு காமெடி செய்யறே!

பிகு: அக்னிபாத் என்பது சமூக நீதிக்கு எதிரான மிகப் பெரிய மனு தர்ம சதி. விரிவாக விரைவில் எழுதுவேன்


Saturday, June 18, 2022

புல்டோசர்கள் எங்கே மொட்டைச் சாமியார்??????

 


அக்னிபாத் எனும் அயோக்கியத்தனத்திற்கு எதிரான போராட்டம் புல்டோசர் பாபா என மாறியுள்ள மொட்டைச் சாமியாரின் உ.பி மாநிலத்திலும் பரவியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களின் வீடுகளை இடிக்க புல்டோசரை அனுப்பிய மொட்டைச் சாமியாரால் இப்போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் வீடுகளை அனுப்ப முடியுமா?

மேலே உள்ள கார்ட்டூன் சொல்வது போல, போராட்டத்தில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள் என்பதை கண்டறிவது கஷ்டமென்பதால், 

சிறுபான்மை மதத்தவர் அல்லாதவர்கள் வீட்டையெல்லாம் இடிக்க மொட்டைச் சாமியாரின் மனு தர்மத்தில்  விதி இல்லாததால்,

போராட்டத்தில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கை அதிகமென்பதால் அவ்வளவு வீடுகளை இடிக்க புல்டோசர்கள் போதாது என்பதால் 

சிறுபான்மை அல்லாதவர்களின் வீடுகளை இடித்தால் வாக்குகள் பறிபோகும் என்பதால்

மொட்டைச் சாமியார் புல்டோசர்களை அனைவரின் மீதும் ஏவ மாட்டார். இதுதான் சாக்கென்று இஸ்லாமியர் வீடுகளை மட்டும் வேண்டுமானால் இடிக்கலாம்.

ஏனென்றால் இவர்கள் அயோக்கியர்கள், அராஜகவாதிகள். வெறியர்கள்.

பிகு : ரொம்ப சீரியஸா போயிடுச்சா!

அதனால் ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் பகிர்ந்து கொண்ட ஒரு புல்டோசர் ஜோக்கை மட்டும் படித்து விடுங்கள்.


 
என்ன கொளுத்துறானுகளா.? புல்டோசர அனுப்பவா..??

அண்ணாச்சி... அவனுக கொளுத்துனதே புல்டோசரதான்.


Friday, June 17, 2022

ஐயோ பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு

 


மேலே உள்ளது ஆர்.கே.செல்வமணி படத்தில் வரும் பாடல், புதிய விக்ரம் படத்தில் அந்த பாடல் வரிகள் ஒலித்ததிலிருந்து அதை அவ்வப்போது ஹம்மிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும்.

"அக்னிபாத்" என்ற பெயரில் இந்திய இளைஞர்களை எதிர்கால கூலிப்படையாக மாற்ற நினைத்த மோடியின் சதிக்கு எதிராக வெகுண்டெழுந்த இந்திய இளைஞர் பட்டாளத்தின் எதிர்வினையை சொல்கிறேன் என்று யாரும் நினைக்கக் கூடாது.

சரி, சரி, நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும். . .

மோடியின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் கொதித்து எழுவது நல்லது, இந்திய நாட்டுக்கும் மக்களுக்கும் 

Wednesday, June 15, 2022

ராணுவத்துக்கு ஆளெடுங்கள், கூலிப்படைக்கல்ல . . .

 


நேற்று முன் தினம் மோடி ஒன்றரை ஆண்டில் பத்து லட்சம் பேருக்கு அரசுத் துறைகளில் வேலை என்று அறிவித்த போது அதை வழக்கமான ஜூம்லா என்றுதான் நினைத்திருந்தேன்.


ஆனால் ராணுவத்துக்கு ஆளெடுக்கும் புதிய கொள்கையை படித்த பின்பு மோடியின் அறிவிப்பு ஜூம்லாவாக இருப்பதே மேல் என்று தோன்றியது.

நான்கு வருட ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆள் எடுப்பார்கள், வெறும் தொகுப்பூதியம்தான். நான்கு வருடத்திற்குப் பிறகு 75 % பேர் வீட்டுக்கு அனுப்பப்பட 25 % பேர் மட்டும் தொடர்வார்கள்.

வீட்டுக்கு வந்தவர்கள் நிலை ????

தொகுப்பூதியத்தில் பிடிக்கப்படும் தொகைக்கு இணையான தொகையை அரசு கொடுக்குமாம். அதை வைத்துக் கொண்டு தொழில் தொடங்க வேண்டுமாம். 

மாத தொகுப்பூதியம் 25,000 என்று ஒரு செய்தி படித்தேன். 10 % பிடித்து அரசும் அதே தொகையை கொடுத்தால் எவ்வளவு வரும்?

2500*2*48  = 2,40,000

இதை வைத்துக் கொண்டு பக்கோடா கடை போடலாம். விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் வேகத்தில் அதையும் சீக்கிரமே மூட வேண்டி வரும்.

பிறகு என்ன செய்வார்கள்?

"வீதிகளிலே வேலையற்றதுகள், வேலையற்றதுகளின் நெஞ்சில் விபரீத எண்ணங்கள்"

என்ற அறிஞர் அண்ணாவின் வாசகம்தான் நினைவுக்கு வருகிறது. 

நான்காண்டுகளில் கற்றுக் கொண்ட வித்தையை இறக்கினால் என்ன ஆகும்? இவர்கள் நாளை சங்கிகளின் கூலிப்படையாக மாறுவார்கள்.

அது மட்டுமல்ல . . .

மோடி அரசு இன்னொரு கொள்கையையும் அறிவித்தால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

பல நாடுகளில் தனியார் ராணுவம் உள்ளது. அது போன்ற அனுமதியை அதானி, அம்பானிக்கு கொடுத்தால் அவர்கள் இந்த 75 % ஒப்பந்த வீரர்களை பணிக்கு எடுத்துக் கொள்வார்கள். தனியார்  ராணுவம் என்பதும் அடிப்படையில் கூலிப்படைதான். உக்ரைன் போருக்குக் கூட சில கூலிப்படைகள் சென்று பிரச்சினையை சமாளிக்க முடியாமல் ஓடிப் போன செய்தியை படித்திருப்பீர்கள்.

அது போன்ற நிலைமை இந்திய இளைஞர்களுக்கு வர வேண்டுமா?

ஆகவே  மிஸ்டர் மோடி, ஆணிகள் அப்படியே இருக்கட்டும். ராணுவத்துக்கு ஆளெடுங்கள், தனியார் கூலிப்படைகளுக்கல்ல.

பிகு: எதுக்கு படத்துல ஆட்டுக்காரன் என்ற கேள்வி வந்ததல்லவா? மோடியின் அறிவிப்பை மிகப் பெரிய புத்திசாலித்தனம் என்று அந்த முட்டாள் வர்ணிக்கும் முன் அடித்து விடத்தான் . . . .

Sunday, June 12, 2022

போலீஸ் Vs ராணுவம். என்னாகும் ?????

 


ஆறு மாதங்களுக்கு முன்பாக இந்திய ராணுவம் பனிரெண்டு சுரங்கத் தொழிலாளர்களை நாகாலாந்தில் சுட்டுக் கொன்றது நினைவில் உள்ளதா?

நாகாலாந்து போலீஸ் ராணுவத்தினர் முப்பது பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

ராணுவம் எதிர் போலீஸ் என்ற நிலையில் ஒன்றிய அரசும் நீதிமன்றமும் யார் பக்கம் நிற்கும்?

அப்பாவித் தொழிலாளர்களை அநியாயமாக சுட்டுக் கொன்ற ராணுவத்தினருக்கு தண்டனை கிடைக்குமா/

கண்டிப்பாக கிடைக்காது.

அங்கே ராணுவத்தினருக்கு ஒரு சிறப்புக் கவசம் இருக்கிறது. அந்த கவசம் அவர்களை காப்பாற்றும்.

ARMED FORCES SPECIAL POWERS ACT எனப்படும் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் அங்கே நடைமுறையில் உள்ளது. இந்த கொடூரத்திற்குப் பின்பும் அது நீட்டிக்கப்பட்டது.

அதனால் யாரும் கேள்வி கேட்க முடியாத, எல்லையற்ற அதிகாரத்தை அளிக்கும் அராஜகச் சட்டம் உள்ளவரை அந்த அப்பாவிகளுக்கு நியாயம் கிடைக்கவே கிடைக்காது. 


Saturday, January 22, 2022

அடுத்த அராஜகமென்ன மோடி?

 


காட்டிக் கொடுத்த கருங்காலிகளாக வரலாற்றில் இடம் பெற்றுள்ள துரோகிகளின் வாரிசுகளான மோடி வகையறாக்கள் இன்னொரு வரலாற்றுச் சின்னத்தை சீர்குலைத்துள்ளனர்.

வங்க தேச விடுதலைப் போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கான நினைவுச் சின்னமாக டெல்லி இந்தியா கேட் அருகில் அமர் ஜவான் ஜோதி என்னும் அணையா ஜோதி உள்ளது.

அந்த ஜோதி நேற்று அணைக்கப்பட்டு விட்டது.

அமர் ஜவான் ஜோதி அணைக்கப்படவில்லை. புதிய போர் நினைவுச் சின்னத்தில் உள்ள ஜோதியோடு ஐக்கியமாகி விட்டது என்று ஒரு விளக்கம் தருகிறது அரசு.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த நந்தனாரை எரித்துக் கொன்று விட்டு அவர் சிவனோடு ஜோதி வடிவில் ஐக்கியமாகி விட்டார் என்று கதை விட்டு நந்தன் வந்த தெற்கு வாசலை இன்னமும் மூடி வைத்திருக்கிற அராஜகத்திற்கு கொஞ்சமும் குறையாத அராஜகம் இது.

வங்க தேசப் போரை வென்றது இந்திரா காந்தி என்பதை நினைவு படுத்துவதால்தான் அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பட்டுள்ளது.

இவர்களால் அப்படி ஏதாவது ஒரு சாதனையை சொல்ல முடியுமா?

கார்கில் போர் வெற்றி என்று சொன்னாலும் 

ஊடுறுவலை தடுக்க முடியாத, ஊடுறுவல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாத வாஜ்பாய் காலத்து உளவுத்துறையின் கையாலாகத தனத்தையும் இறந்து போன வீரர்களின் சடலங்களை அடக்கம் செய்ய வாங்கிய சவப் பெட்டியில் கூட ஊழல் செய்ததும்தானே இணைந்தே நினைவுக்கு வருகிறது!

"எல்லையிலே வீரர்கள்" என்று வஜனம் பேசியவர்கள் ஆட்சியில்தான் இறந்து போன வீரர்கள் நினைவுச் சின்னம் அழிக்கப்படுகிறது.

அடுத்து என்ன அராஜம் என்பதை சொல்லி விடுங்கள். 

உங்களுக்கு ஓட்டு போட்ட மூடர்கள் செய்த தவறால் ஒட்டு மொத்த தேசமும் அழிந்து கொண்டிருக்கிறது. 

Friday, December 31, 2021

படுகொலைகள் பழக்கமானதால்தானோ?

 


இம்மாத துவக்கத்தில் இந்திய ராணுவம் நாகாலாந்தில் 12 அப்பாவி மக்களை படு கொலை செய்து ராணுவ அதிகார சிறப்புச் சட்டத்தினால் நடவடிக்கை இல்லாமல் தப்பித்ததையும் நாம் மறந்திருக்க முடியாது.

AFSPA ரத்து செய்யப்பட வேண்டும் என்ற குரல் அங்கே ஒலித்தது. மாநில முதலமைச்சர் கூட வலியுறுத்தினார்.

ஆனால் அச்சட்டம் நாகாலாந்தில் மேலும் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று மாநில அரசே ஆணை பிறப்பித்துள்ளது.

இதை இரட்டை வேடம் என்று சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?

போராடும் மக்களை ஒடுக்க ராணுவ சிறப்புச்சட்டம் இருப்பது நல்லது என்று மாநில அரசு முடிவெடுத்ததா?

அல்லது

படுகொலைகள் அங்கே பழக்கமாகி விட்டதா?

Monday, December 6, 2021

நாகாலாந்து கொலைகள் - சில கேள்விகள்

 


நேற்று நாகாலாந்தில் ராணுவம் 12 பொது மக்களை சுட்டுக் கொன்றுள்ளது. அவர்கள் தீவிரவாதிகள் என்று நினைத்ததால் கொன்று விட்டதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளது ராணுவம்.

அதெப்படி நிலக்கரி சுரங்க ஊழியர்கள் அணியும் உடை போலவே, அவர்களை அழைத்துச் செல்லும் வாகனம் போலவே தீவிரவாதிகள் இருப்பார்கள் என்று உளவு சொன்னது யார்?

AFSPA எனப்படும் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் இல்லையென்றால் இப்படி பொறுப்பில்லாமல் செயல்பட முடியுமா?

அந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போதாவது புரிகிறதா?

நாகாலாந்தில் எல்லா குழுக்களுடனும் விவாதித்து அமைதி உடன்பாடு எட்டப்பட்டதாகவும் (அந்த உடன்பாடு, ஒப்பந்தம் எல்லாம் இன்று வரை ரகசியமே) பீற்றிக் கொள்ளப்பட்டதே, பிறகு எப்படி அங்கே தீவிரவாதிகள் வந்தார்கள் என்று அந்த சாதனைக்காகவே தமிழ்நாடு ஆளுனராக்கப்பட்டார், அவர் இங்கே திராவிட இயக்கங்களை வீழ்த்தி விடுவார் என்று சொல்கிறார்களே, அவர் இதற்கு பதில் சொல்வாரா?

நாகாலாந்தில் நடந்தது போலத்தான் காஷ்மீரிலும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை  நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

நாகாலாந்து சம்பவத்திற்கு அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளாரே, வட கிழக்கு மாநிலங்களில் எங்காவது தேர்தல் வருகிறதா? 

Thursday, December 26, 2019

அருகதையற்ற தளபதி



மேலே உள்ள படம் கர்ணன் திரைப்படத்தில் வரும் உணர்ச்சிமயமான காட்சி. 

கௌரவர்களின் தளபதியாக நியமிக்கப்பட்ட பீஷ்மரால் இழிவுபடுத்தப் படும் கர்ணன் கொதித்தெழுந்து

"நீர் தளபதி பதவிக்கு அருகதையற்றவர்" 

என்று சாடும் காட்சி அது.

வரலாறு திரும்புகிறது.

இன்னும் ஐந்து நாட்களில் ஓய்வு பெறப்போகும் நிலையில் தன் பொறுப்பை மறந்து குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை விமர்சித்துள்ள ராணுவத்தளபதி பிபின் ராவத்தைப் பார்த்து நாமும் உரக்கச் சொல்லிட வேண்டும்.

"நீர் தளபதி பதவிக்கு அருகதையற்றவர்" 

முறைகேடாய் பதவிக்கு வந்த மனிதனின் சிந்தனையும் செயலும் மட்டும் என்ன முறையாகவா இருக்கும்!

Saturday, August 3, 2019

காஷ்மீரை அழிக்கப் போகிறார்களா?


காஷ்மீர் பற்றி கிடைக்கும் தகவல்கள் எதுவுமே நல்லதாக இல்லை.

ஏற்கனவே  மூச்சுத் திணறக் கூடிய அளவிற்கு பாதுகாப்புப் படைகள் குவிந்துள்ள காஷ்மீரில் கூடுதலாக பத்தாயிரம் பேரை இறக்கியுள்ளனர்.

அமர்நாத் யாத்திரையை முன் கூட்டியே முடித்து பக்தர்களையும் சுற்றுலாப்பயணிகளையும் உடனடியாக வீடு திரும்பச் சொல்லி உள்ளனர்.

பாகிஸ்தான் தாக்கும் அபாயம் உள்ளதாக சொல்லிக் கொண்டாலும் உலா வரும் இன்னொரு செய்தி அரசின் நோக்கம் என்னவென்று அம்பலப்படுத்துகிறது.

ஜம்முவை தனி மாநிலமாக அறிவித்து விட்டு காஷ்மீரையும் லடாக்கையும் மத்தியரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர யூனியன் பிரதேசமாக்குவது என்பது திட்டம் என்று உலா வரும் செய்திகள் சொல்கிறது.

அப்படிச் செய்தால் அதை விட முட்டாள்தனம் ஏதுமில்லை.

ஏற்கனவே காஷ்மீர் மக்கள் இந்திய அரசின் மீது நம்பிக்கை இழந்து அன்னியமாகிக் கொண்டு வருகிறார்கள். அவர்களது நம்பிக்கையைப் பெறுவதற்கு உருப்படியான எந்த ஒரு நடவடிக்கையையும் முந்தைய காங்கிரஸ் அரசு எடுக்கவில்லை. மோடி அரசோ நம்பிக்கையை சிதைக்கிற வேலைகளை மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறது.

காஷ்மீரை புதிய டெல்லி சுல்தானின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்வது என்பது கொஞ்ச நஞ்ச ஜனநாயகத்தையும் குழி தோண்டி புதைப்பதாகும்.

அதானியும் அம்பானியும் காஷ்மீரில் உல்லாச விடுதிகள் கட்டுவதற்காக அந்த மாநிலத்தையே தீயிட்டு கொளுத்தப் பார்க்கிறது மோடி அரசு.

மூடனும் முரடனுமாக ஒரு பிரதமர் இருந்தால் இப்படித்தான் நடக்கும்!

Friday, July 26, 2019

வீதியில் நிற்கும் வீர் சக்ரா விருதாளர்.


எங்கள் மேற்கு மண்டலக் கூட்டமைப்பின் தலைவர் தோழர் வி.எஸ்.நால்வாடே அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த பதிவு இது.



கார்கில் போர் வெற்றி தினத்தை கொண்டாடும் இந்நாளில் டைகர் சிகரத்தை மீட்பதற்கான போரில் பாகிஸ்தான் கேப்டன் ஷேர் கானை வீழ்த்தி வீர சாகஸம் புரிந்த வீரர், வீர் சக்ரா விருது பெற்ற  அன்றைய சிப்பாய் சத்பால்சிங் பஞ்சாபில் போக்குவரத்து ஹெட் கான்ஸ்டபிளாக பவானிகர் என்ற சிறிய ஊரின் வீதியில் நிற்கிறார். அவரால் கொல்லப்பட்ட கேப்டன் ஷேர்கானுக்கு பாகிஸ்தான் அரசு தன்னுடைய வீர விருதுகளிலேயே மிக உயர்ந்த விருதான நிஷான் –இ-ஹைதர் விருதை வாழ்நாளுக்கு பிந்தைய விருதாக வழங்கி கௌரவித்தது. ஆனால் சத்பால்சிங்கை நாம் வீதியில் நிறுத்தியுள்ளோம்.

பிகு: இச்செய்தி வைரலான பின்பு பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரிந்தர் சிங் சத்பால்சிங்கிற்கு உடனடியாக உதவி சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளித்துள்ளார்.

விமர்சனத்தை ஏற்று செயல்பட்ட பஞ்சாப் முதல்வருக்கு பாராட்டுக்கள்.

Wednesday, February 20, 2019

எல்லையிலே - இருப்பவர்களுக்கும் கருணை வேண்டும் . . .


தீக்கதிர் நாளிதழில் நேற்று வந்த ஒரு முக்கியமான கட்டுரை. எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டாலும் மத்திய ரிசர்வ் போலீஸிலோ அல்லது எல்லை பாதுகாப்புப் படையிலோ அல்லது கடலோரக் காவல் படையிலோ பணி செய்பவர்கள் வீரர்கள் அல்ல, அவர்கள் துணை வீரர்களாகவே மதிக்கப் படுகிறார்கள் என்ற உண்மை பலரும் அறிய வேண்டியது. 

இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் அண்ணல் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான தோழர் கணேஷ் பல உண்மைகளை இங்கே எடுத்துரைக்கிறார்.

கொல்லப்பட்டவர்களுக்கு கிடைக்கிற கருணை, பணியில் இருப்பவர்களுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது என்பதை நீங்களும் உணர்வீர்கள். 

சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்த அவர்களுக்கு தொழிற்சங்கம் கிடையாது. 

ஒரு தொழிற்சங்கத்தின் குரலாக மக்களின் குரல்தான் ஒலிக்க வேண்டும்.  


வீரர்கள் அல்ல... துணை வீரர்கள்; 

ஓய்வூதியம் மறுக்கப்பட்ட தியாகிகள்


                                                                     - கணேஷ்


இறந்தவர்களின் குடும்பங்களைப் பாதுகாக்க நன்கொடைகள் குவிவதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற நேரங்களில் இத்தகைய செய்திகள் வருவது வாடிக்கையானவைதான். மேலோட்டமாகப் பார்த்தால் இதெல்லாம் நல்ல விஷயம்தான். குடும்பத்தலைவர் திடீரென்று இறந்துவிட்டால், குடும்பம் நிர்க்கதியாகிவிடுமே.. அவர்களை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்விகளெல்லாம் நியாயமானவைதான். 

ஆனால், இந்த கருணை அடிப்படையிலான அறிவிப்புகளின் நிலை என்ன? கடந்த கால அனுபவங்களைப் பார்த்தால், பெரும்பாலானவை அறிவிப்புகளோடு நின்று விடும். கும்பகோணம் பள்ளி கொடூரத்திற்கு நிவாரணம் அறிவித்த பல முக்கிய புள்ளிகள் பின்னர் அதுபற்றிப் பேசவேயில்லை. அவர்கள் மறந்துவிட்டார்கள். மக்களும் மறந்து விட்டார்கள். எப்படி கும்பகோணம் பள்ளிக்குழந்தைகளின் அந்த மரணம் இப்போது நமக்கு வெறும் சம்பவமாக மாறி விட்டதோ, அது போல இந்த 40 பேரின் மரணங்களும் வெறும் சம்பவமாக சிலஆண்டுகளில் மாறிவிடும். 

இதைவிடப் பெரிய அடி விழுந்தால் அவ்வளவுதான். உடனே மறந்துவிடுவோம். அப்படியே, இந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வரும் என்றே வைத்துக் கொள்வோம். வீரேந்திர சேவாக்கை எப்படித் தொடர்பு கொள்வது..? அரசு அறிவித்துள்ள நிதியை யார்மூலமாக வாங்குவது..? லஞ்சம் கொடுத்தால்தான் கோப்பு நகரும் என்றால் யாருக்கு அந்தலஞ்சத்தைக் கொடுப்பது..? பிச்சைக்காசு தருவது போன்று அலைய விடுவார்கள். காசோலை தருவார்கள். இப்போது வங்கியில் போட்டுவிட வேண்டாம். நாங்கள் சொல்லும்போது போடுங்கள் என்பார்கள். குடும்பத்தலைவர் தியாகம் செய்வது ஒருபுறம். அறிவித்த பலன்களை வாங்குவதற்கு தனது நாட்களை வாரிசு தியாகம் செய்தாக வேண்டும்.

ஒரு விஷயத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். இறந்தவர்கள் தேசப்பாதுகாப்புக்காக உயிர் விட்டிருக்கிறார்கள். இது சாதாரண விஷயமல்ல. இவர்கள் மேற்கொண்டுள்ள பணி அற்பமானதல்ல. இதை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள மக்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இந்தப் படுகொலை பற்றிப்பேசுகிற அனைவரும் இவர்களை "வீரர்கள்" என்றுதான் அழைக்கிறார்கள். 

ஆனால் விதிகளின்படி இவர்கள் "வீரர்கள்" அல்ல. இவர்கள் "துணை வீரர்கள்" தான் வீரர்களுக்குரிய சலுகைகள் மற்றும் பலன்களுக்கு இவர்கள் தகுதியானவர்கள் அல்ல என்று விதிகள் சொல்கின்றன.தற்போது கொல்லப்பட்ட சிஆர்பிஎப் மட்டுமல்ல, எல்லைப் பாதுகாப்புப்படை, கடலோர காவற்படை உள்ளிட்ட அனைத்து துணை ராணுவ வீரர்களின் பணிகளுக்கும், ராணுவ வீரர்களின் பணிகளுக்கும் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. 

எதிரிகளோடு இவர்கள்தான் கூடுதல் நேரம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்றாடம் உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். யாராவது ஒரு துணை ராணுவ வீரரின் உடல் ஒவ்வொரு நாளும்சுமக்கப்படுகிறது. இவர்களை தேசத்திற்காக உயிர்நீத்த தியாகிகள் என்று நாம் சொல்கிறோம். அதே வேளை உயிரோடு இருக்கும், தேசத்தைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் துணை ராணுவத்தினரைப் பற்றிப் பேசுவதில்லையே..!! துணை ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் இல்லை. 

பாதுகாப்பான ஓய்வூதியத்தை எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கும், நீதிபதிகளுக்கும், அரசுஉயர் அதிகாரிகளுக்கும் தந்த அரசு, இந்த "தியாகிகள்" அதற்கு தகுதியானவர்கள் என்றுநினைத்துப் பார்க்கவில்லை. 20, 25 ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தோடு வாழலாம் என்று நினைத்தால், அரசு வேலையில் இட ஒதுக்கீடு கிடையாது.

மற்றவர்களோடு போட்டி போட்டுக் கொள்ள வேண்டியதுதான். பல முறை பாடத்திட்டங்களே மாறியிருக்கும். இதில் தங்களை விட 20 வயது குறைந்தவர்களோடு போட்டி போடுவதா?பணியில் இருப்பவர்களின் நிலை படுமோசம். அண்மையில் ஒரு துணை ராணுவ வீரர் சமூக வலைத்தளத்தில் பொங்கி விட்டார். அவர் தற்போது பணியில் இல்லை. இதுதான் நிலைமை. 

ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கும் "தால்" பற்றி வீரர்கள் அடிக்கும் கிண்டல் குபீர் சிரிப்பை வரவழைக்கும். வேதனையையும் தரும். அடியிலிருந்து எடுத்தால் கூட்டு. கலக்கிஊற்றிக் கொண்டால் சாம்பார். மேலே எடுத்தால் ரசம். இதுதான் சாப்பாட்டு நிலைமை.இதைத்தான் அந்த வீரர் அம்பலப்படுத்தினார். வேலையே போய்விட்டது. 

இந்த நேரத்தில்தான் அரசைக் குறை சொல்லியும், பிற கட்சிகளைத் தாக்கியும் பல கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் பலர் இது அரசியல் பேசுவதற்கான நேரமில்லை என்கிறார்கள். துணை ராணுவ வீரர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டுமென்றால், அரசியல் பேசியாக வேண்டும். ஓய்வூதியப் பறிப்புக்கு அரசியல்தானே காரணமாக இருந்தது? அந்த அரசியல் பற்றிப் பேச வேண்டும். தேசப் பாதுகாப்பைத் தன் கடமையாகச் செய்யும் இவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பது அரசியல்தான். ஆகவே அரசியல் பேசியாக வேண்டும். 

யாருடைய தயவிலும் முன்னாள் துணை ராணுவ வீரரோ அல்லது அவரது குடும்பமோ வாழ வேண்டியதில்லை. கருணை அடிப்படையிலான உதவி வேண்டாம். அடிப்படை உரிமையான ஓய்வூதியத்தை வழங்குங்கள். அது ஒரு பாதுகாப்பான வருங்காலத்தை வீரர்களுக்குத் தரும். ஓய்வூதிய அரசியலைப் பேச வேண்டிய நேரமிது. இடஒதுக்கீடு அரசியலைப் பேச வேண்டிய நேரமிது. தேசத்தின் நிகழ்ச்சி நிரலில்இடம் பெற வேண்டிய ஒன்றாக இது மாற வேண்டும். 

பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லுங்கள் இந்த வீரர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்று. இன்று சொல்லாவிட்டால் எப்போது சொல்லப் போகிறோம்? இன்று கேட்காவிட்டால் அவர்களும் எப்போது கேட்கப் போகிறார்கள்?


கட்டுரையாளர்: விமானப் படை முன்னாள் வீரர்