Showing posts with label தீவிரவாதம். Show all posts
Showing posts with label தீவிரவாதம். Show all posts

Thursday, April 24, 2025

மரண தண்டனை கேட்பதன் மர்மம் என்ன?

 




மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்த்தியவரும் பாஜக முன்னாள் எம்.பி யுமான போலிச்சாமியார் சாத்வி பிரஞ்யாசிங் தாகூருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை (NIA)  நீதிமன்றத்திடம் கேட்டுள்ளது.

NIA ஒன்றும் சுயேட்சையான அமைப்பு இல்லை. மோடியின் ஏவல்படைகளில் ஒன்றுதான். 2017 ல் NIA தான் அந்த சாமியார் மீதான குற்றச்சாட்டுக்களை எல்லாம் நீர்த்துப் போக வைத்து பிணை கிடைக்க வழி வகுத்தது.

அதன் பின்புதான் மோடி அவருக்கு லோக்சபா டிக்கெட் கொடுத்து எம்.பி ஆக்கி அழகு பார்த்தார். 

இதுதான் இந்த அரசின் உண்மையாக முகம்.

இப்படி இருக்கையில் இந்த சாமியாருக்கு மரண தண்டனை தர வேண்டும் என்று  NIA வே கேட்பது நிஜமாகவே மர்மமாகத்தான் இருக்கிறது. இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. ஏதோ பிரச்சினையை மடை மாற்ற இப்படி செய்துள்ளது. அதுவும் பஹல்காம் தாக்குதல் நடந்த அன்று இந்த முடிவு என்பதால் அந்த ஐயம் வருகிறது.

பார்ப்போம். மோடி அம்பலமாகாமலா போகப் போகிறார்!

Wednesday, April 23, 2025

காஷ்மீர் படுகொலை – கோட்டை விட்டார்களா வேடிக்கை பார்த்தார்களா?

 



 

காஷ்மீர் படுகொலை தொடர்பாக சில சந்தேகங்கள் இருப்பதாக நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

 

இப்படுகொலை என்பது மத்திய அரசினுடைய படு தோல்வி. 

 

பஹல்காம் பகுதி என்பது அதி பாதுகாப்பு பகுதி. இங்கே இது போன்றதொரு தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது என்பது உளவுத்துறைக்கு தெரியாதா? அப்படி உளவுத்துறைக்கும் தெரிந்தும் அவர்கள் மத்தியரசுக்கு சொல்லவில்லையா அல்லது கிடைத்த தகவலை மத்தியரசு அலட்சியப் படுத்தியதா?

 

HIGH SECURITY ZONE என்று வரையறை செய்யப்பட்ட பகுதியில் ஏன் ஒரு ராணுவ வீரன் கூட இல்லை?  சங்கி சுமந்து கூட நான் அக்டோபர் மாதத்தில் அங்கே போன போது ஏராளமான ராணுவ வீரர்கள் இருந்தார்கள் என்று சொல்லியுள்ளார். அக்டோபரை விட இப்போதுதான் சுற்றுலா சீஸன். இப்போது இன்னும் அதிகமான பாதுகாப்பு  இருந்திருக்க வேண்டும். ஆனால் இல்லை. இது தற்செயலானதா? திட்டமிட்டதா?

 

புல்வாமாவில் தாக்குதலுக்கு வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்தும்  தேர்தல் ஆதாயத்திற்காக அத்தகவலை அலட்சியம் செய்து 56 ரிசர்வ் போலீஸ் படையினரை சாக விட்டதுதான் மோடியின் பாரம்பரியம். பீகார் மாநிலத் தேர்தல் நெருங்கி வரும் நேரமென்பதால் தாக்குதல் நடக்கட்டும் என்று வேடிக்கை பார்த்ததா இந்த அரசு?

 

அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியாவில் இருக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது ஒரு புறம் இருக்க,  எஜமான் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி இந்தியாவில் இருக்கையில் மோடி சவுதி அரேபியா சென்றது ஏன்?  ஒரு வருடமாகியும் மணிப்பூர் செல்ல தயாராக இல்லாத போது சவுதியிலிருந்து பாதியில் வந்து காஷ்மீர் விரைந்த்தன் நோக்கம் என்ன?

 

ஏப்ரல் 19 அன்று காஷ்மீர் செல்ல வேண்டிய மோடி அந்த பயணத்தை ரத்து செய்தது ஏன்?

 

75 வயதானதும் பிரதமர் நாற்காலியை காலி செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ், மோடியிடம் சொன்ன நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது, 56 இஞ்சரால்தான் தேசத்தை காப்பாற்ற முடியும் என்ற சூழலை உருவாக்கி நாற்காலியில் ஒட்டிக் கொள்ளும் ஏற்பாடா? அல்லது இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்பது என்ற பெயரில் மோடியை கழட்டி விடும் முயற்சியா?

 

சம்பவம் செய்தது தீவிரவாதிகள்தான். ஆனால் அதன் பலனை அறுவடை செய்யப் போவது பாஜக தான். ஆட்சிக்காக எந்த அளவிற்கும் கீழிறங்கக் கூடியவர்கள் . . .அதனால்தான் கிடைத்த தகவல்களை அலட்சியம் செய்து வேடிக்கை பார்த்தார்களா என்று சந்தேகம் வருகிறது.

 

 

 

காஷ்மீர் படுகொலை – கண்டனங்கள் , வெறி பரப்புவோருக்கும்

 


காஷ்மீரில்  நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் மிக மோசமானது. கணவனை இழந்த பெண்ணின் கதறலை புகைப்படத்தில் பார்க்கும் போதே மனம் பதறுகிறது, கோபம் கொப்பளிக்கிறது. எங்கள் எல்.ஐ.சி குடும்பத்தைச் சேர்ந்த இந்தோர் கோட்டத்தில் கிளை மேலாளராக பணியாற்றிய சுசீல் நத்தேனியல் என்பவரும் கொல்லப்பட்டவர்களில் ஒருவர்.

 இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் கோழைகள். நிஜமாகவே அவர்கள் தைரியமானவர்களாக  இருந்திருந்தால் ராணுவத்தினரோடு மோதி இருக்க வேண்டும். அப்பாவி சுற்றுலா பயணிகளை கொன்று அவர்களால் என்ன சாதிக்க முடியும்? காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சுற்றுலா வரக்கூடிய பயணிகளை அச்சுறுத்தி தடுப்பதைத் தவிர!

 அதன் பாதிப்பு யாருக்கு? சுற்றுலா பயணிகளை நம்பியே படகுகள் வைத்திருப்பவர்கள், குதிரை ஓட்டுபவர்கள்,  வாகன ஓட்டுனர்கள், வாகன உரிமையாளர்கள்,  உணவு விடுதிகளை நடத்துபவர்கள், ஊழியர்கள். கடைகள் வைத்திருப்பவர்கள். இவர்கள் யாரும் பெரும் செல்வந்தர்கள் கிடையாது.  ஏழை, நடுத்தர மக்கள்தான்.  சீசன் உள்ள இந்த காலகட்டம்தான் மிக முக்கியம்.

 26 அப்பாவிகளின் உயிரைப் பறித்தவர்கள், ஆயிரக் கணக்கானவரகளின் வாழ்வாதாரத்தையும் பறித்து விட்டார்கள். இந்த கொடுமையைச் செய்தவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் யாரென்று கண்டறிந்து அவர்கள் கடுமையான தண்டனை பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

 இச்சம்பவம் தொடர்பாக சில சந்தேகங்கள் கடந்த கால சம்பவங்களின் காரணமாக எழுந்துள்ளது. அவற்றைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.

 இந்த வெறிச்செயலை பயன்படுத்திக் கொண்டு சங்கி கட்டுவிரியன் பாம்புகள் விஷப் பிரச்சாரத்தை துவக்கி விட்டன.   ஊடக வெறியன் அர்ணாப் கோஸ்வாமி தொடங்கி மத்யமர் ஆட்டுக்காரன் குழு சிகண்டிகள் வரை இஸ்லாமியர்கள் மீது  விஷத்தை கக்கத் தொடங்கி விட்டார்கள்.

 “மோடியிடம் நீ சொல்ல வேண்டும் என்பதற்காக உன்னை கொல்லவில்லை” என்று முதலில் ஆரம்பித்தார்கள். பிறகு ஒவ்வொருவரையும் என்ன மதம் என்று கேட்டு இந்துக்களாகக் கொன்றார்கள் என்று அடுத்த கதையை கட்டியவர்கள் இன்னும் ஆபாசமாக சென்று “உள்ளாடைகளை அவிழ்த்துப் பார்த்து விட்டு கொன்றார்கள்” என்று பரப்பி வருகின்றனர். 25 பேர் கொல்லப்பட்டதற்கு 250 பேரை கொல்ல வேண்டும் என்று பழிவாங்குவோம் என ஆங்கிலத்தில் ஹேஷ்டேக் போட்டே பிரச்சாரம் செய்கின்றனர்.

 கோத்ரா சம்பவம் ( ரயில்வே அமைச்சகம் அமைத்த பானர்ஜி கமிஷன் அது ரயில் பெட்டிக்குள்ளிருந்தே நிகழ்ந்த விபத்து  என்றும் அந்த ரயில் பெட்டிகள் நின்ற இடத்தில் வெளியிலிருந்து தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை என்றும் தெளிவான அறிக்கை கொடுத்ததால் அந்த விபத்தை சம்பவம் என்றே குறிப்பிடுகிறேன்) நடந்தவுடன் எப்படி குஜராத்தில் கலவரத்தை தூண்டி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை கொன்றழித்தனரோ, அது போல இப்போதும் கலவரத்திற்கு தூண்டுகிறார்கள்.

 இந்துக்கள் மனதில் இஸ்லாமியர்கள் மீது  வன்மத்தை உருவாக்கத்தான் “இந்துக்களை மட்டும் கொன்றார்கள், உள்ளாடையை அவிழ்த்துப் பார்த்தார்கள்” ஆகிய கதைகள்.

 அது பொய்ப் பிரச்சாரம் என்பதற்கு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இஸ்லாமியர், இன்னொருவர் கிறிஸ்துவர்.

 சையது அதில் உசைன் ஷா என்ற உள்ளூர்க்காரர் ஒருவர். அவர் இஸ்லாமியர்.

 நான் மேலே குறிப்பிட்டிருந்த எல்.ஐ.சி கிளை மேலாளர் திரு சுசீல் நத்தானியல் . இவர் கிறிஸ்துவர்.

 உண்மை இப்படி இருக்கையில்  சங்கிகள் செய்வது அயோக்கியத்தனமின்றி வேறில்லை.

 படு கொலை செய்த பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வதந்திகளையும் வன்மத்தையும் பரப்பும் சங்கிகளையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்.

 பிகு: காஷ்மீர் படுகொலை – கோட்டை விட்டார்களா வேடிக்கை பார்த்தார்களா? அடுத்த பதிவில் . . .

 

 

Sunday, April 7, 2024

பீஸ்ட் படமில்லை மந்திரியாரே . . .

 


பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஒரு வீர வஜனம் பேசியுள்ளார். அவர் விஜய் நடித்த பீஸ்ட் படம் பார்த்து தன்னை வீரராகவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் போல . . .


மிஸ்டர் ராஜ்நாத் சிங், உங்கள் அரசு அப்படியொன்றும் வீரமான, சுய மரியாதை கொண்ட, நாட்டுப்பற்று உள்ள தைரியமான அரசு கிடையாது. சீனாவைக் கண்டு தொடை நடுங்குபவர்தான் உங்கள் மோடி. அது மட்டுமல்ல, இந்திய விமானம் காந்தஹாருக்கு கடத்தப்பட்டபோது உங்க மந்திரி ஜஸ்வந்த்சிங்தான் மசூத் அஸார் உள்ளிட்ட  மூன்று மோசமான தீவிரவாதிகளை கூட்டி வந்து ஒப்படைத்தவர். உங்க யோக்கியதை அவ்வளவுதான். 

மோடி ஒரு ஆள் பேசற வெத்து வஜனத்தையே தாங்க முடியலை. ஒவ்வொத்தனும் வஜனம் பேசாதீங்கடா, அந்த ஆட்டுக்காரனையும் வாயை மூடிட்டு இருக்கச் சொல்லு...

Tuesday, February 20, 2024

காலிஸ்தானை ஆதரிக்குதா அஸ்ஸாம் அரசு?

 



 

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து சில தினங்கள் முன்பு எழுதிய போது ஒரு சங்கி அனாமதேய நாய் ஒன்று “காலிஸ்தானிகளை ஆதரிக்கிறாயா?” என்று குரைத்து விட்டு போனது. பாஜக ஐ.டி விங் சொல்வதை அப்படியே நம்பும் முட்டாளுக்கெல்லாம் எதற்கு பதில் எழுத வேண்டும் என்று விட்டு விட்டேன்.

 

நேற்று முன் தினம் படித்த தகவலொன்று அஸ்ஸாம் பாஜக அரசுதான் காலிஸ்தானை ஆதரிக்கிறதோ என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.

 

காலிஸ்தான் ஆதரவாளர் என்று பஞ்சாப் அரசால் கைது செய்யப்பட்ட அம்ரித்பால்சிங் என்பவன் அஸ்ஸாம் மாநிலத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ள திப்ரூகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

 

அந்த அறையில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட போது

 

சிம் கார்டுடன் கூடிய ஒரு ஸ்மார்ட் போன்,

ஒரு சாதாரண பட்டன் போன்,

ப்ளூ டூத் ஸ்பீக்கர்,

கீ போர்ட் ஒன்று,

உளவுக்கான பயன்படும் கேமராவுடனான ஒரு பேனா,

ஏராளமான பென் ட்ரைவுகள்

 

கிடைத்துள்ளது.

 

அந்த மாநிலத்தின் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் ஆசீர்வாதம் இல்லாமல் இத்தனை பொருட்களை அவன் இத்தனை நாள் பயன்படுத்தி இருக்க முடியுமா?

அப்படியென்றால் அஸ்ஸாம் அரசு அவனுக்கும் அவனது காலிஸ்தான் கோரிக்கைக்கும் உடந்தையாக இருக்கிறது என்றுதானே அர்த்தம்!

 

பாஜக ஆட்சி செய்யாத வேறு மாநிலத்தின் சிறையில் இது போல நடந்திருந்தால் சங்கிகள் எப்படியெல்லாம் குதித்திருப்பார்கள்! என்னவெல்லாம் பேசியிருப்பார்கள்! இவர்களின் கள்ள மௌனமே இவர்களும் கூட்டுக் களவாணிகள் என்பதை நிரூபிக்கிறது.

Thursday, December 14, 2023

புதிய புல்வாமாவிற்கு ஒத்திகையா டிமோ?

 


நேற்று மக்களவையில் நடந்த சம்பவம், தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் நடந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று ஆட்டுக்காரன் அண்ணாமலையும் ஆட்டுத்தாடி ரெவியும் குதியோ குதி என்று குதித்திருப்பார்கள். 

தான் உயிர் தப்பியது எப்படி என்று வானதி சீனிவாசன் பரபரப்பாக பேட்டி கொடுத்திருப்பார்.

மூத்த்த்த்த்த மாலனும் சங்கி சுமந்தும் தங்கள் அறிவுஜீவி(?!?) ட்வீட்டுகள் மூலம் விஷத்தை கக்கியிருப்பார்கள்.

மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் எல்லாம் பாஜக ஐ.டி விங் எழுதிக் கொடுத்ததை எல்லாம் வாந்தி எடுத்திருப்பார்கள்.

ஏன் டெல்லியில் கைதானவர்கள் மஞ்சுநாத்தாகவோ சர்மாவாகவோ இல்லாமல் இஸ்லாமிய, கிறிஸ்துவ பெயருடையவர்களாக இருந்திருந்தால் இந்தியா இன்னொரு கலவரத்தைக் கூட கண்டிருக்கும்!

அப்படியெல்லாம் ஆகவில்லை, நல்ல வேளையாக . . .

இந்த சம்பவம் உணர்த்தும் செய்தி என்ன?

நாடாளுமன்றத்தையே பாதுகாக்க துப்பில்லாத டிமோ அரசு இந்தியாவை பாதுகாக்கும் அருகதையற்றது. 

எனக்கென்னவோ இந்த சம்பவம் புல்வாமா சம்பவம் போன்றதொரு உணர்ச்சிமயமான மனநிலையை உருவாக்க டிமோ கூட்டம் போட்ட சதி என்றே தோன்றுகிறது.

இன்னொரு முறை ராணுவ வீரர்களை கொல்ல முடியாது. அதனால் டிமோ உயிருக்கு ஆபத்து என்ற அச்சத்தை உருவாக்க செய்யப்பட்ட முயற்சி என்று தோன்றுகிறது.

ஆனால் பாவம், அமெச்சூர் ஆட்களை வைத்து முயற்சித்ததால் சொதப்பி விட்டது.

இந்த சம்பவம் ஆட்சியின் தோல்வி என்பதால் சங்கி ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன. தின மலர் போட்டுள்ள தலைப்பு என்ன தெரியுமா?



"புகை உமிழும் கருவி"யாம்!

இவன் வைக்கும் தலைப்பே, குற்றவாளிகள் யார் என்பதை உணர்த்துகிறது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை இந்தியாவில் எங்கே ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்தாலும் உறுதியோடு சொல்ல முடியும்.

அது பாஜகவின் வேலை. பாஜகவின் வேலை மட்டுமே . .

Wednesday, April 24, 2019

ஆன்டி நேஷனல் ஐ.பி.எஸ் அதிகாரிகள்




கிரிமினல் சாமியார் சாபமெல்லாம் பலித்தால் . . .

மாலேகான் வெடிகுண்டு புகழ் சாமியார் சாத்வி பிரக்யா தாகூர் தான் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மறைந்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே மீது விஷத்தை கக்கியுள்ளார்.

ஹேமந்த் கர்கரே தான் மாலேகான், ஆஜ்மீர் தர்கா, சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் மற்றும் ஹைதராபாத் மசூதி ஆகிய வெடிகுண்டு வழக்குகளில் குற்றவாளிகள் அபினவ் பாரத் என்ற காவி அமைப்புதான் என்பதை கண்டுபிடித்தவர். சாத்வி பிரக்யா தாகூர் என்ற சாமியாரின் பைக்கில்தான் மாலேகானில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது என்பதற்கான ஆதாரத்துடன் அவரை கைது செய்தார்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலின் போது ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டார் என்பதும் அவர் அணிந்திருந்த புல்லட் ப்ரூப் கவசம் தரமற்றதாக இருந்ததால்தான் அவர் மரணமடைந்தார் என்பதும் அவரை கொன்றது மும்பையை சூழ்ந்த பாக் தீவிரவாதிகளா இல்லை காவி தீவிரவாதத்தை கண்டு பிடித்ததால் இச்சூழலை பயன்படுத்தி வேறு யாராவது கொன்றார்களா என்ற ஐயம் இன்று வரை நீடிப்பதும் வேறு விஷயம்.

“என்னை கைது செய்த நீ நாசமாகப் போவாய், உனக்கு சந்ததியே இருக்காது”

என்று தான் ஹேமந்த் கர்கரேவைப் பார்த்து சாபமிட்டதாகவும் தான் சபித்த ஒன்றரை மாதத்திலேயே தன் சாபம் பலித்து ஹேமந்த் கர்கரே இறந்து விட்டதாக அவர்  கூறியுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக வீர மரணம் அடைந்தவர் என்று போற்றப்பட்டு வீரதீர சாகஸங்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான “அசோக சக்ரா” விருது வழங்கப்பட்ட ஒரு தியாகியை ஒரு தீவிரவாதி சாமியார் எள்ளி நகையாடுகிறார்.

இப்படிப்பட்ட கிரிமினல்களுக்குத்தான் பாஜக சீட் கொடுத்து எம்.பி யாக்கி அழகு பார்க்க விரும்புகிறது.

கிரிமினல் சாமியாரின் பேச்சுக்கு எதிர்ப்பு வந்ததும் தான் சொன்னதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

அதிலும் ஒரு ஆணவம்.

ஆம்,

தான் கூறியது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதால் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.


மார்பகப் புற்று நோய் என்று சொல்லிப் பெற்ற பிணையையும் அதே காரணத்துக்காக வழக்கு விசாரணைக்கு நீதி மன்றத்திற்கு வராமல் கொடுக்கப்பட்ட விலக்கையும் திரும்பப் பெற வேண்டும்.

அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்.

தீவிரவாதி சாமியார் இருக்க வேண்டிய
இடம் ஜெயில். மக்களவை அல்ல.

பிகு:

இந்த சாமியார் பேசியதை ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் கண்டித்துள்ளது. கிசாக நியதிப்படி அவர்கள் அனைவரும் ஆன்டி- நேஷனல்கள் தானே!

Sunday, April 21, 2019

பாஜக, இனி தீசாக





ஆமாம்.

பாரதீய ஜனதா கட்சி
இனி
தன்னுடைய பெயரை
தீசாக
என்று
மாற்றிக் கொள்ளட்டும்.

ஆமாம்.

தீவிரவாதி சாமியார் கட்சி
என்ற பெயர்தான் அதற்கு பொருத்தமாக இருக்கும்.

ஆறு பேர் உயிரிழந்த, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த மாலேகான் வெடிகுண்டு வழக்கில்  பிரதான குற்றவாளியான சாத்வி பிராக்யா முதல் நாள் அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைகிறார். மறு நாள் அவர் போபால் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப் படுகிறார்.

மார்பகப் புற்று நோய் என்று காரணம் சொல்லி  நீதி மன்றத்தில் பிணை வாங்கியவர், அதே நோயின் காரணமாக தன்னால் நடமாட முடியவில்லை என்று நீதிமன்ற வழக்கு விசாரணையில் பங்கேற்பதிலிருந்து விலக்கு பெற்றவர் இப்போது இந்த வெப்பக்காலத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க உள்ளார்.

தீவிரவாதத்தை எதிர்ப்பதாக வெறுமனே வாயால் வடை சுடும் கட்சிதான் பாஜக என்று மீண்டும் அதை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.  வெடி குண்டு வைத்த ஒரு தீவிரவாதியை தன் கட்சியில் இணைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பளித்ததன் மூலம் பாஜகவின் தீவிரவாத எதிர்ப்பு முகத்திரை கிழிந்து விட்டது.

அதனால் பாஜக

தன்னுடைய பெயரை

தீவிரவாதி சாமியார் கட்சி

என்று மாற்றிக் கொள்வதுதான் சிறப்பாக இருக்கும்.

அந்த சாமியாரின் திமிர் பற்றி இன்னும் எழுத வேண்டியுள்ளது. அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

Wednesday, July 12, 2017

அமர்நாத் - கோழைகளும் ஒரு வீரனும்




அமர்நாத் பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஓடும் பேருந்தில் உள்ளவர்களை இருளில் சூழ்ந்து சுடுவது என்பது அப்பட்டமான கோழைத்தனம். தாக்குதலை நடத்த  மத வெறி காரணமாக இருந்துள்ளது. மதத்தை அரசியலுக்காக பயன்படுத்துபவர்களால் மட்டுமே மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களை கொல்ல முடியும். அப்படிப்பட்ட அடிப்படைவாதிகளை மனிதர்கள் என்று சொல்வதே தவறு. 

லஷ்கர் இ தொய்பா, இத்தாக்குதலை நிகழ்த்தியது என்று சொல்லப் படுகிறது. இதனால் அவர்கள் என்ன சாதித்து விட்டார்கள். இவர்களின் வெறியாட்டத்திற்கு காஷ்மீர் இஸ்லாமியர்கள்  தொடர் வினையை  சந்திக்கும் அவல நிலையை உருவாக்கியதைத் தவிர?

தாக்குதல் நிகழ்த்தியவர்கள் வீரர்கள் என்றால் பட்டப்பகலில் ராணுவத்தோடு நேருக்கு நேர் மோதியிருக்கலாமே! அதை விடுத்து அப்பாவிகளை ஒளிந்திருந்து தாக்கியது என்பது கோழைத்தனம் தவிர வேறொன்றுமில்லை. 

துப்பாக்கித் தோட்டாக்கள்  துளைத்துக் கொண்டிருந்த போதும் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டி  நாற்பதுக்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அந்த பேருந்தின் ஓட்டுனர் ஷேக் சலீம் கஃபூர் தான் உண்மையான வீரன். 

கோழைகளை வன்மையாக கண்டிக்கிற அதே நேரத்தில் இந்த வீரனுக்கு தலை வணங்குகிறேன்
 

Wednesday, July 5, 2017

இஸ்ரேல் – மோடி – வரலாற்றுப் பிழை





மோடி இஸ்ரேல் போயிருக்கிறார்.

மோடியும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவும் “தீவிரவாதத்தை ஒழிப்போம்”  என்று கூட்டாக அறிவித்துள்ளனர்.

இந்தியாவையும் மோடியையும் நேசிப்பதாக நெதன்யாஹூ சொல்லியுள்ளார். எழுபது ஆண்டுகளாக இத்தருணத்திற்காகவே காத்துக் கொண்டு இருந்ததாகவும் அவர் சொல்லியுள்ளார்.

இந்தியா இஸ்ரேல் உறவு பல நூற்றாண்டு கால பாரம்பரியம் கொண்டது என்று மோடி புகழ்ந்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய தீவிரவாத நாடு இஸ்ரேல். தீவிரவாதச் செயல்கள் மூலமே உருவான இஸ்ரேல் இன்றளவும் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல்கள் நடத்திக் கொண்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் இயற்கையாக இறந்து போகிறவர்களை விட பல மடங்கு மக்கள் இஸ்ரேலினால்தான் இறந்து போகிறார்கள்.

மோடி எப்பேற்பட்ட பயங்கரவாதி என்பது நாமெல்லாம் அறிந்ததே! நெதன்யாஹூ மோடியைக் காட்டிலும் மோசம். இவர்கள் இணைந்து  தீவிரவாதத்தை ஒழிப்பதென்று சொல்வது ஒரு குரூரமான நகைச்சுவை.

இஸ்ரேல் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை வாங்கும் பிரதானமான நாடாக இந்தியா மாறுகையில் நெத்ன்யாஹூ இந்தியாவையும் மோடியையும் நேசிப்பதில் வியப்பென்ன இருக்கிறது! எல்லா வணிகர்களுமே அவர்களின் முக்கிய கஸ்டமர்களை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்தால்தானே தொழில் சுமுகமாக நடக்கும்!

எழுபதாண்டுகளாக காத்திருந்தோம் என்று சொல்வதன் அர்த்தம் புரிகிறதா?

இஸ்ரேல் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தலை கீழாக மாறிப் போனதைத்தான் துள்ளிக் குதிக்காத குறையாக சுட்டிக் காட்டுகிறார். இஸ்ரேல் எனும் தேசத்தின் உருவாக்கத்தை ஏற்காத நாடு இந்தியா. பாலஸ்தீன மக்களுக்கு பாரம்பரியமாக துணை நின்ற நாடு இஸ்ரேலுடன் எந்த வித உறவும் பல்லாண்டுகளாக வைத்துக் கொள்ளாத நாடு.
வாஜ்பாய் காலத்தில் மாறியது இந்த நிலை. இதற்கு முன்பாக பிரணாப் முகர்ஜியும் ஹமீது அன்சாரியும் இஸ்ரேல் சென்றிருந்தாலும் அவர்கள் அந்த பயணத்தில் பாலஸ்தீனத்திற்கும் சென்றுள்ளார்கள். இப்போது மோடியின் பயணம் இஸ்ரேலோடு முடிந்து போகிறது. பாலஸ்தீன மக்களை ஆதரிக்கிறோம் என்று இந்தியா சொன்னாலும் அது சும்மா ஒரு பேச்சுக்குத்தான் என்று நெதன்யாஹூவிற்கு தெரியும். அதனால்தான் எழுபது ஆண்டுகளாக காத்திருக்கிறோம் என்று சொல்கிறார்.

பல நூற்றாண்டு கால பாரம்பரிய நட்பு என்று மோடி சொல்கிறார். எத்தனை நூற்றாண்டுகளாக இஸ்ரேல் எனும் நாடு இருக்கிறது என்று சொல்வாரா? யூத வெறியை அடிப்படையாகக் கொண்ட ஜியோனிஸம்) (Zionism என்ற தத்துவம் முன்னுக்கு வந்ததே 1890 ம் வருடம்தான்.

அப்படி இருக்கையில் எங்கிருந்து வந்து பல நூற்றாண்டு கால பாரம்பரிய நட்பு?

மோடி இஸ்ரேலுக்குச் சென்றதும் வரலாற்றுப் பிழை.
இஸ்ரேல் பற்றி மோடி சொன்ன வரலாற்றிலும் பிழை.



Tuesday, July 4, 2017

வெட்டி உதார் பேசாம ஒழுங்கா போயிடு





மத அடிப்படைவாதிகள் எப்போதுமே முரடர்களாகவும் மூடர்களாகவுமே இருப்பார்கள் என்பது நம்ம ஊர் காவிகள் மட்டுமல்ல, பாகிஸ்தானில் உள்ளவர்களும் உதாரணம்.

இன்று காலை ஹிந்து நாளிதழில் பார்த்த செய்தியில்

பாகிஸ்தானிலிருந்து செயல்படுகிற ஹிஸ்புல் மொஹாஜிதீன்   அமைப்பின் தலைவரான  சையது சலாஹீதீன் என்பவர்,

“இந்தியாவின் எந்த மூலையிலும் எங்களால் தாக்குதல் நடத்த முடியும். அந்த அளவிற்கு எங்கள் அமைப்பு விரிவடைந்துள்ளது” என்று ஆணவமாக கொக்கரித்துள்ளார்.

இது ஒரு வெற்று உதார் என்பதை படிக்கையிலேயே தெரிகிறது.   

ஆனால் இந்த வெட்டி உதாரின் விளைவுகள் என்ன ஆகும் என்பதை அந்த மனிதன் புரிந்து கொள்ளவில்லை என்பதால்தான் மூடர் என்று அழைக்கிறேன்.

இவரெல்லாம் இப்படிச் சொல்வதால் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை காவிகள் தேச விரோதியாக சித்தரிக்கிறது. அவர்களுக்கு எதிராக நச்சைப் பரப்புகிறது. அவசியமே இல்லாமல் அவர்கள் தேசபக்தியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வருகிறது. 

எல்லைக்கு வெளியே இருப்பவர்கள் பேசும் வெட்டி உதாருக்காக, தேசத்துக்கு உள்ளே இருப்பவர்கள் சிலுவையில் அறையப்பட வேண்டுமா?

ஏதோ சொல்வார்களே, வெறி கொண்ட குரங்கிற்கு சாராயமும் ஊற்றிக் கொடுப்பது என்று, அது போல சங் பரிவாரக்கும்பல் பிரச்சினை செய்ய இவரே எடுத்துக் கொடுக்கிறார்.

இந்த மாதிரியான ஆட்களெல்லாம் வாய் மூடி ஒழுங்காக இருப்பதே நல்லது. 

Saturday, June 17, 2017

ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை தடை செய்




இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ். அவர்கள் வலுவாக இருக்கும் இடங்களில் நேரடியாக கலவரங்களைத் தூண்டி நூற்றுக்கணக்கானவர்களை கொல்வார்கள். குஜராத் தொடங்கி முசாபர்நகர் வரை நடைபெற்ற கொலைகள் இதற்கு உதாரணம்.

அவர்கள் வலுவில்லாத இடங்களில் மத வெறியை தூண்டி விடுவார்கள். வேறு ஏதாவது பிரச்சினையில் அவர்கள் குண்டர்கள் செத்துப் போயிருந்தாலும் கூட சிறுபான்மையினர் மீது பழி போட்டு கலவரம் செய்வார்கள். அண்டா பிரியாணியையும் மொபைல் கடை சூறையாடலும் நடந்த சசிகுமார் கலவரம் உதாரணம்.

வீரர்கள் போல சமூக வலைத்தளங்களில் உலா வந்தாலும் அடிப்படையில் அவர்கள் கேவலமான கோழைகள். தோழர் சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்தியவர்கள் எங்கள் ஆட்கள் இல்லை என்று பதுங்குவார்கள்.

ஆளில்லாத சமயத்தில் வெடிகுண்டையோ பெட்ரோல் குண்டையோ வீசி விட்டு ஓடும் கோழைகள் என்பது இன்று காலை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தின் மீது நடந்த தாக்குதல் உணர்த்துகிறது. 

மிகப் பெரிய தீவிரவாதிகள்  நாட்டின் பிரதமராகவும்  ஆளும்கட்சியின் அகில இந்திய தலைவராகவும் இருக்கிற நாட்டில் தீவிரவாதச் செயல்கள் நடக்காமல் அமைதிப் புறாக்களா பறந்து கொண்டு இருக்கும்?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மீண்டும் தடை செய்ய வேண்டிய தருணம் இது.