Thursday, July 19, 2018

நெஞ்சை பதற வைத்த அறிவிப்பு

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் 17.07.2018 செவ்வாயன்று தூத்துக்குடியில் ஸ்டெரிலைட்  ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாற்பது குடும்பங்களுக்கு தலா இருபத்தி ஐயாயிரம் ரூபாய் என்று வங்கியில் வைப்புத் தொகையாக போடப்பட்டு அதன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் உ.வாசுகி இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவரது உரையை தீக்கதிர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதனை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

தூத்துக்குடியில் இன்றளவிலும் கிராமப் புறங்களில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில்நிம்மதியாக தூங்கவில்லை அவர்கள் தினமும் பயத்திலே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் . இதற்கு முக்கிய காரணம் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகும். இன்று வரை மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை வரவில்லை. இந்த கூட்டம் நடைபெறுவது கூட காவல்துறைக்கு வேப்பங்காய் போல் கசந்துள்ளது.

 தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் மற்றும் அதை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்தனர். பின்பு பத்திரிக்கையாளர்கள் படம் பிடிக்க சென்றபோது அனைவரும் பின்புற வாசல் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஓடிவிட்டனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும் என மனு கொடுக்க போகிறோம் என்று சொல்லாமல் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என மனு கொடுக்க போகிறோம் என்று பொய் சொல்லி ஆட்களை திரட்டி வந்துள்ளதாகவும். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டிய மனு என்பது எங்களுக்கு தெரியாது எனவும் அது தெரிந்த காரணத்தினால் நாங்கள் திரும்பிவிட்டோம் எனவும் கூறினார்கள். 

ஆனால் பலர் மக்கள் விரும்பிக்கிறார்கள் என்று பொய்யான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்ட மாவட்ட ஆட்சியரை வைத்து மூடியது போல் நாடகமாடி தற்போது மீண்டும் திறக்கும் நோக்கில் ஒவ்வொரு நிகழ்ச்சியாக அரங்கேற்றி வருகின்றனர். இந்நாடக நிகழ்ச்சிக்கு கதைவசனம் எழுதியது ஸ்டெர்லைட் கார்ப்பரேட், வடிவம் கொடுப்பது தமிழக அரசு, அதற்கு உதவி மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும், நடிகர்களை தேர்வு செய்வது,அவர்களுக்கு சம்பளம் கொடுத்து நடிக்க அழைத்து வருவது இங்குள்ள பெரும் லாரி உரிமையாளர்கள், மற்றும் அவர்களை சார்ந்த கட்சிகள்.தற்போது சேலம் வழியாக செல்ல பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டுவந்துள்ளது தமிழக அரசு. அது தேசிய பசுமை வழிச் சாலை அல்ல பசுமை அழிச்சாலை 

அந்த நிகழ்ச்சி குறித்து அவரது முக நூல் பதிவையும் இணைத்துள்ளேன்.

இன்சூரன்ஸ் சங்கம் சார்பில் தன் மகளுக்கு கல்வி உதவித் தொகை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சிக்கு பிறகு அந்தப் பெண் என்னோடு பேசினார் - "சிறு தொகைதான் கொடுக்க முடிந்தது என்று ஏன் சொல்லுகிறீர்கள்? மார்ச்சுவரியில் நின்றுகொண்டு அரசு கொடுத்த 20 லட்சத்தை வாங்கும்போதுதான் மனம் கூசியது. ஆனால் சங்கம் கொடுக்கும் இந்த தொகையை மனநிறைவோடு பெற்றுக்கொண்டேன். அப்படிப் பார்த்தால் இது சிறு தொகை அல்லவே அல்ல". மனம் நெகிழ்ந்து போனது.


உதவி பெற்ற இன்னொரு பெண் சொன்னார் - "ரத்த சொந்தங்களை விட வர்க்க சொந்தங்கள் தான் மேலானது என்று நீங்கள் சொன்னது மிகச்சரி. நாங்கள் கண்ணீரும் கம்பலையுமாக நின்றபோது எங்கள் உறவினர்கள் வருவதற்கு முன்னாலேயே நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களும் தான் வந்தீர்கள். இப்போது உறவினர்கள் சென்ற பிறகும் கூட நீங்கள் தான் இருக்கிறீர்கள்".


ரணம் பட்ட மனதுக்கு இன்சூரன்ஸ் சங்கத்தின் உதவி மருந்தாகவே இருந்திருக்கிறது .இந்த நிகழ்ச்சியில் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது. பயனாளிகள் யாரும் மேடைக்கு அழைக்கப்படவில்லை.  பயனாளிகளின் இருக்கைக்கே சென்று அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு பயனாளி குறித்த அறிவிப்புதான் நெஞ்சை பதற வைத்தது.

துப்பாக்கிச் சூட்டில் வீர மரணம் அடைந்த  .............
துப்பாக்கிச் சூட்டில் குண்டுக் காயம் அடைந்த ................


என்று சொல்கிற போது இதயம் கனத்துப் போனது. 

வயதானவர் தொடங்கி இளைஞர்கள் வரை நாற்பது குடும்பத்தினரும் காவல்துறை துப்பாக்கியின் தோட்டாக்களை பெற்றவர்களே. அனைவருமே மிகுந்த ஏழை எளிய மக்களே, சிலரது கால்களில் இன்னும் கூட கட்டு இருக்கிறது. அவர்கள் முகங்களில் சோகம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த வலி மறையாது. 

காவல்துறையின் தோட்டாக்களோ அல்லது குண்டாந்தடியோ அளித்ததை விட மிகப் பெரிய வலி எது தெரியுமா?

ஸ்டெரிலைட் உருவாக்கிய அழிவிலிருந்து எஞ்சியுள்ள மக்களையாவது மிச்சமிருக்கும் காலத்திலாவது பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு போராடிய தங்களுக்கு ஆட்சியாளர்கள் அளித்த சமூக விரோதிகள் என்ற முத்திரை தந்த வலிதான்.

அந்த வலிக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும் . . .

Wednesday, July 18, 2018

மனசுக்குள்ள பேசிக்கலாமா போலீஸ்கார்??????
தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் சங்கத்தின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வு குறித்து இரண்டு நாட்கள் முன்பாக எழுதி இருந்தேன். காவல்துறை இடையூறு இருக்காது என்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது.

நிகழ்ச்சி ஒரு அரங்கத்திற்குள் நடைபெற்ற நிகழ்ச்சி. அந்த கல்யாண மண்டபத்தின் முகப்பில் எங்கள் சங்கத்தின் செந்தோரணங்களும் கொடிகளும் கட்டப்ப்பட்டிருக்கிறது. இரவில் அங்கு வந்த காவலர்கள், தோரணங்களை பிய்த்துப் போட்டுள்ளார்கள், கொடிகளை அகற்றி உள்ளார்கள். அது மட்டுமல்லாது மண்டபத்தின் உரிமையாளரையும் தொலைபேசியில் மிரட்டியுள்ளார்கள்.

நெல்லைக் கோட்டச்சங்கத்தின் தலைவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும்  காவல்துறை உயரதிகாரிகளோடு பேசி, என்ன விளைவானாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும் என்று உறுதிபடத் தெரிவித்த பின்னர் காவல்துறை, விஷயம் தெரியாத கீழ் மட்ட அதிகாரிகள் செய்த வேலை என்று  பம்மி விட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்று யாருமே வாய் திறக்கக் கூடாது என்பதுதான் அரசாங்கத்தின் எண்ணம். யாரும் நினைவுபடுத்தா விட்டால்  காலப்போக்கில் மக்களே மறந்து விடுவார்கள் என்று கருதி வாய்ப்பூட்டு போட நினைக்கிறது.

புயலுக்கு பூட்டு போட நினைக்கும் மூடத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

காவல்துறையிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்க வேண்டும்.

உங்கள் அராஜகங்கள் பற்றி எங்கள் மனதுக்குள் பேசிக் கொள்ளவாவது அனுமதி உண்டா சார்?

அதற்குக் கூட தடை போடுவீங்களா ஐயா?

பின் குறிப்பு : நிகழ்ச்சி பற்றி தனியாக எழுத வேண்டும் . . .

Monday, July 16, 2018

வாழைப்பூ கோலம்

வாட்ஸப்பில் வந்தது.

அழகாய் இருந்ததால் பகிர்ந்து கொள்கிறென்மொக்கைப் படத்தில் பாட்டுக்கள் மட்டும் . . .

முந்தைய பதிவின் தொடர்ச்சி இது..

"சொல்லத் துடிக்குது மனசு"தொலைக்காட்சியில் கூட பார்க்க முடியாத மொக்கைப் படம். ஆனால் பாட்டுக்கள் என்னவோ உலகத்தரம், உயர் தரம் . . .

"பூவே செம்பூவே" பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆனால் அந்த அளவு ஹிட்டாகாத, ஆனால் மிகவும் அற்புதமான பாடல் " தேன்மொழி, எந்தன் தேன்மொழி"   பாடல். மனோ உருகி உருகி பாடியிருப்பார். 

பாடலின் நடுவில் ராஜா ஒரு வயலின் ராஜ்ஜியமே நடத்தியிருப்பார்.

தவற விடாதீர்கள். 

பாடலைத்தான் . . . 

என்னா ம்யூசிக்யா இது !!!1இளையராஜாவின் பாடல்களில் சிறப்பான இடையிசை உள்ள பாடல்களின் தொகுப்பை இரண்டு மாதங்கள் முன்பாக பகிர்ந்து கொண்டிருந்தேன். பல்வேறு வேலைகள் காரணமாக அதனை தொடர முடியவில்லை.

அத்தொடருக்காக திட்டமிட்டிருந்த இப்பாடலை நேற்று கேட்டதால்  அதனை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அற்புதமான இசையமைப்பு. அதிலும் அரபிக்கடலில் குடை மிதக்கும் அந்த காட்சியில் . .. 

ஆஹாவென்று நீங்களும் சொல்வீர்கள் . . .

பாடல் நன்றாக உள்ளதென்று படத்தை பார்த்து விடாதீர்கள்.
படம் படு மொக்கை , , ,

இன்னொரு படமும் அப்படி உள்ளது. அது பற்றி மாலையில் . . .

தூத்துக்குடி நோக்கி . . .

ஸ்டெரிலைட்டிற்கு எதிரான போராட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தினரின் கல்விக்கு உதவ நிதியளிக்குமாறு எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது.

அப்படி தமிழகமெங்கும் உள்ள அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்கள் அளித்த நிதியை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அளிக்கும் நிகழ்ச்சி நாளை தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது.

அந்நிகழ்ச்சியில் எங்கள் கோட்டத்தின் சார்பில் பங்கேற்க  தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன்.

குறைந்தபட்சம் இந்த நிகழ்ச்சியாவது காவல்துறை குறுக்கீடு இல்லாமல் நடைபெறும் என்று நம்புகிறேன்.

ஸ்டெரிலைட் ஆட்டம் ஆரம்பமா?

இன்று காலை ஹிந்து நாளிதழில் பார்த்த செய்தி இது.ஸ்டெரிலைட் நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவரையும் பணிக்கு திரும்பும்படி அழைத்துள்ளது. ஊழியர் குடியிருப்பிற்கு வருமாறும் அவர்களுக்கான கைரேகை வருகைப் பதிவு இயந்திரம் அங்கே இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு வெறுமனே சம்பளம் தர முடியாது என்றும் அவர்கள் சும்மா இருப்பதை தவிர்க்க வேறு பணிகள் அளிக்கப்போவதாகவும் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அச்செய்தி சொல்கிறது.

உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள வேறு என்ன மாற்று வேலை தர முடியும்? 

தொழிற்சாலையை மீண்டும் திறக்கும் சதியின் முதல் கட்டமா இது?

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம்.

வேதாந்தா - மோடி - எடுபிடி  திருட்டுக் கூட்டணி என்ன வேண்டுமானாலும் செய்யும் . . .

Sunday, July 15, 2018

மோடி முஸ்லீம் பெண்களின் காவலரா?காங்கிரஸ் கட்சி முஸ்லீம் பெண்களுக்கு எதிரானது என்று கடுமையாக விமர்சித்துள்ள 

நரேந்திர மோடி முஸ்லீம் பெண்களின் காவலரா?

குஜராத் கலவரத்தில் எண்ணற்ற முஸ்லீம் பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்ய்க் காரணம் யார்?

கலவரத்தின் மூலம் நூற்றுக்கணக்கான முஸ்லீம் பெண்கள் விதவையாகி வாழ்க்கையை தொலைக்க யார் காரணம்?

சரிகிற செல்வாக்கை சமாளிக்க இஷ்ரத் ஜஹான் எனும் முஸ்லீம் பெண்ணை போலி எண்கவுண்டரில் கொன்றது யார்?

குஜராத் அகதிகள் முகாமை குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்று சொல்லி முஸ்லீம் பெண்களை இழிவு படுத்தியது யார்?

ஆசிபா வழக்கில் குற்றவாளிகளை பாதுகாக்க முயல்வது யார்?

இவ்வளவு மோசமான ஒரு குற்றவாளி அடுத்தவர்களை இழிவு படுத்துவது மிகவும் கேவலம்.

எல்லாம் சரி,

முஸ்லீம் பெண்களுக்காக இவ்வளவு கவலைப்படும் கேடு கெட்ட  மோடி, முதலில் தான் தாலி கட்டி பின்பு கை விட்டு விட்ட தனது மனைவி பற்றி கவலைப்படட்டும்.

அவரோடு வாழட்டும்

அல்லது

அதிகாரபூர்வமாக விவாகரத்து செய்யட்டும்.

அதன் பின்பு 

மற்ற பெண்கள் குறித்து கவலைப்படட்டும் . . .

மானம் காக்கும் மங்கையர் வளர்க . .

சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று இந்தியாவின் மானத்தை காக்கும் மங்கையர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் வளர்க


Saturday, July 14, 2018

கர்ஜிக்கும் சிம்மத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்தமிழக அரசியலில் நேர்மையின் அடையாளம்,
எளிமையின் சின்னம்,
போராட்ட உணர்வின் முன்னுதாரணம்,
தியாகத்தின் மறு உருவம்
இடதுசாரிகளின் ஆதர்ஸம்
இப்போதும் மேடைகளில்
சிம்மமாய் கர்ஜிக்கும்
மரியாதைக்குரிய 
தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Friday, July 13, 2018

இன்றைய கோட்டா முடிந்ததா, எடுபிடியாரே?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அவர்களின் முகநூல் பதிவை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

எடுபிடியாருக்கு மோடியாரிடம் நல்ல பெயர் வாங்க இப்படிப் பட்ட கேவலமான பிழைப்பு தேவைப்ப்டுகிறது போல . . . 

ஆமாம், இந்த பிரச்சினை தொடர்பாக செயல் தலைவர் ஏதாவது அறிக்கை விட்டுள்ளாரா?சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை ஆவாரம்பாளையம் குடிநீர் குழாய்க்கு மாதர் சங்க சார்பில் இறுதி சடங்கு செய்த மாபெரும் குற்றத்துக்காக எங்களை காவல்துறை கைது செய்துள்ளது!!

இனி அவர் "டாக்டர் ஜியோ" மோடி !!!!!!!!!


மோடிக்காக அம்பானிக்கு நான் எழுதியுள்ள மடல் . . .

அம்பானி சார்,

நான்கு வருடங்களாக மோடி உங்களுக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

உங்கள் லாபம் அதிகரிப்ப்பதற்காகவே அரசின் கொள்கைகளை எல்லாம் வடிவமைத்துள்ளார்.

உங்கள் ஜியோ தொலைபேசியின் மாடலாக ரேம்ப் வாக் தவிர  மற்ற அனைத்தும் செய்திருந்தார்.

எல்லாவற்றையும் விட நீங்கள் இன்னும் துவங்காத கல்வி நிறுவனத்திற்கு தலை சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம் கொடுத்துள்ளாரே, அந்த கருணையுள்ளத்தைப் பாராட்ட வார்த்தைகள் இல்லாமல் நான் தவிக்கிறேன்.

உங்களுக்காகவே தன் பிரதமர் பதவியை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அந்த மனிதப் புனிதருக்கு நீங்கள் என்ன கைமாறு செய்துள்ளீர்கள்?

ஏன் கோபப்படுகிறீர்கள்?

மோடியின் உல்லாச வாழ்விற்கும் அவர் கட்சியின் கஜானா நிரம்பி வழிவதற்கும் நாங்கள் அள்ளி வீசுகிற நிதிதானே காரணம்! எங்களுக்கான எந்த பயனும் பிரதி உபகாரம் இல்லாமல் செய்யப் பட்டதில்லை என்று சொல்கிறீர்கள்.

அது சரிதான்.

எல்லாம் டீலிங்தான்.

ஆனாலும் டீலிங்கைத் தாண்டிய சில விஷயங்களும் வாழ்க்கையில் உண்டு.

"என் கடன் முதலாளிகளுக்கு பணி செய்வதே"  என்று அவர் இருப்பதால் நாங்கள் அவரை கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறோம்.

அந்த புண்பட்ட மனதிற்கு ஒரு ஆறுதல் தர உங்களால் முடியும்.

ஆம்

உங்கள் ஜியோ பல்கலைக்கழகத்தின் மூலம் அவருக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுங்கள்.

சாதாரண கௌரவ டாக்டர் பட்டம் அல்ல.

எப்படி துவக்கப்படாத உங்கள் நிறுவனத்திற்கு அவர் தலை சிறந்த நிறுவனம் என்று ஒரு ஸ்டேட்டஸ் கொடுத்தாரோ 

அது போல

நீங்களும் அவருக்கு ரெஸ்டார்ஸ்பெக்டிவ் எஃபெக்டில் ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து விடுங்கள்.

விண்வெளி ஆராய்ச்சி
அல்லது 
அணுசக்தி ஆராய்ச்சி
அல்லது
பிளாஸ்டிக் சர்ஜரி ஆராய்ச்சி

போன்றவற்றில் ஆராய்ச்சி செய்து மோடி டாக்டர் பட்டம் பெற்றார் என்று ஆவணங்களை உருவாக்கி விடுங்கள்.

இந்த டகால்டி வேலைகள் செய்வதில் பாஜக ஆட்கள் உதவுவார்கள்.

ஒரே ஒரு வேண்டுகோள்.

வரலாற்றுத்துறைக்கு மட்டும் கொடுத்து விடாதீர்கள்.

அது மிகப்பெரிய காமெடியாகி விடும்.

பி.கு ; அப்படியே அந்த ஸ்மிர்தி இராணி அம்மையாருக்கும் ஒரு எம்.பில் டிகிரியாவது கொடுத்திருங்க . . .


Thursday, July 12, 2018

உண்டியல் குலுக்கிகள்தான் . . .முதலாளிகளுக்கான கட்சி இல்லை.
முதலாளிகள் யாரும் கூட கட்சியில் இல்லை.
ஏழை எளிய மக்களும் விவசாயிகளும் 
தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும்
மட்டுமே இருக்கிற கட்சி.

முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்பதுமில்லை.
அவர்களிடம் நிதி கேட்டு கெஞ்சுவதுமில்லை.
ஆட்சியில் இருந்த மாநிலங்களிலும் கூட
ஊழல் செய்து கட்சியின் கஜானாவை நிறைத்ததுதில்லை.

ஏழை எளிய மக்களின் கோரிக்கைகளுக்காக
போராடும் கட்சி, அவர்களிடம்தான் நிதி கேட்டு
உண்டியலேந்தி நிற்கும். அவர்கள் தரும்
ரூபாய்களும் சில்லறைகளும்தான் 
என்றுமே நிதியாதாரம்.

எங்களை எள்ளி நகையாட 
உண்டியல் குலுக்கிகள் என்று
அழைக்கலாம்.

அதுதான் எங்களுக்கு பெருமை.
அதுதான் எங்கள் நேர்மையின் அடையாளமும்.

ஆனால் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்.

நீட் தேர்வில் வழக்கு தொடுத்து 196 மதிப்பெண்
பெற்றுத்தந்ததும் ஒரு உண்டியல் குலுக்கிதான்.

எட்டு வழிச்சாலையெனும் பெயரிலே
நிலத்தைப் பறிக்காதே என்று
அன்றாடம் அடிவாங்கி 
கைதாவதும் கூட 
உண்டியல் குலுக்கிகள்தான்.

என் நிலம் ,என் உரிமை என
நாளை நெடும் பயணம் செல்லப்போவதும்
உண்டியல் குலுக்கிகள்தான்.

உண்டியல் குலுக்கிகள் முன்னெடுக்கும்
இயக்கங்களை எட்டிப்பார்க்காதவர்கள்
யாரென்று பாருங்கள். ஏனென்று சிந்தியுங்கள்.

Tuesday, July 10, 2018

கூகிள் நோயாளிகள்
வாட்ஸப்பில் வந்தது.

இணைய தளத்தில் அறைகுறையாகப் படித்து மருத்துவர்களை பாடாய்படுத்தும் நோயாளிகள் பற்றியது. ஆங்கிலத்தில் அப்படியே கொடுப்பதுதான் சுவாரஸ்யம் என்பதால் தமிழாக்கம் செய்ய முயற்சிக்கவில்லை.

இந்த மருத்துவரை குடும்பத்தின் பலகார வணிகத்திற்கு துரத்தியது போல எத்தனை மருத்துவர்களை கூகிள் நோயாளிகள் மருத்துவத் துறையிலிருந்து துரத்தினார்களோ?

Patient - I have fever, headache, cough & cold. I've taken some basic medicines for the same.

Doctor - Which ones?

Patient - 
"• Paracetamol
• Amoxicillin
• Levocetrizine
• Theophylline
• Montelukast
• Bromhexine
• Ibuprofen"

Doctor -" Someone please give me an Alprazolam!"

Patient - Relax doctor. Alprazolam is an anxiolytic. It may not help you right now. You're suffering from an Intermittent Explosive Disorder (IED). A selective Serotonin Reuptake Inhibitor like Escitalopram will work better.

Doctor - Someone give me passive euthanasia!

Patient - Passive Euthanasia requires you to sign a 'living will' in advance. Besides, you're not even terminally ill. Now can we please talk about my fever?

Doctor (calls his father) - Papa, I'm joining our family's  snacks  business from tomorrow! 

*Google patients*..

பாஜக விற்கு எல்லாம் பொருந்துது . . .நேற்றைய பதிவில் 

பாஜக கிரிமினல்களால் கிரிமினல்களுக்காக நடத்தப்படும் கிரிமினல் கட்சி

என்று எழுதியிருந்தேன்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இன்னும் பல விஷயங்களும் பாஜகவிற்கு பொருந்துகிறது.

பொய்யர்களால் பொய்யர்களுக்காக நடத்தப்படும் பொய்யர் கட்சி.

முதலாளிகளால் முதலாளிகளுக்காக நடத்தப்படும் முதலாளிகள் கட்சி

திருடர்களால் திருடர்களுக்காக நடத்தப்படும் திருடர்கள் கட்சி

மத வெறியர்களால் மத வெறியர்களுக்காக நடத்தப்படும் 
மத வெறிக்கட்சி
வேலூர் கலகமல்ல, புரட்சி என மாற்றுக . . .


இந்திய வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். இருநூற்று ஒன்பது ஆண்டுகள் முன்பு இந்த நாளில்தான் வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் நடந்தது. வெயிலூர் என இன்று சிலர் கிண்டல் செய்கின்றனரே, அந்த வேலூர்தான் இந்திய சுதந்திரத்தின் முதல் முழக்கம் எழுப்பப்பட்டது என்பதை எத்தனை பேர் அறிவார்?

இந்த நாளில் ஆம் ஜூலை மாதம் பத்தாம் தேதி,

இருநூற்று ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆம் 1806 ம் வருடம்,

நடந்த சம்பவம் அது. இந்தியராய்ப் பிறந்தவர், தமிழராய் வாழ்பவர் கண்டிப்பாய் அறிந்து கொள்ள வேண்டிய உணர்வூட்டும் நிகழ்வு அது.

வாருங்கள், கொஞ்சம் வேலூர் கோட்டை வரை சென்று வரலாம்.

பிரிட்டிஷ் ராணுவத்தின் நான்கு படைப் பிரிவுகள் வேலூரில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்திய வீரர்களும் பிரிட்டிஷ் வீரர்களும் இணைந்த படை அது. சம வேலைக்கு சம ஊதியம் என்பது இப்போதே இல்லாத போது அந்தக் காலத்தில் எப்படி இருக்கும்! பிரிட்டிஷ் வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே ஊதியத்தில், சலுகைகளில், உரிமைகளில் என எல்லாவற்றிலும் ஏராளமான வேறுபாடுகள் இருந்தன. இழிவாக நடத்தப்பட்டார்கள். காரணங்கள் தேடித் தேடி தண்டனை கொடுக்கப்பட்டார்கள்.

எத்தனை நாட்கள் குமுறல்கள் மனதிற்குள்ளேயே அடங்கிக் கிடக்கும்? உணர்வுள்ள வீரர்கள் அடிமைத்தளையை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்? பிரிட்டிஷ் படையிலிருந்த இந்திய வீரர்கள் இந்து முஸ்லீம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒன்றுபட்டார்கள். நம்மை அடக்கியாளும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். வேலூர் கோட்டையில் ராணுவமும் இருந்தது. ஒரு மாளிகையும் சிறையாக மாற்றப்பட்டு அங்கேதான் பிரிட்டிஷாரை அச்சுறுத்திய மாவீரன்  திப்பு சுல்தானின் வாரிசுகளும் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்.

சிறைக்குள்ளேயே திப்பு சுல்தானின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தனர். நாள் குறிக்கப்பட்டது. தாக்குதலுக்கு தயாராக இருந்தார்கள். ஒற்றனோ இல்லை உள்ளேயே இருந்து காட்டிக் கொடுத்த துரோகியோ, யார் மூலமாகவோ செய்தி பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குச் சென்று விட்டது.

அதனால் திட்டமிட்ட நாளுக்கு முதல் நாளே இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் வீரர்களையும் தாக்கத் தொடங்கினர். யாருக்கு இத்தனை நாள் சல்யூட் அடித்துக் கொண்டிருந்தார்களோ, யாருடைய உத்தரவுக்கு அடிபணிந்து அடிமைச் சேவகம் செய்து கொண்டிருந்தார்களோ, அவர்களை அந்த பிரிட்டிஷ் அதிகாரிகளை தாக்கினார்கள். முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே வெட்டிக்கொள்ளும் என்று சொன்னார் மாமேதை காரல் மார்க்ஸ். பிரிட்டிஷ் படையின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அவர்களையே குறி பார்த்து சுட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வெள்ளை அதிகாரிகளும் சிப்பாய்களும் இறந்து போயினர். வேலூர் கோட்டை இந்திய வீரர்களின் கைகளுக்கு, கட்டுப்பாட்டிற்கு வந்தது.

இங்கிலாந்து சாம்ராஜ்யத்தின் யூனியன் ஜாக் கொடி வேலூர் கோட்டையின் கொத்தளத்திலிருந்து கீழே இறக்கப்பட்டது. இந்திய சிப்பாய்கள் அடைந்த வெற்றியின் அடையாளமாக திப்பு சுல்தானின் புலிக் கொடி அங்கே ஏற்றப் பட்டது. நினைவில் கொள்ளுங்கள். சூரிய அஸ்தமனமே கண்டிராத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்று வர்ணிக்கப்பட்ட இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் கொடி முதலில் கீழிறக்கப்பட்டது வேலூரில்தான். காலனியாதிக்கத்தின் அஸ்தமனத்திற்கு தொடக்கவுரை எழுதப்பட்டது வேலூர் கோட்டையில்தான்.

துரதிர்ஷடவசமாக இந்த வெற்றியும் மகிழ்ச்சியும் நீடித்தது ஒன்பது மணி நேரம்தான். அருகிலிருந்த ஆற்காட்டிலே குவிக்கப்பட்டிருந்த பெரும்படை வேலூர் நோக்கி விரைந்தது. கர்னல் கில்லஸ்பி என்ற தளபதியின் தலைமையில் வந்த படையின் முன்னே இந்திய சிப்பாய்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. நானூறுக்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். பிடிபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்களை பீரங்கிகளின் வாயில் கட்டி வெடிக்கச் செய்து சிதறடித்துக் கொன்றான் கில்லஸ்பி. வேலூர் கோட்டையைச் சுற்றி ஓடும் அகழி முழுதும் இந்திய வீரர்களின் குருதியால் சிவப்பானது. ரத்த ஆறுதான் ஓடியது.

பிரிட்டிஷ் அரசு எழுதிய வரலாறு இத்தியாகத்தை “வேலூர் சிப்பாய் கலகம்” என்றுதான் பதிவு செய்திருந்தது. சுதந்திர இந்தியாவின் அரசும் தனது ஆவணங்களில் கலகம் என்றே குறிப்பிட்டு வந்தது. “வேலூர் சிப்பாய் புரட்சி” என்றே அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.2006 ம் ஆண்டு வேலூர் சிப்பாய்கள் புரட்சியின் இருநூறாவது ஆண்டின் போதுதான் தமிழக அரசு அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

வேலூர் சிப்பாய்ப் புரட்சி இரண்டு முக்கியமான படிப்பினைகளைத் தருகிறது.

இந்திய வீரர்களின் முயற்சி தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் பின்னாளில் உருவான எழுச்சிக்கு இவர்கள்தான் உரமாய் இருந்தார்கள். எவராலும் தோற்கடிக்க முடியாதவர்கள் என்று கருதப்பட்ட இங்கிலாந்து ராணுவத்தையும் வெல்ல முடியும் என்று நிரூபித்தவர்கள் வேலூர் சிப்பாய்கள். இந்து சிப்பாய்களும் முஸ்லீம் சிப்பாய்களும் ஒற்றுமையாய் போராடி மத நல்லிணக்கத்திற்கு உதாரணம் படைத்தார்கள்.

இன்றுள்ள சூழலில் இந்திய சுதந்திரமும் கேள்விக்குறியாக மாற்றப்பட்டு வருகிறது. ஒரு கிழக்கிந்திய கம்பெனியின் இடத்தில் பல பன்னாட்டுக் கொள்ளைக் கம்பெனிகள். விளைவுகள் என்னவென்று தெரியாமல் கிழக்கிந்திய கம்பெனியை வணிகம் செய்ய முகலாய அரசர் ஜஹாங்கீர் அனுமதித்தார். கடைசியில் அவரது வம்சத்தின் இறுதி வாரிசு “பகதூர் ஷா” வை வெள்ளையர்கள் ரங்கூனுக்கு நாடு கடத்தினார்கள்.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் தெரிந்தே செய்கிறார்கள். ஆனால் அவர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள். சொந்த நாட்டிலேயே அடிமைகளாக நாம்தான் மாற்றப்படுவோம்.

மத நல்லிணக்கத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலும் இப்போது உருவாகி உள்ளது. ஒற்றுமையை சிதைப்பதற்கென்றே பல விரியன் பாம்புகள் அங்கங்கே விஷம் கக்கி வருகின்றன.

சுதந்திரத்தையும் மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்போம். அதற்கு எதிரான சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களை முறியடிப்போம் என்று நாம் ஒவ்வொருவரும் சபதமெடுப்பதே இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் இன்னியிரை ஈந்த வேலூர் சிப்பாய்களுக்கு நாம் செய்யும் மரியாதை.

வேலூர் சிப்பாய்ப் புரட்சி வீரர்களுக்கு வீர வணக்கம்
சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

வரலாற்றில் வேலூர் சிப்பாய் புரட்சி, கலகம் என்று அழைக்கப்படுவது பற்றி இப்பதிவில் எழுதியுள்ளேன். அதனை புரட்சி என்று மாற்றுவதாக அரசு 2006 ம் ஆண்டு ஒப்புக் கொண்டது. 

இன்று எங்கள் சங்கத்தின் சார்பில் சிப்பாய் புரட்சி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது தியாகிகள் ஸ்தூபியில் "சிப்பாய் கலகம்" என்றுதான் இப்போதும் உள்ளது. 

நம்மை அடிமைப்படுத்தியவன் பயன்படுத்திய வார்த்தையை விடுதலைக்குப் பின்பும் பயன்படுத்த வேண்டுமா?

கலகத்தை நீக்கி புரட்சியை இணைத்திட வேண்டும். செய்யுமா இந்த அரசு?

ஆஸிபா வழக்கு - எஸ்கேப்பிற்கா மறுப்பு????


காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் சின்னஞ்சிறு மலர் ஆஸிபாவை மதவெறிக் குண்டர்கள் சிதைத்த கொடூரத்தையும் குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என காவிக்கூட்டம் தேசியக் கொடியோடு ஊர்வலம் போனதையும் யாரும் மறந்திருக்க முடியாது.

அந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகு பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நடைபெற்று வருகிறது. 

குற்றவாளிகள் ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்காக கத்துவாவிலிருந்து குர்தாஸ்பூருக்கு கூட்டி வர வேண்டியுள்ளது. இதற்கான நடைமுறைகளால் வழக்கு விசாரணைக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. எனவே அவர்களை குர்தாஸ்பூர் சிறைக்கு மாற்ற வேண்டும் என ஆஸிபா குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநில அரசு வழக்கறிஞர் இதனை ஏற்றுக் கொள்ள மத்தியரசின் உதவி தலைமை வழக்கறிஞர் மட்டும் மிகக் கடுமையாக எதிர்த்துள்ளார்.

ஏன் சார்?

கத்துவாவிலிருந்து குர்தாஸ்பூர் வருகிற வழியில் குற்றவாளிகளை தப்ப வைக்கிற திட்டம் ஏதாவது வைத்திருந்தீர்களா?

சட்டபூர்வமாக விடுவிக்க முடியாத காரணத்தில் இப்படிப்பட்ட வேலைகள் செய்வது ஒன்றும் பாஜக ஆட்களுக்கு புதிதல்லவே! 

கிரிமினல்களால் கிரிமினல்களுக்காக நடத்தப்படும் கிரிமினல் கட்சிதானே பாஜக!!!!

Sunday, July 8, 2018

இது இடைக்கால அறிக்கை . . .

தோழர் இ.பா.சிந்தன் ஆரம்பித்தார்.

இன்னும் பல தோழர்களும் தொடர்ந்தார்கள்.

என்னாலும் ஆவலைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

நானும் இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

ஆம். ஜனவரி தொடங்கி ஜூன் வரை இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் படித்த நூல்களின் பட்டியலை அவர் முகநூலில் பகிர்ந்து கொள்ள, மற்ற சில தோழர்களும் தொடர, நானும் அந்த ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்.

நேற்று வரை படித்து முடித்த நூல்களின் பட்டியல் இது. ஏழு தினங்கள் அதிகரித்ததால் இரண்டு நூல்களும் கூட அதிகரித்துள்ளது.

படிக்கும் நூல்கள் பற்றிய விபரங்களை பதிவு செய்து கொள்ளும் பழக்கத்திற்கு முன்னோடியான தோழர் ச.சுப்பாராவிற்கு நன்றி.

படித்ததை விட படிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் இன்னும் அதிகம். பார்ப்போம், ஆண்டு முடிவதற்குள் அந்த பட்டியலின் எண்ணிக்கை குறைந்து விடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 

நம்பிக்கையோடுதானே வாழ்க்கையில் அனைத்தையும் அணுக வேண்டியுள்ளது !!!!


எண் தலைப்பு ஆசிரியர் பக்கம்
1 தனிமையின் வீட்டிற்கு எஸ்.ராமகிருஷ்ணன் 158
  நூறு ஜன்னல்கள்    
2 காட்சிகளுக்கு அப்பால் எஸ்.ராமகிருஷ்ணன் 80
3 பலூன் ஞானி 96
4 கபாடபுரம் நா.பார்த்தசாரதி 210
5 மாயக்குதிரை தமிழ்நதி 168
6 மிளிர் கல் இரா.முருகவேள் 270
7 சொற்களைத் தேடும்  ச.சுப்பாராவ் 96
  இடையறாத பயணம்    
8 சிவந்த கைகள் சுஜாதா 136
9 மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா 104
10 6961 சுஜாதா 72
11 ஓரிரவு ஒரு ரயிலில் சுஜாதா 46
12 குறத்தியம்மன் மீனா கந்தசாமி 234
    தமிழில் பிரேம்  
13 ரத்தினக்கல் சத்யஜித்ரே 48
    தமிழில் வீ.பா.கணேசன்  
14 வேதபுரத்தார்க்கு கி.ராஜநாராயணன் 184
15 பக்கத்தில் வந்த அப்பா ச.தமிழ்ச்செல்வன் 160
16 பத்துக் கிலோ ஞானம் இரா.எட்வின் 92
17 வெட்டாட்டம் ஷான் 266
18 ஊழல் உளவு அரசியல் சவுக்கு சங்கர் 223
19 எட்டு கதைகள் ராஜேந்திரசோழன் 96
20 வைகை நதி நாகரீகம் சு.வெங்கடேசன் 151
29 உழைப்போரின் உரிமைக் கே.பி.ஜானகியம்மாள் 47
  குரலாய்    
30 பெண்களும் சமூக நீதியும் பேரா.சோ.மோகனா 32
31 மீரட் சதிவழக்கு முசாபர் அகமது 24
32 சேரமான் காதலி கண்ணதாசன் 680
33 பிரியங்கா நளினி சந்திப்பு பா.ஏகலைவன் 610
34 செம்புலம் இரா.முருகவேள் 320
35 கீழைத்தீ பாட்டாளி 352
36 வாங்க சினிமாவைப் பற்றி கே.பாக்யராஜ் 142
37 போய் வருகிறேன் கண்ணதாசன் 240
38 நினைவுகளில் என் இனிய பி.ஸ்ரீரேகா - தமிழில் 64
  தோழர் ஈ.கே.நாயனார் மு.சுப்ரமணி  
39 தோழர்கள் மு.இராமசுவாமி 80
40 முதல் மதிப்பெண் எடுக்க நா.முத்துநிலவன் 166
  வேண்டாம் மகளே    
41 ஏழரைப்பங்காளி வகையறா எஸ் . அர்ஷியா 372
42 கர்ப்ப நிலம் குணா. கவியழகன் 336
43 அரசு ஊழியர் இயக்க  நெ.இல.சீதரன் 560
  வரலாற்றில் M.R.அப்பன்    
44 ஆயுத எழுத்து சாத்திரி 375
45 நிறங்களின் உலகம் தேனி சீருடையான் 303
46 எழுதலை நகரம் எஸ்.ராமகிருஷ்ணன் 174
47 மூக்குத்தி காசி புலியூர் முருகேசன் 176
48 வழக்கு எண் 1215/2015 வீ.பா.கணேசன் 160
49 இன்குலாப் ஜிந்தாபாத் அறந்தை நாராயணன் 170
50 வியட்னாம் காந்தி வெ.ஜீவானந்தம் 110
51 காந்தள் நாட்கள் இன்குலாப் 142
52 ஸ்னோலின் நாட்குறிப்புகள் வெனிஸ்டா ஸ்னோலின் 32
53 ஜிகாதி ஹெ.ஜி.ரசூல் 120
54 இந்திய சுதந்திரப் போரும் பி.ஆர்.பரமேஸ்வரன் 63
  கப்பற்படை எழுச்சியும்    
55 அப்போதும் கடல் எஸ்.ராமகிருஷ்ணன் 174
56 தப்பாட்டம் சோலை சுந்தரப்பெருமாள் 318
       
      9232