Showing posts with label காவிக் கூட்டம். Show all posts
Showing posts with label காவிக் கூட்டம். Show all posts

Thursday, February 3, 2022

காவி காக்கி களவுக் கூட்டு

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்த செய்தி கீழே உள்ளது.

சிலை கடத்தலுக்காக ராமநாதபுரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு ஏழு சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டு கைமாற உள்ள நிலையில் கைது நடந்துள்ளது.



கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் போலீஸ் என்பதும் ஒரு நபர் பாஜக நிர்வாகி என்பதும்தான் முக்கியமான செய்தியே.

காக்கிகளில் உள்ள களவாணிகளுக்கும் காவிகளுக்குமான கூட்டு என்பது இயல்பானதுதான்.

என்ன அந்த பாஜக நிர்வாகியின் பெயரையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாம். இல்லையென்றால் அந்த சிலை திருடனை ஆட்டுக்காரரும் ஐகோர்ட் ராஜாவும் பெரிய தியாகி ரேஞ்சிற்கு பில்டப் செய்து விடுவார்கள்.

கடைசியாக உங்களுக்கு ஒரு கேள்வி வருகிறதல்லவா?

இந்த பதிவின் முகப்புக்கு எதற்கு திரிசூலம் படத்தின் டைட்டில்?

நாளை வழக்கு விசாரணையெல்லாம் வருகிற போது அய்யா மேற்கோள் காட்ட திரைப்படம் வேண்டுமல்லவா! அதனால்தான் அவருக்கு ஒரு ஸ்மால் ஹெல்ப்

Monday, January 31, 2022

குடியரசு தினம் - காவிக்கலரு ஜிங்குசா

 


குடியரசு தின ஊர்வலமா இல்லை ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பா என்று யோசிக்கக் கூடிய விதத்தில் எங்கெங்கு காணினும் காவிக்கலர்தான்.

தூர்தர்ஷன் ஒளிபரப்பு யூட்யூபில் கிடைக்கிறது. அதிலிருந்து எடுத்த ஸ்க்ரீன் ஷாட்டுகளை கீழே அளித்துள்ளேன்.

முந்தையதொரு பதிவில் குஜராத் ஊர்தியில் ஆதிவாசிகள் போராட்டம் பற்றி இருந்தது. அது மோடி கண்டெடுத்த வரலாறு என்பதுதான் கொஞ்சம் உதைக்கிறது என்று சொல்லியிருந்தேன். அந்த ஆதிவாசிகள் கையில் காவிக்கொடி என்பதும் இன்னொரு காரணம். அது மட்டுமல்ல, எண்பதுகளில் பழங்குடி மக்களுக்ககு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்று மாதவ் சிங் சோலங்கி முதலமைச்சராக இருந்த போது பெரிய கலவரத்தை நடத்தியது பாஜக.

காஷ்மீரின் முகம் மாறி விட்டது என்று சொல்லும் ஊர்தியில் வந்தது வைஷ்ணவதேவி கோயில்.

சாமியார்கள் வருவது உபி, உத்தர்கண்ட் ஊர்திகளில் . . .

புதிய கல்விக் கொள்கை என்று சொல்லும் கல்வித்துறை ஊர்தியில் வேத கால முனிவர்கள். நடனமாடும் வாலிபர்களில் முதலில் இருப்பது காவிச் சட்டையும் பஞ்சகச்சமும் அணிந்த ஒரு மொட்டைத்தலை வாலிபன்தான்.

கர்னாடகா அனுமானை முன் வைத்தது.

காவிக்கலரிலிருந்து கோவா கூட தப்பவில்லை.

புத்தரின் ஆடை கூட மஞ்சள் நிறத்திலிருந்து காவியாக மாறுகிறது.













 

அனேகமாக அடுத்த வருடம் முப்படை வீரர்களுடைய சீருடையின் வண்ணத்தைக் கூட காவியாக மாற்றி விடும் வாய்ப்பு உள்ளது.

 

Saturday, October 20, 2018

பொய் சொல்ல கூசாதா காவிகளே?



காவிக்கயவர்கள் கூட்டத்தின் இரு முக்கியப் பிரமுகர்கள் கொஞ்சமும் வெட்கமோ கூச்சமோ இல்லாமல் அளந்து விட்ட பொய்கள் இங்கே.

முதலில் துக்ளக் எனும் பாடாவதி பத்திரிக்கையின் ஆசிரியரும் பினாமி முதலமைச்சர் என்ற நினைப்பில் இருப்பவருமான குருமூர்த்தியின் பதிவு இங்கே 



மேலே உள்ள படத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரியோடு இருப்பவர் சபரிமலைக்கு சென்ற பத்திரிக்கையாளர் அல்ல. குஜராத் படுகொலைகளை அம்பலப்படுத்தி இன்றும் மோடி மற்றும் அமித் ஷாவை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிற செயற்பாட்டாளர் டீஸ்டா சேதல்வாத். 

உங்க எதிரியைக் கூட அடையாளம் தெரியாம, நீங்க எல்லாம் என்ன பத்திரிக்கை நடத்தி கிழிக்கிறீங்க மிஸ்டர் குருமூர்த்தி?

அடுத்து  

சிப்பு சேகரால் ஊழல் பேர்வழி என்று அடையாளம் காட்டப்பட்டுள்ள  தொலைக்காட்சி ரௌடி கேடி.ராகவனின் பதிவு கீழே உள்ளது.



இப்படம் பற்றி பத்திரிக்கையாளர்  முரளிதரன் காசி விஸ்வநாதன் சொல்வதை படியுங்கள்

தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.கவின் சார்பில் கலந்துகொள்பவரும் வர்த்தக, பொருளாதார, அரசியல் அறிஞருமான கே.டி. ராகவன் தன் முகநூலில் இந்தப் படத்தைப் பகிர்ந்திருக்கிறார். அதாவது அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் ஆயுத புஜை கொண்டாடினாராம்... அதற்கு ஆதாரமாகப் படம் கிடைத்துவிட்டதாம்..

இந்தப் படம், 2015ஆம் ஆண்டில் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்ட படம். பயணத்தின்போது நாகப்பட்டினம் சென்றபோது, சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபோது இந்தப் படம் எடுக்கப்பட்டது.

இந்த விவரமெல்லாம்கூட தெரிய வேண்டாம்.. படத்தில் ஒரு மலர்வளையம் வைக்கப்பட்டிருக்கிறதே.. அதுகூடவா தெரியவில்லை.. இதை இத்தனை பேர் படம் எடுத்திருக்கிறார்களே.. ஏன் எந்தத் தொலைக்காட்சியிலும் நாளிதழிலும் இந்தப் படம் வரவில்லை என்றாவது யோசித்திருக்க வேண்டாமா?

ஆனால், இதையும் பல சங்கிகள் பகிர்ந்து, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது என்று மகிழ்ந்திருக்கிறார்கள். இப்படி ஆட்கள் இருக்கும்போது கே.டி. ராகவன் ஏன் யோசிக்கப்போகிறார்?

மோடியில் தொடங்கி கடைசி காவி வரை யாருமே பொய் சொல்ல கூச்சப்படுவதில்லை.

இவர்களை நம்புவதற்கு முட்டாள் கூட்டம் இருக்கும் வரை பொய்களை அள்ளி விட்டுக்கொண்டே இருப்பார்கள்தான் . . .

Monday, May 21, 2018

காவிகள் களவாடும் ஆயுதங்கள் . . .


மரபு ஆயுதங்களைக் களவாடும் காவிக்கும்பல்
சு.வெங்கடேசன்




தமிழகத்தில் திட்டமிட்டு பண்பாட்டு குழப்பத்தை காவிக்கும்பல் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இந்திய வரலாற்றைப் புதிதாக எழுதப் போகிறோம் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, ஹரப்பா, மொகஞ்சதாரோ நகர நாகரீகத்தை மிஞ்சிய நாகரீகத்திற்கான தடயங்கள் கீழடியில்100ஏக்கர் பரப்பில் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள அனைத்து கலைப் பொருட்களும் கலை நுணுக்கத்தோடு நுட்பத்தோடு உள்ளன. இன்றைய பொதுப்பணித்துறை கட்டுகிற கட்டிடத்தில் ஒரு கலை நுணுக்கம் கூட இல்லாமல் சவப்பெட்டிபோல் உள்ளது. இதுதான் நவீனகால கலைமரபு. கீழடியில் கிடைத்தவற்றில் தந்தத்தில் சீப்பு, தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள் வரை உள்ளன. அங்கு மதம், சாதி சார்ந்த ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை. சாதி, சமயம், புராணங்கள் வருவதற்கு முன்பே அறிவால் மேம்பட்டு உயர்ந்த இடத்தில் இருந்தது தமிழ்ச்சமூகம். அந்த மரபுதான் காவிகளுக்குப் பிரச்சனையாக உள்ளது. 

உன்னுடைய வேதத்தில் நீ செய்கிற யாகத்தால் கடவுள் வந்து ஆசி கொடுப்பார் என்கிறாயே, நான்யாகம் செய்தால் என்னை விட்டுவிட்டு ஓடிய என்காதலன் எங்கே இருக்கிறான் என்று உன் கடவுள் கண்டுபிடித்து தருவாரா? என்று சங்க இலக்கிய பாடல் கேள்வி கேட்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்று கூறுகள் காவிகளுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தையும் கைவிட முடிவெடுத்திருக்கிறார்கள். வரலாற்றுச் சின்னங்களைச் சுற்றியுள்ள 2 கி.மீ தூரம் எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்பது விதி. அதை நீக்கி இருக்கிறார்கள். செங்கோட்டையையே டால்மியா கம்பெனியிடம் வாடகைக்கு விட்டுவிட்டார்கள். வரலாற்றின் மீது ஏன் இவர்களுக்கு இவ்வளவு பகை என்றால், வரலாறு இவர்களுக்கு எதிரானது. வரலாறு மக்களின் பன்முகத் தன்மையைப் பறைசாற்றுவது. அது மொழி, பண்பாட்டின் கூறுகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உள்ளது. 

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்களிப்பு செய்துள்ளனர். நவீன வளர்ச்சியில் அச்சு எந்திரங்கள் வரும் போது தமிழ்மொழி அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ள முதன்முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தை யோசித்தவர் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த வீரமாமுனிவர். புள்ளி வைக்கிற எழுத்து வேண்டாம் என்று மாற்று எழுத்துக்களை உருவாக்கியவர் அவர். அதன்பிறகு 10க்கும் மேற்பட்ட எழுத்துக்களைக் குறைத்து மிகப்பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர் பெரியார். கிறிஸ்தவனும், மத நம்பிக்கையற்றவனும், வைஷ்ணவனும், சைவனும் என எல்லோரும் சேர்ந்து உருவாக்கி கட்டிக்காத்த மரபுதான் அனைத்து சமயத்தவனுக்காகவும் உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.



எனவேதான் கங்கைக் கரையில் இருந்த தெளிவான சாதியப் பாகுபாடு தமிழகத்தில் இல்லை.அண்மையில் சிவகங்கையில் ஒரு கோவிலில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டில் ஒருவர் கொடுத்த சொத்துப்பட்டியல் உள்ளது. கோவிலுக்கு சொத்து இருந்தால்தான் பூசை நடக்கும். கடவுளை விட உயர்ந்தது சொத்து, பொருள்தான். எனவேதான் காரல் மார்க்ஸ் பொருள் என்பது ஒரு சமூக உறவு என்றார். 

உலகில் தோன்றிய மகான்களின் வாக்கியங்களில் மிக உயர்ந்த மகாவாக்கியங்களை லண்டனில் ஒரு தத்துவக்குழு தொகுத்துள்ளது. அந்த 10 மகாவாக்கியங்களில் 4 வாக்கியங்களை எழுதியவர் மாமேதை காரல் மார்க்ஸ். பணம் என்பது பொருள் அல்ல சமூக உறவு என்றார். சொத்து இருந்தால்தான் கோவில், சாமி இருக்கும். எனவேசொத்தை எழுதி வைத்தார்கள். 

பழைய பத்திரங்களில் கீறல் என்ற சொல் இருக்கும். அது என்ன கீறல்?கல்வெட்டில் பொறிக்கப்பட்ட சொத்துக்களை கொடுத்தவருக்கு கல்வெட்டு எழுத்துப்பயிற்சி கிடையாது. எனவே, பயிற்சி பெற்றவர் எழுதி முடித்தபிறகு சொத்துக்கொடுத்தவர் சுத்தியல் உளியை வைத்து ஒரு கீறல் போடுவார். அதன் பிறகு அதற்குக் கீழ் இவர் இன்னார் என்று பயிற்சி பெற்றவர் முறையாக எழுதுவார். இதுதான் கீறல். கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் கல்வெட்டில், நிலத்தைக் கொடுத்தவர் சமூகக் கட்டமைப்பில் உயர்ந்த சாதி என்று சொல்லப்படும் வெள்ளாளர் பிரிவை சார்ந்தவர். இந்தக் கல்வெட்டை எழுதியவர் குரும்பன் என்ற தலித் சமூகத்தைச் சார்ந்தவர். ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துகொண்ட உயர்சாதிக்காரருக்கு எழுதத் தெரியவில்லை. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எழுதத் தெரிந்திருக்கிறது. இரண்டாவது, அந்தக் கல்வெட்டு இருப்பது கருவறை. உயர்சாதிக்காரர் சென்ற இடத்திற்கெல்லாம் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சென்றுள்ளனர். 

14ம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு இவர்கள் சொல்லுகிற அனைத்துக் கற்பிதங்களையும் நொறுக்கிறது. சாதி நெருக்கடிக்கு உள்ளாகாமல் 14ம் நூற்றாண்டு வரை தமிழ்ச்சமூகம் போராடி வந்திருக்கிறது.இந்த மண்ணின் சுய சிந்தனை கொண்ட அறிவு மரபு அனைத்து வகையிலும் காவிகளுக்கு இடையூறாக இருக்கிறது. பிளாட்டோ போன்றோர் மனிதனை எப்படி மேலாண்மை செய்வது என்றுதான் சிந்தித்தார்கள். எனவே கடவுளை உருவாக்கி, கடவுளின் பெயரால் பயமுறுத்தி கற்பிதங்களையும் உருவாக்கினார். 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு நேர் எதிரான மரபைக் கொண்டது தமிழ்ச்சமூகம் என்பதற்கு ஓராயிரம் சான்றுகள் உள்ளன. எனவே, மரபுகளை வீழ்த்துவது, பண்பாட்டுக் கூறுகளை சிதைப்பது, வரலாற்றை மாற்றுவது என்று வெறித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.




தமிழ்ச்சமூகம் இதற்கெதிராக விழிப்புணர்வோடு போராட வேண்டும். குறிப்பாக, அரசியல் தளத்தில் போராட பல இயக்கங்கள் இருக்கின்றன. பண்பாட்டுத்தளம் நுட்பமானது. கூர்மையானது. நமது ஆயுதங்களைஎதிரிகள் களவாட நாள்தோறும் முயற்சிக்கிறார்கள். காவிகள் அதைக் களவாண்டு பயன்படுத்தினாலும், அதன் மரபணுக்கள் உனக்கு எதிராகவே திரும்பும் என்பதுதான் கடந்த 3 ஆண்டுகால அனுபவம். எனவே, இந்த மண்ணின் மகத்தான மரபை உயர்த்திப் பிடிப்போம். சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகம் என்பது இன்றைய முழக்கம் அல்ல, பண்டைய வரலாறு. அதைத் தொடர்வோம்.”




(தமுஎகச தென்சென்னை மாவட்ட மாநாட்டில் நிகழ்த்திய உரை)தொகுப்பு செ.கவாஸ்கர்

நன்றி - தீக்கதிர் 21.05.2018

Tuesday, September 13, 2016

ஓணத்திலும் காவி(லி) அரசியல். திருந்தவே மாட்டானுங்க

 கீழேயுள்ள செய்திக்கு நான் தனியாக எதுவும் எழுத வேண்டிய அவசியம் இல்லை.




திருவனந்தபுரம், செப்.13- கேரளத்தின் ஓணம் பண்டிகை தொடர்பான வரலாற்றில் இந்துத்துவ மதவெறி அரசியலைப் புகுத்தி மக்களைப் பிளவுபடுத்தத் திட்டமிடும் ஆர்எஸ்எஸ் கும்பலின் வக்கிர புத்தியை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா கண்டனம் தெரிவித்துள்ளார். 

கேரளத்தில் அனைத்து சமயமக்களும் இணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், ஆர்எஸ்எஸ் மதவாதக் கும்பல் தனது வழக்கமான விஷம வேலையைத் தொடங்கியுள்ளது. ஆர்எஸ்எஸ்ஸின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசரி இதழில், வாமண அவதாரம் எடுத்ததைத் தான் ஓணம் பண்டிகையாக கொண்டாட வேண்டுமே தவிர, அசுர மன்னன் மாவேலி, நாட்டு மக்களைச் சந்திப்பதை அல்ல என்று மக்களுக்கு மதவாத போதனை அளித்துள்ளது. உண்மையில் ஓணம் கொண்டாடப்படுவதன் பின்னணியில் சாதி மத வேறு பாடுகளைக் களைந்து மனிதர்கள் அனைவரும் மனதால் ஒன்றுபடுவது வழக்கமாக உள்ளது. இப்படி மக்கள் ஒன்றுபடுவதுதான் ஆர்எஸ்எஸ் கும்பலின் கண்களுக்கு உறுத்தலாக உள்ளது. மேலும் ஓணம் குறித்த ஐதீக வரலாற்றிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் செய்தி உள்ளதும் இக்கும்பலுக்கு பெரும் தலைவலியைத் தருவதாக உள்ளது. 

ஓணம் குறித்த வரலாற்றுப் பின்னணி குறித்து தேசாபிமானி யின் ரெசிடென்சியல் எடிட்டர் பிரபா வர்மா கூறியுள்ளதாவது;  சாதாரண நாட்களில் தெய் வங்களை வாழ்த்தி வழிபடும் மக்கள் இந்த ஒரு நாள் மட்டும் தெய்வத்தை மறந்து, அந்த தெய்வத்தினால் மிதிக்கப்பட்டு பாதாளத்திற்கு இறக்கப்பட்ட ஒரு அசுரச் சக்கரவர்த்தியை ஆராதிக்கிறார்கள். தெய்வத்திற்கு பதிலாக அசுரச் சக்கரவர்த்தியை ஆராதிக்கும் நாள் உலகில் எங்கும் கொண்டாடப்படுவதில்லை. சமூகத்திலிருந்து தள்ளி நிறுத்தப்படும் மக்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் தரும் செய்தி இதில் அடங்கி உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிக்கு முக்கியத்துவம் அளிப்பதை இந்துத்துவா கும்பலால் பொறுத்துக்கொள்ள முடியுமா என்ன ? இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மாவேலி மன்னர், தெய்வத்தின் வரம் பெற்று மக்களைச் சந்திப்பது என்பது இந்த கும்பலுக்கு சகித்து கொள்ள முடியாததாக உள்ளது என்பதால் அந்த ஒடுக்கப்பட்ட வரலாற்றை மாற்றி பழைய உயர் வகுப்பினரின் வரலாற்றை கொண்டுவர முயற்சிக்கின்றனர் என்று அமைச்சர் கே.கே. ஷைலஜா கூறியுள்ளார். “மாவேலி மன்னரின் ஆட்சியின் கீழ் மக்கள் சமத்துவத்தையும் அனுபவித்தனர். அப்போது எந்தச்சுரண்டலும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள் நமது புராணங்களில் அசுர பூதங்களாகவே சித்தரிக்கப்பட்டனர். மாவேலி மன்னர் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக சித்தரிக்கப்படுகிறார். தற்போது ஆர்எஸ்எஸ்ஸின் நடவடிக்கை தலித் ஆட்சியாளரின் சாதனைகளை வரலாற்றிலிருந்து நீக்கி விட்டு உயர் வர்க்கத்தை தெய்வீகத் தன்மை உள்ளவர்களாக காட்ட முயற்சிப்பதுதான். இது அவர்களின் வழக்கமான உத்தியாகும்” என்றும் கே.கே. ஷைலஜா கூறியுள்ளார்.

Wednesday, February 25, 2015

மோடியின் வீர வசனம் குருமகா சன்னிதானத்திற்கு பொருந்தாதா?




தன்னலமற்ற சேவை புரிந்த, அனைவரிடத்திலும் அன்பை மட்டுமே வெளிப்படுத்திய, இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக திகழ்ந்த அன்னை தெரசா மீது காவிக்கூட்டத் தலைவன் மோகன் பகவத் நச்சைக் கக்கியுள்ளார். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. விஷத்தை உமிழ்வதுதான் நாகப் பாம்பின் இயல்பு. அதைத்தான் மோகன் பகவத் செய்துள்ளார்.

இதனால் அன்னை தெரசாவிற்கு எந்த இழிவுமில்லை. அவரின் காலடி நிழலில் நிற்கக் கூட தகுதியற்ற மோகன் பகவத்தின் இழி குணம் இன்னொரு முறை அம்பலப்பட்டுள்ளது. இந்த மனிதரின் உரையை முன்பு நேரடி ஒளிபரப்பு செய்த அரசுத் தொலைக்காட்சிக்கு இழிவு. இவர்தம் பாதம் பணிந்து ஆட்சி நடத்தும் மோடி அரசுக்கு இழிவு. இந்த மனிதர் வாழும் நாடாக இருப்பதால் இந்தியாவிற்கு இழிவு.

 மற்ற மதங்கள் மீது துவேஷத்தை பரப்பக் கூடாது
அனைத்து மதங்களும் சமம்

மாற்று மதத்தவர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்


எனது அரசு இதையெல்லாம் சகித்துக் கொள்ளாது
 
என்றெல்லாம் மோடி வீர வசனம் பேசி ஒரு வாரம் முடிவதற்குள் அவரது குரு மகா சன்னிதானம் மோகன் பகவத் இப்படி வெறுப்பை விதைப்பதன் நோக்கம் என்ன தெரியுமா?
 
நடிப்பிற்குக் கூட இப்படியெல்லாம் உளறக்கூடாது என்று மோடியின் தலையில் வைக்கப்பட்ட குட்டுதான் மோகன் பகவத்தின் உரை. நாங்கள் அப்படித்தான் பேசுவோம். விஷத்தைக் கக்குவோம். வெறுப்பை பரப்புவ்வோம், பகைமைத் தீயை விசிறி விடுவோம் என்று காவிக்கூட்டம் அளித்துள்ள பிரகடனம் அது. ஆகவே அண்ணன் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்பதுதான் யதார்த்தம்.
 
நாய் வால் என்றும் நிமிராது.