Showing posts with label மரணம். Show all posts
Showing posts with label மரணம். Show all posts

Saturday, July 6, 2024

கொலைகார சாமியாரை பாதுகாக்கும் . . . .

 


உபியின் பாலியல் வன்முறைகளின் தலைநகர் ஹாத்ராஸில் 121 பக்தர்களின் உயிரை பலி கொண்ட சம்பவத்தில் ஆறு பேர் மீது போலீஸ் வழக்கு பதிந்துள்ளது. அவர்கள் எல்லோரும் அந்த போலிச்சாமியார் நடத்திய சத்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள்.

ஆனால் அந்த சத்சங்கத்தை நடத்தி மரணங்களுக்கு காரணமாக இருந்த போலே பாபா என்ற போலிச்சாமியார் மீது எந்த வழக்கும் கிடையாது.

அவரை விசாரிப்பீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு "ஒரு வேளை அவரை விசாரிக்க வேண்டிய அவசியம் உருவானால் மட்டுமே விசாரிப்போம்" என்று பதில் சொல்கிறார் உபியின் ஒரு ஐ.ஜி.

கொரோனா இரண்டாம் அலை காலகட்டத்தில் இந்த சாமியார் இது போன்ற சத்சங்கம் நடத்த அனுமதி கேட்ட போது 50 பேர் கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டதாம். ஆனால் 50,000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையில் உ.பி யில் கொத்து கொத்தாக மரணங்கள் நிகழ்ந்ததும் சடலங்களை எரிக்க சுடுகாடுகள் போதவில்லை என்பதும் நினைவில் உள்ளதா? 50,000 பேர் கலந்து கொண்ட சத்சங்கம் எத்தனை பேரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததோ!

ஏன் இந்த சாமியார் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை?

அதெப்படி முடியும்!

மாநில முதல்வர் மொட்டைச்சாமியாரே ஒரு கொலைகார சாமியார்தானே!

ஒரு போலிச்சாமியாரால் எப்படி இன்னொரு போலிச்சாமியார் மீது நடவடிக்கை எடுக்க முடியும்!

இருவரும் ஒரே இனம் அல்லவா! 

Friday, March 17, 2023

பிணந்தின்னி சங்கிக் கழுகுகள் . . .

 


குழந்தையின் மரணத்துக்காக காத்திருக்கும் அந்த பிணந்தின்னிக் கழுகுக்கும் சங்கிகளுக்கும் வித்தியாசம் கிடையாது.

ஹெச்.வசந்தகுமார் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது "மீண்டும் அமைச்சராகப் போகும் பொன்னாருக்கு வாழ்த்துக்கள்" என்று  பதிவு போட்ட காட்டுமிராண்டிகள்தான் சங்கிகள்.

திரு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணியில் "மத்யமர் ஆட்டுக்காரன்" குழுவில் நடந்த விவாதங்கள் கீழே.





பிணந்தின்னிக் கழுகுகளைப் போன்ற இந்த ஜந்துக்களை என்ன சொல்வது!

அடுத்தவர் மரணத்தை ஆவலோடு எதிர்பார்த்தவர்கள், அதற்கு முன்பே இறந்துள்ளார்கள் என்பதுதான் வரலாறு.

தந்தை பெரியார் இறக்க வேண்டுமென்று சத்ரு சம்ஹார யாகம் நடத்திய திருவிதாங்கூர் அரசனின் மரணம் கடந்த கால வரலாறென்றால்

கலைஞரின் மரணத்துக்கு பல முறை நாள் குறித்த ஜெ அவருக்கு முன்பே இறந்தது சமீபத்திய வரலாறு,

சங்கிகளுக்கு இதெல்லாம் தெரியாது, புரியாது.

Friday, March 31, 2017

போங்கடா, நீங்களும் உங்க டெக்னாலஜியும்.




          
சந்திரனுக்குப் பாய்ந்தது ஒரு விண்கலம்,
செவ்வாய்க்கும் கூட
விரைவில் செல்லுமாம்.          
                                                 
ஒரு ராக்கெட்டில் ஒரே நேரத்தில்
நூற்றுக்கும் மேல் செயற்கைக் கோள்கள்
விண்ணில் சீறிப் பறந்து
வட்டப்பாதையில் நிலை கொண்டதும்
இந்தியாவின் தலை நிமிர்ந்ததாம்.

கசங்கிப் போகும் ரூபாயைத் தவிர்க்க
கணிப்பொறியில்தான் இனி பரிமாற்றமாம்.

காகிதப் பயன்பாடே இல்லாமல்
மின்னஞ்சலில்தான் எல்லாமே.    

ஆதார் அட்டையைத் தேய்த்தால்தான்
கழிவறைக் கதவும் திறக்குமாம்.

மூச்சு விடுவதும் முனகுவதும் கூட
அரசு கண்காணிப்பில் வருமாம்.  

டிஜிட்டலில் இந்தியாவில்
எல்லாமே மாறுமாம்.  

இந்தியா வேகமாய்
முன்னேறவும் செய்யுமாம்.

கழிவை சுத்தம் செய்ய
சாக்கடைக் குழியில் இறங்கி
மரணிப்பது மட்டும் மாறாதாம்.
                                                        
எது எதற்கோ இயந்திரம் வந்தாலும்
இதற்கு மட்டும் வாராதாம்.

போங்கடா,   
நீங்களும் உங்க டெக்னாலஜியும்.    

(கடலூர் சம்பவத்தின் போது எழுதியது)