Showing posts with label பங்குச்சந்தை. Show all posts
Showing posts with label பங்குச்சந்தை. Show all posts

Friday, February 3, 2023

பாலிசிதாரர்கள் பணம் பாதுகாப்பாய் . . .

 



 

ரீடிஃப்.காம் இணைய இதழிற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் அமானுல்லாகான் அளித்த பேட்டியின் தமிழாக்கம் கீழே.

 


கேள்வி : எல்.ஐ.சி தனது ஒட்டு மொத்த சொத்து மதிப்பில் 1 % க்கும் குறைவாகத்தான் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறுகிறது. இருப்பினும் இத்தொகை 35,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவே உள்ளது. இது மக்களுக்கு கவலை அளிக்காதா?

 

பதில் : இதற்கு இரண்டு பகுதிகளாக நான் பதிலளிக்கிறேன். அரசு கார்ப்பரேட் கூட்டுக் களவாணித்தனத்திற்கு மிகவும் கச்சிதமான உதாரணம் அதானி. ஒரு அமைப்பாக இதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. ஹிண்டர்பர்க் அறிக்கை பல அடிப்படையான, முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது என்பதையும் நாங்கள் ஏற்கிறோம்.

 

அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உண்மைகளை கண்டறிய வேண்டும் என்று எங்கள் அமைப்பு விரும்புகிறது. அது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.

 

எல்.ஐ.சி யில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு நம்பிக்கை அளிக்க நியாயமான விசாரணை அவசியம் தேவை.

 

பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் செபி எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை என்பதை கவலையோடு பார்க்கிறோம்.செபியும் கூட உண்மைகளை கண்டறிய வேண்டும்.

 

அதானியின் வளர்ச்சிக்காக கடைபிடிக்க வழிமுறைகளை நாங்கள் எதிர்க்கிறோம்.

 

அரசியல்வாதிகளின் ஆதரவோடு ஒரு தனி நபர் வளர முடியும் என்பதற்கு அதானி ஒரு தெளிவான  உதாரணம்.

 

எல்.ஐ.சி மீது அதானி தாக்கம் இரண்டாவது அம்சம்

 

ஹிண்டன்பர்க் அறிக்கை மீது தங்களுக்கு சில கவலைகள் உள்ளதென்பதை எல்.ஐ.சி தெளிவாகக் கூறிவிட்டது.

 

மிகப் பெரும் முதலீட்டாளர் என்ற முறையில் ஹிண்டர்பர்கிடமும் சில கண்டறிதல் மேலாக அதானியிடமும் கேள்வி கேட்கும் உரிமை எல்.ஐ.சி க்கு உள்ளது.

 

எல்.ஐ.சி யின் இந்த நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம்.

 

எல்.ஐ.சி யின் முதலீட்டுக் கொள்கைப்படி பாதுகாப்பான முதலீடுகளான அரசுப் பத்திரங்கள், அரசின் கடன் பத்திரங்கள் ஆகியவற்றொ 80 % முதலீடு செய்யப்படும் 

 

மீதமுள்ள 20 % பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும். நீண்ட கால சேமிப்புக்களில்தான் எல்.ஐ.சி முதலீடு செய்யும்.

 

பாலிசிதாரர்களுக்கு நீண்ட கால சேமிப்பின் வழியாக பயன் கிட்டக்கூட்டிய விதத்தில்தான் எல்.ஐ.சி யின் முதலீடு அமைந்திருக்கும். எல்.ஐ.சி யிடம் ஒரு முதலீட்டுக்குழு உள்ளது. தீவிரமான பரிசீலனைக்குப் பிறகே முடிவுகள் எடுக்கப்படும்.

 

அதானி குழுமத்தில் செய்யப்பட்ட முதலீடு தொடர்பாக அனைவரும் சந்தை மதிப்பால் நிகழ்ந்திருக்கக் கூடிய (Notional Loss ) இழப்பைப் பற்றித்தான் பேசுகிறார்களே தவிர, நிஜமான இழப்பைப் பற்றி பேசுவதில்லை.

 

எல்.ஐ.சி அதானியின் பங்குகளை சந்தையில் விற்காததால் அதற்கு நிஜமான இழப்பு எதுவும் ஏற்படவில்லை.

 

முதலீட்டின் அளவு 35,000 கோடி என்பதால் அதானி பங்குகள் வாயிலாக சந்தை மதிப்பில் எல்.ஐ.சி லாபமும் ஈட்டியுள்ளது.  இப்போது கூட அதன் மதிப்பு 56,000 கோடி ரூபாய். எல்.ஐ.சி க்கு லாபமும் கிடையாது, நஷ்டமும் கிடையாது. அவை எல்லாம் வெறும் சந்தை மதிப்புதான்.

 

எல்.ஐ.சி லாபமடைந்ததா, நஷ்டமடைந்ததா என்ற கேள்வியே எல்.ஐ.சி சந்தையில் பங்குகளை விற்கும் போதுதான் வரும். தற்போதைக்கு எல்லாம் காகிதக் கணக்குகள்தான்.

 

கேள்வி: நாம் முன்பு விவாதித்த போது எல்.ஐ.சி பங்குகளை விற்கும் அரைன் முடிவு, எல்.ஐ.சி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பாதித்தது என்றீர்கள்.  இச்சூழலும் மக்களுக்கு எல்.ஐ.சி மீதுள்ள நம்பிக்கையை பாதிக்கும் என்று கருதுகிறீர்களா?

 

பதில் :  இங்கே இரண்டு பிரச்சினைகள் உள்ளது.  முதலீடு செய்ய எல்.ஐ.சி யிடம் ஏராளமான உபரி உள்ளது. ஒவ்வொரு வருடமும் எல்.ஐ.சி நான்கரை லட்சம் கோடி ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை உபரி ஈட்டுகிறது. இதனை எங்கே முதலீடு செய்வீர்கள்? நீங்கள் பணத்தை வெறுமனே வைத்திருக்க முடியாது.

 

அதை நீங்கள் வெறுமனே வைத்திருந்தால் பாலிசிதாரர்களுக்கு லாபம் தர முடியாது. அதனால் முதலீடு செய்ய வேண்டும். பொறுப்போடும் சாதுர்யத்தோடும் முதலீடு செய்ய வேண்டும்.

 

கேள்வி : இவ்வளவு பெரிய தொகையை ஒரே நிறுவனத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானதா?

 

பதில் : ஒட்டு மொத்தமாக பங்குச்சந்தையில் செய்யப்பட்ட முதலீட்டில் பார்த்தீர்கள் என்றால் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டது  7 % அளவில்தான் இருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தில் இன்னும் கூடுதலாக, பொதுத்துறை வங்கிகளில் இதை விட அதிகமாகவே முதலீடு செய்யப் பட்டுள்ளது. 35,000 கோடி ரூபாய் என்பது பெரிதாக தெரிந்தாலும் எல்.ஐ.சி ஈட்டுகிற உபரியை ஒப்பிடுகையில் சிறிய தொகைதான்.

 

எல்.ஐ.சி யின் முதலீடு குறித்து இதற்கு முன்பும் பல முறை பொது வெளியில் விவாதத்திற்கு வந்துள்ளது.

 

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்குகளை எல்.ஐ.சி வாங்கும் போது அரசின் சுமையை குறைக்கவே எல்.ஐ.சி பணத்தை கொட்டுகிறது என்று விமர்சனம் எழுந்தது. ஆனால் ஓ.என்.ஜி.சி பங்குகள் வாயிலாக எல்.ஐ.சி நல்ல லாபத்தை சம்பாதித்தது.

 

ஐ.டி.பி.ஐ வங்கியின் பங்குகளை எல்.ஐ.சி வாங்கும் போதும் அது ஒரு நலிவடைந்த வங்கி என்பதால் கடுமையான விமர்சனங்கள் வந்தன. ஆனால் ஐ.டி.பி.ஐ வங்கி மூலமும் எல்.ஐ.சி லாபமீட்டியது.

 

எல்.ஐ.சி க்கும்  மற்ற முதலீட்டாளர்களுக்குமான பெரிய வேறுபாடு என்னவென்றால் எல்.ஐ.சி ஒரு நீண்ட கால முதலீட்டாளர். அதே நேரம்  வங்கிகளால் நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள முடியாது.

 

பாலிசிதாரர்களின் பணம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று நான் கூறுகிறேன். எங்களின் சால்வென்சி மார்ஜின் எவ்வளவு இருக்க வேண்டுமோ அதை விட அதிகமாகவே உள்ளது. எல்.ஐ.சி அளிக்க வேண்டிய தொகைகளை விட சொத்துக்கள் அதிகமாகவே உள்ளது. இங்கே நான் சந்தை மதிப்பை சொல்லவில்லை. ஆவணங்களில் சொல்லப்பட்ட மதிப்பின்படி  சொல்;கிறேன்.

 

அதனால் மக்கள் பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை. அவர்களின் பணம் பத்திரமாகவே உள்ளது.

 

கேள்வி : அதானி குழுமத்தில் முதலீடு செய்வதென்ற முடிவு பொருளாதார முடிவென்பதை விட  அது  அரசியல் முடிவுதானே?

 

பதில் : எல்.ஐ.சி யும் முதலாளித்துவத்தை வளர்க்க பயன்படும் ஒரு நிறுவனம்தான். ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனம் வேறு.  அதனால் அதனை  தங்களின்  ஆதாயங்களுக்காக பயன்படுத்தும்.

 

ஆனால் ஒரு தொழிற்சங்கமாக, பொது அமைப்பாக, எல்.ஐ.சி க்கு கிடைக்கிற லாபமெல்லாம் அது சமூகத்தில் உள்ள பெரும்பாலானருக்கு சென்றடைவதை உறுதி செய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. பாலிசிதாரர்களின் ப்ணத்திற்கும் முழுமையான பாதுகாப்பு வேண்டும்.

 

கேள்வி : அதானி குழும பங்கு வீழ்ச்சிக்கு பொருளாதாரம் ஆற்றிய எதிர்வினையை   பார்க்கையில் ஒரு குழுமத்தால் இந்தியப் பொருளாதாரத்தையே  பாதிக்க முடியும் என்பது ஏதோ ஒரு அபாய அறிவிப்பு போல அமைந்துள்ளதல்லவா?

 

பதில் : ஆம், அபாயகரமான  தருணம்தான்.  ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களால். இந்தியப் பொருளாதாரத்தின் கேந்திரமான கட்டமைப்பு திட்டங்களான துறைமுகம், விமான நிலையம் ஆகியவை ஒரு தனி நபரால் வாங்கப்படுவதென்பது தவறானது.

 

ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை என்பதே இல்லை. இக்கேள்வியைத்தான் அடிப்படையாக எழுப்பிட வேண்டும். இல்லேள்வியை எழுப்பிடுமாறு   எல்.ஐ.சி  நிர்வாகத்திடமும்  கூறியுள்ளோம். எல்.ஐ.சி மட்டுமல்ல அனைவரும் கவலைப்பட வேண்டிய விஷயம் இது.

 

பொருளாதாரத்தின் ஏகபோகத்தன்மை உருவாகி வருவது பற்றி ஒவ்வொரு இந்தியரும் கவலைப்பட வேண்டும். ஏனென்றால் இப்படிப்பட்ட பொருளாதார மாதிரியால்தான் நாட்டில் மிகப் பெரிய அசமத்துவம் ஏற்பட்டு வருகிற்து.

 

தமிழாக்கம் & வெளியீடு

 

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,

வேலூர் கோட்டம்

 

Wednesday, January 25, 2023

துயரத்தில் லாபம் பார்க்கும் Sadistகள்

 


கூகிள் நிறுவனப் பங்குகளின் விலை அமோகமாக உயர்ந்துள்ளது. வெறித்தனமாக முதலீடு செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

அப்படி வெறித்தனமாக முதலீடு செய்யக்கூடிய விதத்தில் கூகிள் அப்படி என்ன புதிதாக சாதித்துள்ளது?

12000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

அந்த முடிவை முதலீட்டாளர்கள் வரவேற்கின்றனர்.

லாபத்தை அதிகரிக்க ஊழியர்களை குறை, முடியவில்லையென்றால் அவர்கள் ஊதியத்தை குறை என்பது ஒரு உலகமயக் கோட்பாடு.

அது இங்கே அமலாகியுள்ளதால் முதலீட்டாளர்களுக்கு குஷி. 

லாபம், லாபம், அதிக லாபம் - இதுவே தாரக மந்திரம்.

அடுத்தவர் துயரத்தில் பணி இழந்தவர்களின் சோகத்தில் குதூகலிக்கும் இவர்களை Sadist என்றழைப்பது பொருத்தமானதுதான். 


பிகு: காலையில் எழுதி வைத்திருந்த பதிவு இது. அதானி வகையறாக்கள் நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சி அடையும் என்பது அப்போது தெரியாது. அதானி செய்த மோசடிகள் அம்பலமானதால் ஏற்பட்ட சரிவாக தோன்றுகிறது. அதற்காக அவர் கவலைப்பட மாட்டார். அதானிக்கு உதவிக்கரம் நீட்டத்தான் அவரது தரகர் மோடி இருக்கிறாரே!

Friday, February 18, 2022

அயோக்கிய அனாமதேயங்களுக்கு அல்ல . . .

 எல்.ஐ.சி பங்குகள் பொது மக்களுக்குத்தானே விற்கப் படுகிறது. அது எப்படி தனியார்மயமாகும் என்று சிலர் கேட்கின்றனர். கீழே நான் பகிர்ந்து கொண்டுள்ள பதிவு, அவர்களுக்கான விளக்கம். பங்கு விற்பனை என்பது தனியார் மயத்தின் முதல் படி என்பதையும் அது ஏன் தேவையில்லாத ஆணி என்பதையும் விளக்குகிற பதிவுகள் இவ்வலைப்பக்கத்தில் நூற்றுக் கணக்கில் உள்ளதையும் படிக்கவும்.

கடந்த சில பதிவுகளில் பின்னூட்டமிட்ட அயோக்கிய அனாமதேயத்திற்கான பதிவு அல்ல இது. ஏனென்றால் அந்த மொழியைக் கொண்டு அது ஒரு கருங்காலி அயோக்கிய அனாமதேயம் என்பது நன்றாகவே தெரிகிறது. அது தன் வன்மத்தை இங்கே வாந்தியெடுத்தால் அசிங்கமாக திட்டப்படும் என்பதை மற்றவர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.



*நாளொரு கேள்வி: 17.02.2022*

தொடர் எண்: *626*

இன்று நம்மோடு கோவைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் *துளசிதரன்*
########################

*மாயமான் போன்ற அரசின் வாதம்*

*கேள்வி:* பொதுமக்களிடம் தானே பங்குகள் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்குதானே லாபம் செல்கிறது. இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது?

*துளசி தரன்*

நாளை பங்குகள் சந்தைக்கு வரும் போது பாருங்கள். எந்த பொது மக்களுக்கு விற்க போகிறார்கள் என்று. எல்.ஐ.சி பங்குகளை வாங்க டி மேட் வங்கிக்கணக்கு வேண்டும். இந்தியாவில் 7 கோடி பேர்தான் வைத்திருக்கிறார்கள். அதில் 4 கோடி பேர்தான் முனைப்போடு இருப்பவர்கள். *ஏதோ ரோட்டுல சைக்கிளில், ஆட்டோவில் செல்பவர்களுக்கு எல்லாம் பங்கு கிடைக்கப் போவது போல பேசுகிறார்கள்.* இவர்களுக்கு காய்கறி சந்தை தெரியும், ஆட்டுச் சந்தை தெரியும்... பங்குச் சந்தை தெரியுமா? 

உயர் நடுத்தர வர்க்கத்தில் ஒரு பகுதிக்கு கிடைக்கலாம். *அவர்கள் கைகளிலும் பங்குகள் தங்காது.* நிறுவன முதலீட்டாளர்கள் கைகளில் போய் விடும். இதுதான் ஏற்கெனவே பங்கு விற்பனை ஆன அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஜி.ஐ.சி அனுபவம். அங்கே எல்லாம் சில்லறை முதலீட்டாளர் கைகளில் ஒன்றரை சதவீத பங்குகள் கூட இப்போது இல்லை. 

ஆகவே இது மாயமான். *சீதையை ஏமாற்றி கடத்தியது போல* இன்று பொதுத் துறை நிறுவனங்களை கடத்தப் பார்க்கிறார்கள். 

*செவ்வானம்*


Wednesday, January 19, 2022

கடவுளின் விரலை களவாடலாமா மேடம்?

 



 

*நாளொரு கேள்வி: 19.01.2022*

 

தொடர் எண் : *598*

 

*ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமய நாள்*

 

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *. சுவாமிநாதன்* ( நன்றி: அருஞ்சொல்

##########################

 

*"கடவுளின் விரல்" - எல்..சி*

 


கேள்வி: இன்று ஜனவரி 19 ஆயுள் இன்சூரன்ஸ் தேசிய மய நாள். 66 ஆண்டுகள் ஆகி விட்டன. எல்..சியின் பங்கு விற்பனை பேசப்படும் நேரம். இரு வேறுபட்ட பொருளாதார முடிவுகள் பற்றி என்ன கருதிகிறீர்கள்!

 

*.சுவாமிநாதன்*

 

1990 ல் இருந்து இந்தியா பொதுத் துறை பங்கு விற்பனை பலவற்றை சந்தித்து வந்திருக்கிறது. பல அரசு நிறுவனங்களின் பங்குகள் அரசால் விற்கப்பட்டுள்ளன. பங்கு விற்பனை, தனியார்மயம், கேந்திர விற்பனை என பல பெயர்களில்... இப்போது ஒரு புதிய பெயரில் பணமாக்கல் என்று... ஆனால் இவ்வளவு காலம் இந்த அரசின் கொள்கை முடிவுகளுக்கு சொல்லப்பட்ட காரணங்கள் எதுவும் பொருந்தாத ஒரு வித்தியாசமான பங்கு விற்பனையை தேசம் எதிர் கொண்டுள்ளது. அதுதான் எல்..சி பங்கு விற்பனை

 

வித்தியாசமான வசனங்கள் கேட்பதுதான் முக்கியமானது.

 

இவ்வளவு நாள் ஒரு அரசு நிறுவனத்தின் பங்குகள் அரசால் விற்கப்பட வேண்டுமென்றால் அந்த நிறுவனத்தின் பலவீனங்கள் பட்டியல் இடப்படும். அதன் மீது கடுமையான விமர்சனங்கள் அடுக்கப்படும். மக்களின் வரிப் பணத்தை குழியிலா போட முடியும் என்ற வசனங்கள் எழுதப்படும். ஆனால் *முதன் முறையாக ஒரு நிறுவனத்தின் பலம் பேசப்படுகிறது. அதன் பெருமைகள் முன் வைக்கப்படுகின்றன.*

 

காரணம் பங்கு விற்பனைக்காக அரசின் அம்பறாத் துணியில் இருந்த எல்லா அம்புகளும் எல்..சி விசயத்தில் முனை மழுங்கி கீழே விழுந்து விட்டன. இன்னொரு காரணமும் உண்டு. இந்த ஆண்டு பட்ஜெட்டை போடுவதற்கு ரூ 1 லட்சம் கோடியாவது எல்..சி பங்கு விற்பனை மூலமாக வந்தாக வேண்டிய "கட்டாயம்" அரசுக்கு உள்ளது. கட்டாயத்திற்கு காரணம் வேறு மாற்று வழிகள் பற்றி சிந்திக்கிற அரசியல் உறுதி இல்லை என்பது தனிக் கதை.

 

இதனால் வணிக இதழ்கள் எல்..சியின் அழகை, வலிமையை, வளர்ச்சியை வர்ணித்து எழுதிக் கொண்டே இருக்கின்றன

 

_எல்..சி யின் சொத்து மதிப்பான ரூ 38 லட்சம் கோடிகள் என்பது பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மொசாம்பிக் போன்ற நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புகளைக் காட்டிலும் அதிகம் என்றும், இந்தியாவின் எல்லா பரஸ்பர நிதி நிறுவனங்களின் வணிகத்தை விட 1.1 மடங்கு எல்..சி யின் சொத்து மதிப்பு என்றும், சீனாவின் மிகப் பெரிய சொத்து உருவாக்க  "எவர் கிராண்ட்" நிறுவனத்தின் மொத்த கடனை விட அதிகம் என்றும் புகழ்ந்து தள்ளுகின்றன._

 

உலகின் மிகப் பெரிய பன்னாட்டு ஆலோசனை நிறுவனங்கள் எல்லாம் பங்கு விற்பனை ஏற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எல்..சியின் உள்ளார்ந்த மதிப்பை அளவிடுவதற்கான மென் பொருள் இந்தியாவில் கிடைக்கவில்லை என்று வெளி நாடுகளில் "அலைந்து" பெறப்பட்டுள்ளது. எலியைப் பிடிக்க பொறி போதும். யானையைப் பிடிக்க எவ்வளவு ஏற்பாடுகள் தேவை

 

இவ்வளவு சிறந்த செயல்பாடு கொண்ட நிறுவனத்தை ஏன் பங்கு விற்பனைக்கு ஆளாக்க வேண்டும் என்று கேட்டால் அரசிடம் பதில் இல்லை. காரணம் எல்..சியின் பிரம்மாண்ட வளர்ச்சி, மக்கள் மத்தியில் அது ஈட்டியுள்ள பெரும் நம்பிக்கை, தேச நிர்மாணத்திற்கு அதன் பங்களிப்பு ஆகியனவே.

 

ஜனவரி 19, 1956 - மிகச் சரியாக 66 ஆண்டுகளுக்கு முன்பாக 245 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டன. இன்று கூட 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தான் வணிக களத்தில் எல்..சி க்கு போட்டியாக உள்ளன. ஆனால் அன்றோ 245 நிறுவனங்கள் எனில், போட்டி வந்தால் ஒரு தொழில் சிறப்பாக செயல்படும் என்ற வாதம் முதலிலேயே அடிபட்டு போகிறது

 

 _எத்தனை நிறுவனங்கள் திவால் ஆகின, எத்தனை நிறுவனங்கள் கணக்குகளை உரிய முறையில் சமர்ப்பிக்கவில்லை என்பதெல்லாம் இந்திய நாடாளுமன்றத்தில் அன்றைய நிதியமைச்சர் சிந்தாமணி தேஷ்முக்கும், ஃபெரோஸ் காந்தியும் பகிர்ந்து ஆவணங்களில் இடம் பெற்றுள்ள திக்... திக்... கதைகள்._ 

 

இப் பின்புலத்தில் 1956 செப் 1 அன்று அரசின் ரூ 5 கோடி மூலதனத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் எல்..சி. ரூ  5 கோடி என்ற அந்த சிறு மூலதன தளத்தின் மீதுதான் 38 லட்சம் கோடி சொத்துக்கள் கொண்ட ஒரு நிறுவனம் உருவாகி இருப்பது உலக அதிசயம்தான். சத்தியம் என்றால் என்ன விலை என்று கேட்ட தொழிலை மீட்டு நம்பகத்தன்மைக்கு சாட்சியமாய் வளர்த்திருப்பது அதன் தனிப் பெரும் சாதனை. ஆகவேதான் வழக்கமான நட்டம், திறமையின்மை கதையாடல்கள் எல்லாம் எல்..சி பங்கு  விற்பனை விசயத்தில் எடுபடவில்லை

 

இரண்டாவது, தேசிய மயத்தின் இலக்குகளை அது எட்டி இருப்பது ஆகும். 40 கோடி பாலிசிகளை கைவசம் வைத்துள்ள ஒரு நிறுவனம் உலகத்தில் எல்..சி யைப் போல உலகத்தில் எதுவுமே இல்லை. எந்த தேசத்தில் இந்த சாதனை என்பது முக்கியமானது. 57 சதவீதம் முறை சார் ஊழியர்கள் ரூ 10000 க்கு கீழே, 59 சதவீதம் முறை சாரா அத்தக்கூலி தொழிலாளர்கள் ரூ 5000 க்கு கீழே சம்பளம் வாங்குகிற நாட்டில் இவ்வளவு பேரை எல்..சி தொட்டிருக்கிறது. இன்றும் கூட 23 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சேர்ந்து 26 சதவீதம் சந்தைப் பங்கை புதிய பாலிசி எண்ணிக்கையில் வைத்துள்ள நிலையில் எல்..சி 74 சதவீத சந்தைப் பங்கை தக்க வைத்துள்ளது. புது பிரீமிய தொகையிலும் கூட 66 சதவீத சந்தைப் பங்கை வைத்துள்ளது. இரண்டு அளவு கோல்களிலும் எல்..சி விஞ்சி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒன்று, எல்..சி எல்லாத் தட்டு நுகர்வோரின் தெரிவாக உள்ளது. இரண்டாவது, பாலிசி எண்ணிக்கையில் சந்தைப் பங்கு இன்னும் கூடுதலாக இருப்பது சாதாரண மக்களுக்கு காப்பீடு வழங்குகிற சமூகப் பொறுப்பையும் அது ஆற்றுகிறது என்பதே

 

தேச நிர்மாணம் என்பதில் எல். சி யின் பங்களிப்பு அளப்பரியது. அந்நிய முதலீடுகள் வரும், ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு விடியலைத் தரும் என்ற உலகமய வசனங்கள் எல்லாம் பொருளாதாரப் பொய்களாக மாறி விட்ட நிலையில் *உள் நாட்டு சேமிப்புகளே உறுதியான ஊற்று* என்பதை எல்..சி நிரூபித்துள்ளது. மத்திய அரசின் பத்திரங்கள், மாநில அரசின் பத்திரங்கள், ரயில்வே, மின்சாரம் என அரசின் திட்டங்களில் பல லட்சம் கோடி முதலீடுகளை எல்.. சி செய்துள்ளது. ஆண்டு தோறும் 4 லட்சம் கோடி முதல் 5 லட்சம் கோடி வரை முதலீடுகளை திரட்டித் தருகிறது. இதுவரை அரசுக்கு, 5 கோடி மட்டுமே மூலதனம் போட்ட அரசுக்கு தந்துள்ள டிவிடெண்ட் 28000 கோடிகளுக்கும் மேல் என்றால் வேறு என்ன வேண்டும்

 

ஆகவேதான் அரசின் வழக்கமான அம்புகள் எல்லாம் முனை மழுங்கி கீழே விழுந்து கிடக்கின்றன. இதனால் புதிய அம்புகளை தொடுத்து பார்க்கிறது அரசாங்கம்

 

அரசின் பங்குகள் மக்கள் கைகளுக்கு செல்கின்றன என்கிறார்கள். யார் மக்கள்? பங்குச் சந்தையில் முதலீடு செய்கிற 4 கோடி பேரைத்தான் மக்கள் என்கிறார்கள். அந்த "கனவான்களும்" கூட அந்த பங்குகளை கையில் வைத்திருக்க முடியும் என்பதும், ஏற்கெனவே பங்கு விற்பனைக்கு ஆளான *நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், பொது இன்சூரன்ஸ் கழகத்தின்* பங்குகள் எல்லாம் 2 சதவீதம் கூட சில்லறை முதலீட்டாளர்கள் கைகளில் இல்லை என்பதும் அனுபவங்கள்

 

செபி கண்காணிப்பு அதிகமாகும் என்று அம்பு. நிதித் துறையில் அண்மைக்காலம் நிகழ்ந்த வீழ்ச்சி நெருக்கடிகள் - *திவான் ஹவுசிங் முதல் எஸ் பாங்க் வரை* - செபியின் மூக்கிற்கு கீழே நடந்திருப்பதுதானே.

 

ஆகவே மத்திய அரசின் எந்த அம்பும் எல். . சி என்கிற பெருங் கோட்டை மீது எந்த சிராய்ப்பையும் பங்கு விற்பனைப் பிரச்சினையில் ஏற்படுத்த முடியவில்லை

 

இருந்தாலும் அரசு விடுவதாக இல்லை

 

*ஒரு பேராசைக்காரன் கதை ஒன்று உண்டு. தன் ஏழ்மை நீங்க கடும் தவம் இருந்தவன் முன் கடவுள் தோன்றி ஒரு கல்லைத் தொட்டு தங்கம் ஆக்கி தருவார். அவன் திருப்தி அடைய மாட்டான். ஒரு பாறையை தங்கம் ஆக்குவார். அப்போதும் அவன் நிறைவு அடைய மாட்டான். மலை ஒன்றை தங்கம் ஆக்கித் தருவார். அப்போதும் அவன் ஆசை அடங்காது. கடவுள் கேட்பார் "உனக்கு என்னதான் வேண்டும்" என்று... அதற்கு அவன் சொல்வான் " கடவுளே... உங்கள் விரல்தான் வேண்டும்" என்று.*

 

அதுதான் நடக்கிறது. கடவுளின் விரல் போல இருக்கிற எல்..சி யை தனியார்கள் கேட்கிறார்கள். நவீன தாராள மயம் கேட்கிறதுபங்கு விற்பனை ஒரு துவக்க அடி. இன்று 5 சதவீதம், 10 சதவீதம் என்றாலும் அவர்களின் இலக்கு தனியார்மயம்தான்.

 

*ஒன்று,* அதன் உடனடி நிதித் தேவை. அரசுக்கு கார்ப்பரேட் வரிகள், செல்வ வரி, வாரிசுரிமை வரி போன்ற மாற்று வருமான திரட்டல் வழிகளில் செல்ல உறுதி இல்லாததால். *இரண்டாவது,* இந்திய நிதித் துறையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமென்ற இந்தியப் பெரும் தொழிலகங்களின், பன்னாட்டு நிறுவனங்களின் நீண்ட கால தீராத ஆசை.

 

ஆனால் எல்..சியை மற்ற நிறுவனங்கள் மாதிரி அவ்வளவு எளிதாக தனியார் மயத்திற்கு இரையாக்க இயலவில்லை. காரணம் அதன் பிரம்மாண்ட வளர்ச்சியை தாங்குகிற வலிமை பங்குச் சந்தைக்கே இல்லை. பங்குச் சந்தை சரியும் போதெல்லாம் தாங்கிப் பிடித்து வந்திருப்பதே எல்..சி தானே. எல்லா முதலீட்டாளர்களும் ஓடும் போது உள்ளே வருவது எல்..சி தானே. ஆகவேதான் எல். சி க்கு *எதிர் நீச்சல் முதலீட்டாளர்* (Contrarian Investor) என்ற 'இன்னொரு பெயர்' உண்டு. இரண்டாவது மக்களின் கருத்து. தொழிற்சங்கங்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து சென்று எடுத்து வைத்துள்ள நியாயங்கள். இரண்டு முறை  நாடாளுமன்றத்தில் எல்..சி பங்கு விற்பனை ஈடேறாமல் தடுக்கப்பட்ட 25 ஆண்டு கால அரசியல் கருத்தொற்றுமை.

 

இது எல்..சியில் பணி புரியும் ஊழியர்கள், லட்சக் கணக்கான முகவர்கள் வாழ்க்கைப் பிரச்சினை என்பது அல்ல. தேசத்தின் வாழ்வு குறித்த பிரச்சினை

 

 _இந்திய நிதியமைச்சர் கோவிட் கால நிதி நெருக்கடியை "கடவுளின் செயல்" என்றார். அரசுக்கு எவ்வளவோ வழிகள் இருந்தும் அதை செய்யாமல் எல்..சி பங்கு விற்பனையை செயல்படுத்த முனைவது கடவுளின் செயலா? "கடவுளின் விரலையே" கேட்பது என்ன நியாயம்!_

 நன்றி - அருஞ்சொல் இணைய இதழ்