அரசு என்ன செய்துள்ளது என்பதைக் கேட்பதற்குப் பதிலாக அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே, இல்லையில்லை அதற்கும் மேலாக அமலாக்கும் மூடர்களாக இந்திய மக்கட்தொகையின் பெரும் பகுதி மாறி வருவது கவலைக்குரிய ஒன்றாகும்.
கோடிக்கணக்கான தினக் கூலி தொழிலாளிகளின் வாழ்வில் சூழ்ந்துள்ள இருளை போக்க எந்த வழியும் சொல்லாமல் ஏனய்யா விளக்கேற்றச் சொல்கிறாய் என்று கேட்பதற்குப் பதிலாக அதனையே ஒரு திருவிழா போல கொண்டாடியுள்ள மக்கள் தங்கள் தவறுக்கு நிச்சயம் ஒரு நாள் வருந்துவார்கள்.
தனி மனித விலகல், ஊரடங்கு போன்றவற்றை எல்லாம் மோடி மோகிகள் மீண்டும் மீண்டும் கேலிக்கூத்தாக மாற்றி வருகிறார்கள்.
ஊரடங்கு சமயத்தில் ஒவ்வொரு ஊரிலும் தீபாவளி போல் வான வேடிக்கை நடத்த எங்கிருந்து பட்டாசுகள் கிடைத்தது என்ற கேள்வியையாவது மக்கள் கேட்பார்களா?
ஒரு கிரிமினல் தன் ஆட்சியின் தோல்வியை மறைக்கப் போடும் நாடகங்களில் இந்தியர்கள் தாங்களும் பாத்திரமாக மாற்றப்படுவதை என்று உணர்வார்களோ ?
இந்த காணொளிகள் இந்தியாவின் அவலத்தை உணர்த்தும்.
இங்கும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன
ReplyDeleteஎதைச் சொன்னாலும் கைதட்டிப் பழகியவர்கள் நாம்
//எதைச் சொன்னாலும் கைதட்டிப் பழகியவர்கள் நாம்//
Deleteஸூப்பர் உண்மை நண்பரே...
- கில்லர்ஜி