Showing posts with label புகார். Show all posts
Showing posts with label புகார். Show all posts

Friday, June 2, 2023

ஜெயமோகனை ஜெயிலில் போடுங்கள்

 


கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் நாத்திகவாதிகளுக்கும் எதிராகவும் அவர்களை அவதூறு செய்தும் இந்து மதத்தை இழிவு செய்து பேசினால் கோடிக்கணக்கில் பணம் தரப்படுவதாகவும் புளிச்சமாவு பேசிய காணொளி ஒன்று உண்டு.

அதை மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

ஜெயமோகனுக்கு விபரம் தெரியும் என்றால் அதை போலீசிடம் சொல்ல வேண்டுமே தவிர, விளம்பரத்திற்காக வீடியோ போடக்கூடாது. அந்த வீடியோவை தரவிறக்க முடிந்ததால் அதை இணைத்து காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். 


பெறுனர்

காவல்துறை தலைவர்,
தமிழ்நாடு, சென்னை

மதிப்பிற்குரிய ஐயா,

மத மோதலை தூண்டுவதற்கு எதிரான புகார்.

எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் பேசிய காணொளி ஒன்றை முக நூலில் பார்க்க நேரிட்டது.

மத மோதல்களை உருவாக்கும் வண்ணம் அவர் பேசியுள்ளார். பணம் வாங்கிக் கொண்டு மத மாற்றத்திற்காகவும் இந்து மதத்தை பழித்தும் பேசுபவர்களை தனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே அவருக்கு அப்படிப்பட்ட தகவல்கள்   தெரியுமாயின் காவல் துறையில் புகார் அளித்திருக்க வேண்டும். அதுவன்றி இப்படி பேசி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்வது தேவையற்ற பிரச்சினைகளுக்கு 
வழி வகுக்கும்.

குறிப்பிட்ட காணொளியை இத்துடன் இணைத்துள்ளேன்.

தக்க நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இவண்
எஸ்.ராமன்,


பார்ப்போம், காவல்துறை எனக்கு பதிலாவது அனுப்புகிறதா என்று!

Tuesday, April 16, 2019

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?


கீழே நீல நிறத்தில் உள்ளது வாட்ஸப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு தகவல். 

பகிர்ந்து கொண்டவர் மோடி அபிமானி. அதனால் இது ஃபேக் செய்தி என்று சொல்ல முடியாது. அதிலே குறிப்பிடப்பட்டிருந்த தொலை பேசி எண்களை மட்டும் பதிவிலிருந்து அகற்றியுள்ளேன்.

இது போல இலவச வாகனம் ஏற்பாடு செய்வது தேர்தல் விதிகளுக்கு புறம்பானது. அப்படி இருந்தும் வெளிப்படையாக செய்தி அனுப்புகிறார்கள் என்றால் 

இதனை வெறும் விதி மீறல் என்றோ ஊழல் நடவடிக்கை என்று மட்டும் சொல்ல முடியுமா?

மத்தியில் ஆட்சியில் உள்ளோம், தேர்தல் ஆணையமே நாம் ஆட்டுவிக்கிற் பொம்மை, நம்மை யாரால் என்ன செய்ய முடியும் என்ற ஆணவத்தைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?


சென்னையில் தங்கி இருக்கும் குமரி மாவட்ட பா ஜ க மற்றும் சங்க நண்பர்களுக்கு 18ம் தேதி வாக்களிப்பதற்க்கு வசதியாக 17ம் தேதி இலவச பேருந்து வசதி செய்யபட்டுள்ளது.... 

சென்னை to மார்த்தாண்டம்..

யாராவது வருவதாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்  Krishna - Aravid -

இந்த தகவலை அந்த இருவரின் தொலை பேசி எண்களோடு தமிழக தேர்தல் ஆணையருக்கு ஒரு புகாராக மின்னஞ்சலில்  அனுப்பியுள்ளேன்.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?
பாஜகவின் அத்து மீறலை தடுத்து நிறுத்துமா?