தோழர் ரவி பாலேட் வரைந்த அருமையான ஓவியம்.
அது சொல்லும் உண்மையை தாங்க முடியாத சங்கிகள் அவர் மீது ஆபாச வாந்தியை கக்கிக் கொண்டிருக்கின்றனர்.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
தோழர் ரவி பாலேட் வரைந்த அருமையான ஓவியம்.
அது சொல்லும் உண்மையை தாங்க முடியாத சங்கிகள் அவர் மீது ஆபாச வாந்தியை கக்கிக் கொண்டிருக்கின்றனர்.
டிமோ நடத்திய காட்டுமிராண்டித்தனமான கலவரத்தில் குடும்பத்தினரை கண் முன்னே இழந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பில்கிஸ் பானுவின் துயரத்துக்கு காரணமான கயவர்களை விடுதலை செய்தது குஜராத் பாஜக அரசு.
அந்த முடிவு செல்லாது என்றும் அந்த அயோக்கியர்கள் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பில்கிஸ் பானு, மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர் தோழர் சுபாஷினி அலி உள்ளிட்ட ஐவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இது.
நீதிபதிகள் குஜராத் அரசை கடுமையாக சாடியுள்ளனர். இறுதியாக நீதி கிடைத்தது மகிழ்ச்சி.
ஒரே ஒரு நெருடல் இருக்கிறது.
மகாராஷ்டிராவில் வழக்கு நடந்ததால் முடிவெடுக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்குக் கிடையாது என்ற ஒற்றை வரியை பயன்படுதி, கட்சி மாறி ஏக்நாத் ஷிண்டேவை பயன்படுத்தி மீண்டும் கயவர்கள் விடுதலையாகக் கூடாது.
கயவர்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால்தான் நீதி நிலைக்கும் ..
குஜராத் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடிய சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் மீது சி.பி.ஐ ஒரு பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளியது. உச்ச நீதி மன்றம் தலையிட்டே பிணை கொடுத்தது.
பிணையை ரத்து செய்து அவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் 1000 பக்க உத்தரவு போட அதனை நேற்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
"ஆயிரம் பக்கம் தீர்ப்பு படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் அதில் எந்த விஷயமும் இல்லை. முரண்பாடுகள் ஏராளமாக இருக்கிறது. சாட்சியங்களை போர்ஜரி செய்தார் என்று குற்றம் சுமத்துகிறீர்கள். அந்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட காலம் 2008 முதல் 2011 வரை. இத்தனை நாள் சும்மா இருந்து விட்டு 2022 ல் குற்றம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? "
என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடிந்து கொண்டுள்ளனர். குஜராத்தை குறை சொல்வதென்றால் அது டிமோவை சொல்வதாகும்.
தைரியமான நீதிபதிகள்தான்.
அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நீதிபதி லோயா நினைவுக்கு வருகிறார். குஜராத் நீதிபதியை நினைக்கையில் சதாசிவம், தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பொப்டே, அருண் மிஸ்ரா ஆகியோரும் நினைவுக்கு வருகிறார்கள்.
32,000 பெண்கள் கேரளாவிலிருந்து சிரியாவுக்கு கடத்தப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்தார்கள் என்றொரு கட்டுக்கதையை அடிப்படையாகக் கொண்டு கேரளா ஸ்டோரி என்றொரு திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரதமர் பதவியில் இருப்பவர் அதற்கு கூவி கூவி விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.
இன்றைக்கொரு செய்தி வெளி வந்துள்ளது.
கேடி பில்லா முதலமைச்சராகவும் கில்லாடி ரங்கா உள்துறை அமைச்சராகவும் இருந்த குஜராத் மாநிலத்தில் ஐந்தாண்டுகளில் மட்டும் நாற்பதாயிரம் இளம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று கேடிஷா தலைமையில் உள்ள அமைச்சகத்தின் ஒரு பிரிவான தேசிய குற்ற ஆவண மையம் வெளியிட்டுள்ள அறிக்கை சொல்லும் உண்மை இது. அவர்கள் வேறு மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்காக விற்கப் படுகின்றனர் என்று சொல்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி.
அச்சுறுத்தியோ, ஆசை காண்பித்தோ அல்லது உங்க ஆளையே வைத்தோ, எல்லா வழக்குகளையும் புதைகுழியில் போட்டு மூடி விட்டீர்கள்.
நீங்கள் செய்ததை தவறென்ற வாஜ்பாய் செத்து விட்டார். உமக்காக துணை நின்ற அத்வானி வாய் திறக்கக் கூடாதென்று மிரட்டி ஒதுக்கி விட்டீர்கள்.
உண்மையை அம்பலப்படுத்திய போலீஸ்காரர்களை எல்லாம் ஜெயிலில் தூக்கி போட்டு விட்டீர்கள்.
எல்லாவற்றையும் விட கொடுமையாக இஸ்லாமியர்களை கொன்று குவித்ததையே உங்கள் சாதனை என்று கருதும் அளவிற்கு குஜராத் மக்கள் மனதில் மதவெறியேற்றி அவர்கள் உள்ளத்தில் நச்சு கலந்துள்ளீர்கள்.
இதற்கு மேலும் என்ன பயம் மோடி?
குஜராத் கலவரம் பற்றி பி.பி.சி ஒளிபரப்பினால் ஏன் தடை? அதைப் பற்றிய ட்விட்டர் பதிவுகளுக்கும் தடை?
தமிழ்நாட்டில ஆட்டுக்காரன் வீடியோ ஆதாரங்களை வைத்து கட்சிக்காரர்களை மிரட்டுகிறானே, அது போல ஏதாவது வீடியோ ஆதாரம் வெளிவரும் என்று அச்சமா?
ஆனாலும் அந்த பயம் பிடிச்சிருக்கு மோடி.
உங்கள் மார்பை சுற்றியுள்ள 56 இஞ்ச் பலூனில் பொத்தல் விழுந்து காற்று வெளியேறுவது சந்தோஷம்தான் மோடி.
அதே லாஜிக்கின் அடிப்படையில்
பார்த்தால் மோர்பி பாலம் இடிந்து 140 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது கூட பாஜக
அரசிடமிருந்து குஜராத் மாநில மக்களை காப்பாற்ற சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் கடவுள்
அனுப்பிய செய்திதானா மோடி?
குஜராத்தில் உடைந்து நொருங்கியது வெறும் தொங்கு பாலம் மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டுவதாக கதை சொல்லப்பட்ட குஜராத் வளர்ச்சி மாடலும்தான்.
புனரமைப்புப் பணிகளை தனியாரே செய்தாராம்,
பணி முறையாக நடந்ததா என்று சோதிக்கும் முன்னரே திறந்து விட்டார்களாம்.
Too much privatization என்று முன்னொரு காலத்தில் ரயில்வே விபத்தொன்றை பார்த்த பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேய்ர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
இங்கே தனியார் பாஜக கூட்டுக் களவாணித்தனம் 70 உயிர்களை பலி வாங்கி விட்டது.
தனியாருக்கு தீபாவளிக்கு முன்பு காசு பார்க்கும் வெறி.
பாஜகவிற்கு பாலத்தை திறந்து வைத்து வளர்ச்சி முகம் காட்டி ஓட்டுக்களை பறிக்கும் வெறி.
இந்த வெறிக்கு இரை 70 உயிர்கள்.
இனி எவனாவது குஜராத் மாடல் என்றால் ஆம் ஆத்மி தேர்தல் சின்னத்தால் அடியுங்கள். (அரவிந்த் கேஜ்ரிவாலும் அந்த அடிக்கு தகுதியானவர் என்பது இன்னொரு விஷயம்)
....
தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து பகிர்ந்து கொள்கிறேன்.
மோடியின் கொடூரத்திற்கு வாழும் சாட்சி இந்த பதிவில் எழுதப்பட்டுள்ள பில்கிஸ் பானு. திட்டமிட்ட கொலைகளின் சூத்திரதாரி மோடி . . .
மனிதனாகக் கூட மதிக்கப்பட முடியாத ஒரு ஜந்து பிரதமராக இருப்பதும் தேசபக்தி வஜனம் பேசுவதும் இந்தியாவின் துயரம் . . .
சினிமாக்களில் மட்டுமே பார்த்திருக்க முடிந்த கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த , 'வாழும் துயரம்' அவர்.
போரிஸ் ஜான்சன் கண்ணில் குடிசைப் பகுதிகள் தெரியக் கூடாது என்பதற்காக வெள்ளைத் துணி கட்டிய கேவலம் பற்றி நேற்று எழுதியிருந்த பதிவை படித்து ஒரு தோழர் ஒரு மீமை அனுப்பியிருந்தார்.
நான் ரசித்து சிரித்தது போல நீங்களும் ரசித்து சிரிக்க பகிர்ந்து கொண்டுள்ளேன்.
கொரோனாவுக்கு முன்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குஜராத் வந்த போது அவர் கண்ணில் படக் கூடாது என்பதற்காக குடிசைப் பகுதிகளை சுவர் கட்டி மறைத்தார்கள்.
இப்போது இங்கிலாந்து பிரதம மந்திரி போரீஸ் ஜான்சன் வந்த போது வெள்ளைத்துணி கட்டி மறைத்துள்ளார்கள்.
சுவர் கட்ட இப்போது காசு கிடையாதா?
அல்லது
எதற்கு தேவையில்லாமல் சுவருக்கு செலவு செய்ய வேண்டுமென்று வெள்ளைத்துணி கட்டினார்களா?
கடந்த முறை ட்ரம்பிற்காக நூறு கோடி செலவு செய்தார்கள். அதிலே பூ அலங்காரத்துக்காக மட்டும் செய்த ஊதாரித்தனம் மூனே முக்கால் கோடி.
அதையெல்லாம் மக்களுக்காக செலவு செய்திருந்தால் இப்போது வெள்ளைத்துணி போட்டு மறைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
வெள்ளைத்துணி மறைத்தது குடிசைகளை மட்டுமல்ல . . .
குஜராத் மாடல் என்று ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு பிம்பம் என்ற உண்மையையும் கூட.
Hide original
message
*குஜராத்தின் துயரம்...*
_(கொரோனாவால் திணறும் மோடியின் மாடல்)_
குஜராத்தின் துயரம் வெவ்வேறுதருணங்களில் வெவ்வேறு நிலைமைகளை வெளிப்படுத்துகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மதக்கலவரங்கள் எனும் துயரம் எனில் இன்று கோவிட் 19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை மக்களை அலைக்கழித்து கொண்டுள்ளது.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மத மக்களைதூண்டியவர்கள் இன்று அதே பெரும்பான்மை மக்களை காப்பாற்ற தவறியுள்ளனர். பொருளாதார ரீதியாக “அதிரும் குஜராத்தை” உருவாக்கியவர்கள் “மருத்துவப் பாதுகாப்பு குஜராத்தை”உருவாக்கத் தவறிவிட்டனர்.
பெரிய சிலைகளையும் விளையாட்டு களங்களையும் உருவாக்கி தனது பெயரையும் கூட்டு கொள்ளைக்காரர்களின் பெயரையும் சூட்டிக்கொண்டவர்கள் சிறந்த மருத்துவமனைகளை கட்ட தவறிவிட்டனர்.
விளைவு?
குஜராத் மக்கள் பெரும் துயரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
உயர் நீதிமன்றத்தின் கண்டனம்
உயர் நீதிமன்றம் “Suo moto” எனப்படும் தானாக முன்வந்து வழக்கை விசாரிக்கும் அளவுக்கு குஜராத்தில் பெருந்தொற்று மோசமான நிலைமையை அடைந்துள்ளது. ஆனால் பாஜக மாநில அரசாங்கமோ நிலைமையின் கடுமைத் தன்மையை உணர்ந்ததாக தெரியவில்லை.
பல உண்மை விவரங்களை மக்களிடமிருந்தும் நீதிமன்றத்திடமிருந்தும் மறைக்க முயல்கிறது. அரசாங்கத்தின் அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் முன்வைத்த வாதங்கள் மாநில அரசாங்கத்தின் அக்கறையின்மை மற்றும் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.
கோவிட் பரிசோதனை முடிவு வருவதற்கு ஏன்3 முதல் 5 நாட்கள் ஆகின்றன?” எனும் நீதிமன்றத்தின் கேள்விக்கு அதிக மாதிரிகள் பரிசோதனைக்கு வருவதாகவும் அதனால் தாமதம் எனவும் கூறுகிறார் அட்வகேட் ஜெனரல்!
ஆனால், நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை.
தொற்று குறைவாக இருந்த காலத்திலேயே ஏன் பரிசோதனை மையங்களை அதிகப்படுத்தவில்லை? இரண்டாவது அலை சாத்தியம் உண்டு எனும் எச்சரிக்கைகளை நீங்கள் உள்வாங்கவில்லையா என நீதிபதிகளின் கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை!
கோவிட் நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை ஏன் குறைவாக உள்ளது? எனும் கேள்விக்கு மக்கள் சில மருத்துவமனைகளை மட்டுமே அணுகுகிறார்கள் எனவும் போதுமான படுக்கைகள் உள்ளன எனவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.
ஆனால், நீதிபதிகள் அதனை ஏற்கவில்லை.
போதுமான படுக்கைகள் உள்ளன எனில்ஏன் நீண்ட வரிசைகளில் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நிற்கின்றன? என நீதிபதிகள் எதிர் கேள்வி கேட்டனர்
.“நீங்கள் எல்லாமே நன்றாக உள்ளன என கூறுகிறீர்கள்! ஆனால் எங்களிடம் உள்ள விவரங்கள்நேர்மாறான செய்திகளை வெளிப்படுத்துகின்றன” என நீதிபதிகள் கூறினர்.
அடுத்து அவர்கள் கூறியதுதான் குஜராத் பாஜக அரசாங்கத்தின் மீதான மிகப்பெரிய கண்டனம் ஆகும்.
“மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர். கடவுளின் கருணைதான் தங்களை காப்பாற்ற இயலும் எனும் நிலையில் மக்கள் உள்ளனர்.”இதைவிட பெரிய கண்டனம் ஏதாவது இருக்க முடியுமா?
நீதிமன்றத்தின் கண்டனங்கள் கோபத்தில் எழுந்தவை அல்ல!
குஜராத்தின் உண்மை நிலைமை அதுதான்!
வழக்கம் போல இந்த செய்திகளை கட்டுப்படுத்த குஜராத் அரசாங்கம் முயல்கிறது; ஜால்ரா போடும் ஊடகங்களும் ஒத்துழைக்கின்றன. ஏனெனில் பிரதமர் ஆண்ட மாநிலம் அல்லவா!
குஜராத் மக்களின் அவலங்கள்
குஜராத் மக்கள் படும் துன்பங்கள் குறித்து பத்திரிக்கையாளர் தீபல் திரிவேதி கீழ்கண்டவாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்:
“குஜராத் மக்கள் படுக்கைகளுக்கும்/ஆக்சிஜனுக்கும்/ரெம்டெஸ்வீர் மருந்துக்கும் கெஞ்சிக் கொண்டுள்ளனர்.
உலகிலேயே மிகப்பெரிய மைதானங்களும் சிலைகளும் நமக்கு தேவை இல்லை. நமது அடிப்படை உரிமையான மருத்துவ சிகிச்சையேநமக்கு தேவை!
இப்பொழுதெல்லாம் குஜராத்தில் “அதிர்வதற்கு” எதுவுமே இல்லை.”
அவர் சில வார்த்தைகளை சேர்த்து இருக்கலாம்!
“குஜராத்தில் அதிர்வதற்கு எதுவுமே இல்லை. மக்களின் ஓலமும் மரணங்களும் தவிர!”
இன்னொரு டுவிட்டர் பதிவில் தீபல் திரிவேதி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:“எனது மாநிலம் குஜராத் பற்றி எனக்கு எப்பொழுதுமே பெருமை உண்டு. ஆனால், நான் இப்பொழுது என்ன நினைக்கிறேன் என்றால், குஜராத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டியதற்கு பதிலாக அல்லது ஒற்றுமை சிலைக்கு செலவழித்ததற்கு பதிலாக, அரசு மருத்துவமனைகளை கட்டியிருக்கலாம்!
பவ நகரில் உள்ளமாநிலத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் உள்ளநிலையை பாருங்கள்.குஜராத் மாடல் என்பது பெருமைபடக்கூடிய ஒன்று அல்ல!”
குஜராத் மாடல் என்பது மக்களுக்கானது அல்ல!
அது அதானி/ அம்பானிகளுக்கானது என்பதை இடதுசாரிகளும் முற்போக்காளர்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கூறிவருகின்றனர். குஜராத் மக்கள் இப்பொழுதாவது அதனை உணர்ந்தால்அவர்களுக்கும் தேசத்துக்கும் நல்லதுதான்!
குஜராத் நிலைமை குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
குஜராத்தின் பெருந்தொற்று உண்மை நிலைமை மகாராஷ்டிரா அளவுக்கு மோசமாக உள்ளது.ஒவ்வொரு இரண்டாவது வீட்டிலும் கோவிட்நோயாளி உள்ளார். மக்களிடம் உண்மைநிலவரங்களை தெரிவித்து அவர்களை காப்பாற்றுவதற்கு பதிலாக அரசாங்கம் உண்மைகளை மறைப்பதற்கே முயல்கிறது
”மருத்துவமனைகள் முன்பு நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளுடன் அணிவகுத்து நிற்கின்றன. மருத்துவமனைகளில் தரையில்நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் மருத்துவமனையின் வெளியேநோயாளிகள் ஆக்சிஜன்சிலிண்டருடன் உள்ள கொடூரமான நிலைகளும் புகைப்படங்கள் வழியாக வெளியிடப்பட்டுள்ளன. இந்திரா பானர்ஜிஎனும் ஒரு பேராசிரியை! இவர்குஜராத் மத்தியபல்கலைக்கழகத்தில் ‘நானோ அறிவியல்” பிரிவின் தலைவர்மற்றும் மிகப்பெரிய ஆராய்ச்சியாளர். பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின்கவுரவ விரிவுரையாளர்.
அவருக்கு தொற்று நுரையீரலை பாதித்துமூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆம்புலன்சில் அவரை ஒவ்வொரு மருத்துவமனையாக கொண்டு சென்றனர். எங்குமே வென்ட்டிலேட்டர் கிடைக்கவில்லை.
இறுதியில் ஒரு மருத்துவமனையில் அடுத்த ஒரு மணிநேரத்தில் வென்ட்டிலேட்டர் கிடைக்கும் என கூறியதால் வெளியே ஆம்புலன்சில் காத்துகொண்டிருந்தார். வென்ட்டிலேட்டர் தயாராக உள்ளது என தகவல் வந்தது.
அவரை மருத்துவமனைக்குள் கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சை திறந்துபார்த்த பொழுது அவர் உயிர் பிரிந்திருந்தது. இப்படி உயிரிழந்தவர்கள் ஏராளம்!
ரெம்டெசிவீர் எனும் மருந்து குஜராத்தில் கடும் தட்டுப்பாடில் உள்ளது. இந்த மருந்து உண்மையிலேயே கோவிட் பெருந்தொற்றை குணப்படுத்துகிறதா என்பதில் இரண்டு கருத்துகள் உள்ளன.
எனினும் மக்கள் இந்த மருந்தை நம்புகின்றனர்.
சுமார் ரூ.2000 விலை உள்ள இந்த மருந்து குஜராத் கள்ளச் சந்தையில் ரூ.25,000 முதல்ரூ.40,000 வரை விற்கப்படுகிறது.
இந்த நிலையில் குஜராத் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் 5000மருந்துகளை பாஜக அலுவலகத்தில் வைத்துக்கொண்டு தனக்கு வேண்டியவர்களுக்கு விற்றுக் கொண்டுள்ளார்.
இந்த மருந்தை மருந்து கடைகளில் மட்டுமே அதுவும் மருத்துவர்களின் சீட்டு இல்லாமல் விற்கக் கூடாது என்பது விதிமுறை! ஆனால், பாஜக என்றைக்கு சட்டம் பற்றியோஅல்லது விதிமுறைகள் பற்றியோ கவலைப்பட்டுள்ளது?
ஓயாமல் எரியும் சுடுகாடுகள்!
திருச்சியில் காவிரிக்கரையில் உள்ள ஒரு சுடுகாடுக்கு ஓயாமாரி சுடுகாடு என பெயர்! ஏனெனில் பிணங்கள் இங்கு ஓயாமல் எரியூட்டப்படுவதால் இந்த பெயர் என கூறப்படுவது உண்டு!
குஜராத்தில் பல சுடுகாடுகள் இன்று 24 மணிநேரமும்ஓயாமாரி சுடுகாடுகளாக செயல்படுகின்றன. அதுமட்டுமல்ல! ஒரு நாளைக்கும் மேலாக உயிரற்ற உடலுடன் காத்திருக்கும் உறவினர்கள் பொறுமை இழந்து பொதுவெளியில் எரியூட்டுகின்றனர் எனும் அதிர்ச்சியான செய்திகளும் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன.
நோயாளி இறந்த பின்னரும் 8 முதல் 24 மணிநேரம் வரை உடல்கள் தரப்படுவதில்லை என உறவினர்கள் புகார் கூறுகின்றனர்.
ஒரு காணொளியில் தனது உறவினரின் உடல் மூன்று நாட்களாக தரப்படவில்லை என ஒருவர்கதறுகிறார். உடல் கிடைத்த பின்னர் எரியூட்டுவதற்கு மேலும் பல மணிநேரம் காத்துகிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
சூரத் நகரில் மூன்று மின்தகனங்கள் உள்ளன.ஒரு நாளைக்கு 100 உடல்கள் இங்கு எரியூட்டப்படுகின்றன. கோவிட் மரணம் எது? ஏனைய மரணம்எது? என வகைப்படுத்த நேரம் இல்லை என சுடுகாடு ஊழியர்கள் கூறுகின்றனர்.
ஒரு சுடுகாட்டில் தொடர் செயல்பாடுகள் காரணமாக சிம்னி எனப்படும் புகைபோக்கி பாதிக்கப்பட்டு, வேறு ஒன்றைஅவசரமாக நிர்மாணித்ததாக நகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இன்னொரு தகனத்தில் எரியூட்டும் அடுப்பில் உள்ள இரும்பு பாளங்கள் தொடர் எரியூட்டல் காரணமாக உருகிவிட்டன எனவும்எனவே, செயல்படாமல் உள்ளன எனவும் ஊழியர்கள் கூறியதாக ‘இந்தியா டுடே’ பத்திரிக்கை தெரிவிக்கிறது.
இதே நிலைமைதான் அகமதாபாத்நகரிலும் உள்ளன.
ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான உடல்கள் எரியூட்டப்படுகின்றன. ஆனால்குஜராத் பாஜக அரசாங்கமோ 40 முதல் 50 வரைதான் உயிரிழப்புகள் என கணக்கு சொல்கிறது.
ஜிக்னேஷ் மேவானியின் குற்றச்சாட்டு உண்மை என்பது புலனாகிறது.
குஜராத் மாடல் பொருளாதார வளர்ச்சி என்பது முற்றிலும் கார்ப்பரேட் நலனை மட்டுமே அடிப்படையாக கொண்டது. அதிலும் குறிப்பாக அம்பானி/அதானி/ கர்ஷன் பாய் பட்டேல் (நிர்மா குழுமம்)/ பங்கஜ் பட்டேல் (சன் ஃபார்மா) ஆகிய விரல்விட்டு
எண்ணக்கூடிய சிலரின் பகற் கொள்ளைக்கு வழிவகுத்ததுதான் குஜராத் மாடல்!
இவர்களில் பலர் குஜராத் கலவரங்களில் மோடிக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள்! சிலர் வாய்மூடி மவுனிகளாக இருந்தவர்கள். இந்த குஜராத் மாடலில் மக்கள் நலன் சார்ந்த எந்த சமூக முன்னேற்றமும் நிகழவில்லை.
அதில் முக்கியமான கொடூரம் என்பதுமருத்துவ கட்டமைப்புகள் என்பது அறவே புறக்கணிக்கப்பட்டன.
கோவிட் 19 முதல் அலை இதனைஅம்பலப்படுத்தியது. இப்பொழுது இரண்டாவது அலை இன்னும் கூர்மையாக இதனை அம்பலப்படுத்தியுள்ளது.
மாநில மற்றும் மத்திய பாஜக அரசாங்கங்கள் வேகமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவராவிட்டால், குஜராத் மக்கள்மிகப்பெரிய துயரங்களை சந்திக்கும் அவலம் உருவாகும் ஆபத்து உள்ளது.
கட்டுரையாளர் : _அ.அன்வர் உசேன்/ தீக்கதிர்_