Showing posts with label அர்ணாபு. Show all posts
Showing posts with label அர்ணாபு. Show all posts

Monday, December 28, 2020

செஞ்சுரி அடிப்பார் அர்ணாபு கோஸ்வாமி

தீக்கதிர் செய்தி கீழே உள்ளது.

 செல்ஃபி சவர்க்கர், வாஜ்பாய், எச்.ராசா இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளியுள்ள மோடியின் செல்லப் பிராணி அர்ணாப் கோஸ்வாமி விரைவில் மன்னிப்பு கேட்பதில் சதமடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

 உண்மை இல்லாத மனிதனுக்கு வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவும் கிடையாது. ஆகவே மன்னிப்பு கேட்பதால் அவையெல்ல்லாம் வந்து விடப் போவதில்லை.

 எனவே சதம் மன்னிப்பு அவருக்கு சாத்தியமே!

வி.டி. சாவர்க்கரை பின்னுக்குத் தள்ளினார் அர்னாப் கோஸ்வாமி.. பிரிட்டிஷ் அரசிடம் 2 மாதத்தில் 280 முறை மன்னிப்பு கேட்டு சாதனை...



புதுதில்லி:
இந்துத்துவா பேர்வழியும், ‘ரிபப்ளிக் டிவி’ முதலாளியுமான அர்னாப் கோஸ்வாமி, மன்னிப்புக் கேட்கும் விஷயத்தில் வி.டி. சாவர்க்கரை முறியடித்து சாதனை புரிந்துள்ளார்.இந்துத்துவா என்ற வெறுப்புச் சித்தாந்தத்தை, இந்தியாவில் உருவாக்கி வளர்த்தவர்களில் முக்கியமானவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர் எனும் வி.டி. சாவர்க்கர். இந்து மகாசபையை நிறுவியவர். மகாத்மா காந்தியைக் சுட்டுக்கொன்ற கோட்சே-வின் குருநாதர். 

ஆரம்பத்தில் பாலகங்காதர திலகரின் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் கலந்துகொண்ட சாவர்க்கர், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், 1911, 1913, 1921, 24 ஆகிய ஆண்டுகளில் பலமுறை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மன்னிப்புக் கடிதம் எழுதி, கெஞ்சிக் கூத்தாடி சீக்கிரத்திலேயே வெளியே வந்தார். “பரிதாபகரமான நிலையில் இருக்கும் என்மீது இரக்கம்காட்டி சிறையிலிருந்து விடுதலை செய்தால், உயிர் உள்ளவரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்வேன்” என்று அவர் எழுதிய மன்னிப்புக் கடிதங்கள் பிரசித்தி பெற்றவை. 

பின்னாளில், வாஜ்பாய் உள்ளிட்ட இந்துத்துவா வாதிகளும் இதேபோல மன்னிப்பு கேட்டு, விடுதலைப் போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்தார்கள்.தற்காலத்தில், அந்த வேலையை செய்துவருபவர் அர்னாப் கோஸ்வாமி. பாஜக ஆதரவாளரும் இந்துத்துவா ஊடகப் பேர்வழியுமான இவர், இஷ்டத்திற்கு அடுத்தவர்கள் மீது அவதூறையும் வெறுப்பையும் அள்ளி வீசுவது, பின்னர் மன்னிப்பு கேட்டு, ஜகா வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதில் அவர் தற்போது வி.டி. சாவர்க்கரையே விஞ்சி விட்டது தெரியவந்துள்ளது. அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக இந்தியாவிலேயே ஏராளமான அவதூறு வழக்குகள் இருந்தாலும், வெறுப்புப் பேச்சு, தவறான தகவல்களை பரப்பியதற்காக அண்மையில் இங்கிலாந்து நாட்டின் ஊடக கண்காணிப்பு அமைப்பு, அர்னாப் கோஸ்வாமிக்கு ரூ. 19 லட்சத்து 73 ஆயிரம் அபராதம்விதித்தது. அத்துடன் பகிரங்க மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து அர்னாப் கோஸ்வாமி ரிபப்ளிக் டிவி-யில் தனது மன்னிப்புக் கோரலை பகிரங்கமாக ஒளிபரப்பி யுள்ளார்.

ஆனால், இம்முறையையும் சேர்த்து அர்னாப் கோஸ்வாமி இதுவரை 280 முறை இங்கிலாந்து அரசிடம் மன்னிப்புக் கேட்டு மண்டியிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2020 பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் 9 வரையிலான காலக்கட்டத்தில் மட்டுமே 280 முறை அர்னாப் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்து அரசுக்கு மன்னிப்பு கடிதங்கள் எழுதியதில், சாவர்க்கரை அர்னாப் பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளார்.இதையடுத்து 5 மன்னிப்புக் கடிதங்களை எழுதிய சாவர்க்கருக்கு ‘வீர்’ சாவர்க்கர் என்று பட்டம் கொடுத்த மோடி அரசு, அர்னாப்பிற்கு என்ன விருது கொடுக்க உத்தேசித்துள்ளது, மகாவீர் கோஸ்வாமியா அல்லது பரம்வீர் கோஸ்வாமியா? என்று சமூகவலைதளங்களில் பலரும் கிண்லடித்து வருகின்றனர்.

Friday, October 9, 2020

திநேஷனுக்கு தெரியனும் அர்ணாப்பு

 


"ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி, தான் விழுமாம் கழுநீர்ப்பானைக்குள்ள" 

என்ற கதையாக

நீதி, நேர்மை, நியாயம், வெளிப்படைத்தன்மை என்றெல்லாம் எப்போதும் கதை அளக்கும் குடியரசு டிவி அர்ணாபு செய்த ஊழல் முறைகேடு இப்போது அம்பலமாகி உள்ளது.

டி.ஆர்.பி ரேட்டிங் எப்படி கணக்கிடப் படுகிறது என்பதை முதலில் பார்ப்போம். 

தொலைக்காட்சிகள், விளம்பர ஏஜென்சிகள், விளம்பர நிறுவனங்கள், ஆகியோரின் அமைப்பான BROADCAST AUDIENCE RESEARCH COUNCIL என்றை அமைப்பின் ஒரு அங்கமான INDIAN TELEVISION AUDIENCE MONITORING  TEAM  ஆயிரம் வீடுகளுக்கு ஒரு வீடு என்று தேர்ந்தெடுத்து ஒரு கருவியை பொருத்தும். அந்த வீடுகளில் பார்க்கும் நிகழ்ச்சிகளை கணக்கில் கொண்டே டி.ஆர்.பி ரேட்டிங் என்பது முடிவாகும்.

எந்தெந்த வீடுகளில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது ரகசியமாக இருக்கும். 

இங்கேதான் அர்ணாபு தன் செல்வாக்கை பயன்படுத்துகிறார். என்ன இருந்தாலும் அவர் மோடியின் செல்லப் பிராணி அல்லவா!

கருவி பொருத்தப்பட்ட வீடுகளின் விபரம் அவருக்கு கிடைக்கிறது. அந்த வீடுகளுக்கு மாதம் ஒரு தொகை கொடுக்கப்பட்டு குடியரசு டிவியே எப்போதும் ஓடிக் கொண்டிருப்பது போல ஏற்பாடு செய்கிறார்.

குடியரசு டிவி மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு மராத்தி சேனல்களும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

யப்பா, அர்ணாபு, தி நேஷனுக்கு நீ எப்படி ஃப்ராடு செஞ்சேன்னும் தெரியனும்.

அதுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தேன், உன் வழக்கமான காட்டுக்கத்தலோடு. 

பிகு: ஒரு வீட்டுக்கு அர்ணாபு மாசம் ஐநூறு ரூபாய் கொடுப்பாராம். அந்த சனியனை சகிச்சுக்க லட்ச ரூபாய் கொடுத்தால் கூட தகும். இதுலயும் கூட அநியாயம்தான் செஞ்சிருக்காரு.